Advertisment

திவாலாகும் விருதுநகர் நகராட்சி! -சேர்மன் மீது ஊழல் குற்றச்சாட்டு!

vv

கராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு, விருதுநகர் நகராட்சியே உதாரணம்.

Advertisment

விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உத்தரவின் பேரில், 5-வது வார்டில் வீட்டு வரி வசூல் செய்வதற்குப் போனார், அந்த பில் கலெக்டர். வரி செலுத்துவதில் பில் கலெக்டருடன் ஏதோ பிரச்சனை ஏற்பட, தன்னுடைய வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆஷாவைத் தொடர்புகொள்கிறார் அந்தவீட்டு உரிமையாளர். அங்கு வந்த ஆஷா, "“நீங்க யாரைக் கேட்டு என் வார்டுக்குள் வந்தீங்க? என்னைக் கேட்காமல் இங்கு வரக்கூடாது''’என்று குரலை உயர்த்த, அந்த பில்கலெக்டர், "கமிஷனர் சொல்லித்தான் வந்திருக்கிறேன். வசூல் பண்ண வேண்டியது எங்க கடமை. நீங்க சொல்லுறத நான் கேட்க வேண்டியதில்லை'' ’என்றி ருக்கிறார். அதனால் வெகுண்ட ஆஷா, நகர்மன்றத் தலைவர் மாதவனைத் தொடர்புகொள்ள... "அந்த பில் கலெக்டர் மீது புகார் தர ஏற்பாடு செய்யுங்கள், நடவடிக்கை எடுப் போம்''’என்று உத்தர வாதம் தருகிறார்.

Advertisment

virudhu

வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் பில்கலெக்டரை

கராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு, விருதுநகர் நகராட்சியே உதாரணம்.

Advertisment

விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உத்தரவின் பேரில், 5-வது வார்டில் வீட்டு வரி வசூல் செய்வதற்குப் போனார், அந்த பில் கலெக்டர். வரி செலுத்துவதில் பில் கலெக்டருடன் ஏதோ பிரச்சனை ஏற்பட, தன்னுடைய வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆஷாவைத் தொடர்புகொள்கிறார் அந்தவீட்டு உரிமையாளர். அங்கு வந்த ஆஷா, "“நீங்க யாரைக் கேட்டு என் வார்டுக்குள் வந்தீங்க? என்னைக் கேட்காமல் இங்கு வரக்கூடாது''’என்று குரலை உயர்த்த, அந்த பில்கலெக்டர், "கமிஷனர் சொல்லித்தான் வந்திருக்கிறேன். வசூல் பண்ண வேண்டியது எங்க கடமை. நீங்க சொல்லுறத நான் கேட்க வேண்டியதில்லை'' ’என்றி ருக்கிறார். அதனால் வெகுண்ட ஆஷா, நகர்மன்றத் தலைவர் மாதவனைத் தொடர்புகொள்ள... "அந்த பில் கலெக்டர் மீது புகார் தர ஏற்பாடு செய்யுங்கள், நடவடிக்கை எடுப் போம்''’என்று உத்தர வாதம் தருகிறார்.

Advertisment

virudhu

வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் பில்கலெக்டரைப் பார்த்து “"உன்னை வெட்டிப் புடுவேன்; குத்திப்புடுவேன்...''’என்று மிரட்ட, பில் கலெக்டர் கிளம்பினார். அன்றிரவே நகராட்சி ஊழியர்கள் ஒன்றுகூடி, "இனி நாங்க வரி வசூலுக்கு போகமாட்டோம்...''’என்று கூற, சிறிய அளவில் பஞ்சாயத்து நடத்தி “இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்ருங்க...''’என்று முடித்து வைத்துள்ளனர்.

அடுத்து நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் சேர்மன் மாதவன், "மக்களிடம் பேரம் நடத்துவதாக நகராட்சி ஊழியர்கள் மீது நிறைய புகார் வருகிறது. சொத்துவரி, பெயர் மாற்றம், புதிய சொத்துவரி போடுவது, பிளான் அப்ரூவல் போன்ற நடவடிக்கைகள், இனிமேல் நகர்மன்ற உறுப்பினர் களின் கண்காணிப்பில்தான் நடக்கவேண்டும். உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நகராட்சி ஊழியர்கள் எதுவும் பண்ணக்கூடாது. இதை மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்''’என்று அஜென்டா நம்பர் போடாமல், ஆணையாளர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலமாக அறிவித்தார்.

vv

நகராட்சி பில் கலெக்டர்களுக்கும் சேர்மன் மாதவன், "நீங்க அதிகமாக லஞ்சம் வாங்குவதாக எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு கூட்ட அரங்கில் அனைவரும் ஆஜராகவேண்டும்'’என்று உத்தரவிட, சங்க கூட்டத்தில் ஆலோசித்த பில் கலெக்டர்கள் ‘"கமிஷனர் அழைத்தால் மட்டுமே வருவோம். சேர்மனின் உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது'’ என்று புறக்கணித்து விட்டனர்.

நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்களிடையே வெடித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு காரணமே, மக்களிடம் பெறக்கூடிய லஞ்சத்தில் நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் பங்கு போய்ச் சேர வேண்டும் என்பதுதான் எனச் சிரிக்கிறார்கள், விருதுநகர்வாசிகள்.

