poorkalam

(263) இந்தியாவே எதிர்பார்த்த தீர்ப்பு!

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

Advertisment

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் மரியாதையைப் பற்றிக் கவலைப்படாமல், மோசமான வழிகளில் செல்வத்தைக் குவித்து, ஆடம்பரமாக வாழ்வதை விட, கொடிய வறுமை தாக்கினாலும் நேர்மையாக வாழ்வதே மேன்மையானது என்கிறார் வள்ளுவர்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.சி.கோஷும் அமித்வராயும் "நாங்கள் தனித்தனியாக தீர்ப்பை வழங்கப் போகிறோம்'' என அறிவித்தபோது ஒட்டுமொத்த இந்தியாவுமே சந்தேகத்தின் நிழலில் உறைந்து போனது. தமிழகத்தின் சர்வ சக்தி படைத்த ஆட்சியாளராக இருந்த ஜெ. மீதான ஊழல் வழக்கின் தீர்ப்பு இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக் கும் வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது தான் இதற்கு காரணம்.

இரண்டு நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பு அளிக்கிறார்கள். ஒரு நீதிபதி தண்டனை எனச் சொல்லப் போகிறார். இன்னொரு நீதிபதி விடுதலை என தீர்ப்பளிக்கப் போகிறார். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு போகப் போகிறது. அந்த தீர்ப்பு வர நான்கு வருடங்களாகும். அதுவரை சசிகலா முதல்வராக ஆட்சி செய்வார் எனச் செய்திகள் தீர்ப்புக்கு முதல்நாள் பரவத் தொடங்கின.

Advertisment

பதற்றத்தோடயே விடிஞ்சுச்சு அந்த நாள். அதான் தீர்ப்பு நாள். எடுத்த எடுப்பிலேயே "பெங்க ளூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜான்மைக்கேல் குன்ஹா எழுதிய தீர்ப்பை ஏற்கிறோம். உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி எழுதிய தீர்ப்பை நிராக ரிக்கிறோம்' என நெற்றிப்பொட்டில் அடித்தது போல அறிவித்துவிட்டு, ஜான்மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபடி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் தண்டனை "ஒவ்வொருவருக்கும் பத்துக் கோடி ரூபாய் அபராதம்' என அறிவித்த நீதிபதிகள், ஜெ. மீதான அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டன.

நீதிபதி அமித்வராய் இந்த தீர்ப்புரையின் தத்துவார்த்த விசாரணையை பதிவு செய்துள்ளார்.

ஜான் மைக்கேல் டி குன்ஹாவைப் போல எளிமையான ஆங்கிலத்தில் எழுதாமல் ஜெ.வுக்கு மிகவும் பிடித்த ஆக்ஸ்போர்டு ஆங்கிலம் எனப்படும் உயர்ந்த ஆங்கிலத்தில் நீதிபதி ஜெ.வுக்கு எதிராக தனது தீர்ப்புகளை எழுதியுள்ளார். "ஊழல் என்பது ஆக்டோபஸ் மாதிரி பரவிக் கிடக்கிறது. இதனால் சமூகத்தில் அச்சம், மனஉளைச்சல் போன்றவை மக்களுக்கு ஏற்படுகிறது. ஜெ.வை போன்ற குற்றவாளிகள் அதிகாரத்தையும் ஆட்சியை யும் பயன்படுத்திக் கொண்டு பெரும் பணம் சேர்க் கிறார்கள். ஊழல் செய்ய வாய்ப்பில்லாதவன் ஏழை யாக இருக்கிறான். பணம், சொத்து ஆகியவற்றை பெற வேண்டுமென்றால் ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோநிலை சமூகத்தில் உரு வாகியுள்ளது. இது கேன்சர் நோயை விட மிகக் கொடிய நோய். இது ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வை உருவாக்கி மக்களிடையே பிளவை உருவாக்கு கிறது. மக்களின் வாழ்க்கை நிலையை அழிக்கும் சுருக்குக்கயிறு போன்றது. இந்த ஊழல்'' என்கிறார் அமித்வராய்.

ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் எப்படி ஊழல் புரிஞ்சாய்ங்கங்கறத என மூத்த நீதிபதியான பினாக்கி சந்திரகோஷ் விளக்குகிறார்.

"ஜெ.வும் சசிகலாவும், 36 போயஸ் கார்டன் என்கிற ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததன் நோக்கமே ஜெ. ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை எடுத்து பல இடங்களில் பரவச் செய்து பாதுகாப்பதற்காகத் தான். இதை ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆராய்ந்து சாட்சிகளின் அடிப்படையில் நிரூபித்திருக்கிறார். ஜெ.வை தனது உயிர்த் தோழி என சசிகலா குறிப் பிடுகிறார். உயிர்த் தோழி என்கிற உறவுக்காக மட் டும் சசிகலா போயஸ் கார்டனில் தங்கியிருக்கவில்லை. ஊழல் செய்த பணத்தை கையாளவே சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் போயஸ் கார்டனில் தங்கி யிருந்தார்கள் என்பதை ஜான் மைக்கேல் டி குன்ஹா தெளிவாக நிரூபித்துள்ளார். அதை நாங்கள் ஏற்கிறோம்.

ff

ஜெ. தங்கியிருந்த வீட்டில் 32 கம்பெனிகள் இயங்கியிருக்கின்றன. "அந்த கம்பெனிகள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்று எனக்கு தெரி யாது' என ஜெ. தெரிவித்தார். ஆனால் கோடிக்கணக் கான ரூபாய் பணம் ஒவ்வொரு கம்பெனியிலிருந்தும் மற்றொரு கம்பெனிக்கு மாறியிருக்கிறது. போயஸ் கார்டனில் வேலை செய்யும் ஜெயராமன் கத்தை கத்தையாக பணத்தை கார்டனிலிருந்து எடுத்துக் கொண்டு போய் ஒவ் வொரு கம்பெனியின் அக்கவுண்டிலும் போடு கிறார். சுதாகரன், இளவரசி ஆகியோர் டைரக்டர்களாக உள்ள கம்பெனிகளில் லட்சக் கணக்கில் பணம் குவிகிறது. இந்த பணம் பெரும்பா லும் ஜெ., சசி, சுதாகரன் ஆகியோர் டைரக்டர் களாக இருக்கும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தி லிருந்து மற்ற கம்பெனிகளுக்கு அளிக்கப்படுகிறது.

முதலமைச்சராக ஜெ. இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும் அடிமாட்டு விலைக்கு மொத்தம் 193 அசையா சொத்துக்களை ஜெ. சசி, இளவரசி, சுதா கரன் வாங்கியுள்ளனர். இதில் நிலம் மட்டும் 3,000 ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கிறது. வாங் கிய நிலங்களில் புதிய கட்டடங்களை கட்டியிருக் கிறார்கள். இயந்திரங்கள் வாங்கியிருக்கிறார்கள். புதிய கார்கள், லாரிகள், பஸ்கள் என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.

ஆட்சியில் ஜெ. இருந்ததால் அதிகாரிகளை அவரது வீட்டிற்கே வரவழைத்து பதிவு செய்திருக் கிறார்கள். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ருக்கு ஜெ. மூலமாக கிடைத்ததை தவிர தனிப்பட்ட வருமானம் எதுவுமில்லை. ஜெ. சார்பாக வருமான வரித் துறையில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளில் ஒரு கோடி ரூபாயை சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத் திற்கு கொடுத்ததை ஒத்துக்கொண்டுள்ளார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பல சந்தர்ப்பங்களில் செக் மூலமே ஜெ. பணம் கொடுத் துள்ளார். எனவே மூன்று பேரின் நடவடிக்கைக் கும் ஜெ.வுக்கும் எந்தத் தொடர்புமில்லையெனச் சொல்வதை ஏற்க முடியாது'' என தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடுகிறார் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ்.

ஜெ. உள்ளிட்டோரை விடுவித்து குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஏராளமான கணக்கு கூட்டல் பிழைகள் உள்ளன. அவர் "ஜெ.வும், சசியும் பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகத் தான் சொத்து சேர்த்தார்கள்' எனச் சொல்வதையும் நிராகரித்திருக்கிறார்.

