ff

(198) முதன்முதலாக வீரப்பனை வெளி உலகத்துக்கு காட்டிய நக்கீரன்!

துல ஒரு "க்'கன்னா இருக்கு. மதன் போலீஸ் போட்டோகிராபர். அதாவது, போலீசுக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு போட்டோ எடுக்குறதுக்கெல்லாம் இவரு அடிக்கடி போவாரு. போலீஸ், டி.ஜி.பி. ஆபீஸ், எஸ்.பி. ஆபீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் எல்லா இடங்கள்லயும் போலீஸ்காரங்க போட்டோ எடுக்குற படம்... அது எல்லாத்தையும் பிரிண்ட் போடுறவரு இவருதான். அதனால போலீஸ் போட்டோகிராபர்ஸ்லாம் இங்கதான் டெய்லி வருவாங்க.

இதையெல்லாம் நெனைச்சுப் பாத்தீங்கன்னா, ரிஸ்க்... ரிஸ்க்...! எந்தப் போலீஸ் வீரப்பன தேடிக்கிட்டிருக்கோ, எந்த வீரப்பன் தலைக்கு 40 லட்ச ரூபா விலை வச்சிருக்காங்களோ... அப்படி, போலீஸ் போட்டோகிராபர்களுக்கு "இங்கதான் முதன் முதலா வீரப்பன் படம் கலர்ல பிரிண்ட் போடுறாருன்னு தெரிஞ்சா?' கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! கூடி நின்னு நம்மள கும்மியடிச்சு டவுசர கழட்டிருவாய்ங்க. இன்னிக்கு 30 வருஷம் கழிச்சும் நான் வீரப்பன பத்திப் பேசுறேன். அன்னிக்கு சூதானமா இருந்து "பர்ஸ்ட் பர்ஸ்ட்டா உலகத்துக்கு வீரப்பன் முகர எப்படி இருக்கும்'னு கலர்ல எடுத்தத சேதாரம் இல்லாம கலர் படமா போட்டு, நம்ம கையில சுளையா குடுத்தது "மதன் ஸ்டுடியோ' மதன்தான். அவரு ஏதாச்சும் பிரிண்ட் போடுறதுலயோ, இல்ல ஆர்வக்கோளாறுலயோ, தன்னோட போலீஸ் ப்ரெண்டுககிட்ட சொல்லியிருந்தா... மொத்தமும் பாழாகி சிதறு தேங்கா மாதிரி சிதறிப்போயிருக்கும். அதவிட நான் இந்த தொடர் எழுத உசுரோட இருந்துருக்கவே மாட்டேன்.

Advertisment

ஏன்னா போலீஸ பத்தி உங்களுக்குத் தெரியும். எந்த ஒரு பெரிய ஆதாரத்தையும், அவங்களுக்கு முக்கியமா இருந்தாக்கூட பழி வாங்கணும்னா மயிரே போச்சுன்னு கால்ல போட்டு மிதிச்சு கண்ணு தெரியாம ஆக்கிடுவாங்க. வெளிய விடமாட்டாங்க. சினிமா படத்துல வர்றது மாதிரி நம்ம கண்ணு முன்னாடியே மொத்தத்தையும் தீ வச்சு எரிச்சுட்டு... வீரப்பன் பாம் வச்சுக் கொன்ன கேஸ்ல நம்மளயும் சேர்த்து, "நக்கீரன், வீரப்பனால ஆரம்பிக்கப்பட்ட ஒரு பத்திரிகை'ன்னு பிரகடனப்படுத்தி... நம்ம பூர்வீகத்தையும் கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி அன்னிக்கே நக்கீரனுக்கு பெரிய பூட்ட போட்டு, ஜெயலலிதா காலடியில கொண்டுபோய் பூட்டோட சாவிய சாஷ்டாங்கமா வச்சு... "தாயி, மகமாயி உங்க ஆசைய நிறைவேத்திட்டோம்'னு கவுந்தவய்ங்க, எந்திரிக்க கொஞ்ச நேரமாவது ஆகும்.

"ஜெயலலிதாவுக்கு என்ன ஆசைன்னு கேக்குறீங்க?'

