ss

(294) ஸ்டாலின் வீட்டில் சுவர் ஏறிக் குறித்து போலீஸ் அராஜகம்!

லைஞரை எங்கயும் கொண்டு போகாம, நேரடியா சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கே கொண்டுட்டுப் போயிட்டானுக படுபாவிங்க. ஆஸ்பிடல் போகச் சொன்னது என்னாச்சுன்னு கேக்க, அது ஒரு பயலுக்கும் காதுல விழுகல. அவிய்ங்க காதுல ஈயத்தக் காச்சி ஊத்தணும்.

கலைஞர குண்டுகட்டா வூட்ல இருந்து தூக்கி, அவர ஒரு வயசானவருன்னு கூட பாக்காம கை வச்சு கஷ்டப்படுத்தி... இல்லாத அட்டூழியம் எல்லாம் செஞ்சு, மாறன் அண்ணன ஜார்ஜும், கிறிஸ்டோபரும் மரியாதையில்லாம பேசி, அவர அடி... அடி...ன்னு அடிச்சு சட்டை -வேட்டியையும் கிழிச்சு... (அண்ணன் ஸ்டாலின் வீட்டுல நடந்தத பின்னாடி சொல்றேன்)

Advertisment

இவ்வளவும் யாருக்கு... யாரை சந்தோஷப்படுத்தன்னு நினைக்கிறீங்க.. ஜெயலலிதாங்கிற மமதை புடிச்ச கொடுங்கோல் ராட்சசிய சந்தோஷப்படுத்தத்தான்.

சார்.... எவனாவது மாறன் வந்த கார், கனிமொழி வந்த கார், கலைஞர் குடும்பம் வந்த கார்...னு அத்தன கார் சாவியயும் எடுப்பானா...? அப்ப, இவனுக நோக்கம் தெரியுதா? எல்லாரும் பெர்வெர்ட். அதத்தான் சிறை வாசல்லயும் செஞ்சானுக.

ஜெயில் வளாகத்தை நெருங்கவே முடியாதபடி மேலே இருந்த பாலத்துலயே அத்தனை பேரும் தடுத்து நிறுத்தப்பட... அங்க இருந்தே கேமராக்கள ஜூம் செஞ்சாய்ங்க.

Advertisment

காருக்குள்ள இருந்து லுங்கியும் கிழிஞ்ச சட்டை யுமாக இறங்குன கலைஞர் மெள்ளத் தலையை நிமித்தி பாலத்துக்கு மேல குவிஞ் சிருந்த பத்திரிகைக்காரங் களையும், மக்களையும் பாத்து கையசைக்க...

"தலைவா! நீ யாருக்கு என்ன பாவம் செஞ்ச? போலீஸ்காரங்களுக்கு சம்பளத்தை ஏத்திக் கொடுத்தியே... அந்தப் பாவத்துக்காகத் தான் உன் வீட்டுல அடி... அடினு அடிச்சாங் களா தலைவா?''ன்னு சத்தமா கத்திக்கிட்டே மயங்கி விழுந்தான் ஒரு தி.மு.க. தொண்டன்.

சிறைக்கு முன்னாடி இருந்த சிமென்ட் தரையில அப்படியே சம்மணம் போட்டு உக்கார்ந்த கலைஞர், திரும்பி... சிறைக் கட்டிடத்த ஒருதரம் நிமிர்ந்து பார்த்தாரு. குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க முடியாம விம்மி அழத் தொடங்கிட்டாங்க. உடனே சுதாரிச்சுக்கிட்ட சகோதரி கனிமொழி, பாலத்து மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, "தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்ல... ஆனா, நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள்ள அவருக்குக் கிடைக்கப்போறதில்ல. அவர சிறையில் தள்ளுனா மறுபடி பாக்க முடியுமாங்கிறது சந்தேகம்தான்...''னு சொல்லிக் கதறுனாரு.

