(248) "மக்களின் மனசாட்சியை பிரதிபலிக்கும் நக்கீரன்'' -திருமாவேலன்
பாராட்டுக் கூட்டத்துல கலந்துக்கிட்ட ஒவ்வொருத்தரும், தங்களோட பாணியில சும்மா வெளுத்து வாங்குனாங்க. ஒருத்தருக்கொருத்தர் சளைக்கல. ஒரே பொருள், வெவ்வேற செய்தி. நீங்களே, இதுக்கு முன்ன பேசுனவங்க பேச்ச எடுத்துப் பாத்தா தெரியும்.
நண்பர் திருமாவேலனும் மேப்படி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாரு. அதுல அவர் பேசுனது இதோ...
"கெடுதலை நீக்க வந்த "விடுதலை' இதழின் சார்பில் நடைபெறும் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பு மற்றும் பாராட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பது யார் என்றால், ஒருநாள் அல்ல... இரண்டு நாள் அல்ல... 365 நாட்கள் மிசாவில் சிறையில் இருந்த ஆசிரியர் தலைமையேற்கிறார். இந்த விழாவில் பாராட்டு செய்வதற்காக யார் வந்திருக்கிறார் என்றால்... ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல... 365 நாட்கள் மிசாவை சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தளபதி வந்திருக்கின்றார். யாரைப் பாராட்டுவதற்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்றால், ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல... 250 நாட்கள் பொடாவில் இருந்த நக்கீரன் கோபால் அவர்களை பாராட்ட இந்தக் கூட்டம் நடக்கிறது. இவர்கள் மூவரும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் நீ எந்தச் சிறையைக் காட்டினாலும் அந்தச் சிறைக்கு எப்போதும் செல்ல தயாராக இருக் கின்ற கூட்டம் என்பதை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும், கிண்டி மாளிகைக்கும் சொல்வதற்காக நடத்தப்படுகின்ற கூட்டம் தான்... இந்தக் கூட்டம்.
இந்தக் கூட்டத்தின் இன்னொரு சிறப்பு என்ன வென்றால், நிர்மலாதேவியை தமிழ்நாடு மட்டுமே அறிந்திருந்தது

இந்தக் கூட்டத்தின் இன்னொரு சிறப்பு என்ன வென்றால், நிர்மலாதேவியை தமிழ்நாடு மட்டுமே அறிந்திருந்தது. இன்றைக்கு
"வாஷிங்டன் போஸ்ட்' இதழில் நிர்மலாதேவி பற்றி வந்திருக்கின்றது.
சாதாரணமாக நாம் பெரியாரினுடைய பிறந்த நாளை அமைதியாகக் கொண்டாடுவோம். ஒருவன் செருப்பு வீசி, அதை இந்திய பிரசித்தி பெற்ற விழாவாக மாற்றியதைப் போல... இன்றைக்கு நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்து, அதை "வாஷிங்டன் போஸ்ட்' வரை கொண்டு சென்றவர் நம்முடைய கவர்னர் பன்வாரிலால் புரோகித். அவருக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். அந்த "வாஷிங்டன் போஸ்ட்' இதழ், பிராமினண்ட் பொலிட் டீஷியன் திரு. எம்.கே.ஸ்டா லின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப் படிப்பட்ட அராஜகமான ஒரு அரசு நடந்துவருகிறது என்பதைக் காட்டுவதற்காக செய்யப்பட்ட கைது என்பதால், நக்கீரன் கோபால் அவர்கள், தமிழ் சமூகத்துக்கு மிகப்பெரிய சேவையாற்றியுள்ளார் என்பதை நான் இந்த மேடையில் பதிவு செய்கின்றேன். அண்ணன் கோபால் அவர்களைப் பாராட்டுவது என்பது, பத்திரிகையாளர் களாகிய நாங்கள், எங்களை நாங்களே பாராட்டிக் கொள்வதற்குச் சமமானது.
பேரறிஞர் அண்ணா அவர்கள், கலைஞருக்கு மாலை அணிவித்து பாராட்டுச் செய்யவேண்டும். அதற்காக கலைஞருடைய பேர் அறிவிக்கப்பட்டதும், அந்த மாலைலைய கலைஞருக்கு அணிவிக்காமல் அண்ணா, தனக்குத் தானே போட்டுக்கொண்டார். ஏனென்றால், கலைஞருக்கு அணிவிப்பது என்பது, தனக்கு அணிவிப்பது என்று அண்ணா, அன்று உணர்த்தினார். அதைப் போலவே இன்று, கோபால் அவர்களுக்குப் பாராட்டு என்பது, எங்களுக்கு நாங்களே எடுத்துக்கொள்கிற பாராட்டாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
"சில பத்திரிகைகள் இருக்கின்றன... சில விஷயங்களை எழுதும்போது அவர்களுக்குப் பிரச்சினை வரும், அல்லது எப்போதாவது பிரச் சினை வரும், அல்லது சிலரால் மட்டும் பிரச் சினை வரும். ஆனால் ஒரு பத்திரிகை ஆரம் பித்த காலத்திலிருந்து இன்றுவரை பிரச்சினை களை சந்திப்பதற்காகவே இருக்கின்ற ஒரு பத்திரிகை என்றால்... அது நக்கீரன் பத்திரிகை மட்டும்தான்! அது மக்களின் மனசாட்சியைப் பிரதிபலிக்கிறது. உண்மையைப் பிரதிபலிக்கிறது. எனவே அவர்கள் அந்த சிக்கலை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்' என்று நம்முடைய மரியாதைக்குரிய மறைந்த நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் சொன்னார்கள்.
