ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகளுடன், அணிவகுப்புகளுடன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தியாகிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுகளுடன் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், ஆனால், இந்த ஆண்டு 72-வது குடியரசு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் "கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை' என்று கூறியிருந்தது. ஆனால், அதற்குமுன்பே ஜனவரி 22-ஆம் தேதி அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், "ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழாவுக்கு தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தனர், "ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27-ஆம் தேதி திறப்புவிழாவுக்கு அனைவரும் வருக' என தமிழக அரசு விளம்பரத்தில் அறிவித்திருந்தது,
தலைநகர் டெல்லியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் குடியரசு விழாவுக்கு கொரோனா தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி, பொதுமக்களுக்கு தடை விதித்த அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதா நினைவிடத்திற்கு மட்டும் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காமல், பல ஊர்களிலிருந்தும் அமைச்சர்கள் மூலம் பேருந்து உள்ளிட்ட
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகளுடன், அணிவகுப்புகளுடன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தியாகிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுகளுடன் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், ஆனால், இந்த ஆண்டு 72-வது குடியரசு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் "கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை' என்று கூறியிருந்தது. ஆனால், அதற்குமுன்பே ஜனவரி 22-ஆம் தேதி அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், "ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழாவுக்கு தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தனர், "ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27-ஆம் தேதி திறப்புவிழாவுக்கு அனைவரும் வருக' என தமிழக அரசு விளம்பரத்தில் அறிவித்திருந்தது,
தலைநகர் டெல்லியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் குடியரசு விழாவுக்கு கொரோனா தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி, பொதுமக்களுக்கு தடை விதித்த அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதா நினைவிடத்திற்கு மட்டும் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காமல், பல ஊர்களிலிருந்தும் அமைச்சர்கள் மூலம் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து, ஆட்களைக் குவித்தது. ""26-ந் தேதி கொரோனா வரும் என்றால், 27-ந் தேதி வராதா? முதல்வர் முதல் அத்தனை அமைச்சர்களும் விஞ்ஞானிகள்தான்'' என்று கடற்கரை பக்கம் சென்ற மக்கள் பேசிக்கொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில், ""கோவிட்டை காரணம் காட்டி, கிராம சபை கூட்டத்தை நடத்தவிடவில்லை அதேசமயம் ஜெயலலிதா விழா மட்டும் நடத்தலாம், கிராமசபைக் கூட்டம் மட்டும் நடத்தக்கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்குத்தான் பயப்படுகிறது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ""ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் என்றும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கின்றது என்று முதலில் சொன்னது நாங்கள் அல்ல ஓ.பன்னீர்செல்வம் தான், துணைமுதல்வர் பதவி பரிசாக வழங்கி வாயை மூடிவிட்டனர். தங்களுக்கு அரசியல் வாழ்க்கை பிச்சைப் போட்ட ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டு இன்று பதவியை நன்றாக அடி முதல் நுனிவரை அனுபவித்து வருகிறார்கள். இதோ இன்னும் இரண்டே மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. நாட்டு மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டியிருக்கிறோம் என்று இறங்கியிருக்கிறார்கள்'' என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் ""முதலில் இந்த நினைவிடத்தின் காண்ட்ராக்டர் பணமே தராமல் எங்கள் உறுப்பினரை ஏமாற்றப் பார்த்தார். பிறகு போராட்டம் நடத்தியபின் மூன்றுலட்சம் பணமாகவும் மீதமுள்ள தொகைக்கு செக்கும் கொடுத்தார். நாட்டில் குடியரசுவிழா என்பது எப்பேர்ப்பட்டது கொரோனாவை காரணம் காட்டி தடுத்த அதே அரசு, ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழா என்ற பெயரில் அனைவரும் வருக என்று செய்திதாளில் விளம்பரம் கொடுத்தும், கட்சி தலைமையில் கூட்டம் போட்டு அனைத்து மாவட்ட செயலாளர்களும் நினைவிடத்திற்கு மக்களை அழைத்துவர உத்தரவிட்டு, அதன்படி அரசு மற்றும் தனியார் வாகனங்களில் கூட்டத்தை அழைத்துவந்து வாகன நெரிசலிலும் மக்கள் நெரிசலிலும் சென்னையே ஸ்தம்பித்தது, அப்போ தெல்லாம் கொரோனா வராதா? மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் இவ்வளவு கூட்டத்தை அனுமதித் திருக்க மாட்டார்கள் அவர்களுக்கு தேவை போலியான விளம்பரம்'' என்றார் சூடாக.
தி.மு.க. மாநில செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா ""மிகவும் முக்கியமான சாலையான காமராஜர் சாலையில் பல பெருமைக்குரிய நினைவிடங்கள் உள்ளது. அதேபோல அண்ணா காலத்தில் கலைஞர் இணைந்து கடற்கரையோரமாக தலைசிறந்தவர்களின் பத்து சிலைகளை அமைத்துள்ளார். திருக்குறளை உலகிற்குத் தந்த திருவள்ளுவர் சிலை, உலகின் தலைசிறந்த கவிஞர் பாரதியார் சிலை, தமிழ் திராவிடம் போற்றும் பாரதிதாசன் சிலை, வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாலும் தமிழ் மொழியையும் பெருமையும் புரிந்து தமிழுக்காக வாழ்ந்த வீரமாமுனிவர் சிலை, பெருந்தலைவர் காமராசர் சிலை, கற்புக்கரசி கண்ணகி சிலை, மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலை என எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டியவர்களின் சிலைகள் எல்லாம் வலதுபுறம் அமைந்திருக்க... ஒரு முதல்வர் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்து, ஊழல் வழக்கில் சிறைசென்று வந்த, ஊழலின் அடையாளமான ஊழல் குற்றவாளிக்கு இடது புறத்தில் சிலை வைத்துள்ளனர். கொடிய கொரோனா தொற்றைக் காரணம்காட்டி குடியரசு விழாவுக்கு மக்களை தடுத்துவிட்டு, கட்சி விழாவுக்கு கூட்டத்தை வரவழைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளோ மற்ற கட்சிகளோ கூட்டம் நடத்தினால் கோவிட் வைரஸை காரணம் காட்டி அனுமதியில்லை. ஆனால் இவர்களுக்கோ அரசு விழா என்ற பெயரில் இதுபோல கூட்டம் கூட்டி நாடகம் நடத்தப்படுகிறது. அதற்கு அரசு அதிகாரிகளும் காவல்துறையும் முழு ஆதரவு. விளக்கு அணையும்முன் பிரகாசமாக எரியும்; அதுபோல இவர்களின் அதிகாரம் விரைவில் எரிந்து அணைந்துவிடும்'' என்றார்.
இதற்கு மாறாக, தியாகராய நகர் பகுதி அ.தி.மு.க. நிர்வாகி சின்னையன், ""நான் சின்ன வயசுல இருந்தே அ.தி.மு.க. விசுவாசி. அம்மாவுக்கு நினைவிடம் அமைச்சதுல என்ன தப்பு..? அம்மாவோட அரசின் சாதனைக்கு நிகர் எதுவுமில்லை. நூறாண்டு சாதனை படைத்த தங்கத் தாரகைக்கு தங்கத்தில் சிலை வச்சாலும் தப்பில்லை. கூட்டம் வந்துடுச்சுன்னா அது தானா சேர்ந்த கூட்டம். எதிர்க் கட்சிக்காரங்களுக்கு வயிறு எரிச்சல்போல... அதனால் அப்படித்தான். அ.தி.மு.க. என்றாலே அம்மாவின் விசுவாசிகள்தான். ஒரு விவசாயி இன்று முதல்வர். அ.தி.மு.க.வுல கீழ்மட்டத்துல இருந்தவங்கெல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம். அம்மாவோட அ.தி.மு.க.வுல மட்டுமே இதெல்லாம் நடக்கும். எங்க தலைவிக்கு நினைவகம், சிலை அமைப்பது மேலும் எங்களுக்கு வலு சேர்க்கும்'' என தனது அரசியல் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.
கிண்டி பட் ரோட்டைச் சேர்ந்த ரமணி, ""வயசான காலம்... விடாம கூட்டிட்டுப் போனாங்க. சின்ன வயசுல இருந்து எம்.ஜி.ஆருக்கு அடுத்து அம்மா ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுற விசுவாசி நான். அம்மா நினைவிடம் பாக்கிறதுக் குத்தானே கூட்டிட்டுப் போறாங்கனு போனா ஜனமோ ஜனம்... சமாதி கிட்ட விடவே இல்ல. கூட்டிட்டுப் போனவங்க விட்டுட்டுப் போயிட்டாங்க. நடந்தே ரொம்பதூரம் வந்து, லோக்கல் ரயில்ல வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அம்மா வோட எல்லாம் முடிஞ்சி போச்சி'' என்று தன் அனுபவத்தைச் சொன்னார்.
பல்லாவரத்தை சேர்ந்த வெங்கடேசன் ""அரசுவிழா என்ற பெயர்ல மக்கள் பணத்தை வீண் செய்றாங்க. கேள்வி கேட்க யாருமில்லை. விழா அன்னிக்கி ரொம்ப தூரம் டிராபிக். டாஸ்மாக் வியாபாரம் அமோகம். அன்னைக்கி மட்டும் சென்னை சிட்டில 13 கோடி ரூபாய் அதிகமா வித்திருக்கு. சென்னை மண்டலத்துல 42 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கு. டாஸ்மார்க் பார் திறக்க அரசு அனுமதி கொடுக்காம நடந்துகிட்டு இருக்கு. எந்த ஒரு சமூக இடைவெளியும் இல்லாமல் கூட்டம் சேருது. அன்னிக்கி பார்ல நிக்கிறத்துக்கே இடமில்லை''’என்று நிலைமையை விளக்கினார்.
தேர்தல் நேரத்தில் பலம் காட்டுவதற்காக கொரோனா விளையாட்டு நடத்தியிருக்கிறது எடப்பாடி அரசு.
படங்கள்: ஸ்டாலின், அசோக்