ff

(128) சொந்தக் கட்சிக்காரங்க மேல கஞ்சா கேஸ்!

டிட்டர் ராஜசேகர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்... அப்பதான் ஜெயலலிதா, தலைமைக் கழக ஊழியர் மனோகர்ங்கிறவர் மூலமா ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கே பூங்கொத்து குடுத்து விட்டிருக்கு. பூங்கொத்த வாங்க மறுத்துட்டாரு ஆடிட்டர்.

Advertisment

"சினத்துல அறுத்த மூக்கு சிரிச்சா ஒட்டிக்குமா'ன்னு ஒரு சொலவட இருக்கு. அடி... அடி...ன்னு அடிச்சு நொங்கப் பிதுக்கிட்டு... பூச்செண்டு குடுத்துவிட்டா யாருக்குத்தான் கோவம் வராம இருக்கும்?

"நீ, நான் குடுத்த பூவ வாங்க மறுத்துட்டேல்ல... இப்ப பாரு'ன்னுதான்... "இது கருணாநிதியின் சதி'ன்னு அறிக்கை விட்டுச்சு ஜெயலலிதா.

அதோட விடாம, உடனே தன் பரிவாரங்கள்ட்ட சொல்லி, கலைஞர் சட்டமன்றம் போற வழிய மறிச்சு கருப்புக்கொடி காட்ட உத்தரவு போட் டாய்ங்க.

Advertisment

சி.பி.சி.ஐ.டி. இவங்க மேல கேஸ் போட்டுட்டாங்கன்னதும், கருப்புக்கொடி காட்டுறத தள்ளிப்போடச் சொல்லிட் டாங்களாம்.

செய்யுறதயெல்லாம் செஞ்சுப்புட்டு... அதுல இருந்து தப்பிக்க எத்தன தகிடுதத்த வேலையெல்லாம் பண்ணியிருக்காய்ங்க பாருங்க. அதான் சொன்னேன்... "இவிய்ங்க பண்ணுற அழும்புக்கு பஞ்சமே இல்ல'ன்னு.

எஸ்...ஸ்... சடசடன்னு பழிவாங்குற விஷயத்த முடிச்சிட்டு அடுத்த விஷயத்துக்குப் போவோம்னு பாத்தா... எங்க, எடுத்தா வந்துக்கிட்டே இருக்கு... மேடத்தோட அடிதடி லாவண்யம்.

போனவாட்டியே சொன்னேன்ல, அவிய்ங்க கட்சிக்காரங்களையே தொவச்சு எடுத்தது. அதுவும்... மக்கள் பிரதிநிதிகள. அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க...?

எம்.எல்.ஏ.க்கள சென்னையில வச்சுதான்... அதுவும் நடுரோடுன்னு கூட பாக்காம அடிச்சிருக்காய்ங்க. கேக்க நாதியில்ல... போலீஸ் கீலீஸ்... ம்ஹும்...! எந்தப் போக்கிடமும் இல்லாம அவங்க பட்டபாடு இருக்கே... அதத்தான் இப்ப பாக்கப் போறீங்க!

"ஜெ.' கோஷ்டியால அடிவாங்குன அவங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள்ல முதல் அடி நம்ம தூத்துக்குடி எம்.எல்.ஏ.வா இருந்த ரமேஷ் அண்ணனுக்குத்தான்.

oo

தூத்துக்குடியில ஆரம்பத்துல இருந்தே எந்த வகையிலயும் ஒத்துப்போகாத எம்.எல்.ஏ. கோஷ்டியும், நகரச் செயலாளர் கோஷ்டியும்... வடக்கும், தெற்குமாத்தான் இருந்து வந்துச்சு.

விசாரணையில எம்.எல்.ஏ. ரமேஷைப் பத்தியும், அவரோட ஆதரவாளர்கள் சிலரப் பத்தியும் குண்டக்க மண்டக்க ஏகப்பட்ட புகார்கள ஹென்றி கோஷ்டி ஜெ. கவனத்துக்கு கொண்டுபோயிருக்கு. உடனே, அடுத்தநாளே ரமேஷ் ஆதரவாளர்கள் நாலுபேரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டாங்க. அதுக்கு அடுத்தநாள், சென்னையில ரமேஷ் குடும்பத்தோட மாருதி கார்ல போயிட்டிருக்கும்போது வழிமறிச்சி கடுமையா தாக்கப்பட்டாரு.

