pp

(215) "நான் எதிர்க்கட்சித் தலைவர்'' -எகிறிய அண்ணன் ஸ்டாலின்!

கொஞ்ச நேரம் ஆச்சு. என்ன செய்யப்போறாங்கன்னு எனக்குத் தெரியல. நானும் எதுவும் கேட்டுக்கல. சிந்தாதிரிப்பேட்ட ஸ்டேஷன் மூணாவது மாடியில ஒரு மூலைல என்ன வச்சி ருந்தாய்ங்க. நான் தப்பிச்சுக் கிப்பிச்சு ஓடிருவேன்னு வேற... சுத்தி போலீஸ காவலுக்குப் போட்டுருந் தாய்ங்க. நான் ஏண்டா தப்பிக்கப் போறேன். அப்படி நினைப்பு இருந்தா ஏர்போர்ட்லயும் ஒரு களேபரம் செஞ்சிருப்போம்ல. தப்பிச்சு ஓடி... எதுக்கு வம்பு மேக்கொண்டு நம்மள புண் ணாக்கிக்க. நான்பாட்டுக்கு நடக்குறது நடக் கட்டும்னு குத்தவச்சிருந்தேன். "தடால்'னு வந்தாய்ங்க... "சார் கிளம்பலாம்''ன்னாங்க. சைடுல ஒரு வேன் நிறுத்தியிருந்தாய்ங்க. சர...சர...ன்னு கீழ இறங்குனதும் அந்த வேன்ல ஏத்துறாய்ங்க. சுத்தியும் மக் கள்லாம் நெறையபேரு இருக்காங்க, போலீஸ் பட்டாலியன் இருக் காய்ங்க, பத்திகைக்காரங்க, டி.வி. காரங்க அப்புறம் தம்பிங்க, நண்பர் கள் எல்லாரும் இருந்தாங்க. நான் அவங்களப் பாத்துக்கிட்டிருக்கும் போதே என் கழுத்தப் புடுச்சு வேனுக் குள்ள தள்ளுறாய்ங்க. உள்ள போன வன், திரும்ப டகால்னு வெளிய பாத்து கை காட்டுறேன். "ஹே....'ன்னு ஒரே சவுண்டு. அப்பதான் தெரிஞ்சது... வைகோ அண்ணன அரெஸ்ட் பண் ணிட்டாங்கன்னு.

என்ன கூட்டிட்டு வேன் கிளம்புது. எங்க கொண்டுபோறாய்ங்கன்னு தெரியல. பத்திரிகைக் காரங்கள்லாம் சூழ்ந் திருக்கிறதுனால திருட் டுத்தனமா எங்கயாவது கொண்டுபோய் ஏடா கூடமா எதுவும் பண்ண முடியா துன்னு வச்சுக்கங் களேன். ஆனா பெரிய போர்ஸோட நம்மள கொண்டு போறாங்க. திரு வல்லிக்கேணி பக்கமா வேன் போகுது, அங்க இருந்து எங்கெங்கெல்லாமோ சுத்திச் சுத்திப் போறாய்ங்க. சென்ட்ரல் ராஜீவ்காந்திக்கு கொண்டு போலா மான்னு கொஞ்சநேரம் யோசிச்சு, அப்புறமா சென்ட்ரல் வழியா "யு' டர்ன்... அங்க இருந்து மறுபடியும் திருவல்லிக்கேணி வந்து ஒரு ஆஸ்பத்திரிக்கு உள்ள சந்து மாதிரி போகுது. கோஷா ஆஸ்பத்திரி. சந்துக்குள்ள போகும் போது பாதுகாப்புக்கு வந்த ஒருத்தரு சொல் றாரு... "சார், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டா லின் வர்றாராமே? ஸார் வர்றாரா?'' அப்ப டின்னு என்கிட்ட கேட்டாரு. "எனக்கென்னங்க தெரியும்? என்னோட போன புடுங்கி வச்சிட்டீங்க. நான் உங்ககூடதான இருக்கேன். யார்ட்டயும் நான் பேசவுடாம பண்ணிட்டீங்க. எனக்கு எப்படி தெரியும்?''னு ஒரு கடி கடிச்சேன். "இல்ல சார்... ஸ்டாலின் வர்றாராம். அதனாலதான் உங்கள அங்க இருந்து தூக்கி இங்க கொண்டு வந்தோம்.'' அந்த ஏரியாவே பரபரப்பாயி ருச்சு. சைலண்டா ஏதோ பெரிய ப்ளான் போட்டுத்தான் தூக்கியிருக்கானுவோ. நம்ம நல்ல நேரம்... அண்ணன் வைகோ ஊடு பாய்ஞ்சு அவிய்ங்க காரியத்த கெடுத்துப்புட்டாரு. இப்ப மறுபடியும் தீயா பத்திக்கிச்சு, இந்தியா பூரா வைகோ தரையில உக்காந்து தர்ணா பண்ணுனது. என் கைதும், அதுக்காக அண்ணன் வைகோ முன்னெடுத்த போராட்டமும் அன்னிக்கு எல்லாரையும் பெரிய அளவுல திரும்பிப் பார்க்க வச்சுது. அதுக்காக காலத்துக்கும் நன்றியோட இருப்போம். வைகோ -தர்ணா -குவிந்த பத்திரிகை புகைப்படக்காரங்க, தொலைக்காட்சி, சோசியல் மீடியாக்காரங்க...ன்னு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமப் போச்சு. சிந்தாதிரிப்பேட்ட மொத்தமும் பேரிகாட் வச்சு டிராஃபிக்க க்ளோஸ் பண்ணிட்டாய்ங்க.

