வணக்கம்!
நாடறிந்த பத்திரிகை செம்மல் அருமை சகோதரர், மக்கள் பத்திரிகையாளர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள் எழுதிய அச்சுக்குப் போகாத "போர்க்களம்' நூல் என் கைக்கு வந்தது. முப்பது ஆண்டுகள் தன் மீசையைப் போல அரசப் பகை வளர்த்த கதையின் மூன்றாம் பாகம் படித்தேன்.
சம பலமுடைய இருவரிடையே உண்டாகிற பகையில் ஒரு நியாயம் உண்டு. ஆனால் இங்கோ, அதிகாரமில்லாத சாமானிய மக்களின் அன்பைப் பெற்ற ஒரு பத்திரிகையாளருக்கும்... சகல சர்வ அதிகாரம் பெற்ற ஒரு அரசுக்கும் பகை என்றால் அது நியாயமில்லை. ஆனால் இந்த நியாயமற்ற பகையை அரசு வளர்த்திருக்கிறது என்பதுதான் வேதனை. அந்தக் கதையை திரைமொழியில் சொல்வதென்றால் நான்லீனியர் (சர்ய் கண்ய்ங்ஹழ்) திரைக்கதை சொல்லும் யுக்தியில் முன், பின் காரணங் களைச் சரியாக இணைத்து சுவாரசியமாக, இந்த துயரக் கதையை எழுதியிருக்கிறார்.
உண்மையின் உணர்ச்சியோடு உரையாடல் வடிவில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களோடு சம்பவங்கள் நடந்த காலத்தை சீதோஷ்ண நிலையின் உஷ்ணம் குறையாமல், அனேகமாக பேச்சு மொழியில் எழுதப்பட்ட சுய போராட்ட வரலாறு இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். அவரோடு அமர்ந்து பேசும் உணர்வைத் தருவது இதன் சிறப்பு. யாரெல்லாம் இக்கட்டான காலகட்டத்தில் தனக்கு அருகாமையில் இருந்து உதவினர் என்பது நன்றி மறவாமல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வனத்தில் கொடுங்கோபம் கொண்ட சிங்கத்தின் பிடியில் சிக்குண்ட மனிதன் மரமேறி கல்லெறிந்து குன்றேறி முருகன் அருளால் தப்பிய கதையிது. அரசப்பகை வரலாற்றை, எள்ளலோடும் உதாரணங்கள், அவருக்கே உரிய கோபத்தோடும் விரக்தி யோடும் பதிவிடுகிறார். பகை என்பது இருவரில் ஒருவர் மறையும் வரை தீராது என்ற ஐரோப்பிய இலக்கியவாதி சோமர்செட்மாகத்தின் சொல்லுக்கேற்ப நிகழ்கிறது.
"செல்வி' என்று லே-அவுட்டில் ஜெயலலிதா அவர்களின் பெயரைக் குறிப்பிடாத நாளின் ஒரு முன்னாள் ஆளுங்கட்சி பெண்மணியின் மொழிப் பிரயோகத்தில் ஜெயலலிதா அவர்களே திரு.கோபால் அவர்களை ஆங்கில வசை பாடும் நாளொன்றில் இருந்து தொடங்கியது இருவருக்குமான பகையின் தொடக்கப்புள்ளி. பரபரப்பு பற்றிக்கொள்ளும் நிமிடங்கள், கரணம் தப்பினால் மரணம் என்றால் நேர்மையும் -அது சார்ந்த சமயோசித விழிப்புணர்ச்சியும் ஆசிரியர் கோபால் அவர்களை காப்பாற்றி யிருக்கிறது.
தன்னோடு பயணித்தவர்கள், குடும்ப உறவுகள் சந்தித்த இன்னல்கள் என காட்சிகள் விரிகிறது.
