பேட்டரி வாகன ஊழல்! -வில்லங்க குற்றச்சாட்டில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்!

ss

"கவர்மெண்ட் எதுக்கு டெண்டர் விடுது? அரசாங்கத்தோட செலவைக் குறைக்கணும்னுதான? டெண்டர்ல ஒருத்தர் 100 ரூபாய்க்கு கேட்கிறார். இன்னொருத்தர் 99 ரூபாய்க்கு கேட்கிறார். மற்றொருவர் 97 ரூபாய்க்கு கேட்கிறார். அப்படின்னா 97 ரூபாய்க்கு கேட்கிறவரத்தான கவர்மெண்ட் ஓகே பண்ணனும்? விருதுநகர் மாவட்டத்துல 450 கிராமப்புற ஊராட்சிகள்ல குப்பையை தரம் பிரித்து சேகரிக்க ரூ.15.1 கோடில 604 பேட்டரி வாகனங்கள் வாங்கிருக்காங்க. அந்த E#Cart கொள்முதல்ல ரூ.45 லட்சத்துக்கு ஊழல் நடந்திருக்கு. விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தண்டபாணி, தஉந இண்டஸ்ட்ரீஸ்ங்கிற நிறுவனத்துகிட்ட லஞ்சம் வாங்கிட்டு, விதிமீறலா அந்த டெண்டரை ஓ.கே.'' பண்ணிருக்காரு.” எனக் குற்றம்சாட்டிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணைத்தலைவர் கண்ணன், சில கேள்விகளை முன்வைத்து நடந்ததை விவரித்தார்.

ss

"ஏங்ங இணையதளம் மூலம் நடந்த ஒப்பந்த

"ஏங்ங இணையதளம் மூலம் நடந்த ஒப்பந்தம் இது. 1-வது ஒப்பந்த அழைப்பில் தகுதிபெறாத தஉந இண்டஸ்ட்ரீஸ், 3-வது ஒப்பந்த அழைப்பில் தகுதி பெற்றது எப்படி? தஉந இண்டஸ்ட்ரீஸுக்கு ஒப்பந்தம் வழங்குவதற் காகவே, முதல் இரண்டு ஒப்பந்த அழைப்புகளை தண்டபாணி ரத்து செய்துள்ளார். 2-வது ஒப்பந்த அழைப்பில் க1 ஆக வந்த ப்ரீவில் சொல்யூசன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.14,79,79,396-க்கு கோரிய ஒப்பந்தத்துக்கு வழங் காமல், அதே 2-வது அழைப்பில் க2 ஆக வந்த தஉந இண்டஸ் ட்ரீஸுக்கு ஒப்பந்தத்தை அளிக்கவேண்டும் என்பதற்காக, 2-வது ஒப்பந்தப்புள்ளி அழைப் பையே ரத்து செய்துவிட்டு, 3-வது ஒப்பந்த அழைப்பில் தஉந இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.15,25,10,000-க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

1-வது ஒப்பந்த அழைப்பில் தகுதிபெற்ற ஒரே நிறுவனமான இ-ராய்ஸ், அடுத்த இரண்டு ஒப்பந்த அழைப்பு களிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? 2-வது ஒப்பந்த அழைப்பில் தகுதிபெற்று க1 ஆக வந்த ப்ரீவில் சொல்யூசன்ஸ் நிறுவனம், 3-வது அழைப்பில் கலந்துகொள்ளாதது ஏன்? இ-ராய்ஸ் மற்றும் ப்ரீவில் சொல்யூசன்ஸ் நிறுவனங்களுடன் தஉந இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சிண்டிகேட் அமைத்து டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதா? டெண்டர் விதிமுறைகளின்படி இ-கார் விற்பனை மற்றும் உற்பத்தியில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உள்ள நிறுவனமாக இருக்கவேண்டும். இந்தத் தகுதி எதுவும் இல்லாத தஉந இண்டஸ்ட்ரீஸுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?

திட்ட இயக்குநர் தண்டபாணி உள்ளிட்ட ஒப்பந்தத்தை நடத்திய அரசு அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய ரூ.45 லட்சத்தை ஊழல் செய்து அபகரித்தவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர் பொதுவெளியில் தண்டபாணியை ‘மாப்பிள்ளை’ என்றுதான் அழைப்பார். அந்த உறவுமுறையில் தண்டபாணி தப்பிவிடக் கூடாது''” என்றார் ஆதங்கத்துடன்.

"2023ல் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தார் திட்ட இயக்குநராக இருந்த தண்டபாணி. அப்போது நிழல் ஆட்சியாளராகவே நடந்துகொண்டார்’என ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளரிடம் புகார் அளித்த நிலையில்தான், விருதுநகர் மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்தார். விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தண்டபாணியைத் தொடர்புகொண் டோம்.

“"என்னைப் பத்தி இதுமாதிரி புகார் அளிக் கிறவங்க எதை யாவது சொல் லிட்டுத்தான் இருப்பாங்க. டெண்டரை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் உள்ளவர் மாவட்ட ஆட்சியர். டெண்டரில் யாருக்கு க1 வருது? யாரு குறைந்த கொட்டேசன் கொடுத்திருக்காங்க? இதை எல்லாம் ஃபாலோ பண்ணித்தான் ஒர்க் ஆர்டர் கொடுத்திருக்கு. இதுசம்பந்தமா நெறய பிரச்சனைகள் நடந்துட்டு இருக்கு. கோர்ட்லகூட ப்ரிவில் சொல்யூசன்ஸ் நிறுவனம் கேஸ் ஃபைல் பண்ணிருக்காங்க. முறைப்படி ஏங்ங போர்டல்ல ஃபாலோ பண்ணிருக்கு. இதுல முறைகேட்டுக்கு எந்த ஆதாரமும் இல்ல. நான் திட்ட இயக்குநர் மட்டுமே. சேர்மனா இருக்கிறவர் கலெக்டர் சார். முறைகேடு நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல. டீடெய்லா யாரும் என்ன வேணும்னாலும் சொல்லலாம். இது ஆன்லைன் டெண்டர். ஏங்ங போர்டல்ல இருக்கு. யாருன்னாலும் பார்த்துக்கலாம்''’என்று விவகாரங்களுக்கு உள்ளே போகாமல், மேலோட்டமாகப் பதிலளித்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனைத் தொடர்புகொண்டு பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குறிப்பிடப்படும் அனைத்து விபரங்களையும் வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி விளக்கம் கேட்டோம். செய்தி அச்சிலேறும் வரையிலும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. அவர் விளக்கமளிக்க முன்வரும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையை அம்பலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

nkn090425
இதையும் படியுங்கள்
Subscribe