இந்நிலையில், "கர்மவீரர் காமராஜர் போன்றவர்கள் தலைவராக இருந்து நிர்வகித்த விருதுநகர் நகராட்சி திவாலாகிறது. ஆதவன் ஏஜன்ஸி என்ற பெயரில் சேர்மன் மாதவனே டெண்டர் எடுத்திருக்கிறார். கொசு மருந்து அடிப்பதில் ஊழல் நடக்கிறது. முக்கிய டெண்டர்களை அவருடைய உறவினர்களே எடுத்துள்ளனர். விருதுபட்டியை விருதுநகராக்கிய பெருமைக்குரிய முன்னோர்கள் பலரும் ஊர் நலன் மீதான அக்கறையில் வாரி வழங்கிய வள்ளல்களாக இருந்தனர். இன்றோ, ஊரே கொள்ளை போகிறது'’என போஸ்டர் ஒட்டியும், வாட்ஸ்-ஆப்பில் கடிதங்களைப் பகிர்ந்தும் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘5-வது வார்டு கவுன்சிலருக்கு சேர்மனின் சப்போர்ட் எப்போதும் உண்டு’ எனக் கூறப்படும் நிலையில் ஆஷாவைத் தொடர்பு கொண்டோம். "அந்த பில் கலெக்டர்கிட்ட என் வார்டுக்குள் என்னைக் கேட்காமல் ஏன் வந்தீங்கன்னு நான் கேட்கல. அவருதான் நீங்க இங்கே வரவேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னார். நகராட்சிக்கு வரி வசூல் பண்ணுவதில் நகர்மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் இருக்கணும். மக்களைத் தொந்தரவு செய்யாமல் வரி வசூல் பண்ணனும். மக்கள்கிட்ட யாரும் தரக்குறைவா பேசக்கூடாது. இதைத்தான் நாங்க வலியுறுத்துறோம்''’என்றார்.

விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் நம்மிடம், "வரி வசூல் பண்ணுறவங்க பேரம் பேசுறாங்கன்னு புகார் வரக்கூடாதுன்னு சொல்லுறோம். இதை அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர் கண்காணிக்கணும்னு சொல்லுறோம். கவுன்சிலருக்குத் தான் நான் லெட்டர் கொடுத்தேன். அதிகாரிக்கு கொடுக்கல. டெண்டர் யார் வேணும்னாலும் எடுக்கலாம்ல. முறைப்படி டெண்டர் விட்டு, அந்த டெண்டர் யாருக்கு இருக்கோ அவங்களுக்கு கொடுக்கிறோம். யாரோ போஸ்டர்ல போட்டது எல்லாம் உண்மை ஆயிருமா? கடந்த 20 வருஷமா நகராட்சிய சுரண்டிட்டு இருந்தவங்க எல்லாரயும் வெளியேத்தியாச்சு. அந்த கோபத்துல எனக்கு எதிரா இதெல்லாம் பண்ணுறாங்க. எதிரிங்க என் வளர்ச்சியப் பார்த்து பொறாமைப்படறாங்க, மிரட்டுறாங்க. எனக்கு எதிரா பெரிய சதியே நடந்துட்டு இருக்கு''’என்றார் பீதியுடன்.

விருதுநகர் நகர்மன்ற ஆணையாளர் ஸ்டான்லி பாபுவிடம் பேசினோம்.

"பொதுமக்கள் யாரும் நகராட்சி ஊழியர்கள் மீது எந்தப் புகாரும் தரல. என்கிட்ட கேட்காம, அவசரப்பட்டு சேர்மன் லெட்டர் வச்சிட்டாரு. இந்தமாதிரி லெட்டர் வைக்கக்கூடாதுன்னு சொன்னேன். கம்முன்னு இருந்தாரு. எதுவும் பேசல. இளங்கன்று பயம் அறியாதுன்னு சொல்லுவாங்க. முதல் முறையா நகர்மன்ற உறுப்பினர் ஆயிருக்காரு. வந்ததும் சேர்மன் ஆயிட்டாரு. இன்னும் அனுபவம் வரணும். என்கிட்ட கலந்து பேசிட்டுக்கூட பண்ணியிருக்கலாம். விருதுநகர் நகராட்சில பெரிய பிரச்சனை ஒண்ணும் இல்ல. எல்லாரும் வரி கட்டிட்டுதான் இருக்காங்க. அரியர்தான் நிறைய இருக்கு. டெண்டர் முறைகேடுக்கு வாய்ப்பு இல்ல. ஃபைல் எல்லாம் கரெக்டாதான் இருக்கு. ஆமா, சொந்தக்காரங்களுக்கு டெண்டர் கொடுக்கிறாரு. ஒரு சிலத அவரே பண்ணிக்கிறாரு. அதைச் செய்ங்க, இதைச் செய்ங்கன்னு மேல இருந்து சொல்லுறாங்க. தெரிஞ்சவங்களுக்கும் பண்ணுறாரு''’என்று பட்டும் படாமல் பேசினார்.

நிலைமை முன்புபோல் இல்லை. மக்கள் விழிப்புடன் உள்ளனர். லஞ்சமோ, ஊழலோ உடனுக்குடன் சந்தி சிரித்துவிடுகிறது.

nkn150323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe