poorkalam

(118) பிணம் தின்னும் கழுகு!

கைது மற்றும் விசாரணையை பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கோபால் தவிர்த்துவருகிறார். கோபாலால் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு ரிட் மனுக்கள்

1. அவரையும், அவரது பணியாளர்களை கைது செய்வதில் இருந்தும்...

Advertisment

2. வீரப்பன் தொடர்பான எந்தவொரு கிடப்பில் இருக்கும் மற்றும் வருங்கால வழக்குகளை போலீஸ் ஆபீசர்கள் மேற்கொள்வதை...

3. தாளவாடி வழக்கில் சி.பி.ஐ. விசாரணை...

4. அவரது விசாரணையின்போது போலீஸார் பதிவு செய்யப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இருந்து கட்டுப்படுத்த முயல்கின்றன இவை அகற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.

Advertisment

மேற்சொல்லப்பட்ட குற்றங்களில் நக்கீரன் கோபாலின் உடந்தையை நிரூபிக்க, அவர் கைது செய்து விசாரிக்கப்படவேண்டும். அவரது வளாகங்களில் எந்தவொரு குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்கள் இருக்கின்றனவா என்றறிய தேடப்படவேண்டும். நிலுவையில் ரிட் பெட்டிஷன்கள் இருக்கும் இந்த சூழலில் ஆர்.ஆர். கோபாலுக்கு எதிராக சட்ட வல்லுநர்களின் கருத்து பெறப்பட வேண்டும். ஃபேக்ஸ்ல முதல் மூணு பக்கங்களில் உள்ள மொழிபெயர்ப்பு மேல.

பாருங்க சார்... படுபயங்கரமான பழிகளயெல்லாம் போட்டுருக்காய்ங்க.

ஜெயலலிதா வாழ்ந்த காலத்துல தவணை முறையில எதிரிகள சாகடிப்பார். ஆனா நக்கீரன் விஷயத்துல எடுத்தேன்... கவிழ்த்தேன்னு... "அவன் (என்னை) இருக்கவே கூடாது... கூடாதுன்னா கூடாது'ங்கிற வெறி தணியவே இல்ல அந்த பொம்பளைக்கு.

மேப்படி ஃபேக்ஸ் கடிதப் போக்குவரத்து 2002, டிசம்பர் 7-ஆம் தேதி நடந்தது. சரியா 10 வருஷம் கழிச்சு அதே மாதிரி, 7-ஆம் தேதி ஜனவரி 2012-லதான் நக்கீரன் ஆபீஸ.... 1000 பேர வச்சு அடிச்சு துவம்சம் பண்ணுனது.

10 வருஷம் ஆனாலும் அந்தப் பழிவாங்குற வெறி குறையவே இல்லாம... போயஸ் கார்டன் நடுவீட்டுல சம்மணம் போட்டு உக்காந்து இதே வேலைய பாத்துக்கிட்டு இருந்துருக்காங்க.

அதாவது... என்மேல வேற என்ன என்ன வழக்குகள போடலாம்... போட்டு உடனே தூக்கலாம்னு சொல்லுங்க... சொல்லுங்கன்னு நச்சரிச்சதோட விளைவுதான்... கீழே நீங்க படிக்கிற அந்த பேக்ஸ் செய்தி.

அதுல ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி., ஈரோடு ஜில்லாவுல இருந்து வந்திருக்கு. புதுசா ரெண்டு கடத்தல் வழக்கு விபரம்...

ஈரோடு மாவட்ட எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ் பெக்டர்கிட்டயிருந்து 6-12-2002ல இதே ஜெயலலிதா வீட்டுக்கு ஒரு ஃபேக்ஸ் வந்திருக்கு. அதுல பின்வரும் வழக்குகளில் நாம் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

poorkalam

அதன் விபரம்...

ID: TEL NO: #014 P01 17:15 hr 6/12/2002

FAX

To

SSB CID

Chennai.

From

Inspector

SB CID, Erode (Dist.)

Date : 6.12.2002

நக்கீரன் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால், ஈரோடு மாவட்டத்தில் பின்வரும் வழக்குகளில் தொடர்புடையவராக இருக்கிறார். அவை பின்வருமாறு:

i) சத்தியமங்கலம் காவல் நிலையம், குற்ற எண்:227/98

U/S 364 (A), 344 IPC r/w, 34 IPC D/o 25-5-98 and 5-6-98 D/R 5-6-98/23.00 hrs.

P/O. - Vasumalali, Sathy reserve forest

புகார்தாரர் : திரு.கிருஷ்ண மூர்த்தி -சட்ட பேராசிரியர், சென்னை.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 13

இவர் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 11-ஆவது இடத்தில் இருக்கிறார்.(A 11)

வழக்கின் நிலை:P.T.

ii) திரு.கிருஷ்ணமூர்த்தி -பேராசிரியர் கடத்தப்பட்ட வழக்கு, தாளவாடி காவல்நிலையம்

குற்ற எண்: U/S 366

366, 307, 506, (ii) IPC r/w 25 (i), 9-b of IA Act 1959

D/O 30-07-2000 - 20.45 hrs

D/O 31-07-2000 - 21.00 hrs

P/O Thodda Kanjannur, Thalavadi.

புகார்தாரர்: திரு.கே.கோபாலன்,VAO, 15 மாரூர் சுற்றுவட்டார கிராமங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 26

இவர் 26-ஆவது நபராக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு:

வழக்கின் நிலை: U.I.

Inspector of Police

Special Branch, C.I.D.,

Erode District.

போன இதழ்ல நாம வெளியிட்ட ஜெயலலிதா வீட்டுல இருந்து வந்த பேக்ஸ் நகல்ல...

* இலங்கைக்கு ரகசியமா படகுல சென்று வந்தவன்...

* கன்னட நடிகரான ராஜ்குமார் மீட்பு நிகழ்வில் சட்டவிரோதமாக மாநில அரசு அவ ரை பேச்சுவார்த்தை நடத்த தூதராக நியமிக்கும் அளவுக்கு வீரப்பனுடனான அவரது தொடர்பு... கட்டுப்படுத்த இயலாதபடி தொடர்கிறது...

முதல்ல இந்த ரெண்டு பாயின்ட்டுக்கும் பதில் சொல்லணும்ல. நாமபாட்டுக்கு ஏதோ ஃபேக்ஸ் கடிதம் எக்ஸ்குளூஸிவா கிடைச்சிச்சு... அத ùளியிட்டோம்னு கடந்து போயிறக் கூடாதுல்ல.

poorkalam

இலங்கைக்கு ரகசியமா படகுல போனேனாம்?

அடேய்... அடேய்... பரதேசிகளா...? ஒருத்தன காலி பண்ணணும்னா அவன் இலங்கைக்கு படகுல போனான்கிறதும்... புலி, சிங்கம், கரடிகூட தொடர்பு இருக்குங்கிறதும், சீ... துப்புக்கெட்டவய்ங்களா? உங்கள எதால அடிக்கிறது? ஏண்டா, பொய்... பொய்ய்யோ பொய்... போங்கய்யா இதுலயுமா பொய்... பொசகெட்டவய்ங்களா...!

அடுத்தது...

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு. சட்ட விரோதமா இரண்டு மாநில அரசும் என்ன தூதுவனா அனுப்புனாங்களாம்.

அட மூதேவிக்குப் பொறந்த மூதேவி...

வீரப்பன் -ராஜ்குமார் சார கடத்தி, பரபரப்பான சூழ்நிலையில இருந்தப்ப... நான் தூது போகமாட்டேன்னு ஒளிஞ்சுக்கிட் டேன். ஏன்னு தெரியுமா? உங்களுக்குப் பயந்துதான். எனக்குத் தெரியும். பின்னாடி வந்து பொட்டத்தனமா என்ன சுட்டு, பழிய வீரப்பன் மேல போட்டுருவீங்கன்னு உங்க கூட்டத்துல (ஜெயலலிதா போலீஸ்) ஒருத்தர் வந்து காதக் கடிச்சாரு... இருந்தாலும் "போகலன்னா கர்நாடகத்துல உள்ள நம்ம தமிழ் மக்கள் ஒருலட்சம் பேர கொன்னு போடுவாங்க'ன்னு செய்தி வந்ததுனால... போறேன்னு சொல்லி.... ஒருலட்சம் பேர காப்பாத்துனோம்.

dd

நமக்கு என்ன எழவு நடந்தாலும் பரவாயில்லன்னுதான் ஒத்துக்கிட்டேன்டா பரதேசிகளா...!

உங்களுக்கென்னம்மா, பைத்தியம்... நீங்க என்ன வேணும்னாலும் அறிக்கை விடு வீங்க. ஆனா கலைஞர் அப்படி இல்ல... சாதுர் யம் நிறைஞ்சவரு. அவரு குடுத்த ஊக்கத்துல சரியா நடந்துச்சு. ஒரு உசுரும் போகவிடாம தலைநிமிர்ந்து நடக்குறோம். பிணம் தின்னும் கழுகு மாதிரி எப்ப எழவு விழும், அதவச்சு ஆட்சிய புடிக்கலாம்னு காத்திருந்தீங்க. நக்கீரனும் ரஜினி சாரும், கலைஞரும், கிருஷ்ணாவும் உங்க பிணம் தின்னும் ஆசையில மண் அள்ளிப் போட்டோம்.

உங்க கையாலாகாத்தனத்தால வீரப் பன்ட்டயும் என்ட்டயும் வீராப்பு காமிச்ச தோட பிரதிபலன்தான்... உங்க பீரியடுல வீரப்பன் கடத்துன, கர்நாடக முன்னாள் மந்திரி நாகப்பா கதை. என்னாச்சு...? ஊருக்கே தெரியும்... நல்லாவே புட்டுக்கிச்சு.

தூது அனுப்பாம, பொட்டத்தனமா... எவனோ ஒருத்தன பின்னாடியே போய் வீரப்பன சுடுறேன்னு, நாகப்பா சார கொண்டீங்களே...! இது ஒண்ணு போதும்... வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது உங்க நொம்மாவ...!

அடுத்து...?

(புழுதி பறக்கும்)