Advertisment

வேங்கைவயல் விவகாரம்! -விசாரணைக்கு இடையூறாய் அரசியல்வாதிகள்

dd

புதுக்கோட்டை மாவட்ட வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதீய வன்மத்தின் அதிர்வுகள், இப்போதுவரை இன்னும் அடங்கவில்லை. தொடக்கத்தில் தனிப்படை போலிசார் விசாரணை செய்து வந்தநிலையில், சி.பி. சி.ஐ.டி.யின் விசாரணைக்கு இது மாற்றப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி போலிசார் வேங்கைவயல் மற்றும் அதன் அருகில் உள்ள, இறையூர், முத்துக்காடு, காவேரி நகர் என பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 147 பேரிடம் விசாரணை செய்துள்ளனர்.

Advertisment

vv

மனிதக

புதுக்கோட்டை மாவட்ட வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதீய வன்மத்தின் அதிர்வுகள், இப்போதுவரை இன்னும் அடங்கவில்லை. தொடக்கத்தில் தனிப்படை போலிசார் விசாரணை செய்து வந்தநிலையில், சி.பி. சி.ஐ.டி.யின் விசாரணைக்கு இது மாற்றப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி போலிசார் வேங்கைவயல் மற்றும் அதன் அருகில் உள்ள, இறையூர், முத்துக்காடு, காவேரி நகர் என பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 147 பேரிடம் விசாரணை செய்துள்ளனர்.

Advertisment

vv

மனிதக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை சோதனைக்கு அனுப்பியதில் 2 ஆண்கள், ஒரு பெண்ணின் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் யார் என்பதைக் கண்டறிய 4 கிராமங்களையும் சேர்ந்த 119 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். முதல்கட்டமாக வேங்கைவயலைச் சேர்ந்த 9 பேர், மற்ற கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் என 11 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்களில் 3 பேர் மட்டுமே ஆஜராகி மாதிரிகளைக் கொடுத்தனர். ஆஜராகாத 8 பேர், அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர்.

அடுத்தகட்டமாக இறையூரைச் சேர்ந்த 8 பேர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 10 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கான பரிசோதனை மாதிரி சேகரிப்பு 8 ஆம் தேதி நடந்தது. இதில் 10 பேரும் ஆஜராகி மாதிரிகளைக் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வேங்கைவயல் பிரச்சனைக்காக அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் குழு, 6 ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்திற்கு வந்து, தண்ணீர்த் தொட்டியை ஆய்வு செய்த பிறகு, பத்திரிகையாளர் களிடம் நீதிபதி பேசும்போது.. ’"நல்ல மனிதர்கள் இந்த செயலைச் செய்யமாட்டார்கள். விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். இது அறிவியல்பூர்வமாக அணுகவேண்டிய வழக்கு என்பதால் அந்த முறையில் விசாரணை செல்கிறது. மேலும் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் 25 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதி குற்றப்பத்திரிக்கை தயாரித்த பிறகு வழங்கப்படும்''’என்றார்.

மற்றொரு பக்கம் "விசாரணையை முடக்கும் விதமாக அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிக மாக உள்ளதால் விசாரணைக்கு இடையூறு ஏற் படும் நிலை உள்ளது. முழுமையாக விசாரணைக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் மட்டுமே சரியான குற்றவாளியை விரைவில் கைது செய்ய முடியும்' என்கின்றனர் விசாரணைக் குழுவில் உள்ள சிலர்.

அந்தக் குடிநீர்த்தொட்டி பரவலாக நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டேயிருக்கிறது.

Advertisment

nkn130523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe