oo

(100) பேரிரைச்சலுக்கு நடுவில் கூடு கட்டி வாழுற குருவி!

ந்தக் காலத்தில் ஜெயலலிதாவிடம் சிக்கி சின்னாபின்னமான சென்னாரெட்டி மற்றும் கோர்ட்டு வளாகத்தில் முட்டைக் கொத்துபுரோட்டாவான சைவ சுப்பிரமணியசாமி நாஸ்தியான முக்கியமான வரலாற்றை அப்படியே காணொளி போல நினைவூட்டியிருக்கிறீர்கள்.

Advertisment

வாசகர்களுக்கு மட்டுமின்றி சைவப்பூனை போல மாறிக்கொண்டிருக்கிற இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஜெயலலிதாவின் சவுக்கை எடுத்துக் கொடுப்பது போன்ற ஒரு நினைவூட்டு..! அச்சுப்பிசகாமல் அரசியல் வரலாற்றுப் பக்கங்களை அச்சுக்குள் கொண்டுவந்து புருவம் உயர்த்தும் ஒரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துவதில் நக்கீரனுக்கு நிகரான நேர்த்தியை நிகழ்ஊடகங்களில் காண்பதரிது. வாழ்த்துக்கள் அண்ணே.

போர்க்களத்தில் ஈட்டிகள் பறக்கும் பயணப்பாதை நெடுகிலும் எத்தனை கலிங்கத்துப் பரணி அரசியல் கதைகளை உங்களின் எழுதுகோல் சொல்லி முடிக்கத் துடிக்கின்றன... மதம் கொண்ட ஒரு காட்டு யானையோடு நேருக்கு நேராய் சமர்செய்யத் துணிந்து எழுந்து, பிடிபடா மல் பிடரியில் கடித்து, குருதியை உறிஞ்சி எதிர்கொண்ட ஒரு ஊடக அட்டை உயிரினத்தின் ஓய்வில்லா போர்க்களம், நக்கீரனுக்கான வாழ்க்கை அங்கீகாரமும் அடையாளமுமாக வாசகர்களுக்குத் தோன்றுகிறது.

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவு ஊட்ட பரந்தாமன் தேடிய அவஸ்தையினைக் காட்டிலும், நக்கீரனை கடுகு டப்பாவுக்குள்ளும் கழிப்பறைக் குள்ளும் ஸ்காட்லாந்து காவல்துறை தேடிக் களைப் படைந்த கதையும் புகைப்படமும் அருமையோ அருமை..!

Advertisment

-எழுத்தாளர் ஜெகாதா

பயங்ங்ங்கரமான மிகப்பெரிய தீவிரவாதிய அரெஸ்ட் பண்றதுக்கு வந்த மாதிரி குறைஞ்சது 150-க்கும் மேல போலீஸ்... எங்க இருந்து இவ்வ ளவு பேரு வந்தாங்கன்னே தெரியாது...

அவங்க நோக்கம் என் னன்னா... "என்ன கைது பண்ணி... நாலாபக்கமும் போலீஸ் பாதுகாப்போட ஒரு தீவிரவாதி மாதிரி என் கையில விலங்கு மாட்டி தெருவுல அழைச்சிட்டுப் போகணும்...'ங்கிற மாதிரியே நிக்கிறாய்ங்க. சுத்தி எங்க பாத்தாலும் போலீஸ் தலைகளாத்தான் தெரியுது. நடுவுல எங்க வீடு.

pp

"நம்ம வீட்டச் சுத்தி போலீஸ்காரய்ங்கள கொண்டு வந்து குவிச்சிருந்தாங்கப்பா''ன்னு என் தம்பி பையன் பெரியவரு என்கிட்ட ஆதங்கமாச் சொன்னாரு.

அப்ப நான் நெனைச்சது... "நாம இவ்வளவு கஷ்டத்த துணைவியாருக்கு குடுத்துட்டோமே... நமக்காக அவங்க ஏன் கஷ்டத்த அனுபவிக்கணும்?'ங் கிறதத்தான். என் தம்பி துணைவியாரும் எங்க வீட்டுலதான் இருக்காங்க. "வீட்டுல இருக்கவங்க என்ன பண்ணுனாங்க? இவ்வளவு கஷ்டப் பட்டுருக்காங்களே.... அவங்களுக்கு இவ்வளவு கஷ்டத்த குடுத்துருக்காய்ங்களே'ன்னு எனக் குள்ளயே நான் நொந்துபோய், ஒருநாள்... என் பிள்ளைங்க, என் துணைவியார் எல்லார்கிட்டயும், அந்த மோசமான 2012 ஜனவரி 7, 8-ந் தேதி.... இந்த ரெண்டு நாளும் ரொம்ப சிரமப்பட்டுட்டீங் கள்லன்னு வருத்தமா கேட்டேன்.

