235 வீரப்பன் முதுகில் குத்தியவர்கள்?
கொளத்தூர் மணியிடம் முத்துலட்சுமி அக்கா பேசுனதா வீடியோல சொன்னது இப்ப தொடருது...
"என்னைய காங்கிரஸ்ல சேரச் சொல்றாங்கண்ணா'ன்னு கொளத்தூர் மணி அண்ணன்கிட்ட, முத்துலட்சுமி கேட்கும்போது, அதுக்குப் பதில் சொன்ன கொளத்தூர் மணி...
"ஏம்மா உனக்கு பா.ம.க. எல்லா விதத்துலயும் உதவியா இருக்குது. அது நியாயம். அவங்க மாரல் சப்போர்ட் இருக்கு. பலவிதத்துலயும் உனக்கு உதவியா இருந்திருக்காங்க. அதுதான் நியாயம்.''
"இல்லண்ணா... "அவரு வந்து பிள்ளைங்கள கடைசி வரைக்கும் நானே படிக்க வைக்கிறேன்னு சொல்றாராம்'னு சொன்னாங்க.
"தெரியல்லம்மா... எனக்கு என்னமோ சரியா படல. நீ யோசனை பண்ணு. உன் யோசனைப்படி செய். எனக்கு அரசியல்லாம் தெரியல, இப்படி, இப்படில்லாம் போகணும்னு சொல்லத் தெரியல. நான் அதெல்லாம் சொல்ல விரும்பல. அது சரியா இல்ல. உனக்கு பா.ம.க. தொடர்புதான் உதவியா இருக்கும். இறந்த பின்னாடி கூட உடனே வந்து பண உதவியெல்லாம் செஞ்சிருக்காங்க''ன்னு சொன்னேன்.
ஆனாலும் இது வந்து அப்படித்தான் நடந்துக்கிச்சு. அதோட கேரக்டரே ஒரு வித்தியாசமான கேரக்டர்தான்...
மேல ரெண்டு இதழா நீங்க பாத்தது திருமதி.முத்துலட்சுமி வீரப்பனும், தோழர் கொளத்தூர் மணி... ரெண்டுபேருமே வெவ்வேற வீடியோல பேசுனது.
முத்துலட்சுமி அக்கா என்ன சொல்றாங்க... "என் கணவர் சாவுல எனக்கு, கொளத்தூர் மணி அண்ணன் மேலதான் சந்தேகமா இருக்கு'' அப்படின்னு நெறைய காரணங்கள அடுக்கு றாங்க.
அதாவது... எஸ்.டி.எப். போலீஸ் செந்தாமரைக் கண்ணன் டிரைவரா வேஷம் போட்டு வந்தது, அப்புறம் இவங்க கேசட் பேசிக் குடுத்தது -அதாவது கோத்தகிரி பக்கம் மாயாத்தி சைடுல வந்தா யாருக்கும் தெரியாம அவர வரச் சொல்லுங்கண்ணான்னும், அதுக்கு நான் கேசட் பேசிக் குடுக்குறேண்ணான்னும் மணியிடம் சொல்றாங்க.
"நான் ஒரு பையன அனுப்புறேன், அவன்கிட்ட கேசட்ட குடு'ன்னு சொன்னது, அத நான் கொண்டு குடுக்கப் போகும்போது எங்கூட பிரியா வந்துச்சு. அதோட டிரைவரா வந்த ஆளு... செந்தாமரைக்கண்ணன்தான்'' அப்படின்னு அடிச்சு சொல்லுது.
"இது எல்லாமே கொளத்தூர் மணிக்குத் தெரியும்'னு வேற சத்தியம் பண்ணிச் சொல்லுது.
ஆக, அது எங்க முடிச்சுப் போடுது? "எங்க வூட்டுக்காரரு செத்ததுல, அவரக் காட்டிக் கொடுத்ததுல இவரும் இருக்காரு'' அப்படின்னு நான் சொல்லல... நக்கீரன் சொல்லல... முத்துலட்சுமி அக்கா சொல் றாங்க.