dd

நீதி கேட்டு அங்கேயே உண்ணாவிரதம் இருக்கப்போறதா கலைஞர் சொல்ல, ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளும் பெருங்கூட்டமா அவரச் சுத்தி நின்னு மிரட்டுற டோன்ல கைகள ஆட்டி ஏதோ சொன்னாய்ங்க. கலைஞரும் பதிலுக்கு கைய உசத்தி, அவிய்ங்களுக்குப் பதில் சொல்ல... அரைமணி நேரமா இந்த வாக்குவாதம் நீண்டுக்கிட்டே போச்சு. அதேநேரம் சிறைக்கு உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரன், பிளாஸ்டிக் சேர் ஒண்ண கலைஞர் உக்கார்றதுக்காக எடுத்துட்டு வர... பாய்ஞ்சு போயி கலைஞர் கைதுக்கு காரணமான உயர் போலீஸ் அதிகாரி அந்த போலீஸ் காரன அடிக்காத குறையா உள்ள திருப்பி விரட்டிவுட்டான்.

ஒருவழியா காலையில 7.50க்கு கலைஞர சிறைக்கு உள்ளே கொண்டு போனாய்ங்க. பாலத்து உச்சியில இருந்த ஒட்டு மொத்த ஜனமும் கதற... சிறை வளாகத்த சுத்தியும் ஒரே கதறல் சத்தம்!

அதேசமயம் அரிபரியா அங்கு வந்தாரு அண்ணன் ஸ்டாலின் மனைவி துர்கா. கூடவே அவர் மகன் உதய நிதியும் மகள் செந்தாமரையும் வந்தாங்க. "போட்டுட் டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?''ன்னு கதறிக்கிட்டே நம்பமுடியாதவரா மறுபடி... மறுபடி நிருபர்கள்ட்ட கேட்டாரு திருமதி துர்கா.

''உங்கள் வீட்டுலயும் போலீஸ் புகுந்துச்சாமே...?''ன்னு பத்திரிகைக்காரங்க கேக்க, "ஆமா, மேயர தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவரு வீட்டுல இல்லன்னு சொன்னோம். ஆனா, எங்களைத் தள்ளி விட்டுட்டு உள்ள புகுந்து எல்லாத்தையும் சூறையாடுனாங்க. வாசல் கேட்ல தொடங்கி, உள்ள இருக்கிற அறைகள்ல கைக்குக் கிடைச்சத எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க. பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத்... திரும்பக் கையப் புடிச்சு இழுத்து... "உன் புருஷன் எங்கேன்னு சொல்லு... சொல்லு?'ன்னு என்ன சித்ரவதை பண்ணாங்க...''ன்னு துர்காம்மா சொல்ல... மகள் செந்தாமரையோ, "நாட்டுல இவ்வளவு பத்திரிகைக்காரங்க இருக்கீங்க... இந்தக் கொடுமைய யாருமே தட்டிக் கேக்கமாட்டீங்களா?'' கேட்டுக்கிட்டே, தன் தாயோட தோள்ல சாய்ஞ்சு தேம்பித் தேம்பி அழுதுச்சு.

பத்திரிகைகள்ட்ட உதயநிதி, "எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா?ங்கிற எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லல. 'உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்காருன்னே தெரியல...'' என்று உதயநிதி குமுறி அழுதாரு.

சென்னைக்கு உள்ளேயே ஸ்டாலின மடக்கிக் கைது செய்ததா செல்போன்ல ஒரு தகவல் வந்தது. ஆனா, அது உண்மை இல்லங்கிறது பின்னாடி தெரிஞ்சது. காலைல 8:30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஸ்டாலின் அங்க வந்திருந்த இல.கணேசனோட கொஞ்சநேரம் பேசிட்டு பத்திரிகையாளர் களைச் சந்திச்சாரு. "அப்பாவ அராஜகமாக அடிச்சு இழுத்து கைது செஞ்சு கொண்டு போயிருக்காங்க. எங்க குடும்பத்துப் பெண்கள்ட்ட போலீஸ் அத்துமீறி நடந்துருக்கு. எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவங் கள தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை ஓயாது. நானும் இன்னும் சிறிது நேரத்துல நீதிபதி முன்னால சரண்டராகப் போறேன்...''னு படபடப்போட சொல்லிட்டுப் போயிட்டாரு.

