(262) ஜெ. தலையில் இடி!
தமிழக உளவுத்துறை "ஜெ.'விடம் பயந்து, பயந்து "அம்மா நம்ம குடி கெட்டுருச்சு... கர்நாடகா கேபினெட் கூட்டம் போட்டு முடிவெடுக்கப் போறாங்க''ன்னு பதறுறாங்க.
ஜெயலலிதா, நீதிபதி குமாரசாமி தீர்ப்பு மகிழ்ச்சி மாறாம கெத்தா "என்ன மேன் சொல்றீங்க... சரியா சொல்லுங்க, I am not understand'' -always'' - எப்பவுமே ஜெயலலிதா இங்கிலீஷ்ல தான் அதிகாரிகள்ட்ட பேசுவாங்களாம்.
வந்திருந்த உளவு பம்மி... பம்மி...""Nô¬ úUPm Nô¬ to say that Karnataka Govt decide appeal the case at Supreme Court mam''. ஜெயலலிதாவுக்கு தலையில இடி இறங்கிருச்சு.
What... What....
தமிழக உளவுத்துறை மூலம் ஜெ.வுக்கு முன்கூட்டியே இந்தத் தகவல், கர்நாடக கேபினெட் சிறப்புக் கூட்டம் ஏ.ஜி. ரவிவர்மகுமாரின் பரிந்துரைப்படி அப்பீலுக் குப் போவது பற்றித்தான் விவாதிக்கப் போகிறது என்பது தெரிஞ்சதும் ஜெ. அதிர்ந்து போயிட்டாரு. கர்நாடகத் துல உள்ள தனது ஆதரவாளர்களால இனி இந்த முடிவைத் தடுக்கவோ மாற்றவோ முடியாதுன்னு ஜெ.வுக்குத் தெரிஞ்சு போச்சு.
திங்கள்கிழமை நடந்த கர்நாடக கேபினெட் கூட்டத்துல மொத்தம் 7 அம்சங்கள விவாதிச்சுருக்காங்க. அதுல ஏழாவதும், அவசர கேபினெட் கூட்டத்திற்கு காரணமானது மான இந்த அப்பீல் விஷயத்த கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கொண்டுவந்தார். அதை சிவக்குமார், நாயர், தேஷ்பாண்டே, ஜார்ஜ் இந்த நாலுபேரு மட்டுமே எதுத்தாங்க. மத்த அமைச்சருங்க எல்லாரும் ஆதரிச்சாங்க.
இறுதியா பேசுன... இப்போ முதலமைச் சரா இருக்கிற சித்தராமையா, "இது கர்நாடக -தமிழ்நாட்டிற்கெதிரான மோதல் இல்ல. இது ஒரு ஊழல் வழக்கு. இதுல கர்நாடகம்தான் வழக்க முன்னெடுத்துச் செல்லும் சக்தியா சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கு. சுப்ரீம் கோர்ட்டால நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும், கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தப்பும் தவறுமா வழங்கிய தீர்ப்ப எதிர்த்து அப்பீல் செய்யணும்னு அரசை அறிவுறுத்தினாங்க. அந்த பரிந்துரைய அரசு ஏற்று ஆச்சார்யாவையும், சந்தோஷ் சவுடாவையும், கிரீஷ்ஷையும் வழக் கறிஞர்களாக நியமிக்கிறோம்'னு சொல்லிச்சு. அதை செய்தியாளர் சந்திப்புல சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா அறிவிச்சாரு. இதைக் கேள்விப்பட்டு அ.தி.மு.க. வழக்கறிஞர்கள்லாம் அதிர்ச்சியோ அதிர்ச்சி. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஜெ., சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்ட்ட பேசுனாரு.
ஜெ. வழக்கறிஞரான கே.டி. எஸ்.துள்சி, "கர்நாடகா செய்தது வீண் வேலை. இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கிற முயற்சி. வழக்கை நடத்தத்தான் கர்நாடகத்துக்கு உரிமை. அப்பீலை நடத்துறது தேவையில்லாத வேலை''ன்னு ஜெ.கிட்ட சொன்னாராம்.
இதப்பத்தி கருத்து சொன்ன ஆச்சார்யா, "நாங்க இந்த அப்பீல்ல நிச்சயம் ஜெ.வுக்கு வழங்கப்பட்ட விடுதலைக்கு தடை விதிக்கச் சொல்லுவோம்''னு அடிச்சுச் சொன் னாராம்.
இதைப் பற்றி ரவிவர்மகுமார் ஏற்கனவே கர்நாடக அரசிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
"எந்த ஒரு தீர்ப்புக்கும் இடைக்காலத் தடை பெறணும்னா 3 காரணிகள் அதில் இருக்கணும். 1.நீதி தவறான முறையில் வழங்கப்பட்டிருக்கணும். 2.அரசியல் போன்ற வெளிப்புற காரணிகள் தீர்ப்புல சம்பந்தப்பட்டிருக்கணும். 3.தீர்ப்பு வழங்கப்பட்டதுல ஊழல் ஒரு காரணமாக இருந்திருக்கணும்.
நீதிபதி குமாரசாமி வழங்குன தீர்ப்புல ஜெ. உள்ளிட்டவங்களுக்கு விடுதலை. ஆனா தீர்ப்புல சுட்டிக் காட்டுன கணக்குப்படி 76 சத விகிதத்திற்கு மேல ஜெ. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாரு. ஆனா அதை வெறும் 8.2 சதவிகிதம்தான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததா தவறா கணக்குப் போட்டு தீர்ப்பு வழங்கியிருக்காரு குமாரசாமி. தீர்ப்புல உள்ள "சுய முரண்பாடு காரணமாக தண்டனைத் தீர்ப்புக்கு விடுதலை'ன்னு தலைப்பு போட்டிருந்தார் குமாரசாமி. இது நீதியை தவறா வழிகாட்டுது. அதனால குற்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற முடியும்'னு குறிப்பிட்டுச் சொன் னாரு ரவிவர்மகுமார்.
சுப்ரீம் கோர்ட் பத்தி ரொம்ப அனுபவம் இருக்கிறவரு நண்பர் வெங்கடேசன். இவரு, தம்பி பிரகாஷுக்கு ரொம்ப நெருங்குன தோழர். இவர், இதப்பத்தி சொல்றாரு கேளுங்க.
"சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அப்பீல் செய்தாலும் உடனடியாக இடைக் காலத் தடையை அவர்கள் பெற முடியாது. இந்திய அரசியல் சாசன சட்டம் 136-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் இந்த அப்பீல் வழக்கு ஒரு உயர்நீதிமன்றம், குற்ற வாளிக்கு வழங்கிய தண்டனைய எதிர்த்து தொடுக்கப்படும் வழக்கு. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி ஜெ. இன்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பொதுவாக விடுதலை என சொல்லப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடையை சுப்ரீம் கோர்ட் வழங்காது. ஒரு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதில் சட்டம் மௌனமாகத் தான் உள்ளது. அதைப் பற்றிய தெளிவான வரையறைகள் சட்டத்தில் இல்லை. முதல்வராக உள்ள ஜெ.வுக்கு ஆதரவான விடுதலை தீர்ப்புக்கு அவரது விளக்கம் கேட்காமல் தடை விதிக்க முடியாது. ஏற்கனவே ஜெ.வுக்கு சுப்ரீம் கோர்ட் அவசர ஜாமீன் வழங்கியது சர்ச்சையாக உள்ளது. இந்நிலையில், தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து பழியை சுப்ரீம் கோர்ட் தேடாது'' ன்னு ஒரு குண்டத் தூக்கிப் போட்டாரு.
அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பேசுறப்ப, "குமாரசாமி எப்படி தீர்ப்பு வழங்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதில் கர்நாடக அரசு சார்பில் நான் வைத்த எழுத்துப் பூர்வமான வாதத்தையும், பேராசிரியர் அன்பழகன் தரப்பு வைத்த எழுத் துப்பூர்வமான வாதத் தையும் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து அதை ஏன் ஏற்கிறேன் அல்லது நிராகரிக்கிறேன் என குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிட வேண்டும் எனக் கூறியுள்ளது. அதைச் செய்ய குமார சாமி தவறிவிட்டார். இதை நான் தெளிவாக சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் சொன்னாலே வேறொரு நீதிபதி முன்பு மறுபடியும் வாதம் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தர விடும்''னு நம்பிக்கை யோடு சொன்னாரு.
குமாரசாமியின் குளறுபடி கணக்குத் தீர்ப்பால, அப்பீல் வழக்கு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு. தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பத்தி கர்நாடக அரசு சார்புல ஆஜராகுற வழக்கறிஞர்கள் வாதம் உறுதி செய்யும். ஜெ. தரப்பு வாதத்தையும் கேக்கும். கர்நாடக தரப்போட வாதத்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏத்துக்கிட்டா தடைதான். அதனால, அப்பீல் வழக்குல முதல்ல அனுமதி, பிறகு நோட்டீஸ், அதன்பிறகு தடை, அதுக்கப்புறமா விசாரணைன்னு தூள் கிளப்பும். எனவே வழக்கு விசாரணை முடிவடையாம ஜெ. தரப்பு இழுத்தடிக்கவும் வாய்ப்பிருக்கு.
சுப்ரீம் கோர்ட்டுல ஜெ.வுக்கு ஜாமீன் வழங்கிய சிக்ரியும், ஜெ.வின் வழக்கறிஞரா செயல்பட்ட லலித்தும் விடுமுறைகால நீதிபதிகள். அவங்கள்ட்ட தான் கர்நாடக அரசு அப்பீலுக்குப் போக ணும். ஆயிரக்கணக்கான பக்கங்கள்ல அப்பீல் மனு தயாரிக்கணும். அதற்கு அவகாசம் வேணும். அதுக்கப்புறம் ஜூலை முதல் வாரத்துல சுப்ரீம் கோர்ட் கோடை விடுமுறை முடிஞ்சுதான் கர்நாடகா அப்பீல் தாக்கல் செய்யும்.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிச்சா, குன்ஹா வின் தீர்ப்பு நடைமுறைக்கு வரும். அத னால ஜெ. குற்றவாளியாவார். அவரோட பதவி பறிபோகும். சிறைக்குப் போறத தவிர்க்கறதுக்கு ஜாமீன் வாங்கியாகணும்.
இத்தனை நெருக்கடிகளையும் சமாளிக்கணுமேங்கிற பதற்றமும், கவலையும் கார்டனை சூழ்ந்துச்சு.
"ஏன்யா... "போர்க்களம்' ஒரு முடிவுக்கு வருது, வருதுன்னு... அது எங்கிட்டு எங்கிட்டோ போயிட்டிருக்கு' அப்படின்னு நினைச்சுக்காதீங்க. இதெல்லாம் வரலாறு. இந்தியாவுலயே பதவியில இருந்தப்ப குண்டக்க... மண் டக்க அபராதம் போடப்பட்டு, பதவிய இழந்த ஒரு சீமாட்டி முதலமைச்சர் இந்தம்மாதான். இத லாவகமா மறைக்க ரொம்ப முயற்சி எடுத்தாங்க.
நாம இல்லாததையும், பொல் லாததையும் சொல்லல. "தண்டிக்கப்பட்ட வரலாறு + ஒரு உயர்ஜாதியில பொறந்த பெண்ணுக்காக சட்டம் எப்படியெல் லாம் வளைஞ்சுச்சு. அதையும் மீறி சட்டத்துல மேல நம்பிக்கை வர்ற அளவுக்கு என்னெல்லாம் தீர்ப்பு வந்துச் சுங்கிறதும், அப்பவும் பாத்தீங்கன்னா... கொடுமைய ஏன் கேக்குறீங்க...?'
(புழுதி பறக்கும்)