ff

(319) புரட்சித் தலைவரின் வரலாற்றுப் பிழை! -ஆர்.எம்.வீ.

புரட்சித் தலைவரே ஆபத்தை தேடிக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஜெயலலிதா அவர்களை ஒரு பெண்ணாக மாத்திரம் நடத்தாமல், ஒரு அரசியல் தலைவராக ஆக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசைக்கு, திட்டத்துக்குத் தீனிபோட்டு வளர்த்ததுதான் புரட்சித்தலைவர் தன் வாழ்க்கையில் இழைத்த மாபெரும் வரலாற்றுப் பிழையாக அமைந்துவிட்டது. அதை அவரே... வெளியிட்டு வருத்தப்பட்டதை அடுத்தடுத்து ஆதாரத்துடன் விளக்குகிறேன்.

Advertisment

இப்பொழுது ஜெயலலிதா அவர்கள் "புரட்சித் தலைவர்தான் என்னை விரும்பி அரசியலுக்கு அழைத்தார்' என்று துணிந்து திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாரே; அது உண்மைக்கு மாறானது. ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய ஆசையை, புரட்சித்தலை வரின் அன்புள்ளத்தினால் நிறைவேற்றிக்கொண் டார் என்பதுதான் உண்மையே தவிர, இவரை விட்டால் வேறு கதியே இல்லாமல்; இவர் இல்லையானால் அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தைக் காப்பாற்ற முடியாது என்கிற எண்ணத்தோடு, புரட்சித்தலைவர் இவரை அரசிய-ல் நுழைய இடம் கொடுக்கவில்லை. 1972-லே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியதற்குப் பிறகு, அப்பொழுதே புரட்சித் தலைவரோடு இணைந்து நடித்த செல்வி. லதாவை அண்ணா திராவிட முன்னேற் றக் கழக உறுப்பினராக்கினார். இன்னும் அதிகமாக அரசிய-லே பங்கு பெறவேண்டும் என்று விரும்பினார். 1982க்குப் பின்னாலே "வெண்ணிற ஆடை' நிர்மலாவையும் கட்சியில் சேர்த்து, அவரை சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக்குவது என்று கூட தீர்மானித்தாரே, இதற்கெல்லாம் என்ன பொருள்?

Advertisment

தி.மு.கழகத்தை எதிர்ப்பதற்கு, திரைப்படச் செல்வாக்கை வைத்துக்கொண்டு கூட்டம் சேர்க்க ஒருவர் வேண்டும் என்று புரட்சித் தலை வர் திட்டமிட்டார். ஜெயலலிதா அதற்குப் பயன் படுவார் என்று எண்ணியதாக நான் பின்னால் கேள்விப்பட்டேன். அதனால்தான் அவரை அனுமதித்தார் என்றுதான் நினைக்கிறேன்.

கூட்டம் பேசுவதற்கு ஜெயலலிதாவை தயாரித்தால், நல்ல கூட்டம் சேரும். அதன் மூலம், தான் போகமுடியாத இடங்களுக்கு அவர் செல்வதனால், மக்களைத் திரட்டுகிற ஒரு வாய்ப் பை உருவாக்கலாம் என்று அவர் எண்ணியது நியாயமாகக் கூட இருக்கலாம். ஏனெனில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களை அரசியலுக்குப் பயன்படுத்தினால் அது கூட்டத்தைச் சேர்க்க உதவும்; அதன் மூலம் ஒரு நல்ல பிரச்சார பலத்தை ஏற்படுத்த முடியும் என்ற நடைமுறை காங்கிரஸ் காலத்திலேயே கடைப்பிடித்ததுதான்.

