ss

"ஐந்து நாட்களுக்கு முன்பு, நண்பர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள், அண்ணன் 'நக்கீரன்' இதழில் எழுதி வரும் 'போர்க்களம்' தொடரை மிகவும் பாராட்டி பேசினார்கள்.

ஒரு திரைப்படத்திற்குரிய விறுவிறுப்புடனும், திருப்பங்களுடனும் அந்தத் தொடர் இருப்பதாக கூறினார்கள்.

ஜெயலலிதாவின் வீட்டிலிருந்த பொருட்களின்... ஆடைகளின்... நகைகளின்... காலணிகளின்... முக்கியமா விதவிதமான சொத்துக்களின் பட்டியலை "நக்கீரன்' இதழில் வாசித்துவிட்டு, மலைத்துப் போய்விட்டதாக கூறினார்கள்.

Advertisment

அண்ணன், உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக் கிறேன். பல வருடங்களுக்கு முன்பு, மலையாள நட்சத்திர எழுத்தாளரான திரு.சக்கரியா அவர்கள் உங்களைப் பற்றி மலையாள வார இதழான "மங்கள'த்தில் மிகவும் துணிச்சலாக எழுதிய ஒரு கட்டுரையை தமிழில் நான் மொழிபெயர்க்க, அது அந்த காலகட்டத்தில் "நக்கீரன்' இதழில் பிரசுரிக்கப்பட்டது.

அதை அவர்கள் நினைவுகூர்ந்து "எந்த அளவிற்கு மிகவும் கூர்மையாக ஆராய்ந்து அந்த கட்டுரையை சக்கரியா எழுதியிருந்தார்' என்று ஆச்சரியத்துடன் கூறினார்கள்.

நான் மொழிபெயர்த்து, 2005ஆம் வருடத்தில் பிரசுரமான சக்கரியாவின் அந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் இப்போது கூட என் மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது.

Advertisment

என் நண்பர்களின் மனங்களிலும் அது எந்த அளவிற்கு பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்தபோது, பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.''

-சுரா

(265) "நக்கீரனின் துப்பாக்கிகள்'! -சக்கரியா

னக்கு நல்லா ஞாபகம் இருக்கு... நான் அப்ப என்மேல் போட்ட கொலை வழக்க எதிர் கொள்ள கோவையில தங்கியிருந்தேன். சுரா அண்ணன், "நக்கீரனின் துப்பாக்கிகள்'ங்கிற தலைப்புல எழுத்தாளர் சக்கரியா எழுதி "மங்களம்' மலையாள இதழ்ல வந்த கட்டுரையப் பாத்து உற்சாகமா... "பிரமாதமான தலைப்புல சக்கரியா எழுதியிருக்காரு'ண்ணேன்னு எனக்கு போன்ல சொன் னாரு. உடனே, "அண்ணே... அத அப்படியே நம்ம நக்கீரனுக்கு மொழியாக் கம் பண்ணிக் குடுங்க''ன்னு சொல்லி வெளியிடச் சொன்னேன்.

அந்தக் கட்டுரை அப்படியே உங்களுக்கு...

"குற்றச் செயல் களைப் பற்றியும், குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றியும் காவல் துறை யினர் பத்திரிகைகளுக்குக் கூறுகின்ற கதைகளை, அவர்கள் சொன்னபடியே "செய்தி' என்ற பெயரில் பத்திரிகைகüன் தாள் கüல் வாந்தியெடுப்பதை வழக்கமாகக் கொண்டி ருக்கும் மலையாளப் பத்திரிகைகளைப் படிக்க நேரும் நபர்களுக்காக இதை நான் எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரைக்கு ஆதாரமான செய்தி, எனக்குத் தெரிந்த அளவில் பிரபல மலையாளப் பத்திரிகைகள் எதிலும் காணப்படவில்லை. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

காரணம் -காவல் துறை கூறும் விஷயங்கள் பெரும்பாலும் வேண்டு மென்றே உருவாக்கப்படும் பொய்யான கதைகள் மட்டுமல்ல; ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத பல பொய்கள் அவற்றில் இருக்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு செய்திக்கு முக்கியத்துவம் தந்து மலையாள பத்திரி கைகள் எதற்குத் தங்கள் உணவில் தாங்களே கரப்பான்பூச்சியை விழச் செய்ய வேண்டும்? "பத்து தீவிரவாதிகள் தீர்த்துக் கட்டப்பட்டார்கள்' என்று எட்டு "காலம்' தலைப்பில் அலறிக்கொண்டு செய்தி போடுவது மிகவும் எü தான ஒரு விஷயம். அது வியாபாரம் செய்வதற்கு மிகவும் வசதியான விஷ யமும்கூட. ஆனால் தீர்த்துக்கட்டப்பட்டது, "தீவிரவாதிகளா அல்லது பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்த பத்து அப்பாவிகளை அந்த வாரத்தின் "தீவிரவாதிகள் வேட்டை'யின் எண்ணிக் கையைக் காட்டுவதற்காக காவல்துறை கொன்று தீர்த்துவிட்டிருக்கிறதா' என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்பதற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.

