gg

(239) போலீஸ் சொன்ன பொய்க்கதை!

ணக்கம்...!

எங்கள் மகள் ஆர்.வி.பிரபாவதி குழுவினர், "தீரன் புரொடக்ஷன்ஸ்' வழங்கும் "கூச முனிசாமி வீரப்பன்'ங்கிற பேர்ல ஒரு டாகுமெண்ட் சீரிஸ் தயாரிச்சு, சென்ற 14-ம் தேதி அதை 'ழஊஊ 5' ஞ.ப.ப.ல வெளியிட்டிருக்காங்க.

Advertisment

நல்ல வரவேற்பு கிடைச்சு, "சிறந்த டாகுமெண்டரி சீரிஸ்'ங்கிற பேரோட, தமிழக மக்கள் பரபரப்பாவும், ஏகோபித்த ஆதரவும் தந்து பார்த்துக்கிட்டிருக்காங்க. பார்த்தவங்களும் எல்லாருமே பாராட்டுறாங்க.

அதுல... முக்கியமாக தம்பி அன்புராஜ், இவர் ஒரு காலத்துல வீரப்பன் கூட்டாளிகள்ல ஒருத்தரா இருந்தவரு. இப்போ வீரப்பன் சார்ந்த மலைவாழ் மக்களோட துயரங்களுக்கு கை கொடுக்கிற ஆகச்சிறந்த மனிதநேயம் கொண்ட தம்பியா பணி செய்துக்கிட்டிருக்காரு. இந்த "டாகு மெண்டரி சீரிஸ்' பார்த்துப் பாராட்டி அவர் அனுப்பிய வாட்ஸ்-ஆப் செய்தி...

"வீரப்பனைப் பற்றி தமிழில் வந்திருக்கும் மிக முக்கியமான டாகுமெண்டரி சீரிஸ் கூச முனிசாமி வீரப்பன்.

Advertisment

ஒற்றைத்தன்மையில் அமையாமல் அனைத்துத் தரப்பு பார்வையில செய்தியை முன்வைத்திருப்பது மிக நுட்பமாக புரிதல் இதன் சிறப்பு.

வொர்க்ஷாப் பற்றி சொன்னவிதம், மிகச்சிறப்பு, சித்ரவதையின் உச்சத்தை தொட்டவர்கள் நாங்கள். அதே வலியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் இந்த காடுகளில் கேட்கும் மரண ஓலத்தின் சாட்சிகள் அக்காட்சிகள்.

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் நபஎ செய்த வன் முறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இனி என்ன நீதி வழங்கிட முடியும்? என்ன செய்தாலும் அது எப்படி நீதியாகும்? இழந்தவை காலத்தால் மீட்டுத்தர முடியாத இழப்பல்லவா! ஆனால் சிறு நிவாரணம் கூட இதுவரை அவர்களைச் சென்றடையவில்லை என்பதுதான் கொடுமை.

அரச வன்முறையாளர்களுக்கும், வீரப்பன் குழுவுக்கும் இடைப்பட்ட சண்டையில் சிக்கிக் கொண்ட பழங்குடிகளின் கதறல்கள், ஓலங்கள் இன்னும் அந்தக்காட்டில் ரீங்காரமிட்டுக் கொண்டி ருப்பதைத்தான் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இப்படத்தில் வருகிற காட்டின் வைடு & டாப் ஏங்கில் ஷாட்டுகளைப் பார்க்கும்போது நான் அப்படித்தான் உணர்ந்தேன்.

ஒரு டாகுமெண்டரி சீரிஸை எவ்வளவு சுவாரஸ்யமாக தர முடியுமோ அவ்வளவு சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள். காஸ்ட்யூம் டிசைன், இசை, படத் தொகுப்பு, எழுத்து மற்றும் இயக்கம் அனைத்துமே மிகச்சிறப்பு.

இதை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்த நக்கீரன் குடும்பம் மற்றும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத் திற்கும், இதில் பங்காற்றியிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக் களும் அன்பும்.''

-அன்புராஜ், அந்தியூர்.

ஆங்... "பட்டர்ஃபிளை குக்கூன்...' அதுக்கு வர்றேன். 2004 -வீரப்பன் கொலை(?)க்குப் பிறகு, விஜயகுமார் டி.ஜி.பி., இந்த "குக்கூன்' வார்த்தையை பல நூறு தடவை... பல பேட்டிகளில் சொல்லிட்டாரு. இப்பவும் சொல்லிக் கிட்டேயிருக்காரு. "இந்தப் பேரை நாங்க எப்படி இந்த ஆபரேஷனுக்கு வச்சோம்'ங் கிறதையும் அவர் எழுதுன புத்தகத்துல (பக்கம் 281 மற்றும் 282) சொல்லியிருக்காரு. அதாவது...

