Advertisment

மொட்டை.... நிர்வாணம்... அத்துமீறிய ராகிங்... -கோவை கல்லூரி அவலம்!

ss

"அம்மா.! நான் இங்கு படிக்கலைம்மா.. வந்து டி.சி.யை வாங்கிட்டு என்னை கூட்டிட்டு போம்மா'' என அதி காலையிலேயே கல்லூரியில் படிக்கும் மகன் கதறி அழுதிருக்கின்றார். அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி விடுதிக்கு வந்த பெற்றோர்கள், மகனின் அலங்கோலத்தை பார்த்து நிலைகுலைந்துள்ளனர். அதன்பின்னர் மகனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஆஜராக கோவை மாவட்டம் மட்டுமல்ல நாடே பரபரப்பானதுதான் நிஜம்!

Advertisment

ff

திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த தம்பதியரின் மகன் தீபக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவை அவிநாசி சாலையிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்ஜினிரியங் படித்து வருகின்றார். வசதி வாய்ப்புகள் இருப்பினும், இவர் இங்குள்ள கல்லூரியின் விடுதியிலேயே தங்கிப் படித்துவருகின்றார். இவரை 2ம், 3ம், 4ம் ஆண்டு மாணவர்கள் மொட்டை யடித்து நிர்வாணப்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய தாக பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கின்றார். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில் இவர் களை சமாதானப்படுத்தவே முயன்றிரு

"அம்மா.! நான் இங்கு படிக்கலைம்மா.. வந்து டி.சி.யை வாங்கிட்டு என்னை கூட்டிட்டு போம்மா'' என அதி காலையிலேயே கல்லூரியில் படிக்கும் மகன் கதறி அழுதிருக்கின்றார். அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி விடுதிக்கு வந்த பெற்றோர்கள், மகனின் அலங்கோலத்தை பார்த்து நிலைகுலைந்துள்ளனர். அதன்பின்னர் மகனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஆஜராக கோவை மாவட்டம் மட்டுமல்ல நாடே பரபரப்பானதுதான் நிஜம்!

Advertisment

ff

திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த தம்பதியரின் மகன் தீபக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவை அவிநாசி சாலையிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்ஜினிரியங் படித்து வருகின்றார். வசதி வாய்ப்புகள் இருப்பினும், இவர் இங்குள்ள கல்லூரியின் விடுதியிலேயே தங்கிப் படித்துவருகின்றார். இவரை 2ம், 3ம், 4ம் ஆண்டு மாணவர்கள் மொட்டை யடித்து நிர்வாணப்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய தாக பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கின்றார். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில் இவர் களை சமாதானப்படுத்தவே முயன்றிருக்கின்ற னர் அவர்கள். இந்நிலையில் மகன் தீபக் மூலம், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றார். புகாரை வாசித்த பீளமேடு காவல்துறை, ராகிங்கின் கொடுமையை கண்ணீர் மல்க பதிவு செய்துள்ளது.

"கல்லூரி விடுதியில் என்னுடைய அறை எண் 225. இதே விடுதியில் தங்கிப்படிக்கும் 2ம் ஆண்டு மாணவன் தரணிதரன், நித்யானந்தம், 3ம் ஆண்டு மாணவர்களான மணி, டில்பர் மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களான ஐயப்பன், சந்தோஷ் மற்றும் நவீன் என்ற யாலிஷ் ஆகியோர் ஒரு கேங்கா இருப்பாங்க. வசதியான வீட்டுப்பையன் என்பதால் அடிக்கடி மது குடிக்கவும் இன்ன பிற தேவைக்கும் என்னிடம் பணம் கேட் பாங்க. ஒரே விடுதியில் தங்கியிருப்பவர்கள் தானே என்கின்ற எண்ணத்தில் பணமும் கொடுத்து வந்தேன். சில நாட்களில் பணம் இல்லையென்றால் என்னுடைய பெற்றோர்களை அனுப்பக்கூறி அவர் களுக்கு பணம் கொடுப்பேன். பணம் இல் லைன்னா சில நேரங்களில் டீஸ் பண்ணு வாங்க.. இதனை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் கூறினேன். நடவடிக்கை இல்லை. எனக்குத் தான் நெருக்கடி அதிகரித்தது. இதனால் அவங்களோட டார்ச்சர் அதிகமானது. கடந்த 6ம் தேதி இரவு 10 மணிக்கு என்னுடைய அறைக்கு வந்த 7 பேர் கொண்ட அந்த கேங், என்னைய மட்டும் அவங்களோட 401-ம் எண் அறைக்கு கூட்டிட்டு போனாங்க..