விசாரணை நீதி மன்ற நீதிபதியான குன்ஹா தெளிவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி குமாரசாமி ஏனோதானோவென விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்'' எனக் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெ. 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் சொத்தை 91-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தனர் என்கிற நீதிபதி ஜான்மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள்.

இந்தியாவே எதிர்பார்த்த தீர்ப்பு, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

dd

"மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம் பளம் வாங்கினேன்' என்றார் ஜெயலலிதா. அவர் ஆட்சியில் இருந்த 1991-96 வரையி லான 5 ஆண்டுகாலத்தில் வாங்கிய மொத்த சம்பளம் 60 ரூபாய் மட்டுமே (அதிலும் சில ஆண்டுகள் வாங்க வில்லை). அந்த 5 ஆண்டுகளில் புதிதாக வாங்கிக் குவித்த சொத்துகளின் அப்போ தைய மதிப்பு 60 கோடி ரூபாய். அதிக பட்சமாக 60 ரூபாய் வருமானத்தில் 60 கோடிக்கு சொத்து வாங்கியது எப்படி என்பதுதான் வழக்கு. வாங்கவே முடியாது என்பதை ஆரம்பப் பள்ளியில் கணக்குப் பாடம் படிக்கும் குழந்தைகூட சொல்லிவிடும். அதனை சட்டப்படி சொல்வதற்கு 21 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

1996ஆம் ஆண்டில் ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டது. பல்வேறு காரணங்களைக் காட்டி வழக்கை இழுத்தடித்தனர். அவரே முதல்வராக இருந்த ஆட்சியில் வழக்கு விசாரணை தொடர்ந்து, "இது நியாயமாக நடக்காது' என தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் காரணமாக பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உத்தர விடப்பட்டது. அங்கேயும் இழுத்தடிப்பு. நீதிபதிகள் மாறினர். அரசு வழக்கறிஞர் மீது ஜெயலலிதா தரப்பு அவதூறு கிளப்பியது, 200க்கும் அதிகமான முறை வாய்தா பெறப்பட்டது. காரணம், இந்த வழக்கு, தன் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என்று ஜெயலலிதா பயந்தார்.

21 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் நக்கீரன் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது. வழக்கின் தன்மை, குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள், வழக்கறிஞர்களின் வாதங்கள், நீதியின் நடைமுறைக்கு ஜெயலலிதா தரப்பு விடுத்த அச்சுறுத்தல்கள், சட்டத்தை வளைக்கும் முயற்சிகள், டெல்லி அரசின் ஒத்துழைப்பு என அனைத்தையும் ஒளிவுமறைவு இல்லாம வெளியிட்டோம்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் நக்கீரன் நேரில் ஆஜராகி, அங்குள்ள நிலவரத்தை அப்படியே தந்துச்சு. நமது முதன்மை சிறப்பு நிருபர் தம்பி பிரகாஷ் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு இந்த செய்திகளை சேகரித்தார். புகைப்படக் கலைஞர் தம்பி ஸ்டாலின் கள நிலவரத்தைக் காட்டும் படங்களை அனுப்பி வைத்தார். நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தபோதும், பரப்பன அக்ரஹாரம் சிறையில் ஜெயலலிதாவும் மற்றவர்களும் அடைக்கப்பட்டபோதும் நேர வாரியாக செய்திகளை மக்களுக்குத் தந்தது நக்கீரன் மட்டுமே.

இங்கதான் ஒரு விஷயத்த நீங்க கவனிக்கணும். சட் டம் ரொம்ப கவனமா யார் மேல பாயணும், யார் மேல பாயக்கூடாதுன்னு பூதக்கண்ணாடி வச்சுப் பாத்துச்சு.

இந்த தீர்ப்பு ரொம்ப ரொம்ப பெருசு.

கடவுளை மனிதன் தண்டிப்பதா...?

என்ன யோசிக்கிறீங்க... அடுத்த இதழ்ல சொல்றேன்.

(புழுதி பறக்கும்)

ff