உணவு என்பது தனிமனித விருப்பம் சார்ந் தது. வட இந்தியாவிலோ, மாட்டுக்கறி உணவுக்கெதி ராகப் பிரச்சாரம் செய்வ தோடு, மாட்டுக்கறி சாப்பிடு பவர்களை அடித்துக் கொல்லுமளவுக்கு இந்துத்வா அமைப்புகள் வன்முறையில் இறங்குகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு நடத்தும் விழாவிலேயே மாட்டுக் கறி உணவுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து, மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாவை நடத்துகிறது. 30 ஸ்டால்கள், 20 வகையான பிரியாணி என விளம்பரப்படுத்து கிறது. ஆம்பூர் நகரிலுள்ள நூற்றுக் கணக்கான பிரியாணி ஹோட்டல் களில் சிக்கன், மட்டன், பீஃப், நாட்டுக் கோழி, முயல், ப்ரான் பிரியாணி வகைகள் விற்பனை யாகின்றன. இந்நிலையில், "பீஃப் பிரியாணிக்கு மட்டும் பிரியாணித் திருவிழாவில் அனுமதியில்லை' என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்முடிவை எதிர்த்து தலித், இஸ்லாமிய அமைப்புகள், மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹாவைச் சந்தித்து, "பீஃப் பிரியாணியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் அதிகமிருப்பதால் அதனையும் அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் நசீர்அஹ்மத் கூறுகையில், "ஆம்பூர் என்றாலே பிரி யாணிதான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட பிரியாணியை புரமோட் செய்ய அரசாங்கமே விழா எடுப்பது மகிழ்ச்சிக்குரியது, ஆனால் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணி பட்டியலில் இடம்பெறாதது வருத்தமாகயிருக் கிறது. பீஃப் பிரியாணியைச் சேர்த்தால் ஒருசார்பு (இந்து) மக்கள் வேதனைப்படுவார்கள் என்கிறார் கலெக்டர். ஆம்பூரில் 60 சதவீதம் பீஃப் பிரியாணி ஹோட்டல்கள்தான். இதுதான் எளிய மக்களுக்கான விலை குறை வான பிரியாணியாகும். மாற்று யோசனையாக, மூன்று நாட்கள் விழாவில், ஒரு நாள் பீஃப் பிரி யாணிக்கென்றோ, அல்லது வேறொரு இடத்தில் பீஃப் பிரியாணி ஸ்டாலோ அமைக்கும் படியும் கூறிப் பார்த்தோம். கலெக்டர் ஏற்கவில்லை'' என்றார்.
வி.சி.க. திருப்பத்தூர் வடக்கு பிரிவு மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரன், "ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. இதில் மற்றவர்கள் யாரும் தலையிட முடியாது என உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. இன்று பீஃப் பிரியாணியை எல்லா மதத்தினரும், எல்லா சாதியினருமே சாப்பிடுகிறார்கள். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணியை மட்டும் அனுமதிக்க மறுப்பதைக் கண்டிக்கிறோம்'' என்றார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹாவின் கருத்தறிய தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை, மெசேஜுக் கும் பதிலில்லை. எளியோரின் சமூக நீதிக் கான அரசாங்கத்தில், உணவு அரசியலை கலெக்டரே முன்னெடுப்பது, இந்துத்வாவின் பாதைக்கு தமிழகத்தைத் திருப்புகிறார்களோ என்ற கேள்வியை விதைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.