ff

(112)

க்கீரனின் "போர்க்கள'த்தைப் படித்தவுடன் "மகாபாரதப் போர்க்களம்'தான் நினைவுக்கு வருகிறது. குருஷேத்திரப் போரில் 40 லட்சம் போர் வீரர்கள் சண்டையிட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு நக்கீரனுக்காக எத்தனை ஆயிரம் காவலர்கள் நக்கீரன் போர்க்களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள்.

ஜெ. அரசு மக்கள் வரிப்பணத்தை வீணடித்தது. அ.தி.மு.க. மந்திரிகளின் வீடுகளில் திடீர் சோதனை என்றவுடன் லபோலிதிபோ, குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறவர்கள் அன்று ஜெ. அரசின் மந்திரிகள் தானே. இப்போது சட்டவிரோதம், அதிகார முறைகேடு, காவல்துறையை, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடு கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறவர்கள், அன்று நக்கீரன் ஆசிரியர், உறவினர்கள், அலுவலகம்... என்று ஒன்றுவிடாமல் அத்துமீறி, சட்டவிரோதமாக நுழைந்து காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கையாளவில்லையா?

Advertisment

நக்கீரன் ஆசிரியர், மாமனார் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள எத்தனை கெடுபிடிகள், நூற்றுக் கணக்கான காவலர்கள்? நெருக்கடிநிலை காலத்தை விட 100 மடங்கு கெடுபிடியல்லவா?

அ.தி.மு.க. அரசு எதை விதைத்ததோ... தற்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறது.

இவண்,

Advertisment

பி.ஆர்.முருகன்,

உழவர் உழைப்பாளர் கட்சி (தமிழக விவசாயிகள் சங்கம்) விருத்தாசலம்.

ரஜினியை, வீரப்பனிடம் சிக்கவைக்க "ஜெ.' போட்ட ப்ளான்!

மூன்று முறை காட்டுக்குள் போன கோபால் தோற்றுப் போய்விட்டாராம்! கோபாலை தூதராகத் தேர்வு செய்ததில் அரசு தவறு இழைத்துவிட்டதாம்!

இந்த மாபெரும் கண்டுபிடிப்பை -வாசந்தி அம்மையாரிடம் சொன்னது யாராம்?

"சோ'தான் சொன்னாராம்!

கோபாலின் தோல்விக்குக் காரணம்... -வீரப்பன் நினைப்பது என்னவென்றால் "இந்த கோபால் வெறும் தபால்காரர் மாதிரிதான்! அரசு சார்பில் பேரம் பேசவோ -வாதிடவோ இவரால் முடியாது'' என்பதுதான் வீரப்பனின் நினைப்பாம்.

வீரப்பன் மனம், "சோ'வுக்கு தெரிந் திருக்கிறது. வீரப்பன் விருப்பம் என்ன என்பது அம்மையாருக்குத் தெரிந்திருக் கிறது.

"வீரப்பன், அரசு தூதராக கோபால் வருவதை ஒருபோதும் விரும்பவில்லை'' என்று வீரப்பனின் விருப்பத்தை -விருப்பமின்மையை -பக்கத்தில் இருந்து அறிந்தவர் போல வாசந்தி எழுதுகிறார்.

இரட்டைப் புலவர்கள் கெட்டார்கள்.

"வீரப்பனை நன்கு அறிந்த வேறு ஒருவரை தூதராக அனுப்பினால்தான் நல்லது'' என்று ராஜ்குமார் மீட்புக்கு மாற்று வழியும் சொல்லியிருக்கிறார் அவர்.

d

அந்த மாற்றுத் தூதர் ரஜினியாக இருக்க லாமாம். அம்மையார் ஆசைப்படுகிறார். இதிலும் ஜெயலலிதாவின் விருப்பத் தையே இவர் பிரதிபலிக்கிறார் என்று சந்தேகிக்க இடமிருக் கிறது.

ரஜினியை ஜெயலலிதாவுக்குப் பிடிக்காது; ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத ரஜினியை -வீரப்பன் பிடித்து வைத்துக்கொண்டால் -அதைவிட ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

"Option three is to dump Gopal and get another emissasry -preferebly someone closer to Veerappan -and start another round of negotiations to buy time, Rajinikant, the Tamil film actor, who has taken a personal interest in the crisis, could be emissary choice" -என்கிறார் வாசந்தி.

இந்த ஆலோசனையை -மூன்றாவது ஆலோசனையாகக் கூறுபவர் யார்? யார் பெயராலோ வாசந்திதான் கூறுகிறார்.

"வீரப்பனுக்கு நன்கு அறிமுகமான வேறு ஒரு தூதரை அனுப்பலாம்' என்று ஆரம்பிக்கிறார். தொடர்ந்து "ரஜினிகாந்தை அனுப்பலாம்' என்கிறார்.

"ரஜினி -வீரப்பனுக்கு வேண்டியவரா?' -இந்த அம்மையாரிடம் யார் சொன்னார்களோ தெரியவில்லை. எப்படி இருப்பினும் ஜெயலலிதாவின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் -ரஜினியை காட்டுக்குள் அனுப்பி, வீரப்பனிடம் சிக்கவைக்க வேண்டும் என்ற விபரீத ஆசையைத்தான் இந்த ஆலோசனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

"அரசு தூதராக செயல்படுவதை விமர்சிக்கக் கூடாது' என்று நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது ஜெயலலிதாவுக்கு! எனினும்... ஜெயலலிதா என்னென்ன அவதூறுகளைப் பரப்ப விரும்புகிறாரோ -என்னென்ன வசைமொழிகளை வாரி, வாரி இறைப்பாரோ -அதையெல்லாம், கொஞ்சமும் குறைவுறாமல்... ஜெயலலிதாவின் நண்பர்கள் செய்து வருகிறார்கள்.

இதைத்தான் சோ -வாசந்தி போன்றோரின் விஷம் கக்கும் எழுத்துக்கள் நிரூபிப்பவையாக இருக்கின்றன.

சின்ன குத்தூசி ஐயா இதோட, இந்தப் பதில நிறுத்திட்டாங்க. ஆனா பொளந்து கட்டிட்டாங்க பொளந்து. ஐயா, கோபப்பட்டா என்னவாகும்னு மேலே "சோ'வுக்கும் வாசந்தியம்மாவுக்கும் எழுதுன பதில்ல இருந்து தெரிஞ்சுருப்பீங்க.

ஏன் இத்தன கோபம்னா? நாங்க பட்ட கஷ்டம், கன்னட ராஜ்குமார காப்பாத்த நாங்க செக்கிழுத்தத நேர்ல பார்த்தவருங் கிறதுனாலதான் அத்தன ஆத்திரம் வந்திருக்கு அவருக்கு.

இந்த அம்மா செய்றதுக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடியே...

ரஜினி சார், "கோபால்... நானும் வர்றேன்... வர்றேன்'னு எங்கிட்ட சொன்னது மட்டுமில்லாம அண்ணன் கலைஞர்ட்டயும் சொல்லியிருக்காரு. கலைஞர், "கோபால் நீங்க எப்படியாவது ரஜினிட்ட பேசி சமாளிங்க''ன்னு பால என்பக்கம் தள்ளி விட்டுட் டாங்க.

அவருடைய வேகம், ஆர்வம் எல்லாத்துலயும் ஒரு நியாயம் இருந்துச்சு.

என்ன பண்றது? நாம அவர கூட்டிட்டுப் போய் அவரையும் மாட்டி விட்டுட்டா... எழவெடுத் தவனுக சும்மா விட்டுடு வானுகளா? நக்கீரனுடைய கதைய முடிச்சேபுடுவாய்ங்க.

ரொம்ப சாதுர்யமா... ரஜினி சார்ட்ட பேசி தடுக்க வேண்டியதாப் போச்சு!

