ss

(270) என்னைக் கொல்ல கன்னம்வச்சு அலைந்த போலீஸ் கிரிமினல்!

ண்ணன் நக்கீரன் கோபால், கடந்த 35 வருட அரசியல், சமூகம், சினிமா, பத்திரிகை சார்ந்த, தெரிந்த தெரியாத பல்லாயிரம் நிகழ்வுகளை, உணர்ச்சி குவியல்களாக நிரம்பி ததும்பிக் கொண்டிருக்கும் ஆவணப் பெட்டகம் அவர்.

ssஅண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற இன்று சந்தித்தபோது, சூப்பர் ஸ்டார், ரஜினி ரசிகன், கலைஞர், நடிகர் திலகம், ஜெ, வீரப்பன், ராஜ்குமார், கிருஷ்ணா, நக்கீரன், உபால்டு, டெல்லி, சினிமா, லாட்டரி, சங்கராச்சாரியார், போலீஸ், 1000 ஏக்கர் திருச்சி ஜெயில், பற்றிய புதிய தகவல்கள், அண்ணன் சொன்ன பல செய்திகள் நெருப்பைப்போல் இருந்தது. கேட்ட நாங்கள் திகைப்போடு இருந்தோம். அண்ணன் எப்போதும்போல் செய்தி முடிக்கும்முன் அவரின் ‘அக்மார்க்’அட்டகாச சிரிப்போடு அசால்ட்டாக சொல்லி முடித்தார். அவரை சிக்க வைத்ததையும், பெரும் போராட்ட துயரங்களுக்குப் பிறகு இவர் ஜெயித்து வந்த பரபரப்பு நிகழ்வுகளைக்கூட படபடப்பு இல்லாமல் பாட்டி கதை போலத்தான் சொல்லுவார். இந்த நுட்பமே நக்கீரன் வெற்றி. மேலும், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இவருக்கு பத்திரிகைத் துறையால் வந்தது மட்டுமல்ல.. பழகியவர்களுக்குத் தெரியும், அது அவர் வார்த்தையிலும், வாழ்க்கையிலும் கலந்திருப்பது. வாழ்த்துகள் அண்ணன்! வாழ்க, வாழ்க அண்ணன்!

Advertisment

-சுப்ரமணியம் சிவா, இயக்குநர்

த்ரீ ரோசஸ் கமகம...

ண்ணன் நக்கீரன் கோபால், கடந்த 35 வருட அரசியல், சமூகம், சினிமா, பத்திரிகை சார்ந்த, தெரிந்த தெரியாத பல்லாயிரம் நிகழ்வுகளை, உணர்ச்சிக் குவியல்களாக நிரம்பி ததும்பிக் கொண்டிருக்கும் ஆவணப் பெட்டகம் அவர்.

Advertisment

ss

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற இன்று சந்தித்த போது, சூப்பர் ஸ்டார், ரஜினி ரசிகன், கலைஞர், நடிகர் திலகம், ஜெ, வீரப்பன், ராஜ்குமார், கிருஷ்ணா, நக்கீரன், உபால்டு, டெல்லி, சினிமா, லாட்டரி, சங்கராச்சாரியார், போலீஸ், 1000 ஏக்கர் திருச்சி ஜெயில் பற்றிய புதிய தகவல்கள், அண்ணன் சொன்ன பல செய்திகள் நெருப்பைப்போல் இருந்தது. கேட்ட நாங்கள் திகைப்போடு இருந்தோம். அண்ணன் எப்போதும்போல் செய்தி முடிக்கும்முன் அவரின் ‘அக்மார்க்’அட்டகாச சிரிப்போடு அசால்ட்டாக சொல்லி முடித்தார். அவரை சிக்க வைத்ததையும், பெரும் போராட்ட துயரங்களுக்குப் பிறகு இவர் ஜெயித்து வந்த பரபரப்பு நிகழ்வுகளைக்கூட படபடப்பு இல்லாமல் பாட்டி கதை போலத்தான் சொல்லுவார். இந்த நுட்பமே நக்கீரன் வெற்றி. மேலும், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இவருக்கு பத்திரிகைத் துறையால் வந்தது மட்டுமல்ல.. பழகியவர்களுக்குத் தெரியும், அது அவர் வார்த்தையிலும், வாழ்க்கையிலும் கலந்திருப்பது. வாழ்த்துகள் அண்ணன்! வாழ்க, வாழ்க அண்ணன்!

