dd

(113) ரஜினி மாறுவேடத்தில் வீரப்பனை சந்தித்தாரா?

ங்... சொல்ல மறந்துட்டேன். வீரப்பன்- ராஜ்குமார் கடத்தல் பிரச்சனையில் ரஜினி தலையை உருட்டுனாங்கள்ள... அத நம்ம வாசந்தியம்மா அவங்க "இந்தியா டுடே'ல ரஜினிய தூது அனுப்புறதா, அதாவது...

"Rajinikant the tamil film actor, who has taken a personal interest in the crises, could be an emissary choice'' அப்படின்னு எழுதுனாங்க. அதுக்கப்புறம் நடிகர் ராஜ்குமார் பத்திரமா மீட்கப்பட்டு எல்லாம் முடிஞ்சது. ஆனா ஜெயலலிதாங்கிற அந்த ஆங்கா ரம் புடிச்ச மனுஷிக்கு கொதிப்பு அடங்கல. "நான் கோபால அனுப்பக் கூடாதுன்னு சொல்லியும் அனுப்பு னியா துணைக்கு வேற ரஜினி... ம்... ம்... இருக்கட்டும்'னு, ஆட்சி மாற்றம் வந்ததும் வச்சுச்சு ஒரு ஆப்பு... பெரிய ஆப்பு.... எனக்குத்தான்.

Advertisment

அத அடுத்த இதழ்ல சொல் றேன்... ஆதாரத்தோட.

ஆட்சி மாற்றம் ஆன உடனே எனக்கு போலீஸ் கெடுபுடி ஆரம் பிக்க... ராஜ்குமார் கடத்தல் வழக்குல முன்ஜாமீன் கேட்டு நான் ஹை கோர்ட்டுக்குப் போக... வழக்குல தடை வாங்க போராட... "இவர்மேல் ராஜ் குமார் வழக்கே கிடையாது'ன்னு போலீஸ் புழுகு மூட்டைய அவுத்துவிட... நீதியரசர் கனகராஜ், அரசாங்க வக்கீலைப் பார்த்து... "இப்ப உங்கள நம்ப முடியாது. எதிர் காலத்துல இவர் மேல ஏதாவது ராஜ்குமார் கடத்தல் வழக்கு போட்டீங்கன்னா... பெயில் கொடுக்கணும். 10 நாள் விசாரணைக்கு நான் ஆஜராகணும்''னு ஆர்டர் போட்டாரு. இந்தியாவிலேயே முதன்முதலில் ஒரு முன்ஜாமீன் வழக்கில், "வழக்கே இல்லை'ன்னு போலீஸ் தரப்புல சொன்ன பிறகும்... "எதிர்காலத்தில் வழக்குப் போட்டால் ஜாமீன் வழங்கணும்'னு ஆர்டர் வாங்குன ஒரே ஆளு நாமதான். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆர்டரை நமக்காக வாதாடி வாங்கித் தந்தது மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் சார்தான்.

கொஞ்ச நாள்லயே என்மீது ராஜ்குமார் கடத்தல் வழக்கைப் போட்டு 10 நாள் விசாரணைக்கு கோபிச்செட்டிப்பாளையத்துக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பினாய்ங்க ஜெயலலிதா போலீஸ்காரய்ங்க. அந்த 10 நாள் விசாரணையிலதான் நாகராஜன்கிற ஒரு பொறுக்கி போலீஸ் எடக்குமடக்கா ஆயிரம் கேள்விக்கு மேல கேட்டான். அவன் ஒரு டி.எஸ்.பி. அவன் கேட்டதுல முக்கியமான கேள்வியே...

Advertisment

c

* ரஜினிக்கும் வீரப்பனுக்கும் என்ன தொடர்பு?

*ரஜினி வீரப்பனைப் பார்க்க காட்டுக்கு வந்தாரா?

*நடிகர் ராஜ்குமார் மீட்பில் ரஜினி பங்கு என்ன?

*ரஜினி மாறுவேடத்தில் காட்டுக்குள் போய் வீரப்பனையும், நடிகர் ராஜ்குமாரையும் சந்தித்தாரா?

*எங்களுக்கு நம்பகத்தன்மையான இடத்திலிருந்து செய்தி வந்ததே... சந்தித்தார்னு!

*யார் அவரை அழைச்சிட்டுப் போனது?

*எந்த வழியாகப் போனாரு? நீ கூடப் போனியா?

*உனக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு?

...இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தான். அந்த பொறுக்கி போலீஸ் நாகராஜன்.

"அட போங்கடா போக்கத்தவங்களா'ன்னு மனசுக்குள்ளேயே புலம்பிக்கிட்டு... "1990-ல இருந்து ரஜினி சார் எனக்குத் தெரியும். ஆனா நீங்க சொல்றதெல்லாம் பொய்... பொய்... பொய்... ரஜினி சார் வரக் கிடையாது. வீரப்பனைப் பாக்க கிடையாது. அவருக்கும் இதுக்கு சம்பந்தமே கிடையாது. எந்த கேள்வியிலும் உண்மை இல்லை''ன்னு மறுத் துக்கிட்டே இருந்தேன்.

