ரு நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டு, ஆச்சர்யப்படுத்தி, அடுத்த சில ஆண்டுகளிலேயே அதலபாதாளத்துக்கு சரிவடைவது, பைஜூஸ் நிறுவனத்துக்கு பொருந்தும். ஆன்லைன் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு 2011ஆம் ஆண்டில் பெங்களூருவில் பைஜூ ரவீந்திரன் என்பவ ரால் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்விக்கான பைஜூஸ் நிறுவனம், 22 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உச்சத்தை எட்டிப்பிடித்து, அடுத்த சில ஆண்டுகளில் அன்னியச் செலவாணி மோசடி, வங்கி மோசடி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தகராறு என பல்வேறு விவகாரங்களால் அதன் முதலீட் டாளர்கள், பைஜூ நிறுவனரையே நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி குரலெழுப்ப வைத்திருக்கிறது!

Advertisment

ff

2015ஆம் ஆண்டில் தீவிரமாக ஆன்லைன் கல்வி முறையில் இறங்கிய பைஜூஸ் நிறுவனத்துக்கு, கொரோனா பொதுமுடக்கம் ஜாக்பாட் போல அமைந்தது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை இழந்து நிறுவனத்தை மூடிய மோசமான சூழலில், அந்த பொதுமுடக்கத்தால் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, ஆன்ட்ராய்டு போன் மூலமாக ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்பட்ட சூழலில், பைஜூஸ் நிறுவனத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கும் பைஜூஸ் ஆன்லைனில் பாடம் நடத்தியது. அந்த நிறுவனத்தில் ஆன்லைன் கல்வி கற்பதற்காக பலரும் குவிந்த நிலையில், இந்தியா முழுவதும் நானூறுக் கும் மேற்பட்ட ஆஃப்லைன் கல்வி கற்கும் மையங்களையும் தொடங்கியது. இதன் காரண மாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு 22 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு உயர்ந்தது. போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் பைஜூ ரவீந்திரன் இடம்பிடித்தார். மிகக்குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர், அதே வேகத்தில் சரிவடைந்த சம்பவமும் நடந்தது.

திங்க் & லேர்ன் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஆன்லைன் கல்வி அப்ளிகேஷனான பைஜூஸை விளம்பரப்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டினார் அதன் நிறுவன ரான பைஜூ ரவீந்திரன். தங்கள் நிறுவனத்தை இந்தியா முழுக்க பிரபலப்படுத்த விளம்பரத் தூதராக ஷாருக்கானை நியமித்தார்கள். அடுத்ததாக உலகளவில் விளம்பரப் படுத்த ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கள் நடந்துவந்த தருணத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான மெஸ்ஸி யை விளம்பரத் தூதராக அறிவித்தார். அடுத்த அதிரடி யாக, 2019ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கான ஸ்பான்ஸர் ஷிப்பை ஓப்போ நிறுவனத் திடமிருந்து பைஜூஸ் வாங்கியது. பி.சி.சி.ஐ.யுடன் முதல் டீலிங்கானது, செப்டம்பர் 2019 முதல் 2022 மார்ச் வரையிலான 18 மாதங்களுக்கு, சுமார் 55 மில்லியன் டாலர்கள் என்ற கணக்கில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.439 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், 2023 நவம்பர் வரை ஒப்பந்தத்தை நீட்டித்தது. இப்படி தொடர்ச்சியாக விளம்பரங்களுக்காக அகலக்கால் வைத்ததே அந்நிறுவனத்துக்கு ஆப்பாக அமைந்தது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 19 மில்லியன் டாலர் வரை பைஜூஸ் நிறுவனம் செலுத்தத் தவறியதற்காக பைஜூவுக்கு எதிராகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த கிரிக்கெட் வாரியம், அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரியது.

Advertisment

cc

இன்னொருபுறம் அந்த நிறுவனம் அந்நியச்செலாவணி விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. அந்நிறுவனத்துக்கு கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் குவிந்திருப்பது தெரியவந்தது. அதேபோல பனிரெண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை பல கோடிகளைச் செலவழித்து விலைக்கு வாங்கி நஷ்டப்பட்டிருக்கிறது. இந்த வரவு செலவுக்கணக்குகள் எதுவுமே சரிவர இல்லாததால் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. கொரோனாவுக்குப்பின் ஆன்லைன் கல்வியில் தேக்கம் ஏற்பட, நிறுவனத்தின் வருமானம் சரியத்தொடங்கியது. அதன் ஆப்லைஃன் சென்டர்கள் நூற்றுக்கணக்கில் மூடப்பட்டன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ccஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்நிறுவனத்தை நம்பி பெருமளவு முதலீடு செய்த நெதர்லாந்து முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் என்வி, பைஜூஸின் செயல்பாட்டின்மீது குற்றச்சாட்டு வைத்ததால் மற்ற முதலீட்டாளர்களும் வெளியேறினார்கள். இதனால் தடாலடியான சரிவைச் சந்தித்தது பைஜூஸ்! கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் சி.இ.ஓ. அர்ஜூன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முடியாதபடி லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது!

இவையனைத்துக்கும் பைஜூ ரவீந்திரனின் நிர்வாகக் குளறுபடியே காரணமென்று முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினார்கள். அந்நிறுவனத்தின் பங்குகளில் பைஜூ ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 26.3 சதவீத பங்குகளும், பிற பங்குதாரர்களிடம் சுமார் 32 சதவீத பங்குகளும் உள்ளன. இந்நிலையில் பங்குதாரர்களின் நெருக்கடியால் தனது நிறுவனத்தின் பொறுப்பை கைமாற்றிவிட்டு விலகவேண்டிய சூழலை நோக்கி பைஜூ ரவீந்திரன் தள்ளப்பட்டுள்ளார். இன்னொருபக்கம் அந்நிறுவனத்தை திவாலானதாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் விளம்பரம், பிரம்மாண்டத்தால் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்தை எட்டி, தடாலடி வீழ்ச்சியை சந்தித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாடம் எடுத்துள்ளது ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ்!