pp

கலைஞர கைது செய்யுறதுக்காக நடு ராத்திரி 2:00 மணிக்கு கோபாலபுரத்துக்குப் போனது போல, அன்னைக்கு சென்னை மாநகர மேயரா இருந்த மு.க.ஸ்டாலினையும் கைது செய்ற நோக்கத்தோட அதேநாள்ல ராத்திரி 1:00 மணிக்கு மேல வேளச்சேரியிலுள்ள ஸ்டாலின் வீட்டுக்கு பெண் போலீஸ் உட்பட நாலுபேரோட போனாய்ங்க. வாட்ச்மேன், "மேயர் ஐயா வெளியூர் போயிருக்காங்க. வீட்டுல லேடீஸ் மட்டும்தான் இருக்காங்க'ன்னு சொன்னாரு. ஆனாலும் போலீஸ் அத்துமீறி உள்ள நுழைய முயற்சி செய்ய... வாட்ச்மேன் முடிஞ்ச அளவு அவங்கள்ட்ட கெஞ்சியி ருக்காரு.

இதையடுத்து, ஒரு கடிதத்தை ஸ்டாலின்ட்ட குடுக்கச் சொல்லி போலீஸ் கொடுக்க, வாட்ச்மேனோ அதை வாங்க மறுத்திருக்காரு.

"சரி... நாளைக்கு காலைல வர்றோம்''னு சொல்லிட்டுக் கிளம்புன போலீஸ், அடுத்த 15வது நிமிஷத்துல பெரும்படையோட வந்து கேட் மேல ஏறிக் குதிச்சு உள்ள போனாய்ங்க. மெயின் டோர உடைக்கிற மாதிரி மோதவும், ஸ்டாலின் மனைவி துர்கா வந்து கதவைத் திறந்தாங்க.

oo

"ஸ்டாலின் இருக்காரா?'' அப்படீன்னு கேட்டுக்கிட்டே பதில் சொல்றதுக்குள்ள, போலீஸ்காரங்க துர்காம்மாவ தள்ளி விட்டுட்டு திபு...திபுன்னு வீட்டுக்குள்ள ஓடியிருக்காய்ங்க.

"அவரு வெளியூருக்குப் போயிருக்கிற நேரத்துல இப்படிச் செய்யலாமா?''ன்னு ஸ்டா லின் மனைவி கேட்டுருக்காங்க.

"கைய நீட்டியா பேசுறீங்க''ன்னு கேட்டுக்கிட்டே அவரோட கையப் புடுச்சு இழுத்து தள்ளுச்சு ஒரு ரவுடி பெண் போலீசு. இதப் பாத்து தடுக்கப்போன மகள், செந்தாமரையையும் தள்ளிவிட்டுருச்சு...

பெங்களூருக்குப் போய்க் கிட்டிருந்த ஸ்டாலினுக்கு கலைஞர் கைது செய்யப்பட்ட விஷயமும், அவர போலீஸ் தேடிவந்த விஷயமும் சொல் லப்பட... உடனே அவர் சென்னைக்குத் திரும்பினாரு. குடும்பத்துல உள்ள வங்களையும், கட்சிக்காரர்களையும் ஆறுதல்படுத்திட்டு, "போலீஸ் கையில சிக்குனா தன் உயிருக்கு ஆபத்து'ன்னு நினைச்ச ஸ்டாலின், முன்ன சொன்ன மாதிரி... கோபாலபுரம் போய் அங்க இருந்த இல.கணேசன்ட்ட பேசிட்டுத் தான் கீழ்பாக்கத்துல உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குப் போய் நீதிபதி முன் சரணடையப் போனாரு. அதுக்கு முன்னாடி ஸ்டாலின், "அந்தம்மா ஆட்சியில செஞ்ச ஊழல்கள நாங்க ஆதாரங்களோட நிரூபிச்சோம். அதுக்குப் பழிவாங்கத்தான் இந்த நடவடிக்கை. இத நாங்க சட்டப்படி சந்திப்போம். சி.பி.சி.ஐ.டி. என்னை கைது செய்யல. நானே சரணடையலாம்னு வந்திருக்கேன். என்மேல ஏற்கனவே ஒரு வழக்குப் போட்டப்ப, நானே கோர்ட்ல ஆஜராகி அத சந்திச்சேன். மடியில கனம் இல்லாதப்ப நான் ஏன் பயப்படணும்?''னு நீதிபதி வீட்டுக்கு முன்னால நின்னு தைரியமாச் சொன்னாரு.

(புழுதி பறக்கும்)