அதான், நக்கீரன் கோபால... நக்கீரன உசுரோட புதைச்சு அதுல ஒரு மரத்தையும் நட்டு வச்சுரணும்னு ஜெயலலிதா கங்கணம் கட்டியிருந்துச்சுல்ல. அதே சபதத்த நிறைவேத்திட் டோம்னு அவங்க ஊரு காளியாத்தாவுக்கு நேர்த்தி பண்ணுன கணக்கா, தேவாரம் தலைமையில இருந்த போலீஸ்... கை கட்டி, வாய் பொத்தி... "அம்மா இவ்வளவு பண்ணிருக்கோம்... ஏதாச்சும் பிச்சை போடுங்கம்மா'ன்னு போடச் சொல்லி வாங்கிட்டு டாட்டா காமிச்சிருப்பாய்ங்க. அப்புறமும் நம்மள விடாம, நினைச்ச நேரம்லாம் தூக்கிட்டுப் போய் மொத்து, மொத்துன்னு மொத்தியிருப்பாய்ங்க.

Advertisment

pp

நாம மாத்திரம் வீரப்பனோட முதல் படத்த வெளியிட்டு, "இப்படித் தான் மீசையோட இருப்பாரு... அப்படி, இப்படி இருப்பாரு'ங் கிறத சொல்லாம விட்டி ருந்தா... அது அப்படியே வேற மாதிரி பிளேட்டே மாறியிருக்கும். கற் பனையே பண்ணியிருக்க முடியாது, இதுக்கு என்ன கதைய பண்ணுவாங்கண்டு. அப்போ எவ்வளவு பெரிய சூழல்ங்கிறீங்க எனக்கு? கையில ரோல் இருக்கு. அந்த ரோல நாம பிரிண்ட் போடணும். அது உள்ள கரெக்ட்டா இருக்கணும். அதுல வீரப்பனத்தான் எடுத்துட்டு வந்திருக்கணும். அந்தப் பையன் வீரப்பன்னு சொல்லிட்டு, வேற எதையாவது அவன் கோல்மால் பண்ணிறக்கூடாது.

பிற்காலத்துல ரொம்ப நாளைக் குப் பிறகுதான் அந்த சிறுகனைப் பத்தி தெரியும். டபுள் கேம் ஆடுறதுல மகா கெட்டிக்காரனா இருந்துருக் கான். வீரப்பன்னு ஒருத்தர் இருக் காரு. அவரு பத்திரிகைக்கு பேட்டி குடுக்க விரும்புறாரு. அதுவும் குறிப்பா நக்கீரன பாக்கணும்னு ஆசையா கூப்புட்டு விட்டாரு. அதன்படிதான் தம்பி சுப்பு மூலமா போனாய்ங்க. அதையே "நான்தான், நான்தான்... நக்கீரனாவது, மயிராவது... நக்கீரன் கோபாலா யார் அவன்'ங்கிற ரேஞ்சுக்கு ரொம்ப ஆணவமா, எகத்தாளமா பேச ஆரம்பிச்சுட்டான் படுபாவிங்கிறத ரொம்ப... ரொம்ப பின்னாடிதான் நாங்க தெரிஞ்சுக்கிட்டோம்.

கைக்கு ரோல் வந்ததும், சரட்டுன்னு வெளிய இருந்த ப்ரண்ட் இஞ்சின் ஆட்டோவ தம்பி மோகன எடுக்கச் சொல்லி அதுல சல்ல்ல்ல்னு போறேன். சென்னை எல்லீஸ் ரோட்டுல இருக்கிற மதன் ஸ்டுடியோ. போலீஸ் போட்டோகிராபர்ஸ் லாம் உக்காந்திருக்காங்க. நான் ஒண்ணுமே அங்க சொல்லல. பாத்துட்டு பூனை போல சத்தம் இல்லாம கீழ வந்துட்டேன்.

நான் போறதப் பாத்துட்டு, "என்ன... சொல்லுண்ணே. வந்த... போற''ன்னாப்டி மதன்.