அந்தச் சிந்தனையின் வெüச்சத்தில், "தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படுகிற' என்றோ; "காவல்துறை கூறியபடி' என்றோ செய்தியைப் போடுவதில் எதற்கு இப்படியொரு தயக்கம்!

அதைவிட ஆபத்தான ஒரு விஷயம் இருக்கிறது. அது- தெரிந்துகொண்டே எதுவும் தெரியாதது மாதிரி நடித்துக் கொண்டிருக்கும் அறிவாளர்கள் இங்கு நிறையபேர் இருக்கிறார்கள் என்பதுதான். காவல்துறை, இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் போன்றவற்றின் பத்திரிகைக் குறிப்புகளைப் பிரசுரம் செய்யும்போது, அவை ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகள் என்ற எண்ணம் அவற்றைப் படிப்போர் மனதில் உண்டாகக்கூடிய விதத்தில்தான் பிரசுரம் செய்யவேண்டும்.

fgg

இது உலகம்முழுக்க உள்ள நல்ல பத்திரிகைத் தொழி லின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும் சட்டங்கüல் ஒன்று. உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே காவல்துறை தரும் பத்திரிகைக் குறிப்புகளை முக்கியத்துவம் தந்து பத்திரிகைகள் பிரசுரிக்காமல் இருக்கவேண்டும். இது வாசகர்களாகிய நம்மிடம் பத்திரிகைகள் காட்டக்கூடிய நீதி மட்டுமல்ல; வெறும் பெயரில்லாத பிணங்களாக மாறும்- குற்றம் செய்யாத நல்ல மனிதர்கள் மீது காட்டக்கூடிய அடிப்படை நீதியும் கூடத்தான். ஆனால், பத்திரிகைத் தொழில் என்ற "பெரிய வேள்வி'யில் ஈடுபட்டிருக்கும் இந்த அறிவாளி களுக்கு இப்படிப்பட்ட விளக்கங்களைக் கேட்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது?

வீரப்பனின் மோசடி வழக்குகளுடன் தொடர்புபடுத்தி "பொடா' சட்டத்தின்படி சிறையிலிருந்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவைப் பற்றிய விளக்கங்கள் "தி ஹிண்டு' பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டிருந்தன. (ஒரு பத்திரிகையாளரைப் பற்றி காவல்துறை பொய் கூறியிருக்கிறது என்ற உண்மையாவது கேரளப் பத்திரிகைகüன் கண்களைத் திறக்குமோ என்னவோ?)

2003 ஏப்ரல் 11-ஆம் தேதி தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகüன்படி கோபாலை கைது செய்தார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி குற்றச்சாட்டு கüன் பிரிவை மாற்றி "பொடா'வாக ஆக்கினார்கள். ("பொடா' என்பது தீவிரவாதச் செயல்களைத் தடை செய்வதற்காக உண்டாக்கப்பட்ட சட்டம் என்ற அடிக்குறிப்பு மற்ற "பொடாக்கள்' உள்ள கேரளத்திற்கு அவசியம் தேவை என்று தோன்றுகிறது.)

