pp

(220) "வாஷிங்டன் போஸ்ட்' கண்டனம்

Advertisment

றிக்கைய எனக்கு வாசிச்சுக் காமிச்சாங்க. நமக்கு இருக்கும் ஆதரவ, அபாரமா கிடைச்ச அரவணைப்ப நினைச்சு, நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

அன்னிக்கு ஒருநாள் என்னோட கைதுக்கு, நக்கீரனுக்கு கிடைச்ச ஆதரவு, மலையப் பாத்து மடு... "உனக்கு என்னடா பவர்'னு எவனோ கேட்ட மாதிரியும், அவனுகளப் பாத்து "யேய்ய்ய்... இங்க பாரு எத்தாத்தண்டி கூட்டம், எத்தன பெரிய, பெரிய முக்கியப் பொறுப்புல இருக்கிற அரசியல் தலைவருங்க, பத்திரிகை ஜாம்பவானுங்க... இவ்வளவு பேரு நக்கீரனச் சுத்தி இருக்காங்கங்கறத உலகத்துக்குக் காட்டத் தான் இந்த கைது'ன்னு சொன்ன மாதிரியும் இருந் துச்சு அந்த நாள். அதான்.. 2018, அக்டோபர் 9.

பெரிய பெரிய வக்கீல்க, பத்திரிகைக்காரங்க, அரசியல் தலைவருங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து என்.ராம் சாரோட நீதிமன்ற வளாகத்துலேயே பேசிக் கிட்டோம். அரைமணி நேரம் கழிச்சு கோர்ட் மீண் டும் கூடுச்சு. அடிப்படை ஆதாரமற்ற வகையில் 124-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதா குறிப்பிட்டு என்னை சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.

Advertisment

இதையடுத்து விடுதலையான நான், நீதி மன்றத்துக்குள்ளயே என்.ராம் சாருக்கும், அண்ணன் திருமாவுக்கும், தோழர் முத்தரசனுக்கும், எங்க வழக்கறிஞர்களுக்கும் கை குடுத்தேன். "சத்தியமா நான் நினைக்கவே இல்ல... பெயில்ல விடுதலை ஆவேன்''னு அவங் கட்ட சொல்லி சந்தோஷப் பட்டேன்.

காலையில இருந்து இவனுக பண்ணுன அலப் பறை, அதான்... இந்தப் போலீஸ்காரய்ங்க காட்டுன அலும்பு எல்லாம் பாத்தா... "உனக்கு சிறையில களி தான்'டீங்கிற மாதிரி இருந் துச்சு. ஒருபக்கம் என்னை புழல் சிறைக்கு அள்ளிட்டுப் போக வேன் ரெடியா வச்சிருந் தாய்ங்க. 12 மணி நேரத்துல அப்படியே தலைகீழ். 124-ங்கிற சட்டத்துல கைதாகி, விடுதலை யாகிற ஒரு பத்திரிகைக்காரன் நான்தான். அதுக்குத்தான் ஜட்ஜ் முன்னாடியே என்.ராம் சாருக்கு கை குடுத்தேன்.

நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில வந்து என்னை கைது செய்த விதம் குறிச்சு விரிவா விளக்கி, நக்கீரன் அசராம எடுத்த சட்டப் போராட்டத்த தெரிவிச்சி, "கருத்துச் சுதந்திரத்துக்கு துணைநின்ன ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர் களுக்கும் நன்றி... நன்றி... நன்றி...!'ன்னு சத்தமா சொன்னேன்.

Advertisment

"பாசிச அதிகாரத்தின் சட்டவிரோத அட்டூழியங்களை நீதிமன்றத்தில் சட்டத்தின் துணையோட தகர்த்தெறிஞ்சு நெஞ்ச நிமித்தி நிக்குது உங்கள் நக்கீரன்''னு தம்ஸ்அப் காட்டினேன்.

poorkalam

ஒண்ணு தெரியுமா... நான் கைதான செய்தி இந்திய அளவுல ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடிச்சிருந்துச்சு. பெரும்பாலான காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும்... இந்த செய்தியை பெருசா வெளியிட்டிருந்தாங்க. கேரள பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டாங்க. மலையாள நாளிதழான "மாத்ருபூமி'யும் கவர் செஞ்சிருந்தாங்க.