நக்கீரனின் வாழ்வைக் காப் பாற்ற இந்திய பிரஸ் கிளப்பின் சேர்மன் ஜஸ்டிஸ் சாவந்த் வருகிறார். அதிலிருந்து ஒவ்வொரு நாளும் லேசில் கிழிக்க முடியாத இரும்புத் தாளாக மாறி தன்னைக் காத்த அலு வகத்தின் மிகப்பெரிய "கேட்'டையும் (ஏஹற்ங்) நினைவுகூர்கிறார்.
ஒரு சலனப் படமென நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது... கடந்து வந்த பாதை நம் கண் முன்னே ஜ்வாலையுடன் எரியும் நெருப்பு.
அமைதி பற்றிய ஓவியத்தில் அருவி வந்தது, வரையச் சொன்ன மன்னன், அருவிக்கு சத்தமிடும் நாவுகள் உண்டு எனும் போது, அங்கு கூடு கட்டி வாழும் பறவைகளை ஓவியர் காட்டி, அமைதி என்பது தனக்குள் மலர்வது என்று விளக்கம் தருகிறார். இவ்விளக்கம் கூட லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பணியின் வாயிலாக அனுபவமாக திரு.கோபால் அவர்கள் எழுதியதை உணர்கிறேன்.
கவுண்டமணி படங்களில் அவர்கள் பேசும் வசனங்களை இடையிடையே உதாரணப்படுத்திய திரு.கோபால் அவர்கள், சாமான்ய மக்களின் பிரதிநிதி என்பதையே காட்டுகிறது.
அறத்தின் வாளாக அவர் பல இடங்களில் எதிர்சமர் புரிகிறார். எங்கெல்லாம் எப்படியெல்லாம் ஜெயலலிதா அவர்கள் கடிதங்கள் மூலம் செயல்பட்டார்கள் என்பதை விளக்கி, நினைத்ததை அடைய முனையும் அதேசமயம், எதிர்த்தவர்களை துன்ப நிலைக்குத் தள்ளும் மனோநிலையை அவர் பாணியில் எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதா அம்மையாரால் கமல் அவர்களுக்கு நேர இருந்த துயர், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நேரவிருந்த பல சிரமங் களை, தான் தாங்கிக்கொண்டு, அவர் நட்பைப் பேணிய விதமும், வீரப் பன் தேடப்பட்ட சமயத்தில், கோபால் கைதாகி... சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனின் நாற்றமெடுத்த சிறைக் கொட்டடியில் சித்ரவதைக்கு ஆளானபோதும்... அப்ரூவர் ஆகாமல் ரஜினி, கலைஞர், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மூவரையும் காத்ததும், சமகால... அம்மையாரின் மறைவிற்குப் பிறகு அவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குள் நடக்கும் நாற்காலிச் சண்டை யின் நாற்றத்தை அம்பலப்படுத்துவதிலும், நினைவின் காயங்களோடு ஒரு சிங்கமாக கர்ஜிக்கிறார் அண்ணன் திரு.கோபால் அவர்கள்.
ஏன், தன்னுடைய ஆசிரியரான பத்திரிகைத்துறை வழிகாட்டியாக இருந்த வலம்புரி ஜான் அவர்களையும், ஒரு கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றிய சமயோஜித அறிவும்... பிரச்சினையைத் தீர்க்காமல் சமரசம் செய்ய முனையாமல், அதன் போக்கில் அதனை எதிர்கொண்டு ஒரு தாய்ப்பறவை எப்படி, தன் உறவுகளை காத்தது என்ற இந்த ஆவண எழுத்துக்கள் என்பது, வளரும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையாளர்கள் ஏன் எத்துறையில் உள்ளோரும் அறிந்து கொள்ளத்தக்க பாடமாக, வழித்துணையாக இப்புத்தகம் அவர் வாழ்வியல் அனுபவங்கள் அமைந்திருப்பது சிறப்பு. இத்துயரங்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்ட அசரா பத்திரிகை கலைஞராக வாழ்ந்த பாதைதான் இந்த "போர்க்களம்'!
-சீனு ராமசாமி,
திரைப்பட இயக்குநர்
(134) காலால் எட்டி உதைத்த ஜெ!