இந்த யோசனை நானும் கண்ண னும் நடத்திய ஆலோசனையின் விளைவு. ஒரு வாகனத்தை எதிர்பார்த் துக்கொண்டிருக்கும் வீரப்பனுக்காக நாங்கள் பலவிதமான வாகனங்களை யோசித்தோம். கார், ஜீப் என பலவித மாக யோசித்தோம். அந்த வாகனத் தில் 'ஏஞயப' அல்லது 'டதஊநந' என்று ஸ்டிக்கர் ஒட்டலாமா அல்லது அதில் ஏதேனும் கட்சிக் கொடியைப் பறக்கவிடலாமா? என்றுகூட ஆலோ சனை செய்தோம். ஏனென்றால் இந்த வாகனங்களை சோதனை செய்ய போலீசார் கொஞ்சம் யோசிப்பார்கள்.

ff

கடைசியாக நீண்ட விவாதங் களுக்குப் பிறகு ஆம்புலன்ஸ்தான் சரி என முடிவுக்கு வந்தோம். இந்த நட வடிக்கைக்கு "ஆபரேஷன் குக்கூன்' என்று சங்கேதப் பெயர் வைத்தோம். வீரப்பன் அந்தக் கூட்டுக்குள் அடை படுவான். அவனால் வெளியே பறக்க முடியாது எனும் நம்பிக்கையில் குக்கூன் (கூடு) என்று பெயர் வைத் தோம். அதன்பிறகு இதுபற்றி எக்ஸிடம் விளக்கினோம். வீரப்பன் வெளியே வரும் திட்டம் குறித்த பேச்சுவார்த்தையின்போது ஆம்புலன்ஸ் ஆலோசனையைச் சொல்ல வேண்டும் என அவரிடம் கூறினோம்.

டி.ஜி.பி., "ஆபரேஷன் குக்கூனுக்குப் பதில் இந்த குக்கூன் எப்படி வந்துச்சுன்னு பயங்கரமா யோசிச்சு வச்சோம்'னு சொன்னாரா...

நம்ம செந்தாமரைக் கண்ணன்னு ஒரு எஸ்.பி., இவரு வீரப்பன் வேட்டையில பிரதானமா இருந்தாருன்னு சொல்லுவாங்க. அவர்ட்ட விகடன் யு-டியூப் சேனல்ல ஒரு பேட்டி.

அதான், "வீரப்பன எப்படி புடிச்சோம்?'னு ஒரு கதை சொல்லுவாரு. அதுல அந்த விகடன் நிருபர் இளங்கோ ஒரு கேள்விய வைப்பாரு...

"பட்டர்ஃபிளை குக்கூன்' அப்படிங்கிற பேர எப்படி செலக்ட் பண்ணுனீங்க?

"அத சொன்னா எல்லாரும் சிரிப்பாங்க. ஆள புடிச்சு, ஆபரேஷன் முடிஞ்சதுக்கப்புறம் விஜயகுமார் சார் கேட்டாரு. "ஆபரேஷன் முடிச் சிட்டோமே? இந்த ஆபரேஷன என்னன்னு சொல்றது? வீரப்பன் ஆபரேஷனுக்கு ஒரு பேரு வைக்கணுமேன்னு சொல்லி... எப்பவுமே ஒரு ஆபரேஷன் பண்ணணும்னா ஒரு பேரு வச்சிரு வாங்க. இந்த ஆபரேஷன பொறுத்தவரைக்கும்... ஆபரேஷன் முடிஞ்ச பிறகு சரி... "ஆபரேஷன் குக்கூன்'னு வச்சுக்கலாம்னு அவரு சஜஸ் பண்ணுனாரு. படம் முடிஞ்ச பிறகு படத்துக்கு பேரு வைக்கிறது மாதிரிதான். ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங். யாருக்குமே ஆபரேஷனப் பத்தி தெரியாது. முதல்ல புடிக்கப் போறோம்ங்கிறதே தெரியாது. அந்த டவுட்லயே இருப்போம். கம்ப்ளீட்டா மாட்டிக்குவான்னு சொல்லவே முடியாது. லாஸ்ட் மினிட்ல மலையில இருந்து இறங்கி வர்ற ஆளு... வரல்லன்னா.. முடியாது?

ஸோ... அதுக்கு பேரே வைக்கல. சரி முடிஞ் சிருச்சு ஓகே. சார் எதோ ஒரு பேரு வைச்சுக் குங்கன்னு சொல்லிட்டேன்'' அப்படிங்கிறாரு எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன்.