அதேநேரம்... சர்வதேச செய்தி ஊடகமான "வாஷிங்டன் போஸ்ட்' தனது இணையதளப் பக்கத்தில்...

"தென்னிந்தியாவைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் கைதுக்குப் பின் விடுதலை' என்கிற செய்தியை வெளியிட்டது. அதில், "பிரபல புலனாய்வுப் பத்திரிகையான நக்கீரன் இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக வெளி யிட்ட கட்டுரையைக் குறிப்பிட்டு கைது செய் யப்பட்டார். பக்கத்து மாநிலத்திற்கு செல்வதற் காக விமான நிலையம் சென்றவரை காவல் துறையினர் நேரில் சென்று கூட்டிச்சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது ரிமாண்ட் செய்வதற்கான கோரிக்கை காவல்துறை தரப் பில் முன்வைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது' என்று சுடச் சுட செய்தி போட்டிருக்காங்க.

கல்லூரி மாணவிகளை கவர்னர் உள் ளிட்ட பெருந்தலைகளின் இச்சைக்கு அடி பணிய, பேராசிரியை ஒருவர் அழைத்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழ் புலனாய்வு செய்து வருகிறது. ஏப்ரல் மாதம் நக்கீரனில் வெளியான கட்டுரையைக் குறிப்பிட்டு நக்கீரன் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை யடுத்து, பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்துல குதிச்சாங்க; கண்டனங்கள எழுப்புனாங்க. வழக்கு விசாரணைக்குப் பின்னர் விடுதலையான நக்கீரன் கோபால், "தொடர்ந்து நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக புலனாய்வு செய்வோம். உண்மையை உலகறியச் செய்வோம்' எனக் கூறி னார் என்கிற செய்தியை வெளியிட்டிருந்தது "வாஷிங்டன் போஸ்ட்.'

"மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்' தம்பி ஆசிப், "சென்னை பிரஸ் க்ளப்' இணைச் செயலாளர் நண்பர் பாரதிதமிழன் ஆகியோர் தனித்தனியாக கைதைக் கண்டித்து அறிக்கை விட்டனர்.

அதே நாள், நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழகத் தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிச்சிருந்த கருத்து கவனம் பெற்றுச்சு.

"நிர்மலாதேவி விஷயத்தில் உண்மைகள் வெளியானால் பலருடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்'' என்றார்.

அவரிடம் நாம் பேசினோம்...

poorkalam

"நான் உங்களை மாதிரி புலனாய்வு நிருபரு மில்லை, காவல்துறையைச் சேர்ந்தவனுமில்லை. நான் ஒரு அரசியல்வாதி. நான் அடிக்கடி அருப் புக்கோட்டை, விருதுநகர் பக்கம் போவேன். அங்கிருக்கும் பொதுமக்களிடம் பேசுவேன். அப்பதான் நிர்மலாதேவி விவகாரம் என் காதில் விழுந்தது. நிர்மலாதேவி விவகாரம் ஏதோ புதுசா இப்ப நடந்த விவகாரம் இல்லை. பல வருடமாக நிர்மலா, படிக்க வருகிற மாணவிகளை இந்த மாதிரி பயன்படுத்துற வேலையை பார்த்திருக் கிறார். அப்படிப்பட்ட கேவலமான குரூர புத்திக் குச் சொந்தக்காரர் இந்த நிர்மலாதேவி. எனக்குக் கிடைத்த தகவல் படி, பல்கலைக்கழகத்துக்குள்ள மட்டும் இந்த வேலையைச் செய்யலை. அதுக்கு வெளியே உள்ளவங்களுக்கும் தொடர்பு இருக்கு, அதுல அரசியல்வாதிகளும் இருக்காங்க. பெரிய வி.ஐ.பி.க்களும் இருக்காங்க.

இந்த விஷயங்களை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்படி விசாரிக்கிறாங்கன்னு தெரியல. ஆனா முழுமையான விசாரணையிலிருந்து தப் பிக்கத்தான், மத்தவங்க மேல பழிபோட்டு சேற்றை வாரியிறைக்கிறார் என்பது எனது கருத்து. நிர் மலாதேவி விவகாரத்துல விசாரணை நல்லபடியா நடக்கணும்னு நான் கோரிக்கை வைக்கிறேன். நிர் மலாதேவி விவகாரத்துல நல்ல படியா விசா ரணை நடந்தா, அரசியல்வாதிகள் சிக்குவாங்க. அவங்க எதிர்காலம் கேள்விக்குறியாகும்'' என்றார்.