ரமேஷின் ஆதரவாளர்களான தர்மராஜ் ஃபெர்னாண்டோ, சதா, சேகர், அண்டோன்னு நாலுபேரும், ரமேஷ் தாக்கப்பட்ட சம்பவத்த கேள்விப்பட்டு, தூத்துக்குடியில இருந்து ரதிமீனா டிராவல்ஸ்ல சென்னைக்கு வந்துருக்காய்ங்க.

ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு இவங்க போன பஸ்ஸ மதுரை -மேலூர் பக்கத்துல மடக்கி, நாலுபேரையும் ஜெயலலிதா போலீஸ்காரங்க கைது செஞ்சு அள்ளிட்டுப் போயிட்டாய்ங்க.

மறுநாளு... "ரமேஷை அந்த நாலு பேரும் தாக்கிட்டு, சென்னையில இருந்து தூத்துக்குடிக்கு ஆம்னி பஸ்ல போயிட்டி ருக்கும்போது... இடையில போலீஸால வீரதீரமா மடக்கப்பட்டு, கைது செய்யப் பட்டாங்க'ன்னு எல்லா பத்திரிகைகளுக்கும் போலீஸ் செய்தி குடுத்துச்சு.

எப்படி வீரதீரமா போலீஸ் செயல் பட்டாய்ங்க?

அந்த நாலுபேரும் தூத்துக்குடியில இருந்து மெட்ராஸுக்கு வந்துக்கிட்டு இருக்காய்ங்க. இவனுக எப்படி கதைய மாத்துறாய்ங்கன்னா... எம்.எல்.ஏ.வ அடிச் சிட்டு தப்பிச்சு, சென்னையில இருந்து தூத்துக்குடிக்குப் போனாங்களாம்... இவனுக வெரட்டிப் புடிச்சானுங்களாம். இதெல்லாம் நீங்கதான் நோட்பண்ணிக்கணும்.

அந்தச் செய்திய பாத்தாலே தெரியும்... "எம்.எல்.ஏ. ரமேஷை தாக்கியதாக, கட்சியை விட்டு நீக்கப்பட்ட அ.தி.மு.க.வினர் 4 பேர் கைது!''

அதுக்குப் பிறகு அடுத்தநாளே இன்னொரு செய்தி.

"ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட 4 அ.தி.மு.க.வினர் மீது கஞ்சா கடத்தியதாக வழக்கு!'' -இவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்.

இது எப்படி...? எல்லாமே தடாலடி நாடகம்தான்.

எப்படியெல்லாம் செட்டப் பண்ணி தன் கட்சிக்காரங்களையே தயவுதாட்சண்யம் பாக்காம, கஞ்சா கடத்துனதா வழக்கையும் போட்டு, குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய் ஜெயில்ல போட்டாய்ங்க "ஜெ.' போலீஸ்காரய்ங்க.

பிடிபட்ட நாலுபேரும் எதுக்கு? என்ன? ஏன்...?னு ஒரு மண்ணும் தெரியாம பேந்த... பேந்த ஜெயில்ல கிடக்குறாய்ங்க. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல?

இத்தனைக்கும் பிடிபட்டதுல தர்மராஜ் பெர்னாண்டோங்கிறவரு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் உத்தியோகத்துல இருந்தவராம். எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட அன்னிக்கு வேலைக்குப் போயிட்டு வந்திருக்காரு. இவரோட சேர்ந்து நாலுபேர கட்சிய விட்டு நீக்கியிருக்காய்ங்க. அதப்பத்தி என்னன்னு கேக்கத்தான் 4 பேரும் சென்னைக்கு வந்திருக்காய்ங்க. வந்த இடத்துல கஞ்சா வச்சிருந்தாய்ங்கன்னு கைதுபண்ணி லாக்கப்.

கொடும என்னன்னா... கஞ்சா கேஸ்ல உள்ள போனவங்கள்ல தர்மராஜ் அ.தி.மு.க. நகர இணைச் செயலாளர். அண்டோங்கிறவரு நகர பொருளாளர். சேகர்ங்கிறவரு நகர இளைஞர் அணிச் செயலாளர். சதாங்கிறவர் மாணவரணி துணை அமைப்பாளர். எல்லாருமே ஜெயலலிதாவால நேரடியா நியமிக்கப்பட்டவய்ங்க.

யோசிச்சுப் பாருங்க. ஜெயலலிதா ஆட்சியில ஒரு எம்.எல்.ஏ.வுக்கு, அதுவும் அவரு மனைவியோட போகும்போதே... அவங்க கண்முன்னாடியே சவுக்குக்கட்டை அடி, அருவா வெட்டு...! எப்படி இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு...?