-மானா.பாஸ்கரன், கவிஞர் -பத்திரிகையாளர்

கல்வெட்டுப் பெருமை!

திருவல்லிக் கேணி வல்லப அக்ரஹாரத்தில் இருந்த சின்ன குத்தூசி அய்யா வின் அறையில் இருந்தபோது, அங்கு கோபால் அண்ணன் வந்தார். அவரிடம் அய்யா, "இவரு எங்க ஊர்க்காரர், தினகரன்ல வேலை பார்க்கிறார்'’என்று அறிமுகம் செய்வித்தார். அன்று தொடங்கிய பாசப்பயணம். தொடர்கிறது.

கடந்த ஜனவரியில் புத்தகக் காட்சியில் சந்தித்தபோது, ‘"உங்க வீரப்பன் வெப் சீரிஸ் நன்றாக இருந்தது அண்ணே''”என்றேன். "அதோ அந்தம்மா நிக்கிறாங்க பாருங்க, அவங்கள்ட்ட சொல்லுங்க''’என்று, நக்கீரன் ஸ்டாலின் உள்ளே நின்றிருந்த மகளைக் காட்டினார். அண்ணனிடம் ஆட்டோகிராஃப் வாங்க நிறையபேர் வந்துகொண்டேயிருக்க, சின்ன இடை வெளியில் "கொஞ்சம் இருங்க டீ குடிச் சிக்கிறோம்''’ என்று வாசகர்களிடம் அனுமதி பெற்று, என்னோடு தேநீர் அருந்தினார். த்ரீ ரோசஸ் கமகம. திடம், மணம், ருசி, மூன்றில் த்ரீ ரோசஸுக்கு அண்ணனிடமிருந்து திடம் வந்தி ருக்கும் போல. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே!

-எம்.பி. உதயசூரியன், பத்திரிகையாளர்

காலம் அடை காத்து வைத்திருக்கிற ஆச்சரியங்கள்தான் எத்தனை! ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது நான் ’புதிய தலைமுறை’ வார இதழின் துணை ஆசிரியர். மதிய உணவு நேரம். கேண்டீன் சென்றபோது ஒரு புதிய முகம். பார்த்தால், ‘நக்கீரன்’ ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் அன்பு மகள் பிரபாவதி!

அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன். அன்பிலும் பண்பிலும் பேச்சிலும் அதே மீசைக்கார அண்ணனின் பாசப் பிம்பமாகவே தெரிந்தார். ”"புதிய தலைமுறை தொலைக் காட்சியில் இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்திருக்கேன் அண்ணே. நல்ல அனுபவமா இருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்குணே''’என்று சிரித்த முகமும், நம்பிக்கை தெறித்த பேச்சுமாகப் பார்த்த அந்தப் பிரபாவதி, அதே ‘பிரமாதவதிதான் இன்று ‘"அசர வைக்கிற அசுர வித்து'’ என ஊடகங்களால் உள்ளன் போடு உச்சிமோந்து மெச்சப்படுகிறார்.