"மக்களின் மனசாட்சியை பிரதிபலிக்கின்ற ஒரு பத்திரிகையாக இருந்தால் அது எப்படி நடத்தப்பட வேண்டும் என்றால் நக்கீரனைப்போல' என்று சொல்லிவிட்டு, வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொன்னார்... அதற்குப் பெயர் "நக்கீரனிஸம்' என்று. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையை அவர் நடத்தியதால்தான் இன்று இவ்வளவு பெரிய சிக்கலை அவர் எதிர்கொண்டார். பத்திரிகைகளுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அந்தக் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை அனைத்துப் பத்திரிகையாளர்களும் உணர்வார்கள். ஆனால் யாரைப் பற்றி விமர்சிக்கின்றோமோ, அவர்களுக்கு அந்த பத்திரிகைகளுக்கு இருக்கின்ற உரிமைகளைவிட அதிக உரிமைகள் இருக்கிறது.
ஒரு பத்திரிகை, உன்னைப் பற்றி விமர்சித்து எழுதினால், நீங்கள் அதற்கு விளக்கம் அளிக்கவேண்டும்... கவர்னர் மாளிகை அதற்கு விளக்கம் அளிக்கவில்லை. அந்த விளக்கத்தை பிரசுரிக்காவிட்டால் நோட்டீஸ் அனுப்பலாம்... கவர்னர் மாளிகை நோட்டீஸ் அனுப்பவில்லை. அதன்பிறகு சிவில் மற்றும் கிரிமினல் டெபமேஷன் வழக்குகளைப் போடலாம்... அதையும் செய்யவில்லை. நேராக ஒரு கிரிமினலை கைது செய்வதைப் போல கோபால் அவர்களை, சென்னை விமானநிலையத்தில் கைது செய்கிறார்கள் என்று சொன்னால்... இன்று ஆட்சி கிரிமினல்களின் கையில் இருக்கிறதா? சட்டத்தை உணர்ந்தவர்களின் கைகளில் இருக்கிறதா? என்பதற்கான கேள்விதான் நமக்கு முன்னே வந்தது.
இன்றைக்கு ஆட்சி என்பது எடப்பாடியின் கையில், பன்னீர் செல்வத்தின் கையில் இல்லை. இன்றைக்கு கவர்னர் தலைமையில் ஓர் ஆட்சி நடக்கிறது. கவர்னர் ஆட்சியின்போது இரண்டு செயலாளர்கள் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருப்பார்கள். அதைப்போல கிரிஜா வைத்தியநாதனும், ராஜகோபாலனும் சேர்ந்து நடத்துகின்ற ஒரு சர்க்காரில் இதைப்போன்ற சட்ட மீறல்கள்தான் இருக்கும். அந்த சட்ட மீறல்களைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
நக்கீரன் எழுப்பிய கேள்விகள் என்பது, மிகவும் பதில் சொல்ல சங்கடப்படுகிற வகையிலே இருக்குமானால், அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமையும் கவர்னர் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவர்கள் வழக்கு என்ன போடுகிறார்கள் என்றால், "கவர்னரை கடமை செய்யத் தடுத்ததாக' வழக்குப் போடுகிறார்கள். நிர்மலாதேவி விவகாரத்தை எழுதுவதற்கும், கவர்னரின் கடமையைத் தடுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதில்தான் இவர்கள் எவ்வளவு தூரம் அந்த விவகாரத்தை மறைக்கிறார்களோ, அவ்வளவு தூரம் நமக்கு சந்தேகங்கள் எழும்புகின்றன.
இந்த சந்தேகங்களை அதிகப்படுத்திக்கொண்டே போவதற்கு என்ன காரணம் என்றால்... இன்று நடப்பது மத்தியில் இருந்தாலும் சரி... மாநிலத்தில் இருந்தாலும் சரி... சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. இது தனி மனிதர்களின் ஆட்சியாக நடக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆண்டாலும், அது நரேந்திர மோடி என்கின்ற தனி மனிதனின் தலைமையில், தனி மனிதனுக்காக மட்டுமே நடப்பதைப்போல, இங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருந்தாலும், கவர்னர் தனது விருப்பங்களைச் சார்ந்த விசயங்களைச் செய்வதற்காக மட்டுமே ஒரு அரசாங்கத்தை நடத்திவருகின்றார்.
அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த ஒரு அறிக்கையில், தனது சித்தாந்தங்களுக்கு எதிரானவர்களைக் கைது செய்வதற்காகவே நீங்கள் அரசு நடத்துகிறீர்கள் என்கின்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். திருமுருகன் காந்தியாக இருந்தாலும், முகிலனாக இருந்தாலும், சோபியாவாக இருந்தாலும், வளர்மதியாக இருந்தாலும், யாரெல்லாம் பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்தங்களுக்கு விரோதமாக இருக் கிறார்களோ... அவர்களை சிறையில் அடைப்பதும், உச்ச நீதிமன்றத்தையும், உயர் நீதிமன்றத்தையும் கொச்சைப் படுத்தியவர்கள், தங்களின் நண்பர்களாக இருந்தாலும் அவர்களை வெளியில் நடமாட விடுவதுமான மிக மோசடித்தனமான ஒரு ஆட்சியை வீழ்த்துவதற்கு நாம் சபதமேற்கக்கூடிய நாளாக இந்த நாள் அமைகிறது. அதை தூண்டிவிடுவதற்கு நம்முடைய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுடைய கைது பயன்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி, இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.''
அப்பாடா ஒருவழியா பாராட்டுக் கூட்டம்லாம் முடிஞ்சுச்சா...
அடுத்து நம்ம அட்வகேட் சிவா கொண்டுவந்த எ.ஒ.த. பண்டல் மொத்தத்தையும் டேபிள்ல வச்சு ஒவ்வொண்ணா எண்ணுனேன் வேல மெனக்கெட்டு.
ஆத்தாடி...!
(புழுதி பறக்கும்)