31 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் இந்த ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையிலும் நீதிபதிகள் அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Perarivalan

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 19 வயது பேரறிவாளன், வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்தார் என்கிற குற்றச்சாட்டின்கீழ் சி.பி.ஐ. அவரை கைதுசெய்து சிறையி லடைத்தது. அதே வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உட்பட பலர் கைதுசெய்யப் பட்டனர். இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரணதண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திர னுக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. 2000 ஏப்ரல் 24-ல் அமைச்சரவையைக் கூட்டி நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைத்தார் அப்போதைய முதலமைச்சரான கலைஞர்.

2014 பிப்ரவரியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரின் கருணை மனுமீது 14 ஆண்டுக்குப்பின்னும் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்காததை ஏற்கமுடி யாது என நான்குபேரின் மரணதண்டனை யை ஆயுள்தண்டனையாக குறைத்தும், இவர்களை விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அப்போது தீர்ப்பளித்தது. முதல்வராக இருந்த ஜெ. திடீரென, "எழுவரையும் விடுதலை செய்யப் போகிறோம், உங்கள் முடிவென்ன' என மத்திய அரசை நோக்கி கேள்வியெழுப்பினார். அப்போது இந்தியாவை ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சி.பி.ஐ.யும் எதிர்த்து வழக்கு தொடுத்தது. ஜெ.வின் அவசர கதி நடவடிக்கையால் விவகாரம் மீண்டும் சட்டச் சிக்கலில் மாட்டியது.

Perarivalan

Advertisment

2018-ல் எழுவர் விடுதலையில் கவர்னர் முடி வெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவையில் எழுவரை விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினர். ஆளுநர்கள் மாறினாலும் தீர்மானம்மீது எந்த ஆளுநரும் முடி வெடுக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 மே மாதம் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். பேரறிவாளனின் தாய் அற்புதம் மாள் முதல்வரைச் சந்தித்து பரோல் கோரிக்கை வைத்ததும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் அனுப்ப உத்தரவிட்டார். 30 நாள் பரோல் என்பது தற்போது 300 நாட்களாகிவிட்டது. எழுவர் விடுதலையில் உறுதியுடன் களமிறங்கியதால் ரவிச்சந்திரன், நளினிக்கு அடுத்தடுத்து பரோல் வழங்கப்பட்டது.

நான் தவறு செய்யவில்லை, தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்யுங்கள் என பேரறி வாளன் உச்சநீதிமன்றத்தில் 2016-ல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இப்போது தொடங்கி யுள்ளது. மத்தியரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் நடராஜன், “"பேரறிவாளனுக்கு ஏற் கனவே கருணை காட்டப்பட்டுவிட்டது, விடுதலை செய்ய முடியாது''” என்றார். தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, "விடுதலை குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பேரறிவாளன் உட்பட மூவர் பரோலில் உள்ளார்கள்''’என்றார். பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால்சங்கரநாராயணன், “"கடந்த 9 மாதங்களாக பரோலில் உள்ளார். மகாத்மா காந்தியை கொலை செய்த குற்றவாளி கோட்சே வின் சகோதரர் கோபால் கோட்சேவே 14 ஆண்டு களில் விடுதலையாகிவிட்டார்''’ என்றார். நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவை அமர்வு, “"30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். மனுமீது கவர்னர் முடிவெடுக்காதது தவறு. மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை முடிவெடுக்கும் வரை அவருக்கு ஜாமீன் வழங்குகிறோம்'’என தீர்ப்பளித்தது.

Perarivalan

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள், "எழுவர் விடுதலை, பரோல், ஜாமீன் என எதுகுறித்து மனு செய்தாலும், அவர்கள் சிறையில் விதிகளை மீறுகிறார்கள், வெளியே வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என மத்திய, மாநில அரசுகளின் உளவுத் துறை அறிக்கை, சிறைத்துறை அறிக்கையை முன்வைத்து பரோல் கிடைக்காமல் தடுத்துவந்தார் கள். முதலமைச்சர் ஸ்டாலின் பதவிக்கு வந்ததுமே, மாநில உளவுத்துறை அறிக்கை எப்படி தரும் என்பதை அறிந்தவர், பேரறிவாளனுக்கு நீண்டகால பரோலை வழங்கினார். ரவிச்சந்திரன், நளினிக்கு பரோல் வழங்க உத்தரவிட்டார்.

பேரறிவாளன் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பரோலில் உள்ள இவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச் சனை எதுவும் எழவில்லை என்பதை தெரியப்படுத் தியது. தமிழ்நாடு அரசின் வாதமும், கருத்தும் ஜாமீன் வழங்க முக்கிய காரணம். தற்போது பரோலில் உள்ள இந்திய குடியுரிமையுள்ள நளினி, ரவிச்சந்தி ரன் ஜாமீன் பெறவாய்ப்புள்ளது. இலங்கை குடியுரிமை பெற்றவர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஜாமீன் மனு போடும்போது சட்ட சிக்கல் வரும். அதில் முதலமைச்சர் கவனம் செலுத்தி ஜாமீன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்''’என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி ஜாமீன் கிடைத்துள்ளது. எழுவருக் கான சட்டப்போராட்டம் எப்போது நிறைவடையும்? முழு விடுதலை எப்போது கிடைக்கும் என்கிற எதிர் பார்ப்பு உணர்வாளர்களிடம் எழுந்துள்ளது.