Advertisment

ff

ஆனால் அதைத் தீவிரமாகப் பயன் படுத்தியவர், அதிலே வெற்றி கண்டவர் பேரறிஞர் அண்ணா அவர்களாவார். அண்ணா அவர்களுடைய எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து, அது உண்மையென்று நிரூபித்துக் காட்டியவர் அரசியல் உலகிலே புரட்சித் தலைவர் மட்டும்தான். ஆகவே, ஜெயலலிதா அன்றைய நிலையில் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை, மற்றவர்களாலே விரும்பிப் பார்க்கின்ற தோற்றத்தை உடையவர் என்ற காரணத்தினால் அவரை வைத்துக்கொண்டு கூட்டம் நடத்தலாம் என்று எண்ணியிருந்தால் அதிலே தவறு காண இயலாது.

ஜெயலலிதாவின் அரசியல் அரங்கேற்றம் 1982-ல் கடலூரிலே நடைபெற்றது. அங்கு நடைபெற்ற மாநாட்டு ஊர்வலத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு அவருக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆகவே, ஏதோ இவர்தான் அதிசயப் பிறவி, தனிப்பிறவி என்று ஜெயல-தாவை மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றுவதற்குக் காவல் தேவதையாக’அழைத்து வந்தார் என்று சொல்லுவது உண்மைக்கு மாறானது.

"என்னை அவராகவே சேர்த்தார்' என்று சொன்ன ஜெயலலிதா பிறகு, இன்னொரு அபாண்டத்தையும் சொல்லிவருகிறார்.

அதாவது, "புரட்சித்தலைவருக்கு உடல் நலமில்லை; முதலமைச்சராக இருக்கிறார். ஆகவே முழுநேரமும் கட்சிப் பணியிலே ஈடுபட முடியவில்லை; சுற்றுப் பயணம் செய்ய இயலவில்லை, ஆகவேதான் என்னைக் கட்சியிலே சேர்த்து, அரசியலிலே அறிமுகப் படுத்தினார். என்னை சுற்றுப்பயணம் செல்லவேண்டிக் கேட்டுக்கொண்டார்' என்று சொல்லி- வருகிறார்.

இன்று இப்படிச் சொல்லிவருகிற இன்றைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 1982-ம் ஆண்டு முன்னாள் நடிகை ஜெயலலிதாவே பதிலளிக்கிறார் பாருங்கள்...

1982-ஆம் ஆண்டு ஜூன் மாதம்... 4-ஆம் தேதியன்று அண்ணா தி.மு.கழகத்தின் உறுப் பினரானார். அதையொட்டி, அடுத்த வார "ராணி' இதழுக்கு ஒரு பேட்டி அளித்தார்.

நிருபரின் கேள்வி:

எம்.ஜி.ஆரின் ஆலோசனைப்படித்தான் தி.மு.க.வில் சேர்ந்தீர்களா?

அம்மையாரின் பதில்: இல்லை. தி.மு.க. வில் சேரப்போகிறேன் என்று நான் எம்.ஜி. ஆரிடம் சொன்னேன். "கட்சியின் கொள்கை களை நன்கு புரிந்து கொள்' என்றார். 'அண்ணா யிசம்' என்ற 29 பக்கப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதன்பிறகு ஒரு ரூபாய் உறுப் பினர் கட்டணம் செலுத்தி தி.மு.க.வில் சேர்ந்தேன்.”

இன்றைய ஜெய லலிதா சொல்வது எவ்வளவு அபத்தம் என்பதை நிரூபிக்க அன்றைய ஜெயல-தாவின் வாக்குமூலமே போதும் என்று கருதுகிறேன்.

மேலும் புரட் சித் தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது எப் போது? 1981, 82, 83 ஆகிய ஆண்டுகளில் அவர் உடல் நலத் தோடு மிகுந்த வலிவு உள்ளவராக, கடுமை யாக உழைப்பவ ராகத்தானிருந்தார். அவருடைய உடல் நலம் குறைந்து; அது அவருக்கே தெரிந்தது 1984-ல்தான். தஞ்சை யில் நடைபெற்ற ராஜராஜசோழன் 1000-மாவது ஆண்டு விழாவில்தான்.