அதேபோல, கட்சிப் பதவியில இருக்கிற வங்களுக்கு பரிசு... "கஞ்சா கேஸ்'... சூப்பர்ல!

pp

இதுதான் ஜெயலலிதா...!

அவங்க கட்சியச் சேர்ந்த எம்.எல்.ஏ.வோ, கட்சிக்காரய்ங்களோ ஏதாவது தப்பு செஞ்சிருந்தாய்ங்கன்னா... என்ன, ஏது?ன்னு விசாரிக்காம, தன்னோட அடியாளுகள வச்சு நாயை அடிக்கிற மாதிரி... நடுரோட்டுல அடிக்கிறதும், கஞ்சா கேஸ போட்டு உள்ள தள்ளுறதும் என்ன நியாயம்னு... அந்தம்மாவ தலையில தூக்கிவச்சு ஆடுற கும்பல்தான் பதில் சொல்லணும்! ஆனா... எம்.எல்.ஏ.வ உண்மையா தாக்குன நபர்கள தேடவோ, கண்டுபுடிக்கவோ முயற்சி செய்யவே இல்ல. அதுமட்டுமில்லாம தாக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரமேஷுக்கு தலைமைல இருந்தோ, மற்ற எம்.எல்.ஏ.க் கள்ட்ட இருந்தோ ஒரு ஆறுதல் செய்தி கூட இல்ல.

இந்த சம்பவத்த நேர்ல பாத்த எம்.எல்.ஏ. ரமேஷோட மனைவி...

"அம்மா நல்லா இருக்கணும். அம்மாவுக்காக நான் எதையும் செய்வேன். அம்மா ஆட்சியில மக்களுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது''ன்னு சொல்லி... இப்படித்தான் பொழுதன்னிக்கும் புலம்பிக்கிட்டி ருப்பாரு. "யாருக்கும் அடிபணிஞ்சு போற பழக்கம் அவர்கிட்ட கிடை யாது. கைநீட்டி லஞ்சம் வாங்குறதும் அவருக்கு அறவே புடிக்காது. எங்க கல்யாணம் முடிஞ்சவுடன நேரா அம்மாகிட்ட போய்த்தான் ஆசி வாங்குனோம். நான் அம்மாகிட்ட வேண்டிக்கிற தெல்லாம், அவரக் கூப் பிட்டு எல்லாத்தையும் விசாரிக்கணும். அவர, அம்மாவ சந்திக்க விடாம தடுக்குறாங்க. இவருக்கு மொதல்ல மேடையில சரியா பேசக்கூட தெரியாது. அம்மாவ நம்பித்தான் அரசியலுக்கே வந்தாரு. அது மாதிரி நானும் என்னோட கணவர, அம்மாவ நம்பித்தான் அவங்ககிட்ட ஒப்படைச்சேன்''னு சொன்னது மட்டுமில்லாம...

"அன்னிக்கு நடந்த சம்பவத்த நெனைச்சா குடல் நடுங்குது. ஒரே ஒரு வேண்டுகோள்... அம்மாகிட்ட நான் கேக்குறதெல்லாம் தாலிப் பிச்சைதான்... அதைக் காப்பாத்திக் குடுத்தா போதும்''னு சொல்லி ரமேஷின் மனைவி சத்யபாமா கதறி அழுதுருக்காரு.

"எம்.எல்.ஏ. சார அடிச்சு உயிரப் பறிக்க நினைச்சதோட மட்டுமில்லாம... அவ ரோட வீட்டுக்காரம்மாவையும் தாலிப் பிச்சை வேணும்னு கெஞ்ச வச்சுருச்சு...'

இதுதான் ஜெயலலிதா...!

இத்தனைக்கும் நம்ம எம்.எல்.ஏ. ரமேஷ் அண்ணன் பண்ணுன பெரிய குத்தம் உள்கட்சி பிரச்சினைல தலையிட்டு மூக்க உடைச்சிக்கிட் டது. அதுக்குத்தான் இத்தன ஆடுகாலித்தனம்.

"அதுக்காகத்தான் படிச்சுப் படிச்சு சொல்லிக்கிட்டே இருக்கேன்... ஜெயலலிதா ஒரு ஹிட்லர்... ஹிட்லர்... ஹிட்லர்'னு.

இது மட்டுமா... இன்னும் இருக்கு...!

(புழுதி பறக்கும்)