"கூச முனுசாமி வீரப்பன்'’ என்ற மிரட்டலான ஆவணத் தொடரைத் தயாரித்து ஞபப உலகையே புரட்டிப் போட்டிருக்கிறார். அன்று தொலைக்காட்சிப் பயிற்சி பெற வந்த அந்த இளம்பிள்ளை, இன்று தொலைக்காட்சி உலகில் பதித்திருக்கிறார் தனக்கென ஒரு தனி மைல் கல்லை.

ss

அன்பு மகள் பெறும் பெரும் புகழ் கண்டு பெருமிதம் கொள்வது மீசைக்கார அண்ணன் மட்டுமல்ல, அவரது தம்பிகளாகிய நாங்களும் தான். காரணம், தனது முதல் முத்திரைப் படைப்பாக, காதல், காமெடி, சமையல், குடும்பம் என பொழுதுபோக்குத் தொடர்களில் ஆர்வம் காட்டவில்லை பிரபாவதி ஆர்.வி. மாறாக. தனது தந்தை புலனாய்வுப் பத்திரிகை யாசிரியராக உயிரைப் பணயம் வைத்து ஊர் உலகிற்குக் காட்டிய பேருண்மையை, ஒரு மர்ம வன மனிதனின் அப்பட்டமான மறுபக்கத்தைத் துணிந்து கையிலெடுத்து, தனது துடிப்பான குழுவோடு ஆவணத் தொடராக்கி மொத்த இந்தியாவையே கைதட்ட வைத்திருக்கிறார். வாழும் காலத்தில் புலனாய்வுப் பத்திரிகை யாசிரியராக வரலாறு படைத்த தன் தந்தையின் உச்சகட்ட சாகச உழைப்பை, அவர் வாழும் காலத்திலேயே வரலாறாக வடித்து வைத்த முதல்வி பிரபாவதி என்பது கல்வெட்டுப் பெருமை.

இன்று அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்குப் பிறந்தநாள். அச்சு ஊடகத் தலைமுறையின் தலைசிறந்த பத்திரிகையாள ரான அண்ணன், தனது அடுத்த தலைமுறை யையும் அச்சமில்லாத காட்சி ஊடகத் தலைமகளாக வார்த்திருக்கிறார். இதன்மூலம் அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிரான ஒரு போர்க்குரலை தனது மகள் பிரபாவதி வடிவில் ஊடகத்தில் சேர்த்திருக்கிறார்! இதற்காகவே -அசத்தும் பிள்ளைக்கும் அசராத தந்தைக்கும் சக பத்திரிகையாளராக கம்பீர வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

சும்மா... "போர்க்களம்' போர் அடிக்காமப் போறதுக்கு ஜாம்பவான் கள் சிலர் போட்ட பதிவை பதிவு செஞ்சேன் அம்புட்டுதான்...

போன இதழ்ல நம்ம தேவாரம், முக்தார் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றாரு. அதாவது "நக்கீரன் கோபால் எப்படிப் போனாரு' அப்படின்னு கேக்குறாரு. அதுக்குத்தான், தலையச் சுத்தி மூக்க தொடுவாங்கல்ல... அது மாதிரி தேவாரம் சுத்திச் சுத்தி எங்கெங்கயோ போறாரு. அவரு என்ன சொல்றாரு... "எனக்கு வீரப்பன தெரியும். நான் போய் வீரப்பன விடுதல பண்ணிட்டு வர்றேன்'னு நான் சொன்னேனாம். நேருக்கு நேரா நான் பாத்தா... நாக்கப் புடுங்குற மாதிரி கேப்பேன் தேவாரத்த.

"நான் சொன்னனா? போய் ராஜ்குமார கூட்டிட்டு வர்றேன்'னு தேவாரத்துட்ட. உலகத்துக்கே தெரியும். நான் போகமாட்டேன்னு சொன்னது. அப்போ கலைஞர் போனுக்கு வந்துக்கிட்டேயிருக்காரு. ராஜ்குமார் துணைவியார் இங்க சென்னைக்கு நம்மள தேடிவந்து, நான் இல்லன்னவுடனே சிவாஜி சார் வீட்டுக்குப் போயிட்டாங்க. சிவாஜி சார் அங்கயிருந்து போன் பண்றாரு. அப்புறமா ரஜினி சார் குறைஞ்சது ஒரு 13 தடவைக்கு மேல போன் பண்ணுனாரு. அந்த எண்ணிக்கைய நான் இன்னமும் மறக்கவே இல்ல.