"சார்... நீங்களே சொல்லுங்க. ரெண்டுபேர் கிட்டயும் உண்மையில்லாததாலதான் ஆளுக்கொரு விஷயத்தச் சொல்றாங்க யுவர் ஆனர்! "ஆபரேஷன் குக்கூன்'னு பேரு வச்ச கதையிலயே இத்தன பொய்க்கதை இருக்கு.''

அதுல வேற செந்தாமரைக் கண்ணன் விகடன் பேட்டியில...

"இந்த ஸ்டூல்ல எப்படி உக்காரணும்? அந்த ஆறெட்டு பேரு. அவங்க எப்படி உக்காருவாங்க? அப்புறம் மரத்துக்கு கீழ எந்த பொசிஸன்ல நிக்கணும்? அந்த வண்டி நிக்கும்போது அந்த ஏரியா ஃபுல்லா கரும்பு லாரி போற ஏரியா... பாலக்கோடு சுகர் பேக்டரிக்கு. அந்த ஏரியால கரும்பு லாரி ஏத்திட்டு வர்ற வண்டியவே நம்ம வந்து, சப்போஸ்... அதமீறி வண்டி போகாம தடுக்குறதுக்கோ இல்ல... ஸ்லோடவுன் பண்றதுக்கோ எதுத்தாப்புல கரும்பு லாரிய கொண்டுவந்து மெதுவா கொண்டு வர்றதுக்கு... பன்னாரி சுகர்ஸ்ல இருந்து குடுங்க கொஞ்சம்னு லாரியவே வாங்கி வச்சிக்கிட்டோம். நம்ப வைக்கிறதுக்கான ஸீனு. பக்காவா பின்னாடியே வண்டி வர்றது மாதிரியும்... பிளேசிங் கரெக்ட்டா பண்றது மாதிரியும், வண்டி கிராஸ் பண்றப்ப, இப்ப கிராஸ் ஆயிடிச்சி ஸார்னு இன்ஃபார்ம் பண்ணவும், தபால் உங்களுக்கு வருதுன்னு சொல்றான். குமரேசன் வந்து ஒரு பைலேட்ரல் ரோல் இதுல.

இப்ப வண்டி வர... வர நாம அலர்ட்டாகி அந்த கேமரால பாக்குறோம் ஸ்க்ரீன்ல... அவரு எப்படி உக்காந்திருக்காரு? பக்கத்துல யார் உக்காந்திருக்கா? பின்னாடி யாரு உக்காந் திருக்கா? அப்படின்னு பாத்துட்டே வர்றோம். லாஸ்ட் மினிட் வரைக்கும் பாக்குறோம்... மிக்சர் சாப்பிட்டுட்டு உக்காந்திருக்காரு. ஸோ நமக்கு இங்க கமாண்டோஸ் எல்லாம் ஸ்னைப்பர்ஸ்... எல்லாமே ஷாட்ஷூட்டர்ஸ். அவங்களுக்கு அந்த டெம்போ டிராவலர்ல எந்த இடத்துல வந்து நீங்க எய்ம் பண்ணணும்? அப்படிங்கிறத ஒரு சின்ன ட்ரில் ஒண்ணு பண்ணுனோம். இங்க... இங்க... 1... 2... 3... 4... அதாவது பொஸிசன் கரெக்ட்டா சொல்றோம். ஃபயரிங் பண்ணும்போது இந்த பார்ட்டி இங்க இருந்து ஃபயர் பண்ணணும், அந்த ஆங்கிள் இங்க இருக்கணும், 3 டைரக்ஷன்ல இருந்தும் ஃபைட் பண்ணப் போறீங்கன்னு அதுக்கு ஏற்கனவே ஒரு ட்ரெயினிங் குடுத்தோம். இத கனெக்ட் பண்ணியே கிட்டத்தட்ட 15 நாள் ட்ரில் பண்ணியிருக்கோம்... போலீஸ் இருக்குன்னு தெரியாம. பப்ளிக்குக்கும் என்னடா இந்தமாதிரி போலீஸ் நடமாட்டம் இருக்குதுன்னு தெரியக் கூடாது. அது மாதிரி இவங்கள செட் பண்ணுனது னால எந்தவிதமான சந்தேகமும் யாருக்கும் வரல. எந்த பப்ளிக்கும் இதனால ஃபயரிங்ல அடிபட வாய்ப்பில்லாமப் போச்சு.''

இன்னும் அடுத்து இருக்கு...

(புழுதி பறக்கும்)