Advertisment

dd

மேப்படி தகவல் அப்ப எதிர்க்கட்சித் தலைவராவும், இப்ப முதல்வராவும் இருக்கிற முதல்வர், தளபதி ஸ்டாலின் காதுக்குப் போயிருக்கு. "சட...சட...'ன்னு வெளிய வந்து சிந்தாதிரிப்பேட்ட ஸ்டேஷனுக்கு வர்றதுக்கு கிளம்பியிருக்காரு. இந்த தகவல் இங்க இருக்கிற ஐ.எஸ். மூலமா மேல போக... எதுக்குடா வம்புன்னுதான் போலீஸ்காரய்ங்க, குத்தவச்சிருந்த என்ன பட...பட...ன்னு "கிளம்புங்க... கிளம்புங்க...'ன்னு பாடாப்படுத்தி வேன்ல ஏத்தி யிருக்காய்ங்க. எங்க... ஸ்டாலின் வந்து சிந்தாதிரிப் பேட்ட ஸ்டேஷன் மேக்கொண்டும் களேபரம் ஆயிரக்கூடாதுன்னுதான் நம்மள கொத்தா அள்ளிப்போட்டுக் கொண்டு போனாய்ங்க.

அவிய்ங்க பட...பட..ன்னு என்ன கொண்டு போனதுக்கு மேக்கொண்டு என்ன காரணம்னா... தளபதி ஸ்டாலினோடு மத்த தி.மு.க. எம்.பி.ங்க, முன்னாள் மந்திரிங்க எல்லாரும் திரண்டு வர்றாங் கன்னு ஒரு செய்தி வந்தவுடனதான்... அங்கயிருந்து கூட்டிட்டு வந்தவுடனே எனக்கு பி.பி., சுகர், ஈ.ஸி.ஜி., எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா...ன்னு நெறைய டெஸ்ட்டுகள சட...சட...ன்னு எடுக்க ஆரம்பிச்சுட் டாய்ங்க. அப்படின்னா... முடிவு பண்ணிட்டாங்க அரெஸ்ட்டுன்னு. அரெஸ்ட்டுக்கு முன்னாடி, பின்னாடி மெடிக்கல் செக்லிஅப். இதெல்லாம் சட்டமாம். அதனால போர்க்கால நடவடிக்கையா சர...சர...ன்னு செக்-அப் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.

திடீர்னு வாசல்ல பெருசா ஒரு சவுண்டு கேட்டுச்சு... பயங்கர சவுண்டு. அந்த நேரத்துல நமக்குத் தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தங்க உள்ள வந்தாங்க.

"தலைவரு அங்க கத்திக்கிட்டிருக்காரு...''ன் னாய்ங்க. "யாரு?''ன்னு கேட்டேன்.

"ஸ்டாலின் சார்தான். பயங்கரமா கத்துறாரு. "என்ன இப்ப உள்ள விடுறியா... இல்லியா?

d

Advertisment

முதல்ல மறுத்திருக்காய்ங்க.

"எதிர்க்கட்சித் தலைவருய்யா நானு''ன்னு சொல்லியிருக்காரு. "இல்ல... இல்ல... அனுமதி கிடையாது, நீங்க அவர சிறையில போய் பாத்துக்கங்க...''ன்னு சொல்லியிருக்காய்ங்க.

"நான் எதிர்க்கட்சித் தலைவர்யா. ஒரு பத்திரிகை ஆசிரியர அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க. அவருக்கு என்னாச்சு, ஏதாச்சு, அவரு நல்ல நிலமை யில இருக்காரான்னு தெரிஞ்சுக்க வேண்டியது என்னோட கடமை''ன்னு சொல்லியிருக்காரு.

எதையுமே அவங்க ஏத்துக்கல.

அப்ப, "டக்'னு இவரு சொல்லியிருக்காரு... "இப்ப எனக்கு நெஞ்சுவலி. மருத்துவமனைக்கு கொண்டுபோய் பாக்குறியா... இல்லியா?'' அப்படின்னு சவுண்டு விட்டுருக்காரு. முதல்ல அவர நகட்டி விட்டுட்டு, வேற வாசல்ல தூக்கிட்டுப் போலாமான்னு போலீஸ் குபுகுபுன்னு வந்தாய்ங்க. அதுக்குள்ள இங்க என்னப் படுக்கப் போட்டு வயித் துல, நெஞ்சுல எல்லாம் வளவள...ன்னு இருககுற பிசினப் போட்டு சக்கு...சக்கு...னு ஒட்டுமே ரப்பரு அந்த ரப்பர அங்கங்க வச்சுட்டாய்ங்க. எதுக்குன்னா, ஈ.ஸி.ஜி.க்காம். என்ன எழவோ... போலீஸ்காரய்ங்க வேற அவசரப்படுத்துறாய்ங்க.