"சார்... நான்தான் ரஜினி சார் மாறுவேஷத்துல ராஜ்குமார் சார பார்க்க வர்றேன்னு சொன்னாருன்னு பத்திரிகைக்கு சொன்னேன்''னு சொன்னாலும் நம்பமாட்டேன்னுட்டான் முட்டாப்பய டி.எஸ்.பி. நாகராஜ்.

இப்ப புரியுதா போன இரண்டு இதழ்லயும் வந்த கட்டுரைய, ஏன் சின்ன குத்தூசி ஐயா எழுதுனார்னு. அதுக்காகத் தான் மறந்துடாம இருக்க அதை பதிவு பண்ணினேன்.

இப்ப மறுபடியும் 9-7-2012 புத்தகச் சந்தைக்கே வர்றேன். அங்க என்ன நடந்துச்சுன்னா...

புத்தகச் சந்தையில நம்ம ஸ்டால்கள் ரெண்டு நாளா பூட்டியிருக்கு. "நக்கீரன் ஸ்டா லோட பேர மாத்தி வேற பேரு வச்சு திறந்துக்கங்க' அப்படின்னு போலீஸ் ஒருத்தர அனுப்பியிருக் காங்க. டிபார்ட்மெண்ட்ல சைலேந்திரபாபுதான் அந்தப் பகுதிக்கான பொறுப்புல இருந் திருக்காரு. அவரு சொல்லி அனுப்புனதா, பபாசி நிர்வாகத்துல இருந்தும் சொல்லியிருக்காங்க.

தம்பி சுரேஷ் இந்த விஷயத்த என்கிட்ட சொன்னாரு.

அப்ப நான்... "நக்கீரன் பேர மாத்த வேணாம். அப்படியே வச்சு நாளைக்கு ஸ்டால திறங்க. என்ன ஆகுதுன்னு பாத்துக்கு வோம்''னேன்.

"அவங்க டெய்லி வந்து நம்ம புக் ஸ்டால் திறந்திருக்கா, இல்லியான்னு செக் பண்ணிட்டுப் போறாôங்க. என்ன செய்யறதுண்ணே''ன்னாரு தம்பி சுரேஷ்.

"இல்ல... இல்ல... காலைலயே நக்கீரன் பேர்லயே ஸ்டால திறங்க. நம்ம தம்பிங்க எல்லாரையும் அங்க நிக்க வச்சுக்கங்க. போலீஸ் காரங்க வந்து புத்தகங்கள ச்சீஸ் பண்ணுனா பண்ணட்டும்... அப்படி நடந்தா நம்ம போட்டோ கிராபர்ஸ் ரெண்டுபேர வச்சு புகைப்படங்கள் எடுத்துக்குங்க. ரெண்டுல ஒண்ணு... பாத்துருவோம். ஏன்னா... இவங்களுக்குப் பயந்துக்கிட்டு நாம பேர மாத்தியெல்லாம் வைக்க முடியாது. நக்கீரன் பேர்ல மட்டும்தான் ஸ்டால் இருக்கணும். அத நிர்வாகம் தடுத்தாலும் சரி..., போலீஸ்காரங்க வந்து தடுத்தாலும் சரி... எல்லாத்தையும் படம் எடுத்துக்கங்க''ன்னு சொல்லி போனை வச்சேன்.

gg

அதனால அடுத்த நாள் காலைல நக்கீரன் பெயரிலேயே புத்தகச் சந்தையில தம்பி சுரேஷ், மற்ற தம்பிங்க எல்லாரும் சேர்ந்து திறந்துட்டாங்க.

அதுக்கப்புறமா போலீஸ்காரங்க வந்து பாத்துட்டு படம் எடுத்துட்டுப் போனாங்கன்னு சொன்னாங்க. அவங்கள இந்தப் புத்தகச் சந்தை என்ன பண்ணிச்சு? அதனாலதான் நான் திறந்து வைக்கச் சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க சைடுல இருந்து பிரச்சினை பண்ணல. அப்படி ஒருவழியா அந்த விஷயத்த முடிச்சோம்.

அதுக்கடுத்து அதேநாள் உயர்நீதிமன்றத் துல முதல் பெஞ்ச்ல நம்ம ரிட் மனு தலைமை நீதிபதி முன்னாடி விசாரணைக்கு வந்தது. நம்ம சார்பா சீனியர் அட்வகேட் பெருமாள் சார், அவரோட எட்விக், சிவகுமார், வர்கீஸ் எல்லாரும் இருந்தாங்க. அதர்சைடுல... அதாவது கவர்ன்மெண்ட் சைடுல நவநீதகிருஷ்ணன் ஆ.ஏ. (அட்வகேட் ஜெனரல்) அப்பியர் ஆனாரு.

அவரு எடுத்தவுடனே... வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு சொல்லுவாங்கள்ல அதுமாதிரி... முன்னாடியெல்லாம் வீரப்பன் வழக்கிலிருந்து, ஜெயில்ல முதல் வகுப்பு கேட்டு வாதாடும்போது, எதிர்த்தரப்பு அதாவது போலீஸ் தரப்பு நம்மள என்ன சொல்லுவாங்கன்னா... "வீரப்பன் அசோசியேட்ஸ்'ம்பாய்ங்க. அதாவது வீரப்பனும் நானும் ஒரு கூட்டாம். அதனால பெயில் போட்டாலும், வழக்கு சம்பந்தமா என்ன வாதிட்டாலும்... "நோ சார்... இவரு வீரப்பன் கூட்டாளி, கூட்டாளி'ன்னு போட்டு கொமச்சுரு வாய்ங்க. இப்ப இந்தவாட்டி, இவரு நம்மளப் பாத்து "ப்ளாக்மெயிலர்'னும், அவரு எப்பவுமே இந்த மாதிரிதான் பண்ணுவாருன்னும், இந்த மாதிரி ஆளுங்கள்லாம் பயங்கர டேஞ்சரஸ்னும், பொய்ச் செய்தியப் போட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறவங்க... பயங்கரமானவரு அப்படிங்கிற மாதிரியெல்லாம் சொல்லியிருக்காரு.

தலைமை நீதிபதி எல்லாத்தையும் கேட்டுக் கிட்டாரே தவிர, அத ஒண்ணும் பெருசா எடுத்துக்கல.

ஏ.ஜி. திரும்பவும், அவங்க "பிளாக்மெயில் ஜர்னலிஸ்ட்'ன்னு சொல்லியிருக்காரு.

இப்ப தலைமை நீதிபதி அவரப் பாத்து, "பிளாக்மெயில் ஜர்னலிஸம்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்''னு சொல்லிட்டு, "மெட்ரோ வாட்டருக்கும், கரண்ட் கட் பண்ணுனதுக்கும் காரணம் சொல்லுங்க''ன்னு கேட்டுருக்காரு.

உடனே நவநீதகிருஷ்ணன், "இது விஷயமா அதிகாரிகள்ட்ட கேட்டுத்தான் சொல்லணும், அதுக்கு கொஞ்சம் டைம் வேணும்''னு சொல்லியிருக்காரு.

"அப்படியெல்லாம் டைம் குடுக்க முடியாது''ன்னுருக்காரு சீஃப்.

இவங்க எப்பவுமே அப்படித்தான். எந்த ஒரு கேஸ் வந்தாலும் "எங்களுக்கு டைம் வேணும்... டைம் வேணும்'னு கேட்டு ஒரு 15 நாளு அப்படியே இழுத்துருவாங்க. ஏன்னா அந்த 15 நாளுக்குள்ள அவங்களுக்கு தோதா என்னென்ன பண்ண ணுமோ... அது எல்லாத்தையும் செஞ்சுக்குவாங்க.

உடனே சீஃப், "நோ... நோ... நோ... இது ஒரு பெரிய பிரச்சினை. பத்திரிகைகள்ல இதப் பத்துன செய்தி வந்துக்கிட்டே இருக்கு. ஆனா அந்த சம்பவங்களப்பத்தி அதிகாரிகள்ட்ட கேட்டுச் சொல்றேன்... கேட்டுச் சொல்றேன்னு நீங்க சொன்னா என்ன அர்த்தம்?'' அப்படின்னு ரொம்ப கடுமையா கேட்டுருக்காரு.

அப்போ ஏ.ஜி., "இப்போதான் அந்தப் பிரச்சினையை என் கவனத்திற்கு கொண்டு வந்தாங்க...''ன்னு சொன்னாராம்.

உடனே சீஃப், "டெய்லி பேப்பர்ல வந்துக் கிட்டிருக்குன்னு நான்தான் சொல்றேன். எல்லா பேப்பர்லயும் வந்திருக்கு, டி.வி.யில போட்டுக் கிட்டே இருக்காங்க, நானும் அதையெல்லாம் பாத்தேன்... ஆனா, நீங்க "எனக்கு இந்தப் பிரச்சினை பத்தி இப்பதான் தெரியும்'னு சொல்றீங்க, இது சரியில்ல'' அப்படின்னு ஏ.ஜி.ய கண்டிச்சிருக்காரு.

"ஸாரி... உண்மையாவே எனக்கு இப்பதான் செய்தியே கிடைச்சுது''ன்னு நவநீதகிருஷ்ணன் போட்டாரே ஒரு போடு...

(புழுதி பறக்கும்)