அதுக்குப் பதிலை, விருட்டுன்னு எந்திரிச்ச என் துணைவியார், சோபா இடுக்குல சொருகி வச்சிருந்த 30-07-2022 தேதியிட்ட தினகரன் ஆன்மீக மலர எடுத்து, "6-ஆம் பக்கத்துல ஒரு கதை வந்திருக்கு... அதை படிக்கிறேன் கேளுங்கன்''னாங்க. அதன் தலைப்பு: "அமைதியைத் தேடி அடைய முடியுமா?'. அதன் ஒரு பகுதிய எனக்கு வாசிச்சுக் காமிச்சாங்க எனது துணைவியார்.

அந்தப் பகுதி....

ஒரு மன்னன் இருந்தான். சுவாரஸ்யமான புதிய விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் படைத்த வன். கலைஞர்களை ஆதரிப்பவன். அதற்காகவே பல போட்டிகளை அவ்வப்போது நடத்துபவன்.

ஒருமுறை அவன் ஒரு வித்தியாசமான தலைப்பை அறிவித்தான். தலைப்பு: அமைதி. இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியைப் பிரதிப-க்கும் வண்ணம் தத்ரூப மான பல ஓவியங்களை வரைந்து, அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். சில ஓவியங்கள் நன்றாக இருந்தன. ஆனால், ஓவியங்களுக்கான அர்த்தம் புரியவில்லை.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாகக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது.

அது மட்டுமா... இடியுடன் மழை வேறு பொழிந்துகொண்டிருந்தது.

மன்னன் அந்த ஓவியத்தை சற்று நேரம் பார்த்தான். அந்த ஓவியரைக் கூப்பிட் டான். "நீங்கள் தலைப்பை தவறாகப் புரிந்துகொண்டு ஓவியம் வரைந்து கொண்டு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது'' என்று கேட்டான்.

"எந்த அடிப்படையில் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?'' என்று ஓவியர் கேட்டார்.

"கொட்டும் அருவி சிதறிக்கொண்டிருக்கிறது. ஒருவன் அருவியின் அருகில் நின்றுகொண்டி ருக்கிறான். அவன் காது செவிடாகும்படி பேரிரைச்சல்தான் கேட்கும். அப்படியானால்... இந்த ஓவியத்திற்கு சத்தம் என்று பெயரிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அமைதி என்று இவ்வளவு பெரிய இரைச்சலை ஓவியமாக வரைந்திருக்கிறீர்கள். இது அமைதியே அல்ல'' என்று மன்னன் சிரித்துக்கொண்டே கூறினார்.

"மன்னா... நீங்கள் முழுமையாக ஓவியத்தைப் பார்க்கவில்லை என்று தெரிகிறது'' என்று ஓவியர் சொன்னவுடன்...

மறுபடியும் மன்னர் முழுமை யாக ஆராய்ந்தான். அப்பொழுது தான் அவர் கவனித்தார். நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. "ஓவியரே, மிக்க மகிழ்ச்சி. இந்த ஓவியம் தத்ரூபமாகப் பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி... இடியுடன் கூடிய மழை... கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை... ஆனால், இதில் அமைதி எங்கே இருக்கிறது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை?''

இப்பொழுது ஓவியர் நிதானமாகச் சொன்னார்.

"மன்னா! சப்தமும், பிரச்சினையும், போராட் டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதியல்ல. இவையெல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.

அமைதி என்பது வெளியிலிருந்து வருவதல்ல. அது உள்ளே இருப்பது. அந்த அமைதியை உள்ளேயே கண்டுகொண்டவர்களுக்கு வெளியில் இருக்கக் கூடிய எந்தச் சத்தமும் பாதிப்பது இல்லை. அப்ப டிப் பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்தப் பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.''

இந்த அருமையான விளக்கத்தைக் கேட்ட வுடன் மன்னரின் முகம் மலர்ந்தது. "உண்மை... உண்மை... அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் இந்த ஓவியம் கூறுகிறது' என அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தார்.

அனைத்து வசதிகளும் அமையப்பெற்று எந்தவித பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில் வாழ் வது அமைதியல்ல... அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, "நிச்சயம் ஒருநாள் விடியும்' என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே! அவர்களிடம் இருப்பதுதான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், "எனக்கு நேரும் மான, அவமானங் களை விட நான் எட்டவேண்டிய இலக்கே எனக் குப் பெரிது' என்று கூறி எதையும் பொருட்படுத் தாது போய்க்கொண்டிருக்கிறார்களே... அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் உண்மையான அமைதி ... என்று முடிந்தது அந்தக் கதை.