மத்தியானம் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஒருத்தரு என்கிட்ட வந்து "நீ போயிராத... உன்னக் கொன்னுருவாங்க' அப்படின்னு சொல்றாரு. மத்தியானம் அவரு வந்து சொன்னாரு பாத்தீங்களா... "உன்ன சுடுறதுக்கு ப்ளான் பண்ணிட்டாரு'ன்னு சொல்லி, அது வேற யாருமில்ல... நம் அன்புக்குரிய துக்கையாண்டின்னு ஒரு ஐ.ஜி. சார்தான்.

"போயிராதே... போயிராதே... அப்படின்னு வந்து குத்தூசி ஐயா அறையில வந்து ஒரு போலீஸ் ஆபீஸர், "நீங்க போனீங்கன்னா சுட்டுக் கொல்றதுக்கு இப்ப டீம் ரெடி பண்ணிட் டாங்க'ங்கிறாரு. எப்ப? கடத்தல்ங்கிற செய்தியே அன்னிக்கு காலைலதான் வருது. அன்னிக்கே அவரு 1 மணிக்கெல்லாம் வந்து சொல்லிட்டாரு, இந்த மாதிரி திட்டமிட்டாங்கன்னு.

அப்பயிருந்தே நான் ஒரு விஷயத்த சொல்லிக் கிட்டேயிருக்கேன். இந்த மாதிரி போலீஸ் என்ன உள்ள விட்டு கொல்றதுக்கு திட்டமிட்டிருக்காங்க. அதுல முக்கியமா தேவாரம், தேவாரத்தோட அடிப் பொடிகள். அடிப்பொடிகள்தான் நெறையவே இருக்காங்களே. சைலேந்திரபாபுவும் அவரோட அடிப்பொடிதான! விஜயகுமாரும் அவரோட அடிப்பொடிதான். உள்ள... மோகன்நிவாஸ்னு போலீஸ் கிரிமினல் ஒருத்தன். கிரிமினல்னா... அவன நல்லாவே அப்படிச் சொல்லலாம். அந்த அளவுக்கு என்னையும், என் தம்பிகளையும் கொல்றதுக்கு கன்னம்வச்சு அலைஞ்சவன் அவன். அதத்தான் ஐ.ஜி. துக்கையாண்டி வந்து, முன்னேற்பாடா நட்புரீதியில சொல்றாரு "போயிறாதீங்க'ன்னு. அது "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ன்னு போன இதழ்ல சொன்னது மாதிரி இந்தவாட்டி முக்தார் கேள்விக்கு தேவாரம் சொல்ற பதில்ல... அது எவ்வளவு உண்மைன்னு இத்தன வருஷம் கழிச்சு ஒத்துக்கிறாப்டி.

கேள்வி என்னன்னா... "ஏன் நக்கீரன் கோபால டிசைடு பண்ணுனீங்க? வேற யாரும் இல்லியா? இதுதான் கேள்வி.

அதுக்கு தேவாரம் என்ன பதில் சொல்றாப்டி. எல்லாமே வீடியோல இருக்கு... சத்யம் டி.வி.ல தேவாரம் கொடுத்த பேட்டி அப்படியே வீடியோல இருக்கு. தேவாரம் என்ன சொல்றாரு அப்படின்னா... "அவன் (யார... என்னைய) "எனக்கு வீரப்பனைத் தெரியும். தெரியும்னா காண்டாக்ட் இருக்கு. நான் போய் ராஜ்குமார விடுதலை பண்ணிட்டு வந்துருவேன்னாரு'' அப்படிங்கிறாரு.

அப்ப முக்தார் கேக்குறாரு ஒரு கேள்விய... "அவரே கேக்கிறாரா?''

அவரு நல்லாவே போடுறாரு கேள்விய.

தேவாரத்தோட பதில பாருங்க...

(புழுதி பறக்கும்)