"இருப்பா வர்றேன்''னு சொல்லிட்டு நான் வெளிய வந்துட்டேன். என்ன பண்றது... அவசரம் வேற! வெளிய போய் போட்டா அது வேற எங்க யாவது லீக் ஆயிடுச்சின்னா? மனசு ரொம்பவே பதைபதைச்சிருச்சு. நமக்கு நம்பிக்கையான ஆளு மதன்தான் அப்படின்னு முடிவெடுத்துட்டு, மதன் ஸ்டுடியோவுக்கு எதிர்ல உள்ள படியில உக்காந் திருந்தேன். கூட ஆட்டோ டிரைவர் மோகனும் இருந்தாரு. பாக்கிற எல்லாரும் "என்னண்ணே இங்க?'ன்னு கேட்டாங்க. "இல்ல... இல்ல... ஒரு ஆளுக்காக வெயிட்பண்ணிக்கிட்டிருக்கேன்''னு சொன்னேன். அந்த போலீஸ் போட்டோகிராபர்ஸ் எல்லாம் மதன் ஸ்டுடியோவுக்குப் போயிட்டு, எல்லாரும் வெளிய வருவாங்கள்ல, அப்படி அவங்க வரும்போது "ஒருத்தருக்காக வெயிட்பண்றேன்'னு சொல்லிருவேன்.

ராத்திரி 10:00 மணி இருக்கும். அப்போ யூஸ்பண்ண கலர் பிரிண்ட் போடுற கெமிக்கல் எல்லாத்தையும் கழுவிட்டு, இவரு அப்பதான் சாப்பிட உக்கார்றாரு ஸ்டுடியோவுல. ஏன்னா டே அண்ட் நைட் வேலை பாக்குறவருல்ல. எல்லாரும் போன பிறகு வெளி லைட்ட ஆஃப் பண்ணவும், நான் "டக்'னு உள்ள தொறந்துட்டுப் போறேன்.

pp

"இன்னும் நீ போகலியா?''ன்னு மதன் கடுப்புல கேட்டாப்ல.

"மதன் எனக்கு ஒரு பெரிய உதவி வேணும்.''

"உக்காரு... சாப்பிடுறியா?''ன்னான்.

"இல்ல... இல்ல... இங்க வா''ன்னு தனியா கூட்டிட்டுப் போனேன். ஏன்னா, அப்பவும் அவர்கூட நாலஞ்சு பேரு இருந்தாங்க. அவங்க கூட போலீசுக்கு உளவு சொல்லிருவாங்களோன்னு எனக்கு ஒரு பயம். அவ்வளவு பெரிய விஷயத்த காப்பாத்தணுமே!

அப்ப மதன்கிட்ட, "இந்த மாதிரி வீரப்பன படம் எடுத்துட்டு வந்திருக்காங்க. உடனே பிரிண்ட் போடணும். ஏன்னா இதுவரைக்கும் போலீஸ் போட்டோகிராபர்ஸ்லாம் வந்துக்கிட்டே இருந்தாங்க. இத வெளில நாம பிரிண்ட் போடுறது தெரிஞ்சாலே முடிஞ்சுச்சு... என் கதையும் சரி, உன் கதையும் சரி...! அதுக்காகத்தான் நான் இவ்வளவு நேரம் காத்துக்கெடந்தேன்''ன்னேன்.

"அட... இத நீ அப்பவே சொல்லியிருக்கலாமே? நான் மேனேஜ் பண்ணிருப்பனே''

"அதெல்லாம் இல்ல. சின்னதா கசிஞ்சாலே போச்சுல்ல...'' அப்படின்னேன்.

"ஆமா, நீ பண்ணுனது கரெக்ட்தான்னு சொல்லிட்டு, ஆஹா... கெமிக்கல் எல்லாத்தையும் ஊத்தி கழுவிட்டேனே. இனிமேல் எக்ஸ்போஸ் பண்ணி, பிரிண்ட் போடணும்னா புதுசா கெமிக்கல்லாம் போடணும், அதுக்கு ரொம்ப செலவாகுமே''ன்னாப்ல.