Advertisment

kk

"கம்ப்ளைண்ட் எல்லாம் செய்துருக்க. அவ்வளவு பெரிய மனுசனாயிட்டே... இங்க வா... நீ பெரிய மனுசனா என்பதை பார்க்க லாம்' என என்னை நிர்வாணப்படுத்தினர். என்னை நிர்வாணப்படுத்தியதை இரண்டு பேர் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்தாங்க. அதன் பின்னர் டிரிம்மரை கொண்டு என்னுடைய தலையை மொட்டை யடிச்சாங்க. அதன்பின் சகட்டு மேனிக்கு அடிக்க ஆரம்பித்தனர். அதில் ஒருத்தன் கூரான சின்ன டூல்ஸை வச்சுக் கீறினான். ப்ளீஸ் ப்ரோ விட்டுங்கன்னு நான் கெஞ்சியும் கத்தியும் பார்த்தேன், முடியலை. விட மறுத்தாங்க.. உன்னுடைய இந்தக் கோலத்து வீடியோவையும், போட்டோவையும் சோஷியல் மீடியாவில் போடுறோம். வேண்டாமென்றால் பணம் கொடு என்றனர். அதன்பின் ஒவ்வொ ருத்தரும் ஏதோ கேள்வி கேட்டு என்னை சித்ரவதை செய்தாங்க.. கூனிக்குறுகி அரை மயக்கத்துல இருந்த என்னை வெளியில் விடவே இல்லை. இதை வெளி யில் கூறாமல் இருந்தால் விட்டுடுவோம் என விடியற்காலை 5.30மணிக்குத்தான் வெளியில் விட்டாங்க. இதைக் கூறினா லும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அதனால் எனது பெற்றோரிடம் கூறினேன்'' என்கிறது ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட தீபக்கின் புகார் மனு. புகாரைப் பெற்ற காவல்துறையோ துரிதமாக நடவடிக்கையில் இறங்கி, குற்றஞ்சாட்டப்பட்ட 7 மாணவர்களை கைது செய்து ராகிங் சட்டப் பிரிவுகள் உட்பட, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதே வேளையில் கல்லூரி நிர்வாகம் குறிப்பிட்ட 7 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஸோ, "கோவையில் ஏராளமான கல்லூரி கள் இருக்கிறது. இங்கு ராகிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தில் வழக்கு பதியப்பட்டு காவல்துறையால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை எச்சரிக்கை அறிவுரை வழங்குகிறோம். வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. அதேபோல ஒருவர் மீது வழக்கு ஆகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற முடியாது. இதனால் கல்லூரி மாணவர்கள் ராகிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம். கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, புதன்கிழமை இரவு 12:30 மணிக்கு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவரோ, "இந்தக் கல்லூரியின் கல்வி உலகளவில் பிரசித்தி பெற்றது என்றாலும் ஹாஸ்டல் விடயத்தில் படுகேவலமே. இந்தமுறை இந்த மாணவர் தைரியமாக வெளியில் வந்து தான் பாதிக்கப்பட்டதை பொதுவெளியில் கூறியிருக்கின்றார். அதனால் காவல்துறையும் வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளியில் வந்தால் மட்டுமே இது சாத்தியம்'' என்கிறார்.

1996ம் ஆண்டு ராகிங்கால் நடைபெற்ற நாவரசு படுகொலைக்குப் பின்னரே, 1997ம் ஆண்டு ராகிங்கிற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டு கடுமையாக்கப்பட்டது. இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை கல்லூரிகளில் தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே ராகிங் தடுக்கப்படும்.

nkn111123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe