மெரிக்க அதிபர் ட்ரம்பின் இரண் டாவது ரவுண்ட் ஆட்சியில் அவரது அதிரடியால் உலக நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க மக்களே கலங்கிப்போய்தான் இருக்கிறார்கள். சமீப காலமாக, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரையும் முடிவுக்கு கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறார்.

Advertisment

மூன்றாண்டுகளாகத் தொடரும் ரஷ்ய- உக்ரைன் போரை அவர் நினைத்ததுபோல் எளிதாக பேச்சுவார்த்தையின் மூலம் நிறுத்தவே இயலவில்லை. எனவே, ரஷ்யா போர் நடத்து வதற்கு பெருமளவு நிதியுதவி அளிக்கக்கூடிய ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் நிறுவனங்களிடம் கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகள், அதனை வரவுள்ள நவம்பர் 21ஆம் தேதிக்குள் முற்றாக நிறுத்த வேண்டு மென்று ட்ரம்ப் அறிவித்தார். ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தப்படும் தடை, அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்துமென்று அமெரிக்கா கருதுகிறது. இதன்மூலம் ரஷ்யா தனது போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யக்கூடுமென்று ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.  ட்ரம்பின் இந்த அறிவிப்பு, இந்தியாவுக்கு புதுத்தலைவலியாக உருவெடுத்துள்ளது. 

Advertisment

இந்தியாவை பொறுத்தவரை, ரஷ்யா, உக்ரைன் போருக்கு முன்பு மிகச்சிறிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துகொண்டி ருந்த இந்தியா, போர் தொடங்கிய பின்னர், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்க மறுத்ததால் தேக்கமடைந்த கச்சா எண்ணெயை பெருமளவு வாங்கத்தொடங்கியது. 2022ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் $140 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. 

நடப்பு 2025ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மிகக்குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப் படுகிறது. இவற்றில் சுமார் 12 லட்சம் பீப்பாய் கச்சா எண் ணெயை தற்போது ரஷ்யாவில் தடைசெய்யப்பட் டுள்ள ரோஸ்நெப்ட், லுகோயில் நிறுவனங்களி லிருந்து ரிலையன்ஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள் பெருமளவு இறக்குமதி செய்வது குறிப்பிடத் தக்கது. தற்போது ட்ரம்ப் விதித்த தடையை யடுத்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்வதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. நயாரா நிறுவனமும் அதே முடிவில்தான் இருக்கிறது. 

Advertisment

இந்நிலையில், கடந்த வாரம் தொலைபேசி யில் இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுகுறித்து அவரிடம் விவாதித்தபோது, 'இந்தியா, ரஷ்யா விடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளும்' என்று மோடி உறுதியளித்ததாக ட்ரம்ப் தெரிவித்தார். இது குறித்து மோடி மறுப்பேதும் தெரிவிக்க வில்லை. 

தற்போது ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப் பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளை பெருமளவு நாட வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப் பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கலை இந்தியா எப்படி சமாளிக்கும்? இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர வாய்ப்புள்ளதா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.