என்னப் பாத்த நர்ஸ், டாக் டர்லாம், "உங்க அவசரத்துக்குப் பண்ண முடியாது. இன்னும் நாலஞ்சு செக்-அப் இருக்கு...'ன்னு கறாரா சொன்னதும், கையப் பிசைஞ்சுக்கிட்டு தொப்பியக் கழட்டி தலையச் சொறிய ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ff

நம்மள வேற இடம் கொண்டு போகணும்னுதான் ப்ளான் பண்ணியிருக்காய்ங்க. ஆனா அவரு ஒதுங்கிப் போற மாதிரி இல்ல. அதனால அவங்களுக்கு வேற வழியில்லாமப் போச்சு. அண்ணன் ஜெகத்ரட்சகன் முன்னாள் எம்.பி., ராசா அண்ணன் முன்னாள் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி அண்ணன், துரைமுருகன் அண்ணன், எ.வ.வேலு அண்ணன், சேகர்பாபு அண்ணன்... அவங்களோட முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அண்ணன் ஸ்டாலின் எல்லாரும் அப்படியே லெப்ட் ரைட் போட்டு வர்றாங்க.

அதப் பாத்ததும் இன்னும் வேற நமக்கு குஷி. அடடா...! போலீஸ்ட்ட சொன்னேன்... "எங்க கொண்டு போனாலும், ஏன்... பழனிக்கே பாதயாத்திரை எடுத்தாலும், சந்தி சிரிக்காம விடமாட்டோம்''னு.

கைதுங்கிற கெட்டதுல ஒரு நல்லது நடந்துச்சு. எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்கள்... போராளிகள் இவங்க எல்லாரும் ஒண்ணுகூடி நமக்காக வர்றது இருக்குதுல்ல... அது சாதாரண விஷயமா?

நேரா வந்தவர போலீஸ்காரய்ங்க தடுத்து, "சார், கோபால் சாருக்கு மெடிக்கல் செக்-அப் நடந்துக்கிட்டிருக்கு'ன்னு கைய குறுக்க வச்சாய்ங்க. ஒரு தட்டு தட்டிட்டு ஸ்பீடா என் கிட்டக்க வந்து உக்காந்தாரு.

வாசல்ல... எனக்கு கையில பிரஷர் பாக்குறப்போ, அண்ணன் கூடதான் உக்காந்திருந்தாரு. ஒரு போலீஸ் தடுத்துப் பாத்தாரு. ஒரு முறைப்பு முறைச்சாரு... விலகிட்டாரு.

தன்கூட வந்த முன்னாள் அமைச்சருக, எம்.பி.க்களுக்கெல் லாம் சேர் போடச் சொன்னாரு ஸ்டாலின். சுத்தி உக்காந்தாங்க. அத இப்ப அமைச்சரா இருக்கிற அண்ணன் சேகர்பாபு, தன்னோட செல்போன்ல படம் எடுத்தாரு.

நடந்த எல்லாத்தையும் ஒண்ணுவிடாம கேட்டாரு. நானும் ஸ்டெப் பை ஸ்டெப்பா சொன்னேன்.

போலீஸ்காரர் ஒருத்தரு "சார்...'னு ஏதோ சொல்ல வந்தாரு... அப்பவும் ஒரு முறை முறைச்சாரு. அந்த ஆளு நகர்ந்துட்டாரு.

அப்புறம் ஒரு அதிகாரி வந்தாரு.

"என்ன...? என்ன நடக்குது இங்க...? பார்க்கிறோம்ல, அதுக் குள்ள என்னய்யா அவசரம்'னு ஒரு சவுண்டு. அவரும் போயிட் டாரு. அதுக்கப்புறமா 5 நிமிஷத்துக்குப் பிறகு, அண்ணன் "நாங்க இருக்கோம்''னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க.

அப்பதான் ஸ்டாலின்... அவருக்குள்ள இருக்குற போராளியைப் பார்த்தேன்.

அவங்க பாத்துட்டு கிளம்புன அடுத்த நிமிஷமே... "டக்'னு என்னைய இன்னொரு வேன்ல ஏத்துனாய்ங்க. சர...சர...ன்னு இன்னொரு சந்து வழியா பின்னாடி போறாய்ங்க. போனா... பின் னாடியே பத்திரிகைக்காரங்க வர்றாங்க. எங்க போறாங்கன்னு எனக்குத் தெரியல. நமக்கு தூரும் தெரியல... தலைப்பும் தெரியல.

திடீர்னு ஒருத்தரு "மூர் மார்க்கெட் வந்துருச்சு'ன்னாரு...

"மூர் மார்க்கெட்டா... இங்க எதுக்குடா போறாய்ங்க...?''

(புழுதி பறக்கும்)