கொளத்தூர் மணிக்கு ரொம்பவும் நகமும் சதையுமா இருக்குற ஒருத்தன்... நயவஞ்சகமா கூட இருந்தே நமக்கும் குழிபறிச்சவன், முதுகுல குத்தினவன் இப்படி நெறைய... (இப்ப நான் அதுக்குள்ள போகல) மேப்படியான் மேலயும் சந்தேகம் இருக்கு.
இப்ப கொளத்தூர் மணி மேல முத்துலட்சுமி அக்கா குற்றம்சாட்டுறாங்க.
அதுக்கு கொளத்தூர் மணிகிட்ட பதில் கேக்குறாங்க, இன்னொரு வீடியோவுல. அந்த வீடியோவுல கொளத்தூர் மணி அண்ணன் பேசுறாரு. அதத்தான் நீங்க போன இதழ்ல படிச்சிருப்பீங்க.
நமக்கு எங்க சந்தேகம் வருதுன்னா...?
அந்த அக்கா சொல்றது, "என் புருஷன் சாவுக்கு காரணமா... இவங்கள்லாம் காட்டிக் குடுத்துருப்பாங்களோ?'' அப்படின்னு...
ஆனா இவரு, அந்த அக்கா என்ன சொல்றாங்களோ, சாதாரண குற்றச்சாட்டு இல்ல... மிகப்பெரிய குற்றச்சாட்டு, அதுலயும் ஆதாரத்தோட சொல்ற அந்தக் குற்றச்சாட்டுக்கு அவரு டைரக்ட்டா பதிலே சொல்லல.
ஆனா அவரு, இந்தம்மா பணத்தாசை புடிச்சது. காசு காசுன்னு அலையும். என்ட்ட வந்து கேஸ் போடச் சொன்னாங்க. நான்தான் ப.பா.மோகன்ட்ட சொன்னேன். ப.பா.மோகன் கேஸ பரபரப்பா பண்ணுனாரு. ஆனா அதுக்குள்ள அந்தம்மா போய் பேசி, பணத்த வாங்கிட்டு வந்துருச்சு. அதே மாதிரி பா.ம.க.ல இருக்கிறதுதான் உனக்கு நல்லதுன்னு சொன்னேன். ஆனா, அதக் கேக்காம காசுக்காக வேற, வேற கட்சியில சேந்துச்சு.
புருஷன் சாவும்போதும் நாங்கள்லாம் ஒரு விஷயத்தச் சொல்றோம். ஆனா, அது வந்து "என் புள்ளைகளப் படிக்க வைக்கணும்... அதுக்கு பணம் வேணும்' அப்படின்னு சொல்லுதுன்னு அவரு உப்புச் சப்பில்லாத விஷயங்களச் சொல்றாரு. ஏன் சார் புருஷன இழந்த ஒருத்தங்க தன் இரண்டு மகள்களையும் படிக்க வைக்கணும்னு நினைக்குறது தப்பா சார்... நீங்களே சொல்லுங்க.
"ஏன், ரெண்டு பேரும் பேசுன வீடியோவ உங்க முன்னாடி கொண்டுவந்தேன்'னா "போர்க்களம்' திசை மாறிப் போவுது அப்படின்னு நினைச்சுக்காதீங்க. போர்க்களத் துல நெறைய உண்மைகள வெளிய கொண்டு வர வேண்டியதிருக்கு. நெறைய உண்மை கள வெளிச்சத்துல கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருக்கு. அதுல முக்கியம் வீரப்பன் சாவு.
இப்ப உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும். ரெண்டுபேரோட பேட்டிய படிச்சீங்கன்னாலே... விஷயம் என்னாங்கிறது நல்லாவே புரிஞ்சிருக்கும். "யாரு பிளாக்ஷீப்...? யாரு போலீஸோட கைக்கூலி' அப்படிங்கிறது தெளிவா விளங்கும்.
"அத நாங்க சொல்லல... இப்ப திரும்பவும் சொல்றேன்... நாங்க சொல்லல.''