"நீ என்னவேணாலும் பண்ணு. எனக்கு இப்ப பிரிண்ட் போடணும். அப்புறம் ஒரு கண்டிஷன். டெஸ்ட் பிட் போட்டாக்கூட நீ அத குப்பையில போட்டுறாத. எல்லாத்தையும் என்கையில குடுத் துரு.... எதையுமே குப்பையில கூட போடக்கூடாது. அதுமட்டுமில்ல... எல்லாத்தையும் நீயே பண்ண ணும், வேற யாரையும் கூட வச்சுக்காத. இது நீ எனக்கு செய்ற பெரிய உதவி மதன்''னு சொன்னேன்.

என்னப் பாத்து ஒரு முறை முறைச்சிட்டு, "சரி... வா, பண்ணுவோம்...''

இதுதான் மதன்! அந்த மனசு யாருக்குமே வந்திருக்காது. அப்படி ஒரு பெருந்தன்மையான மனசு. அன்னிக்கு சாப்பிடக்கூட இல்ல. அத வச்சிட்டு, "வா போடுவோம்' அப்படின்னு சொல்லி, கூட இருந்த நாலுபேரையும் போகச் சொல்லிட்டு, ஒத்த ஆளா இருந்து எனக்குப் பிரிண்ட் போட ஆரம்பிச்சாப்ல. பிரிண்ட் போடறப்ப ஒவ் வொண்ணா எக்ஸ்போஸ் ஆகுது. கெமிக்கல்லாம் கழுவிட்டு... கடைசியா ஒரு முகம் வருது. வீரப்பன் முகத்துல என்னைய மாதிரி மீசை.

"யோவ் என்ன... ஒன்ன மாதிரியே மீச வச்சிருக்கான்'' அப்படின்னாப்டி.

"இல்லப்பா, அவர மாதிரிதான் நான் வச்சிருக்கேன். அவரு பெரிய ஆளுய்யா. முதல்ல நீ கை குடு! நீ செய்த இந்த உதவிய நான் மறக்கவே மாட்டேன்''னு சொன்னேன்.

ஏன்னா... அதுக்கப்புறமா "எங்க பிரிண்ட் போட்டோம், எப்படி பிரிண்ட் போட்டோம்?'னு பயங்கரமா ட்ரேஸ் பண்ணுனாய்ங்க. ஒரு வார்த்த மதன் வாயில இருந்து வரல. நானும் எதையும் சொல்லல.

இதுல இன்னொரு கொடும என்னன்னா... இதே வீரப்பன வீடியோவுல எடுக்க இந்தப் படுபாவிப் பயல ட்ரெயின் பண்ணுனதும் மதன்தான். வீடியோ கேமராவுல எப்படி எடுக்கணும்னு இவனையும், தம்பி சுப்புவையும் மதன்ட்டதான் அனுப்புனேன். மதன்தான் ரெண்டுபேருக்கும் புரியுற மாதிரி சொல்லிக் குடுத்தாப்டி.

2003-ல என்கிட்ட என்கொயரி... அதுக்கப் புறம் கைது பண்ணி பொடாவுல போட்டப்ப... "எங்க போட்ட, யாருட்ட போட்டே'ன்னு அப்பகூட கேட்டாய்ங்க. அதப் பத்தி என் வாயிலயிருந்து ஒரு வார்த்த கூட வரல... மூச்.

என்ன கொடுமைன்னா... போலீஸ் கஸ்டடில அப்ப என்னை ஜட்டியோட உக்கார வச்சு சித்ரவதை பண்ணி போட்டோல்லாம் எடுத்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அந்த சி.பி.சி.ஐ.டி. போட்டோகிராபரும் மதன்ட்ட போய்தான் பிரிண்ட் போட்டிருக்கான். அந்த அளவுக்கு போலீஸுக்காக எல்லா பிரிண்டும் போடுற ஒருத்தர்ட்ட, நாம வீரப்பன் படத்தையும் போட்டு... வெளியிட்டு இன்னைக்கு 30 வருஷத்த தாண்டிட்டோம்.

இந்த நேரத்துல "மதன்'ங்கிற கேரக்டர நான் சொல்லணும். அந்த மதன் கேரக்டர் மட்டும் அன்னிக்கு சரியா இல்லன்னா...

(புழுதி பறக்கும்)