அதிகாரம் + பெண்கள் + பணம் மூன்றும் கலந்த கூட் டணியின் செல் வாக்கைத்தான் பொன். ராதா கிருஷ்ணன் கூறு கிறார். "விசா ரணை சரியாக மேற்கொள்ளப் பட்டால் எல்லோ ரும் சிக்குவார்கள்' என்கிறது அவரது அறிக்கை. மத்திய இணையமைச்சர் பொன்னார் சொல் வதுபோல, பலரது முகத்திரை கிழியக் கூடிய அளவுக்கு நிர்மலாதேவி விவ காரம் அமைந்துள் ளது. அதன் முழு உண்மை தெரிய வேண்டுமென்றால், முழுமையான விசாரணை தேவை.

[p

இதுகுறித்து சி.பி.எம். கட்சி தீர்மானமே நிறைவேற்றியுள்ளது. "தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் வலியுறுத்துகின்றன. பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பவர் ஆளுநரே! அவரது மாளிகைவரை குற்றச்சாட்டுகள் நீள்வதால், குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் முகத்திரை கிழியும். இதைத்தான் நக்கீரனும் தொடர்ந்து வெளியிடுகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை மறந்து, நக்கீரன் மீது பாய்கிறது ஆளுநரால் ஆட்டுவிக்கப்படும் அரசு' என்கிறது சி.பி.எம். தீர்மானம்.

நீதியரசர் கோபிநாத்கிட்ட அரசு பி.பி. எவ் வளவோ கம்ப்பல் பண்ணி "ஆல்ரெடி நக்கீரன் கோபால அரெஸ்ட் பண்ணியாச்சு, அதனால ரிமாண்ட் மட்டும்தான் பாக்கி. ப்ளீஸ் ரிமாண்ட் பண்ணுங்க'ன்னு கெஞ்சுனாரு. அதுமட்டுமில் லாம, "இவர வெளிய விட்டா... கவர்னர பணி செய்ய விடமாட்டாங்க'ன்னும் சொன்னாரு.

நேத்து எந்த தடையும் இல்லாம கவர்னர் பணிகள செஞ்சுக்கிட்டிருந் தாருங்கிற விஷயத்த ஆதாரப்பூர்வமா நம்ம தரப்பு வழக்கறிஞர் பி.டி.பெரு மாள் சார் புட்டு... புட்டு வச்சுட்டாரு. அதனால கோர்ட்ல நமக்கு ஜுடிசியல் ரிமாண்ட் குடுக்காம பெயில் குடுத்தாங்க. நான் வெளியே வர்றேன்.

ff

"எந்த நிலையிலும் உங்களை விட்டுக் குடுக்காத சிலரை சம்பாதியுங்கள்

-எத்தனை பெரிய அரச பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம்''

ஏதோ ஒரு பெரிய கூண்டுல அடைபடப் போன பறவை, தப்பிச்சு சிறகை அடிச்சு பறப்பது மாதிரி இருந்துச்சு எனக்கு.

என்கூட பெரு மாள் சார், ப.பா. மோகன் சார், என்.ராம் சார், திரு மாவளவன் அண் ணன், முத்தரசன் அண்ணன், நம்ம வழக்கறிஞர்கள் சிவ குமார், இளங்கோ, வெங்கட், ஆரோக் கியம், வர்க்கீஸ், ராஜ கோபால் அண்ணன் இப்படி எல்லாரும் புடைசூழ... நாங்க கோர்ட்டுக்கு கீழ வர்றோம்... பயங்கர கிரௌடு. "இதத்தான்டா நான் சாதிச் சேன்' அப்படிங்கிற மாதிரி என் ரிலீஸ கொண் டாடுனாங்க. மாடியில, பக்கத்துல... அங்க, இங்க எல்லா இடத்துலயும் அவ்வளவு மக்கள் கூட் டம். பத்திரிகைக்காரங்க, டி.வி.காரங்க, வீடி யோகிராபர்ஸ்னு பெரிய லெவல்ல கூட்டம்.

அதுல நீந்தி வந்தது மாதிரி வெளிய வந்து, பிரஸ்ஸ பாத்து நான் சொன்னேன்...

(புழுதி பறக்கும்)