உடனே இந்தம்மா, அதான்... ஜெயலலிதா, சம்பந்தப்பட்டவங்களப் பாத்து வெறியோட கோவமா கத்திக்கிட்டு, காரை எடுக்கச் சொல்லியிருக்கு. போயஸ் கார்டன்ல இருந்து அபி ராமபுரத்துல இருக்கிற நடராஜன் வீட்டுக்கு சர்ர்ர்....ன்னு போய் இறங்கி... ஆக்ரோஷமா காலால எட்டி ஓங்கி உதைக்குது கதவ.
விக்ரம் நடிச்ச "தூள்' படத்துல சொர்ணாக்கான்னு ஒரு கேரக்டர் வரும் பாருங்க, அது ஒரு ஆள காலால எட்டி உதைக்கும் ஞாபகம் இருக்கா... அதே மாதிரிதான். அந்த மாதிரி, இந்தம்மா கத்தி கூச்சல் போடுது... தெருவே பயத்துல திரும்பிப் பார்க்கிற மாதிரி.... நடராஜனப் பாத்து "தேட் இஸ் மை பிராப்பர்ட்டி' அப்படின்னு. "அது என் பிராப்பர்ட்டிடா, எப்படி என்னக் கேக்காம அவன்கிட்டயிருந்து புடுங்கிட்டு வந்த'ன்னு சொல்லி... "என் பிராப்பர்ட்டிய குடு, பிராப்பர்ட்டிய குடு'ன்னு சொல்லி காட்டுக் கத்தலா கத்தியிருக்கு. நடராஜன் உள்ள ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டாரு. ஆனா... இதுக்குள் ளயே இந்தம்மா கோவப்பட்டு சத்தம் போட்டு, காலால கதவ மிதிச்சு... காட்டுக் கத்தல் கத்துது. இதத்தான் நான் சொல்லியிருப்பேன். ஆளு யாரையும் விட்டுல்லாம் கேக்காம, கோபத்துல போய்... டைரக்ட்டா களத்துல இறங்குது,
இதையெல்லாம் எதுக்குச் சொல்ல வர்றேன்னா... இந்தம்மாவுக்கு உள்ள எத்தன மூஞ்சி, எத்தன முகமூடி இருந்திருக்குங்கிறத தெரியப்படுத்தணும்னுதான். இப்படி ஒரு முகமூடி ஒண்ணு இருக்கு. அதுவே நேரே போய் அடிக்கும்... ஆள மிதிக்கும் அப்படிங்கிறதுக்கு இது ஒரு சாம்பிள்தான்!
அதுக்கு முன்னாடி போலீஸ் வந்து ஜெய லலிதா எழுதுன ராஜினாமா கடிதத்த அவசர, அவசரமா... கொள்ள போகுதுன்னு ச்சீஸ் பண்ணி சட்டப்பேரவைத் தலைவர் தமிழ்க் குடிமகன்ட்ட கொண்டுபோய் சேர்த்துட்டாய்ங்க.
ஒருத்தர், எம்.எல்.ஏ. பதவிய ராஜினாமா பண்ணுனா, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. சட்டப் பேரவைத் தலைவர்கிட்ட நேர்ல போய் ராஜினாமா கடிதத்த குடுக்கணும், இல்ல... தனக்கு வேண்டிய ஒருத்தர் மூலமா கொடுத்துவிட்டு, தொலைபேசி மூலமா சட்டப்பேரவைத் தலைவர்ட்ட "என் னோட எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்த இன்னார் மூலமா அனுப்பியிருக்கேன், அத அக்ஸப்ட் பண்ணிக்குங்க'ன்னாவது சொல்லியிருக்கணும். ஆனா இந்தம்மா நேர்ல போயும் குடுக்கல, ஆள் வச்சும் கொண்டுபோய் குடுக்கல.
