pp

(279) தங்கம்மாவுக்கு நேர்ந்த அநீதி!

ருவழியா தேவாரம், அவரு எழுதுன புக்... புக்குன்னா சாதாரண புக் இல்ல. "தி.மு.க. அரசாங் கத்த எப்படி நான் கூட இருந்தே குழி பறிச்சேன்' அப்படீங்கிறத அவரே பதிவு பண்ணியிருக்கிற ஒரு புத்தகம். அத இந்த அரசாங்கத்துல, வெக்கமில்லாம போலீஸ் கேன்டீன்ல விக்கிறாங்க.

இன்னிக்கு காலையில கூட தம்பி நாகேந் திரன் எனக்கு ஒரு படம் அனுப்புனாரு. புதுக் கோட்டை போலீஸ் கேன்டீன்ல இதே தேவாரம் எழுதுன புத்தகத்த கொட்ட எழுத்துல ரேட் போட்டு வித்துக்கிட்டிருக்காங்க.

Advertisment

சரி... நாம சொல்றத சொல்லிட்டோம். ஏன்னா... புத்தகத்த வாங்கக்கூடாதுங்கிறது நம்ம எண்ணம் இல்ல, புத்தகத்த வாசிக்கக்கூடாதுங் கிறதும் நம்மளோட குறிக்கோள் இல்ல. ஆனா... யார் ஆட்சியில யாரப்பத்தி யாரு எழுதுன புத்தகத்த விக்கிறது?

ஒரு ஆட்சிய கவுக்கிறதுக்கு பெரும்பாடுபட்ட, அரும்பாடுபட்ட ஒருத்தர் எழுதுன புத்தகம்... அதுலயும் "நான் இதையெல்லாம் பண்ணுனேன்'னு பதிவு செஞ்சத விக்கிறாங்க.

நாம என்ன அதிகாரத்துலயா இருக்கோம்... இல்லல்ல! ஆனா காலத்துக்கும் அந்த பதிவு இருக்க ணும்னுதான் நாம அத பதிவு பண்ணியிருக்கோம்.

Advertisment

இத உங்க முடிவுக்கே விட்டுர்றேன்... "இந்தப் புத்தகத்த போலீஸ் கேன்டீன்ல விக்கிறது சரியா, தவறாங்கிறத.'

இப்ப நம்ம அண்ணன் முக்தார் எடுத்த பேட்டியில தேவாரம் குடுத்திருந்தாருல்ல... "அப்படியெல்லாம் எந்த தப்பும் நடக்கல...'' அப்படீன்னு. "போர்க்கள'த்துல நாலு அத்தியாயத் துக்கு முன்னாடி, சின்னப்பொண்ணுன்னு ஒருத்தங்க, அவங்களுக்கு நேர்ந்த கொடுமைய, அக்கிரமத்த... அதாவது வீரப்பன் காட்டுல தேடுதல் வேட்டைங் கிற பேர்ல எஸ்.டி.எஃப்.ல, அதுலயும் தேவாரத் துக்கு சிஷ்யகோடிகளா இருந்த மோகன் நிவாஸ், அவருக்குக் கூடவே இருந்த நாலஞ்சு அல்லக் கைங்க... (அஞ்சாறு இல்ல... அது எண்ணிக்கை ஜாஸ்தியாவே இருக்கும்) எல்லாரும் சேர்ந்து பொண்டு புள்ளைகள சீரழிச்சாங்க, எவ்வளவு கொடுமை பண்ணுனாங்கன்றத சொல்லியிருந்தாங்க. நம்மளால அத படிக்கவே முடியாத அளவுக்கு உள் ளுக்குள்ள ஒரு பயம் கலந்த அதிர்வு வரும். இப்படி யெல்லாம் பண்ணுனாங்கன்னு சின்னப் பொண்ணு சொல்லியிருப்பாங்க. அவங்க இப்பவும் இருக்காங்க.