ஜெயலலிதா அவர்களுடைய அர சியல் அரங்கேற்றம் ஏற்பட்ட; 1982-ல் கடலூரிலே நடை பெற்ற மாநாட்டு ஊர்வலத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு அவருக்கு விளம்பரங் கள் செய்யப்பட்டன.

"ஒரு மாநாட் டின் மூலம் தன்னு டைய அறிமுகம் இருக்க வேண்டும்' என்ற தனது நீண்டநாள் கனவு- 1972-ல் மதுரை தி.மு.க. மாநாட்டில் நிறைவேறாததை 1982-ல் ஜெயலலிதா நிறைவேற்றிக் கொண்டார். அந்த மாநாட்டில் எல்லோரும் பேசவேண்டும் என்று அழைக்கப்பட்டிருந்தார்கள். அமைச்சர் களெல்லாம் சென்றிருந்தோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத் தில், நான் அந்த மாநாட்டை விட்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டேன். ஏனெனில் அந்த மாநாட்டினுடைய நடைமுறை களைப் பார்த்தபொழுது, சுற்றிவளைத்து ஜெயலலிதா ஒன்றை உறுதிப்படுத்த முயற்சிக்கிறார் என்பது எனக்குத் தெரிந்தது.

அதுதான்...

ஜெயலலிதா அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பட்டத்து இளவரசியாக மாறத் திட்டமிடுகிறார் என்பதுதான். அந்த நேரத்தில் காரியங்கள் அவ்விதமே நடைபெறுகின்றன என்பதைப் பார்த்தவுடன், யாரிடத்திலும் சொல்லாமல் சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். என்னைப் பேசுவதற்குத் தேடியிருக்கிறார்கள்.

"உங்களை தலைவர் பேசுவதற்கு அழைக்கச் சொல்லியிருந் தார்கள். ஆனால், நீங்கள் வந்துவிட்டீர்கள்' என்று அதற்குப் பிறகு எனக்குத் தகவல் வந்தது.

1983-ல் இவரை கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்குகிறார். புரட்சித் தலைவருடைய கருத்துக்கு ஒத்துப் போவேன் என்றால், அவர் அதை என்னிடத்திலே விவாதிப்பார். நான் எதிர்ப்பேன் என்று எண்ணினால், அதைச் செய்து முடித்துவிட்டு, என்னிடத்திலே அறிவிப்பார். அப்படித்தான் கொள்கை பரப்புச் செயலாளர் நியமன விஷயத்திலும் நடந்தது.

பாறை -வெண்ணெய் -மாற்றுத் திறனாளிகள்...

ஆர்.எம்.வீ. சொன்ன அந்தக் கதை!

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்திலே இருக்கிறபோதே, பல பிரச்சினைகளிலே தந்தை பெரியாரோடு மாறுபட்டார்கள் -முரண்பட்டார்கள்? ஆனால், அந்த முரண்பாட்டை -மாறுபாட்டை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். பெரியார் சொல்வதற்கு ஒரு புதிய வியாக்கியானம் சொல்லுகிற, பாஷ்யகர்த்தாவாக விளங்கினாரே தவிர முரண்படுகிறவராக அவர் தன்னை ஆக்கிக்கொண்டதில்லை. அதற்கு காரணம்.... ஒரு தலைவருக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற கடமை உணர்வுதான். அப்படிப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களிடத்திலே கற்றதால், நானும் சிலவற்றை தாங்கிக்கொள்ளப் பழகியிருந்தேன்.

தஞ்சையில் கே.ஆர்.ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் நாடக சபையில் நிர்வாகியாக இருந்தபொழுது மனக்குமுறலோடு நான் எழுதிய ஒரு கடிதத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் அனுப்பிய அறிவுரை கடிதத்தில் கடைசி வரியாக இந்த வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த வார்த்தை...

(புழுதி பறக்கும்)

ds