அடடே... இந்தக் கதையை ஏன் படிச்சுக் காண்பிச்சாங்கன்னு யோசிச்சேன். நம்ம வாழ்க்கையும் அந்த ஓவியர் எழுதிய ஓவியத்தில் வரும் பேரிரைச்சலுக்கு நடுவில் கூடு கட்டி வாழுற குருவி வாழ்க்கைதான்.

ஆக, என்னதான் வழக்கு, ரெய்டு, அடிதடி, பிரச்சினை, முட்டை ஆசிட் வீச்சு, போலீஸுக்குப் பயந்து இரவு, பகல்னு பாக்காம புள்ளைகளத் தூக்கிட்டு, வேற... வேற... வீட்டுல பதுங்கியிருக் கிறது, அங்க கிடைக்கிற அவமானங்கள பொறுத்துக் கிட்டு... மறுபடியும் வீடு... சொந்தக்காரங்ககிட்ட ஏச்சு, அவங்களால தொந்தரவு... இத்தனைக்கும் உடல்நிலையையும் கவனிக்காம எல்லாருக்கும் ஆக்கிப்போட்டு அவங்கள சந்தோஷமா வச்சுக்கிறது... இந்தப் போர்க்களத்துல அவருக்கு உயிருக்கு உயிரான அப்பாவ அந்த அரக்கியிடம் காவு கொடுத்தது, யப்பப்பா... கஷ்டம்னா கஷ்டம்... சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம்.

poorkalam

இத்தன கஷ்டத்தயும் அனுபவிச்சும், அத ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டு நான் கேட்ட கேள்விக்கு, ஏதோ ஒரு புத்தகத்துல வந்த கதை மூலமா, தன் பதிலைச் சொல்வது... தலை வணங்குறேன்.

இது என் வீட்டுல மட்டும் இல்ல... என்னோட பணியாற்றும் தம்பிகள் குடும்பமும் இதே அவஸ்தைப் பட்டுத்தான் உங்க முன்னாடி கம்பீரமா நிக்கிறோம். அப்படி நிக்கிறதுக்கு உறுதுணையாய் இருந்த தம்பி கள் குடும்பத்தார், அனைத்து நண்பர்கள், வாசகர் கள் அனைவருக்கும் நன்றியோ... நன்றி!

போலீஸ்காரய்ங்க ஸர்ச் பண்ற படங்கள நீங்க பாத்தீங்கன்னா தெரியும். என்னோட அறை மாடியில இருக்கு. அதுல மேல ஒரு கப்போர்டு. அதுல துணிமணிக இருக்கும் பாருங்க... அதத் தொற... இதத் தொற...ன்னு எல்லாத்தையும் தொறந்து, அதேமாதிரி பெட் எல்லாத்தையும் தூக்கிப் பாக்குறது, தரையில பூரா அடிச்சி... அடிச்சி... பாத்துருக்கானுவோ.

அதுக்கப்புறம்... இந்தப் பக்கம் நான் பயன் படுத்துற பாத்ரூம்ல எவ்வளவு பேரு நிக்கிறாங்கன்னு எண்ணிப் பாருங்க...? ஒரு பாத்ரூம்ல எவ்வளவு இடம் இருக்கும்? ஒளியுற அளவுக்கு அதுக்குள்ள இடம் இருக்குமா? அதப் பாக்கும்போதே அந்தக் கொடும ஒங்களுக்குத் தெரியும். பின்னாடி முடி வெட்டுற அறை. அதுல இருக்குற கண்ணாடிய கழட்டி... ஏன் கேக்குறீங்க...? அதுக்குப் பின்னால கதவுகண்டு இருக்குமான்னு பாக்குறாய்ங்க. இன்ஸ். ராஜேந்திரன் பேரு எழுதுன பேட்ஜ் கூட இல்லாம அவரு பண்ணுன காவாலித்தனம்....!

வீட்டுல மாடியிலதான் என் ரூம். அத ஒட்டு னாப்ல கொஞ்ச ஏரியாவுல சின்ன தோட்டம் இருக்கு. இந்தப் படுபாவி போலீஸு அதே போர் ஸோட... மாடித் தோட்டத்துக்குள்ள போயி பண்ணுன அட்டூழியம் இருக்கே...! ஆத்தாடி... ஆத்தாடி...!

(புழுதி பறக்கும்)