என்பதுதான் நிஜம்! அடி நாக்குல நஞ்சும், நுனி நாக்குல அமிர்தமும் வச்சுப் பேசுறவங்க நெறைய பேர பாத்துருக்கேன். ஆனா... அடிநாக்குலயும் நுனி நாக்குலயும் விஷத்த வச்சுப் பேசுற ஒரு எடுவட்ட பய... சம்பந்தமே இல்லாம நம்மளச் சீண்டுறான்.

dd

ஸ்ரீமதி -கள்ளக்குறிச்சி விவகாரத்துல தம்பி பிரகாஷையும், தம்பி அஜித்தையும் கடத்திட்டுப் போயி உசுரோட எரிக்கப் பாத்தாய்ங்க கொலகாரப் பசங்க. அதுல இருந்து தப்பிச்சதே தம்புரான் புண்ணியம். இந்த எழவுல இடையில... ஒரு நாயி தஸ்ஸு, புஸ்ஸுன்னு இங்கிலீஷ் பேசிட்டுத் திரியுற ஒரு பொறம்போக்கு, ஜர்னலிஸ்ட்னு தன்ன பீத்திக்கும், அந்த மொகரக்கட்ட முடிச்சிஅவிக்கி நாயி. அவன் பேரு என்னமோ பி.... சாமின்னு சொன்னாய்ங்க.

ஏண்டா நாயே... பொதுப்பிரச்சினைக்கு என்னைக்காவது உன் பேனா கக்கியிருக்குமா... படவா ராஸ்கல். நாங்க இன்னைக்குவரை பாதிக்கப்பட்டவங்களுக்காக உசுரையே குடுக்கத் துணிஞ்சுதாண்டா இந்த வேலையிலேயே இருக்கோம்.

என்ன சொன்ன.... "அடிச்சத வீடியோ எடுத்தாங்களாவா?'

அடேய்... அடேய்... பரதேசி! இதவிட ஒரு காட்டுமிராண்டித்தனத் தாக்குதல்ல அடிவாங்குறவன், அடி வாங்கிக்கிட்டே எவனாவது படம் எடுப்பானாடா கூமுட்ட. நல்லாத்தான் வாயில வருது. ஏண்டா நாய்ப் பயலே... இதுமாதிரி நூத்துல ஒரு அடி உனக்கு விழுந்தா துண்டக் காணோம், துணியக் காணோம்னு வெளிநாட்டுக்கு தப்பிச்சு ஓடிப்போற பொசகெட்ட பன்னி... நீ சொல்ற, "எங்க தலையில அடி...? எங்க அடி விழுந்ததுன்னு?'

தனியா இருக்கிற பொம்பளப் புள்ளைட்ட எச்ச சுகத்துக்காக செருப்படி வாங்குனவன்லாம் பேசுனா விளங்கிரும். அடியேய்... உன்ன மாதிரி எல்லாரையும் நினைச்சுடாதடீய்...ய்...

ஏண்டா மொட்டப் படவா... நான் பெரிய பத்திரிகைக்காரன்னு பீத்திக்கிட்டுத் திரியுறியே, என் தம்பி பிரகாஷுக்கு கால்தூசு பெறுவியா நீ. எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.

ரொம்ப...ரொம்ப ஸாரிங்க... இப்படி இந்த பீ திங்கிற நரிப்பயல இதவிட திட்டலாம்... நான் கம்மியாத்தான் திட்டுறேன்.

"நான் பெரிய புடுங்கி... பொதுவாழ்க்கையில இருக்கேன். ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க... உலகத்துல எந்த மூலையில என்ன வேலை செய்யணும்னாலும் நான் செஞ்சு தர்றேன்'னு ஆச வார்த்த காட்டி, பொம்பளப் புள்ளைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவன்தானே நீ.