அப்படிக் குடுத்துவுட்டதத்தான் நந்தி மாதிரி நடராஜன் குறுக்க வந்து குட்டையக் குழப்பிட்டாரே! நடராஜன் குழப்புனது ஒரு வகைக்கு ஜெயலலிதாவுக்கு ரொம்ப சாதகமாப் போச்சு. நடராஜன் மட்டும் சுந்தரமூர்த்திங்கிற வர்ட்ட இருந்து அந்த ராஜினாமா கடிதத்த புடுங்காம விட்டிருந்தா, இன்னிக்கு அந்தப் பொம்பள 3 வாட்டி ஆட்சியிலயே இருந்துருக் காது. நாமளும் இந்த "சேலஞ்ச்', "யுத்தம்', "போர்க்களம்'னு தொடர்கள கை வலிக்க எழுதிக்கிட்டும் இருந்திருக்க மாட்டோம். நடராஜன் பண்ணுன காரியத்தால எல்லா எழவும் கெட்டுப் போச்சு. ஒருவகையில ஜெயலலிதாவுக்கு, நடராஜன் எத்தாத்தண்டி நல்லது பண்ணியிருக்காரு பாத்தீங்களா? அந்த வகையில நடராஜன் ஒரு தீர்க்கதரிசிதான். அத யாரும் மறுக்கவும் முடியாது.
என்னடா இது திடீர்னு நடராஜன எல்லாம் பாராட்டுறேன்னு உங்களுக்கு ஒரு டவுட் வரும். நடராஜன் செஞ்ச காரியம் அப்ப டிப்பட்டது. அதுக்குத்தான் இந்தப் பாராட்டு. ஆனா, அந்த ஆளு நம்ம பேர்ல போட்ட வழக்கு எக்கச்சக்கம். அதவிட நக்கீரன் ஆரம்ப காலங்கள்ல நம்ம குடியக் கெடுக்க அந்த ஆளு போட்ட கொடுமையான திட்டமும் எக்கச்சக்கம்.
உதாரணத்துக்கு... 1988-ல நம்ம வீட்டுக்கு சமையலுக்கு ஒரு எச்சக்கல நாய அருப்புக் கோட்டையில இருந்து கூப்பிட்டு வச்சோம். எங்க ஊரு புளியம்பட்டியில சுத்தித் திரிஞ்ச நாயி அது. அந்த சொரிநாய் என்ன கொல்லுறதுக்கு திட்டம்லாம் போட்டுச்சு... நடராஜன் துணை யோட. எந்த சாமி புண்ணியமோ, பொழச்சு திரும்ப வந்துட்டோம். அந்த நாய வச்சு நக்கீரன் குடும்பத்தயும் கெடுக்க குள்ளநரி வேலைய எல் லாம் பண்ணுனாரு. இருந்தாலும்... இது எல்லாத் தையும்விட பெரிய காரியத்த ஜெயலலிதாவுக்குப் பண்ணுனாரு. அதுக்குத்தான் பாராட்டு. அன் னிக்கு மட்டும் நடராஜன், சசிகலா இல்லைன்னா... அப்பவே ஜெயலலிதா ஆளில்லாம செத்து... புல்லு முளைச்சிருக்கும் தெரியுமா?
நடராஜன் வீட்டுல இருந்துதான் ராஜினாமா கடிதத்த சீஸ் பண்ணியிருக்காய்ங்க. சட்டப்படி இல்லாம சீஸ் பண்ணுன கடிதம் தமிழ்க்குடிமகன் கைக்குப் போக... "அடிச்சுச்சுடா லக்கிபிரைஸ்'னு நினைச்சு சபாநாயகர் தமிழ்க் குடிமகன், உடனே படக்குன்னு பிரஸ்காரங்கள கூப்பிட்டு பிரஸ்மீட் வச்சு... பிரஸ்மீட்ல "இந்தம்மா போடி தொகுதி எம்.எல்.ஏ. பதவிய ராஜினாமா பண்ணிட்டாங்கடாடோய்... . அர சியல விட்டு விலகுறாங்கடாடோய்'ன்னு சத் தம்போட்டு அவரும் குஷியில சொல்லிட்டாரு.
வந்துச்சு பாரு வினை....!
(புழுதி பறக்கும்)