ss

"என் அப்பாவுக்கு நீதி கிடைத்தது!'' -வித்யா வீரப்பன்

"கவிதை உறவு' அண்ணன் ஏர்வாடியாரின் கட்டுரை தொடர்கிறது...

"சேலஞ்ச்' நூலைப் படித்தறிந்து மேலும் தெரிந்து வியந்தேன் என்பதிலும், மேலாய் மெய்சிலிர்த்தேன். இது அவருடைய பெருமைமிகுந்த போராட்டம் நிறைந்த வாழ்க்கை வரலாறு என்பதைக் காட்டி லும் அவலமான தமிழகத்தின் அப்பட்டமான படப்பிடிப்பு என்பதே சரி. நம்மில் சிலருக்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய பல விஷயங்களுக்காக அவர் வெகுண்டெழுந்திருக் கிறார். "நமக்கென்ன வந்தது' என்று மணலைத் தட்டிவிட்டுவிட்டு எழுந்து போகிற பலர் நடுவே, சம்பந்தப்பட்டவர்களின் மண்டையில் குட்டியவர் அவர். தட்டிக் கேட்கும் திராணியுள்ள ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பதைப் புலப்படுத்துகிறது.

Advertisment

எதற்கும் துணிந்த, எந்த சவாலையும் சந்திக்கும் வலிவுள்ள நல்ல நண்பர்களோடு ஒரு தனி மனித ராணுவமாக விளங்கி, நவீன குருஷேத்திரம் காணுகிற கிருஷ்ணபரமாத்மா நமது கோபால். நக்கீரன் இதழானது வெறும் நாலாயிரம் ரூபாயுடனும் நம்பிக்கையுடனும் நடக்கத் தொடங்கி, ஓட்டமும் நடையுமாக ஓய்விலாது வெளிவந்துகொண்டிருக்கிற வரலாற்று ஆவணம். புதைந்து போய்விடாமல் பல உண்மைகளைப் பலரும் அறியும் வண்ணம் படிக்கத் தருகிறது இவ்விதழ். அரசுக்குக் கூட எதிராகி, அநேக வழக்குகளைச் சந்தித்தாலும் அசாத்தியத் துணிச்சலோடு பல மிரட்டல்களை யும், வழக்குகளையும் சந்தித்து பலரை சந்திக்குக் கொண்டுவந்து சரித்திரம் படைத்துள்ளது நக்கீரன்.

"சேலஞ்ச்' நூல் ஒரு துப்பறியும் நாவலைப் போல விறுவிறுப்பான ஆவணம் என்பதாக புகழ்வாய்ந்த எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர் புகழ்ந்துரைத் துள்ளனர்.

நாமெல்லாம், நாம் படிக்கும் செய்தித் தாள்களைக் கட்டிக் கடைக்குப் போடுவதைப் போலவே, கவனத்திலிருந்தும் பல செய்திகளைக் கழற்றிப் போட்டுவிடுவோம். அழுந்தப் பதிந் திருக்கிற சில வடுக்களை, ஆறாத ரணங்களை நினைத்துப் பார்த்தால் நாம் அமைக்கிற அரசுகளே நமக்கெதிராகப் போகிறதே என்கிற நியாயமான ஆத்திரம் வரும், வரவேண்டும். அதுதான் தவறிழைப்பவர்களுக்கு எதிரான குறைந்தபட்சத் தடுப்பாகும். புலனாய்வு இதழ்களின் பெரிய பொறுப்பாக இது வகுக்கப்பட்டிருக்கிறது. அப்பொறுப்பை நக்கீரன் மிகச்சிறப்பாகச் செய்துவருகிறது.

Advertisment

அ.தி.மு.க. அலுவலக முற்றுகை, ராஜீவ்காந்தி மரணம், மகாமகக் குளியல் சாவு, சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு, அமைச்சர் ப.சிதம்பரம் கார் தாக்குதல், சந்திரலேகா மீது அமில வீச்சு, ஆட்டோ சங்கர் கொலைகள் பின்னணி?, வீரப்பன் வேட்டை... இப்படி எண்ணிலடங்கா பரபரப்புச் செய்திகளின் பின் னணியில் நடந்தவற்றை, நடந்தவாறு விவரித்த திலிருந்த நக்கீரனின் துணிச்சல் வேறெந்த இதழாளர்களிடமும் இல்லை எனலாம்.