முதல்ல "ஃபேஸ்புக்'ல பிரெண்ட் புடிக்கிறது, அப்படியே பிரண்ட் புடுச்சு, தொறந்த வூட்ல நாய் புகுந்தது மாதிரி புகுந்து, என்ன உதவி செய்றேன்னு சொன்னானோ... அதச் செய்யாம, தனியா இருக்குறப்ப தொடக்கூடாத எடத்துல கை வச்சு ஆட்டயப் போட்டுடலாம்னு பாக்குறது. சுதாரிச்சிட்டாங்கன்னா, அவங்க மேலயே பழி போட்டு எழுதுற... இவனுக வாயிலயும் கையிலயும் புத்து முளைக்க.

மூத்த பத்திரிகையாளன்னு சொல்லிக்கிட்டு, புருஷன இழந்த ஒரு நடிகைகிட்ட அத்துமீறி நடந்த அந்த மேப்படி பொறம்போக்கு மேல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்து -அடுத்து கோர்ட்டுக்கும் போயிருச்சு. அத ரத்து செய்யணும்னு இந்த முடிச்சி அவிக்கி, பொம்பளப் பொறுக்கி... உயர்நீதிமன்றம் போயிருக்கு. நீதிமன்றம் அத தள்ளுபடியும் செஞ்சுருச்சு. அத நம்ம நக்கீரன்ல செய்தி பண்ணிட்டோம். அதுக்காக வெறிகொண்டு இப்ப பிராண்ட ஆரம்பிச்சுருச்சு.

ஏப்ப சாப்பைகள மிரட்டுறதுக்கு, "மோடி யோட பழக்கம், அவரோட பழக்கம்... இவரோட பழக்கம்னுட்டு அவங்கவங்க படத்தோட இவன் படத்தையும் ஒட்டி ஐசா...பைசா வேலய பண்ணுற இந்த எச்சக்கல நாயி நம்மளப் பத்தி ஏதோ பேசுச்சுôம். சு.சாமி மாதிரி இவன் பேரும் பி...சாமி.

"ஏண்டா... அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டயப் போட நெனைக்கிற உனக்கே இவ்வளவு இருந்தா...

dd

ஒரு பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டிருக்கிற புள்ளைய துள்ளத் துடிக்க கொன்னு 100 அடி ஆழத்துல புதைச்சத..., அதுல உள்ள உண்மைய உசுரப் பணயம் வச்சு தோண்டி எடுத்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கிட்டிருக்கோம்... எங்கள பாத்து இந்தப் பொம்பள பொறுக்கில்லாம் பேசுது.

சரி... அடுத்த விஷயத்துக்கு வர்றேன்...

சென்னையில புத்தகச் சந்தை நடக்குறப்ப... நம்ம நக்கீரன் ஸ்டால பூட்டிட்டாய்ங்க. அதையும் வாயப் பொத்திக்கிட்டு வேடிக்கைப் பாத்துச்சு அந்த நிர்வாகம். அப்ப, நம்ம தம்பி சுரேஷ்ட்ட "வேணும்னா உங்க புத்தக அரங்குக்கு பேர மாத்திருங்க... ஒண்ணும் பிச்சினை வராது'ன்னு சொல்லியிருக்காங்க. ஜி.எம். சுரேஷ் என்கிட்ட போன்ல சொன்னாரு.

நான் "இந்த ஐடியா யாரு குடுத்தது?'ன்னு கேட்டேன். தம்பியும் அவங்ககிட்ட கேட்டுட்டு... "அண்ணே... சைலேந்திரபாபு சார்தான் பேர மாத்தி வச்சுக்கலாம்னு சொன்னாராம். அதே பேருல இருந்தா பிரச்சினைன்னு சொன்னதால, இவங்களே ஒரு பேர மாத்தி நம்மகிட்ட சொல்லியிருக்காங்க''ன்னு சொன்னாரு.

ஏய்யா... ஒரு மேட்டரு... அது நக்கீரன் பத்திரிகையில வருது. அதுக்குத்தான் விடிய விடிய வண்டி வண்டியா ஆளப் போட்டு அடி... அடின்னு அடிச்சாய்ங்க. இப்ப எங்கேயோ நடக்குற புத்தகக் கடைக்கு இத்தன கெடுபுடி... போங்கய்யா...!

(புழுதி பறக்கும்)