(278) அண்டப்புளுகு... ஆகாசப்புளுகு... தேவாரம்!
கர்நாடகாவுலயும், தமிழ்நாட்டுலயும் இருக்கிற எஸ்.டி.எஃப்.காரங்க ஃபுல்லாவே காட்டுலதான் இருக்காய்ங்க. முன்னாடி இருந்ததவிட அதிகமான ஆட்கள் காட்டுக்குள்ள மாறுவேஷத்துல திரியுறாய்ங்க.
இப்ப இந்தப் புத்தகம், ஒரு பெரிய சதிய அம்பலப்படுத்துது. நக்கீரனுக்கு எதிரா தேவாரம் போட்ட கொலைச் சதிய... சும்மா போற போக்குல நாலு லைன், நாலு லைனா, அங்கங்கே போட்டுப் போறாரு. ஆனா அந்த நாலு லைன்ல பெரிய... பெரிய வில்லங்கங்கள அவரும், அவரோட ஆளுங்களும் சேர்ந்து செஞ்ச வில்லத்தனத்தையும் புட்டுப் புட்டு வைக்கிறாரு. எப்படியும் உண்மை ஒருநாள் பொத்துக்கிட்டு வெளிய வரும்பாய்ங் கள்ல... அது உண்மைதான். இந்த எழவு தெரியாம இவரு எழுதுன புத்தகத்த மார்க்கெட் பண்ணுது தி.மு.க. அரசு.
ரொம்ப முக்கியமான புத்தகம்னு இத நான் சொல்ல வரல. அதேநேரம் கலைஞருக்கும் நக்கீரனுக்கு எதிரா போலீஸ் சதி பண்ணுனாங்கங் கிறதுக்கு ஆதாரம் இந்தப் புத்தகத்துல இருக்கு அப்படீங்கிறத உங்க முன்னாடி வைக்கத்தான் 458ஆம் பக்கத்துல பதிவான பதிவு.
அந்த மோகன் நிவாஸ்... வீரப்பன், தூதர சந்திக்க வரும்போது டொட்டடாய்ங்...னு "நான் போய் அவனுக்கு முன்னால நின்னு அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டேன்'னு சொல்ற தேவாரத்துக்கு உறுதுணையா இருந்தவன்தான் அந்த மோகன் நிவாஸ்.
அப்போ... "ராஜ்குமார் மிஷன் ஜெயிச்சுறக் கூடாது. அந்த ராஜ்குமார் மிஷன தோற்கடிச்சுட ணும். நடிகர் ராஜ்குமாரை எவன் காப்பாத்து றானோ... காப்பாத்தலையோ... அதப்பத்தி எல்லாம் கவலை இல்ல. நக்கீரன கொன்னுறணும்! அப்படி நக்கீரன கொன்னுட்டா... ராஜ்குமார காப்பாத்த யாரும் போகமாட்டாங்க. அப்படிப் போகல் லன்னா கர்நாடகத்துல உள்ள நம்ம ஆட்கள கொன்னுருவாங்க. அப்போ ரெண்டு மாநிலத்துல யும் ஆட்சி கவுந்துரும். கலைஞருக்கு வாழ்நாள் பூரா தீராத ஒரு தலைகுனிவும் தீராப்பழியும் வரும். ஒரு மிகப்பெரிய கெட்ட பேரோடதான் அவரோட கடைசிக்காலம் போகும்' அப்படீங்கிற மாதிரி யெல்லாம் திட்டமிட்டது... "இதுக்குப் பின்னாடி யாரு?'ன்னு நினைச்சீங்க. அடாவடி அரசி ஜெயலலிதாதான்.
இப்ப இதுக்கு கையாளா வேலை பாத்தது தேவாரம், தேவாரத்துக்கு கீழ மோகன் நிவாஸ். அந்த மோகன் நிவாஸுக்குத்தான் நம்ம முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இந்த தி.மு.க. அரசுல எஸ்.பி. அந்தஸ்தயும், பணத்தையும் அள்ளிக் குடுத்து ரிட்டையர்டு பண்ணி வீட்டுக்கு பீப்பீ ஊதி அனுப்பி வச்சாரு.
தேவாரம் எழுதுன இந்தப் புத்தகத்துல இன்னொரு சங்கதி... "ராஜ்குமார் மீட்பு விஷயம் போய்க்கிட்டிருக்கு. 3-வது முறை நான் போறேன். அப்போ 45 நாள் ஆச்சு. செப். 1ந் தேதி, அதாவது இங்க தடுப்புக் காவல்ல இருக்கிற 5 பேர வீரப்பன் கேக்குறாப்டி. அந்த 5 பேர கொண்டுபோய் கொடுத்துட்டு நடிகர் ராஜ்குமாரையும், அவரோட சேர்ந்த 3 பேரையும் நாம காட்டுல இருந்து அழைச்சிட்டு வர்ற மாதிரி தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துக்கிட்டுதான் அங்க போனோம். ஏன்னா இதுல ஒரு விஷயத்த நான் சொல்லியாகணும். ரெண்டு மாநிலத்தினுடைய தலைமைத் தூதுவனா, என் தலைமையிலதான் மத்தவங்க என்கூட வந்தாங்க.
ஆனா அன்னிக்கு நாங்க எல்லாரும் காட்டுக்கு அவுட்டர்ல ஒரு குடிசையில தயாரா உள்ள இருக்கோம். தகவல் வந்து காட்டுக்குள்ள நாங்க கிளம்பியாச்சு. எப்படியும் போறதுக்கு அஞ்சு, ஆறு நாளைக்கு முன்னாடியே கிளம்பிருவோம் சென்னையை விட்டு. ஆகஸ்டு 31-ஆம் தேதி அன்னிக்கு சாயங்காலமா அங்க போனோம். அதுக்கு முந்துன நாளு மாலையில உச்சநீதிமன்றத்துல ஒரு வழக்கு வருது, அவசர வழக்கா வருதுன்னு ரேடியோவுல சொல்றாங்க. வீரப்பன் குழுவுல உள்ள சேத்துக்குளி கோவிந்தன் ரேடியோவ ஆன் பண்ணி அந்தச் செய்தியக் கேட்டவுடனே... "இரு நாளைக்குப் பாத்துட்டு முடிவு எடுத்துக்கலாம்'னு அவங்க முதநாளு விடவேண்டியத செப். 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறாரு வீரப்பன்.
அன்னிக்கு அங்க பூதாகரமா வந்த செய்தி என்ன தெரியுங்களா? "ராஜ்குமார் விடுதலைக்காக தடுப்புக்காவல்ல இருக்கிற 5 பேர நீங்க விடக் கூடாது'ங்கிறதுதான். அதாவது... உச்சநீதிமன்றத் துல, "ராஜ்குமார் விஷயத்துல அவங்க கேட்ட 5 பேர, ரெண்டு அரசாங்கமும் ஒத்துக்கொள்ளக் கூடாது'ன்னு ஒரு பிரைவேட் கம்ப்ளைண்ட் போட்டு, அதுல தடை கேட்க... அதுக்கு கோர்ட்ல தடை குடுத்துட்டாங்க. அந்த மிஷன் தோல்வி யடைஞ்சிருச்சு. எங்க எல்லார் தலையிலயும் இடி விழுந்துச்சு.
அதுக்கு முக்கிய காரணத்த தேவாரத்துடைய "மூணாறிலிருந்து மெரினா வரை"ங்கிற புத்தகத்துல 458-வது பக்கத்துல வால்டர் தேவாரம் பதிவு பண்ணியிருக்காரு. இந்தப் புத்தகத்ததான் சார், நடந்துக்கிட்டிருக்கிற தி.மு.க. ஆட்சியில போலீஸ் கேன்டீன்ல விக்கிறாங்க.
இவரு அதுல பம்மாத்தா சொல்றாரு. "வீரப் பனுக்கு 5 பேர குடுக்குறதுக்கு ரெண்டு கவர்மெண்ட் டும் ஒத்துக்கிச்சு... அத நான்தான் தடுத்தேன். என்னுடைய அபிடவிட்னால, என்னையத்தான் கேட்டாங்க உச்ச நீதிமன்றத்துல. நான்தான் குடுக்கக்கூடாதுன்னு சொன்னேன். என் பேச்சைக் கேட்டுத்தான் அந்த மிஷனையே தடை பண்ணு னாங்க''ன்னு சொல்லி அவரு மார்தட்டியிருக்காரு சார். இந்த புக் இன்னிக்கு தி.மு.க. ஆட்சி நடக்கிறப்ப, காவல்துறை கேன்டீன்ல விக்குது.''
அதுல என்ன சொல்றாரு...
"அரசாங்கங்கள் அவனுடைய மிரட்டலுக்கு பயப்படவேண்டியிருந்தது. ராஜ்குமாருக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுவார்கள். இரண்டு முதல்வர்களும் கூடிப்பேசி, ஆர்.ஆர்.கோபால் என்கிற நக்கீரன் ஆசிரியரை தூதுவராக அனுப்பினார்கள். (அப்பவும் நக்கீரன் கோபால்னு அவரு வாயில வரல பாருங்க. நக்கீரன் கோபால்னு சொன்னா, நக்கீரன்னு சொல்லிட்டாலே வாயில புத்து வந்துரும் போல... அதுக்காகவே சொல்றதில்ல.)
"14 கோரிக்கைகள், நிபந்தனைகள் அரசாங்கத் துக்கு அனுப்பப்பட்டது. அதில் முக்கியமானது காவிரி நதிநீர் பிரச்சினை, பன்னாட்டு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும்....''
அப்படியே ஒரு நாலஞ்சு விஷயத்தச் சொல்றாரு. அதுல முக்கியமா ஒரு விஷயம் வருது.
"இந்தவேளையில் கர்நாடக உயர் நீதிமன்றம் 56 தடுப்புக் காவல் கைதிகளை விடுதலை செய்தது. ஆனால் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கர்நாடகத்தைச் சேர்ந்த அப்துல் ஹரீம் என்பவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மகன் ஷகில் அகமதும், ஹரிகிருஷ்ணா என்ற காவல் கண் காணிப்பாளரும் வீரப்பனால் கொல்லப்பட்டனர். அந்த மனுவின் மீது நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் எனது கருத்தைக் கேட்டது.
(அதுதான் முக்கியம்) அதாவது... உச்ச நீதிமன்றத்துல, அங்க இருந்து இவரோட கருத்த கேட்டாங்களாம்.
அது எல்லாம் பொய். இவருதான் கர்நாடகாவுல வீரப்பனால் கொல்லப்பட்ட ஷகில் அக்தரின் அப்பா அப்துல்கரீமை ஏற்பாடு செஞ்சு உச்ச நீதிமன்றத்துல வழக்கு போடச் சொன்னவர். "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுன கதையா...' இப்ப ஏதோ தெரியாத மாதிரி... "உச்ச நீதிமன்றத் துல ஒரு வழக்கு வந்துச்சாம். அதன்மேல இவர்ட்ட கருத்துக் கேட்டாகளாம். இவரு தன் கருத்த சொன்னாராம்...'
அண்டப்புளுகு... ஆகாசப் புளுகு!
இவருதான் ரிட்டையர்டு ஆயிட்டாரு சார். இவருக்கு என்ன வேலை?
கலைஞரும் "வெளுத்ததெல்லாம் பால்'னு இருந்தாங்க அப்ப. இப்பவும் நம்ம அண்ணன் முதல்வர், தளபதியும் வெளுத்ததெல்லாம் பால்னு இருக்கிறதுனாலத்தான்... இதெல்லாம் நடக்குது. அதத்தான் நான் சொல்ல வர்றேன்.
தேவாரம் இதுல அட்மிட் பண்றாரு. அதாவது உச்ச நீதிமன்றம் அப்துல் கரீம் போட்ட அந்த வழக்குல "இவரோட கருத்து என்ன?'ன்னு கேட்டுச்சாம். அதுல இவரு, தன் கருத்த சொன்னாராம்.
என்ன கருத்து?
"நான் கீழ்க்கண்டவாறு எனது விரிவான அறிக்கையை கடைசியில் குறிப்பிட்டேன். "தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுவிப்பது குற்றமும், அரசியலும் சேர்ந்த ஒரு மோசமான விளைவை உண்டாக்கும்' என்று கூறினேன். உச்சநீதிமன்றம் எனது கருத்துக்களை ஏற்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்தது.''
எப்படி... எப்படி? அதாவது... 5 பேர விட்டுறாதீங்க. ஏன்னா 5 பேர விடலன்னா மிஷன் முடிஞ்சு போச்சு. அவன் ராஜ்குமார விடமாட்டான். அது இவங்களுக்குத் தெரியும். அதனால 5 பேர விடக்கூடாதுன்னு இவரு பெட்டி ஷன் போடுறாரு சார். இவரோட கருத்த ஏத்துக்கிட்டுதான் ஸ்டே குடுத்ததா இவரே அட்மிட் பண்றாரு.
அந்த மிஷன் இடையில நின்னுபோனது. ஏன்னா 45 நாள்ல முடியவேண்டிய ஒரு மிஷன் சார். தேவாரம் நான்தான் பண்ணுனேன்னு இதுல அட்மிட் பண்ணுனாரு. நான் அன்னிக்கே சொன்னேன், "இந்த வழக்கு, ஸ்டே வாங்குனது எல்லாம் தேவாரத்தோட வேலை'ன்னு. அப்ப அத யாரும் பெருசா எடுத்துக்கல. ஆனா, அப்ப இருந்த தி.மு.க. கவர்மெண்டும், கர்நாடகத்துல இருந்த காங்கிரஸ் கவர்மெண்டும் கலைக்கப்படணும்னு வெகுவா வேலை பார்த்த ஜெயலலிதா, அந்த ஜெயலலிதாவுக்கு கீழ இருந்த தேவாரம் பண்ணுன ஒரு பயங்கரமான சூழ்ச்சியான ஒரு வழக்கு. "அந்த வழக்குல என்னுடைய கருத்த கேட்டுத்தான் பண்ணுனாங்க'ன்னு இவரே அட்மிட் பண்ணியிருக்காரு சார்.
இப்ப... இந்தக் கருத்து இருக்கிற ஒரு புத்தகம், இன்னிக்கு நம்ம தமிழ்நாடு அரசாங்கம் நடத்துற காவல்துறை கேன்டீன்ல விக்குது சார். "என்ன கொடும சரவணா'ங்கிற மாதிரிதான்...!
(புழுதி பறக்கும்)