ஆனா எங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே ஒரு சந்தேகம் உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அண்ணன் வீரப்பன எங்கயோ முதுகுல குத்தி யிருக்காங்க. அப்படி முதுகுல குத்துனதுனால தான் இவ்வளவு பெரிய அகால மரணம் வீரப்பனுக்கு!
"இத எக்ஸ்போஸ் பண்ணணும்... உண்மைய கொண்டுவந்து சொல்லணும், அப்படிங்கிறதுக்காகத்தான் இந்த விஷயத்த உங்க முன்னாடி வச்சோம்.
சந்தன வீரப்பன் இறந்து 19 வருஷத்துக்கு மேலாகுது. இன்னமும் வீரப்பன் மரணத்துல உள்ள சந்தேகம் விலகவே இல்ல.
எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும். அக்டோபர் 18 மறக்கவே முடியாது. "வீரப்பன் தப்பிச் செல்லும்போது 30 அடி தூரத்தில் சுற்றிவளைத்து எஸ்.டி.எப். போலீசாரால் ச்சுச்சு.. ச்சுச்சுன்னு சுட்டுக் கொல்லப் பட்டான். வீரப்பனும் அவனுடன் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட னர்''னு சொல்லி எகத்தாளமா ஒரு சிரிப்பும் நக்கலும் நையாண்டியுமா விஜயகுமார் டி.ஜி.பி. பிரஸ்மீட் வச்சாரு. தெரியும்ல...
ஆங்...
"எப்படிச் செத்தார் வீரப்பன்?'னு இப்பவும் தமிழ்நாட்டு மக்கள்ட்டயும், போலீஸ் டிபார்ட் மெண்ட்லயும் இன்னமும் விவாதம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. வீரப்பன் எப்படி பிடிபட்டார்? எப்படி எப்படி கொடூரமா கொன்னாய்ங்கங்கிறத "வீரப்பன் மரணம் யாரால் எப்படி?''ன்னு நம்ம ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கோம். அதுல வீரப்பனோட மரணம் பற்றி சொல்லியிருப்போம். அதுல...
2004, அக்டோபர்- ஒருநாள் மத்தியானம் முனியும், மயிலும் சேர்ந்து வீரப்பனுக்கு மோர் குடுத்துட்டு வந்ததுக்குப் பிறகுதான், மயிலுக்குத் தெரியாம சாப்பாடு எடுத்துட்டுப் போன முனி, உளவுப் பிரிவு காவலர் மட்டுமில்ல... வெடிகுண்டு தயாரிக் கிறதுலயும் திறமைசாலி. இந்த விஷயம் அதிரடிப்படையில உள்ளவங்களுக்குக்கூட தெரியாத ரகசியமாவே இருந்துச்சு.
எஸ்.ஐ. பாண்டியன்ங்கிறவரோட ஆலோசனைப்படி, சாப்பாடும், அதோட தான் தயாரிச்சு வச்சிருந்த குளோரோபார்ம் குண்டையும் எடுத்துட்டுப் போன முனி, சேதுமணியும் (இவனுக எப்படி உள்ள போனாய்ங்கிறது அந்த புத்தகத்துல இருக்கு) சந்திரகவுடரும் சாப்பிட்டுக்கிட்டிருக்கும்போது அதை வெடிக்க வைக்க... வீரப்பனும், அவன்கூட இருந்த மூணுபேரும் மயக்கமாயிட் டாங்க. பத்து மீட்டர் சுற்றளவுல யாரு இருந்தாலும் மயக்கமாகிற அளவுக்கு பவரானது அந்த குளோரோபார்ம் குண்டு.
அதுக்குப் பிறகு முனி குடுத்த தகவலை வச்சு, எஸ்.பி. செந்தாமரைக் கண்ணனும் உயர் பொறுப்புல இருந்த சில அதிகாரிங்களும் படபடன்னு வந்தாய்ங்க...
(புழுதி பறக்கும்)