அதனுடைய தொடர்ச்சியா வெத்தலக்கார தங்கம்மான்னு ஒருத்தங்க. வீரப்பன் காட்டுல தம்பி சுப்புவோட ஊரு சின்னதண்டாவுக்குக்குப் பக்கத்துலதான் அவங்க இருக்காங்க. அதாவது... அவங்க ஊரு மேச்சேரி... கல்யாணத்துக்குப் பெறகு குடியேறுனது பெரியதண்டா. பெரியதண்டாவுல ஒரு மார்க்கெட்ல வெத்தலய வித்து ஏதோ பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்திருக்காங்க.

அந்தம்மா பட்ட அவஸ்தைகள அவங்க வாயாலேயே கேளுங்க...

pp

"என் ஊரு மேச்சேரி. தொண்ணூத்தி மூணுல கொளத்தூர் பஸ் ஸ்டாண்டுல வெத்தல வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்ப வீரப்பன் பெரியதண்டால இருந்தாராம். நாங்க அவரப் பாத்தது கூட இல்ல. வெத்தலைக் கடைதான் வச்சிருந்தேன்.

அப்ப மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டர் பவுனு கலர்ல ஒரு பஸ்சுல வந்து, வயசான மூணு பேரு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தவங்களப் பிடிச்சுத் தூக்கிப் போட்டாங்க. அவங்களோட என்னையும் தூக்கி வண்டில போட்டுக் கொண்டு போனாங்க. முருகன் போலீஸ். மோகன் நிவாஸ். மேட்டூரு கூப்பிட்டுப் போயி பன்னெண்டு மணிக்குள்ள விட்டுறோம். நீ திரும்பி வந்துருவ அப்டின்னு சொல்லித்தான் கூப்பிட்டுப் போனாரு. எனக்குப் பயமாகிப் போச்சு.

பஸ்சு நெறையப் போலீசா இருந்தாங்க. வேற எந்த ஆளுகளும் கிடையாது. போடியா கிழவன், வயசான கிழவனுக ரெண்டு பேரு. மேட்டூர் ஸ்கூல்லதான். மே மாசம் லீவு. அதான் முகாம்.

போலீஸ் ஸ்டேஷனுக்குள் போனதும் ஹெட் கான்ஸ்டபிள் என் முகத்தில் உதைத்தார். "மேட்டூர்ல எட்டாயிரம் போலீஸ்காரங்கள உன்னால சமாளிக்க முடியுமா' என அசிங்கமாகக் கேட்டார். "இங்க பாரு. எட்டாயிரம் அதிரடிப் போலீஸ் இருக்கறோம். எட்டாயிரம் பேருக்கும் இவ தாங்குவா. ஒடம்பப் பாரு'ன்னு சொல்லிக்கிட்டே அந்த மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டர் எட்டி என் வாயிலயே ஒதைச்சார். பாருங்க. என் வாயில உள்ள பல் எல்லாம் கத்திரிச்சுப் போயிருச்சு. ஒதடு கிழிஞ்சு ஒடஞ்சி போச்சு. தொற தொற தொறனு ரத்தம் ஊத்துச்சு. சிதிலமடைந்த வாய்ப்பகுதிகளைக் காண்பிக்கிறார்

மேட்டூர்ல வச்சு மூணு மாசம் பயங்கரமான கொடுமைகள். விடவுமில்ல. ஒண்ணுமில்ல. பாத்ரூம் போகவிட மாட்டாங்க. பிளாஸ்டிக் கவரு இல்லைனா, கஞ்சி கொண்டு வந்து சுடச் சுடக் கையிலயே ஊத்து வாங்க. அதையும் வாங்கிக் குடிக்கணும். செங்கல், கட்டைகள கொண்டு வந்து தரைல போட்டு அதுல முட்டி போட வச்சு அடிப்பாங்க. மோகன் நிவாஸ் இன்ஸ் பெக்டரும் தேவாரமும்தான் இந்தக் கொடுமைகளை செய்வாங்க. ரெண்டு பேரும் என்னை ரொம்பக் கொடுமை செஞ்சாங்க. மேட்டூர் ஐ.பி.ல என்னை பத்து நாள் வச்சி ஒடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம அஞ்சு நாலு கவுந்தே உக்காந்திருந்தேன். துணியப் பூராப் புடுங்கி தூக்கி எறிஞ்சிட்டாங்க.

இன்ஸ்பெக்டர் மோகன்நிவாஸ் என்னை ஒரு ரூமுக்குள்ளே கூட்டிச் சென்று பெஞ்சில் படுத்துக் கொண்டார். மதியத்தி லிருந்து நடு ராத்திரி வரை அவர் உடம்பை பிடித்து விடும்படி என்னை கட்டாயப்படுத்தி செய்ய... வைத்தார். "வீரப்பன் தம்பி அர்ச்சுன னுக்கு வைப்பாட்டியா நீ?' என்றார். அசிங்கப்படுத்துவது அவருக்கு சாதாரணம். தண்டாவிலிருந்து பத்துபேரை கொண்டு வந்து அவர்களை அடையாளம் காட்டச் சொன்னார். வயலில் கூலி வேலை செய்யும் போது நான் பார்த்திருந்ததால் அவர்கள் தண்டாவைச் சேர்ந்தவர்கள், பெயர் எனக்குத் தெரியாது' என கூறினேன். போலீஸ் அதிகாரிகள் தங்கும் விருந்தினர் விடுதி பவானி சாலையில் உள்ளது. கட்டிடத்திற்குள் தேவாரம் இருந்தார். உள்ளே போனவுடன் என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்த தேவாரம் "அர்ச்சுனனுடன் நீ எவ்வளவு நெருக்கம், அர்ச்சுனன் உன்னை எப்படி நடத்துவார், உங்களுக்குள் அந்த தொடர்பு இருந்ததா' என்றார். அசிங்கமாகத் திட்டினார். "அர்ச்சுனன் உன்னை உபயோகித்தாரா?' என்று கேட்டார். "அர்ச்சுனன் பற்றித் தெரியாது' என்றேன். "அர்ச்சுனன் அடிக்கடி உன் வீட்டில் வந்து தங்கும்போது எப்படி மறுக்கலாம் நீ' என்று மிரட்டினார்.

"மாடிக்கு கொண்டு சென்று என்னை நிர்வாணப்படுத்தி அர்ச்சுனனுடன் எப்படிஎப்படியெல்லாம் நீ உடலுறவு கொண்டாய்' என்று கேட்டார் தேவாரம். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக என்னைக் கற்பழித்தார் வால்டர் தேவாரம். கற்பழிக்கும்போதே அர்ச்சுனனுடன் நான் எப்படி உறவு வைத்திருந்தேன் எனக் கேட்டார். நான் இல்லை என்ற உண்மையைச் சொன்னாலும் போலீசார் என்னை நம்பவில்லை. எனக்கு வீரப்பனையோ அர்ச்சுனனையோ தெரியாது. அர்ச்சுனனைப் பற்றி நான் எதுவும் சொல்லாததால் என்னை சுடும்படி தேவாரம் போலீசாரிடம் சொன்னார். தேவாரத்தின் சில தேவைகள் காரணமாக என்னை அவர்கள் சுடவில்லை. பயங்கரக் கொடும பண்ணுவாங்க. மேலெல்லாம் சிகரெட்டால சூடு வைப்பாங்க. தொடை கிடைனு எல்லா எடத்துலயும் சூடு வைப்பாங்க. என் ரெண்டு கால்களையும் ஒடைச்சி மதுரைக்கு கொண்டு போய்ட்டாங்க. பாதி ஜனங்கள இராமநாதபுரத்துக்கும், அவங்களுக்கு தேவைப்படுறவங்கள திருநெல்வேலி செவந்திபட்டி கஸ்டடிக்கும் கூட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கு நடக்க முடியலை. தரையில தவந்தே பாத்ரூம் போகணும். என்னோட இருந்த ரெண்டு பேரு என்னத் தூக்கிட்டுப்போயி வேலிச்ச ந்துல விட்டாங்கன்னாதான் ஆயி இருக்க முடியும். கோயமுத்தூர் ஜெயில்ல கொண்டு வச்சாங்க. பத்து நாள் சோறு எதுவும் சாப்பிடல. சட்டி பானைல என்னைச் சுத்தி பத்துப்பேரு ஆயி இருப்பாங்க. குமட்டிக் கிட்டே இருக்கும். முட்டிக்குக் கீழே கால் சீழ் பிடிச்சுப் போச்சு. இடுப்பெல்லாம் வீங்கிப் போச்சு. சூடு வைக்கிறதுமில்லாம, பெரிய தொன்னைக் கட்டை யால கால் பாதத்துலயே அடிப்பாங்க. "வீரப்பன் படையாச்சி. நீயும் படையாச்சி. கொன்னுடுவேன். வீரப்பனைப் பத்தி சொல்லு சொல்லு'ன்னு அடிப்பாங்க. ஈரோடு. மெட்ராஸ்னு கூட்டிட்டுப்போய் கடைசில தடா சட்டத்துல ஜெயில்ல போட்டாங்க. மூணு வருஷம் ஜெயில்ல இருந்தேன். சொந்த பந்தம் யாரும் பயந்துக்கிட்டு பாக்குறதுக்கு வரலை..

jjj

கேம்ப்ல ஒண்ணுக்குப் போகணும்னு சொன்னாக்கூட பாத்ரூம்ல தள்ளிக்கிட்டுப் போயி கற்பழிச்சு வெளில கூட்டிட்டு வருவாங்க அதிரடிப்படை போலீசு. பாத்ரூம் போனாலே கற்பழிப்பாங்க. ஏதாவது பண்ணுவாங்க. அவங்களுக்குப் பயந்துக்கிட்டு பாத்ரூம் போகாம பிளாஸ்டிக் கவர்லயே போயி தூக்கிப் போட்டுடுவேன்...''

-இது தங்கம்மா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிய... புட்டு புட்டு வச்சுச்சா... இது சம்பந்தமா தேவாரத்திடம் மனித உரிமை ஆணையம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்...

"வீரப்பன் சகோதரன் அர்ஜுனா 1994 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டான். அப்போது அவருக்கு தொடைப் பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்நாடகாவின் தடா நீதிமன்றம் முன்னர் ஆஜர் செய்யும் வரை அவர் நீதிமன்றக் காவலில்தான் இருந்தார். அவர் மணமானவரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவனுக்கு பல பெண்களுடன் உறவு இருந்தது. பெரியதண்டா என்பவர் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் ரங்கசாமியின் மனைவி, தங்கம்மாள் என்ற பெண்ணை எனக் குத் தெரியாது. அவர் தடா கைதியாக இருந்தாரா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இந்தக் குழு முன்பாக அவன் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து அவர் தடா கைதியாக இருந்தார் என்று தெரிந்துகொண்டேன். மேட்டூரில் பவானிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது பொதுப்பணித்துறையின் விருந்தினர் இல்லம். அவர் தனது வாக்குமூலத்தில் (ஙர-82) மேட்டூரில் காவலில் வைக்கப் பட்டிருந்ததாகவும், அங்கு நான் தங்கிய இடத்தில் அவரை நான் வைத்தி ருந்ததாகவும், நிர்வாணப்படுத்தி, பலமுறை பலவந்தமாக உடலுறவு கொண்டதாகவும் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் அப்பெண்மணிக்கு அர்ஜுனாவுடன் இருந்த தொடர்பு பற்றியும், அவர்கள் உடலுறவு கொண்ட முறை பற்றியும் விசாரித்தேன் என்று கூறுவதையும் மறுக்கிறேன். அவரை நான்கு மாத காலம் ஒரு பள்ளியில் காவல் வைத்திருந்ததாகவும், பின்னர் அர்ஜுனா பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததால் காவலர்களிடம் அவரை சுட்டுக் கொல்லக் கூறியதாக வும் என்மேல் குற்றம்சாட்டப்படுகிறது. இதனையும் நான் மறுக்கிறேன்.

கைது செய்ய உத்தரவு பெறப்பட்ட பின்னரும் அவர் போலீஸாரால் அடிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் உரிமை எனக்கு இல்லை. தங்கம்மாளுக்கு (ஙர-82) எதிரான தடா பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியாது. எனக்கு எதிரான தங்கம்மாளின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது."

இவரு இப்படிச் சொன்னாரா...

அசோக்குமார்ங்கற போலீஸ்காரர்... அதே ஆணையத்துல...

(புழுதி பறக்கும்)