அரசு அதிகாரிகள் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது யாரும் மானநட்ட வழக்கு தொடரமுடியாது என்ற நிலையிருந்தது. ஆனால் அலுவலக ரகசியக் காப்புச் சட்டம் (Official Secret Act 1923) எந்தவிதத்திலும் பத்திரிகைகளை கட்டுப்படுத்த முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கக் காரணமாயிருந்த நக்கீரன், பத்திரிகைச் சுதந்திரத்தின் பலத்தை நிரூபித்தது. இது குறித்த குறிப்பை All India Reporter 1995 நூல் R. Rajagopal Vs State of Tamilnadu Page 264 to 277ல் காணலாம்.ssssss

ss

இதுபோல சந்தன வீரப்பன். அவனைச் சந்தித்ததும், சந்தித்து நிகழ்த்திய பேச்சுவார்த்தை களும், நடத்துகொண்ட லாவகமும், காட்டிய துணிச்சலும் நக்கீரன் கோபால் அவர்களை உலகமே கூர்ந்து கவனிக்குமளவு ஒரு சிறந்த பத்திரிகையாளராகக் காட்டியதை யாரும் மறக்க முடியாது. இது குறித்த செய்திகளை ஊடகங் களில் நாம் நிறைய பார்த்துத் தெரிந்துள்ளோம் என்றாலும் நினைவில் பதித்துக்கொள்ளுமளவு ஒரு விளைவை ஏற்படுத்தியவர் கோபால் மட்டுமே.

வீரப்பன் வேட்டையில் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்பட்ட மலைவாழ் மக்கள் நலனுக்காகப் பெரிதும் போராடியவர்களில் நக்கீரன் கோபால் முக்கியமானவர்.

"கவிதை உறவு' கட்டுரை முடிஞ்சுச்சா...

ZEE5-ல் வெளியான "கூச முனிசாமி வீரப்பன்' வெப் சீரிஸ் குறித்து...

இரத்தமும் சதையுமா என்று வழக்கமாகச் சொல்வார்கள். நம்முடையது இரத்தமும் சதையுமான உணர்வும், உண்மையுமான படைப்பு. நக்கீரனின் தைரியமும், தியாகமும் உருவாக்கிய படைப்பு. அதற்கு என் அன்பு மகள் பிரபாவதியும் அவருடன் அன்புத்தம்பி வசந்த்தும், அன்புத்தம்பி ஜெய்யும் கொடுத்த புதிய வடிவம்... திட்டமிட்டு பல சர்வதேச டாகுமெண்டரிகளின் ட்ரீட்மென்ட்டை ஒப்பிட்டு உருவாக்கியிருப்பார்கள். இன்று அது நாடு கடந்து உலகமெல்லாம் பேசுமளவு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

dd

பல இடங்களுக்கு நாம போகும்போது, பல பிரபலங்கள, இளைஞர்கள, உறவுகள அங்க, இங்கன்னு சந்திக்கும்போது முதல்ல பாராட்டிச் சொல்லுறது இந்த "கூச முனிசாமி வீரப்பன'த்தான் 28 ஆண்டு காலம் நாம பட்ட பாட்டுக்கு பலன். எங்கள் சீனியர் வக்கீல், நீதிமன்றத்துல சிங்கமாய் கர்ஜிக்கும் அன்பு அண் ணன் ப.பா.மோகன் அவர்களின் புதல்வர்... குட்டிச் சிங்கம் வழக்கறி ஞர் அன்புத்தம்பி சுபாஷ் என் வாட்ஸ்-ஆப்புக்கு ஒரு வாய்ஸ் செய்திய பரபரப்பா பேசி அனுப்புனாரு. அதுல...