கைது செய்யப்பட்ட நாளன்று காவல்துறை "நக்கீரன்' பத்திரிகைக்கு (கோபால் அதன் ஆசிரியர்) அனுப்பிய தந்திச் செய்தியில் கூறியிருந்த காரணம், கோபால் "உரிமம் இல்லாத ரிவால்வர்' கையில் வைத்திருந்தார் என்பது. ஏப்ரல் 12-ஆம் தேதி காவல்துறை தயார் பண்ணிய குற்றப்பத்திரிகை யில் இது "உரிமம் இல்லாத நாட்டு பிஸ்டல்' என்று மாறிவிட்டது. ஏப்ரல் 12-ஆம் தேதியன்று காவல்துறை கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டின் முன்னால் சமர்ப்பித்த திருத்தத்தில் நக்கீரனின் ஆயுதம் "நாட்டு துப்பாக்கியும் 410 அளவுள்ள இரண்டு தோட்டாக்களும்' என்று மீண்டும் மாறிவிட் டது. இந்த நாட்டு துப்பாக்கியையும் இரண்டு தோட்டாக்களையும் வைத்துக்கொண்டு நக்கீரன் கோபால் என்ற பத்திரிகை ஆசிரியர் தீவிரவாதச் செயல்புரிய இறங்கினார் என்றும்; அதற்காக "பொடா'வில் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த இன்னொரு ஆதாரம், "நக்கீரன் கோபாலின் கையில் ஒரு பயங்கரவாத அமைப்பின் "சிறு புத்தகம்' இருந்தது, என்பது. ஆனால், முதல் இரண்டு அறிக்கைகüலும் இது "துண்டுப் பிரசுரம்' என்றிருந்தது. (தான் சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் என்பது மட்டுமல்ல; தன்னுடைய ரகசியச் செயல்பாடுகளை விளக்கமாக எழுதியிருக்கும் டைரியைக் கையில் வைத்திராத ஏதாவதொரு தீவிரவாதியை காவல்துறை கைது செய்ததாகவோ அல்லது தீர்த்துக் கட்டியதாகவோ நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த அளவிற்கு முட்டாள் களாக இவர்கள் இருக்கிறார்களென்றால், இவர்களை "தீவிரவாதிகள்' என்று அழைக்க நாம் வெட்கப்பட வேண்டாமா?)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.சண்முகமும் நீதிபதி டி.மாசிலாமணியும் சேர்ந்து வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்: "ஆயுதம் சம்பந்தமாக காவல்துறை கொடுத்த மூன்று அறிக்கைகளும் ஒரே நேரத்தில் சரியாக இருக்கமுடியாது. ரிவால்வர், பிஸ்டலிலிருந்து வேறுபட்டது. நாட்டு துப்பாக்கி அவை இரண்டிலிருந்தும் மாறுபட்டது. 410 அளவு கொண்ட தோட்டாக்கள் ரிவால்வரிலோ, பிஸ்டலிலோ, நாட்டு துப்பாக்கியிலோ பயன்படுத்தக் கூடியதல்ல. குற்றம் சாட்டப்பட்ட நபரிட மிருந்து கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங் கள் சம்பந்தப்பட்ட நபரிடம் இருக்கவில்லை என்பதைத்தான் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த அறிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன.''

நீதிபதிகள் மேலும் கூறினார்கள்;

"ஆயுதங்கள் இருந்தன என்பதை நிரூபிக்காமல் எப்படி குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆயுதத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதச் செயல் புரிந்தார் என்று கூறுகிறார்கள்?' ஒரு கற்பனை யில் உருவாக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் அதில் நிறைக்கவே முடியாத இரண்டு தோட்டாக்களையும் பயன்படுத்தி பயங்கரவாதச் செயல் புரியவே முடியாது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஆறு மாதங்களும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தேவைப்பட்டனர். ஆனால், ஒரு பத்திரிகை ஆசிரியரின் பொய்யான கைதை இந்தக் காலம் முழுவதும் செய்திகள் மூலம் கொண்டாடியவை சக உயிர்களான பத்திரிகைகள்தான்.

dsf

"பத்திரிகை தர்மம்' என்ற வார்த்தையை இனிமேல் பத்திரிகைகள் தார்மீக ரோஷத்துடன் பயன்படுத்தும்போது, அப்பாவி வாசகர்களே, நீங்கள் நக்கீரன் கோபாலின் துப்பாக்கிகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!'' (நன்றி: "மங்களம்' நாüதழ், தமிழாக்கம்: சுரா)

எங்க வீடு ஒரு பிளாட் வீடு. சமீபமா ஒரே கரையான். ஆனா ஊளை ஈசலும், கரையானும் எங்க நிம்மதிய கெடுத்து குட்டிச்சுவராக்கி... ஈசல்னா, உங்க ஈசல், எங்க ஈசல் இல்ல... எவனோ செய்வினை செஞ்சு அனுப்புன மாதிரி இருக்கும்.

இந்த ஜெயலலிதாங்கிற மொரட்டுக் கரையான்... கவர்னர்ங்கிற மொரட்டுக் கரை யான்... நடராஜன்கிற கரையான்... தேவாரம்கிற கரையான்... ஜெயலலிதா போலீஸ்ங்கிற கரையான்... இப்படி வகைவகையா லொட்டு லொசுக்குன்னு போராடி... போராடி வீட்ட கவனிக்காம விட்டுட்டோம்.

"யோவ்... கொஞ்சமாவது நியாயம் வேணாமா... ஏய்யா கரையானுக்கும், போர்க்க ளத்துக்கும் என்னய்யா லிங்க்?' அப்படித்தான கேக்குறீங்க... இருக்குதுண்ணே....

(புழுதி பறக்கும்)