"இன்னிக்கு ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஒருத்தரு வேறொரு கேசுக்காக ஆபீஸ் வந்திருந்தாரு. வந்தவரு கேஸ் பத்தி பேசிட்டு, வீரப்பன் வெப் சீரிஸ் பத்தி பேசிக்கிட்டிருந்தாரு. அவரு சொன்னது... "எல்லா அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸும், எல்லா டைரக்டர்ஸுமே இந்த படத்தோட மேக்கிங்கையும், மேக்கிங் ஸ்டைலையும் பாத்து மிரண்டு போயிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படத்த அவங்க இதுவரைக்கும் யாருமே பாத்ததில்லியாம். பாதிபேரு இத ஒரு லேர்னிங் பேப்பர் மாதிரி எடுத்துக்கிறோம்'னு சொல்லியிருந்தாங்க அப்படின்னு சொன்னாப்ல.''

"ஒரு அரை மணி நேரம் இந்த வெப் சீரிஸைப் பத்திதான் பேசுனாரு. "இது சாதாரண வெற்றி இல்ல. பிளாக்பஸ்டர் வெற்றி. அக்காவுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லுங்க'ன் னார். அக்கான்னா... என் மகள் பிரபாவதியத்தான் சொல்றாரு.''

நக்கீரன் வெப் & யூ-டியூப் டீமின் சீனியர் தம்பி, நம்ம ராஜவேல் இந்த நேரத்துல அண்ணன் வீரப்பனின் மூத்த மகள்... அருமை மகள் வித்யா வீரப்பன் அவர்களை பேட்டி கண்டார். அதில், ஒரு கேள்வி.... அதற்கு அவர் கொடுத்த பதில்...

கேள்வி: பின்னாடி என்னப் பத்தி படம் எடுப் பாங்க. அப்படி எடுக்கும்போது சில விஷயங்கள யெல்லாம் கட் பண்ணிடுவாங்க. கட் பண்ணாம நீங்க பாத்துக்கணும்னு நக்கீரன் ஆசிரியர்கிட்ட அப்பா சொல்வாங்க. ஒருவேளை இப்ப இருந்து படத்த பாத்திருந்தா, என்ன சொல்லியிருப்பாரு? அதை யெல்லாம் பத்தி என்ன நினைக்கிறீங்க?

வித்யா: "என் அப்பாவுக்கு நக்கீரன் அங்கிள் நீதி வாங்கிக் கொடுத்துட்டாங்க. சொன்ன வார்த்தையையும், சத்தியத்தை யும் நக்கீரன் அங்கிள் அப்பாக்கு காப்பாத்திக் குடுத்துட்டாரு, அவருக்காக நின்னுட்டாரு. அவர் உயிர்வேணும்னா காப்பாத்த முடி யாம போயிருச்சு அரசியல் காரணத் துக்காக பட், நியா யத்த காப்பாத்திக் குடுத்துட்டாருங் கிற ஒரு நிம்மதி எனக்கும் இருக்கு. அத அப்பாவோட ஆன்மா வந்துட்டு நினைச்சு சந்தோஷப்படுவாங்கன்னு நான் கண்டிப்பா நம்புறேன்.

நக்கீரன் அங்கிளும், அப்பாவும் வீடியோல பேசுனத பாத்திருக்கேன், அப்புறமாத்தான் நக்கீரன் அங்கிளும் நேரடியா சொன்னாரு. இந்த மாதிரி "என் மகள மருத்துவரா ஆக்கணும்னு பேசியிருக்கார் இல்லீங்களா', அதையெல்லாம் பாக்கும்போது ஒரு வியப்பா... நக்கீரன் அங்கிள் மூலமா எனக்கொரு தகவல் அப்பா கொடுத் தனுப்பியிருக்கிறதா ஃபீல் பண்ணுனேன்.''

கொஞ்சகாலமா கொடுக்கு முளைச்சதெல்லாம் பொய்... பொய்யாப் பேச ஆரம்பிச்சுருச்சு...

(புழுதி பறக்கும்)