வாட்சப்பில் சுற்றும் பகீர் ஆடியோ! சேலம் தி.மு.க.வில் சலசலப்பு!

dd

"சோழியர்கள் என்றால் சொம்பைகளா? அவைத்தலைவர் எப்படி சாதியைப் பற்றி இழிவாகப் பேசலாம்?" என ஆளுங்கட்சி கவுன்சிலர், சேலம் மத்திய மா.செ.வுடன் நேரடியாக கோதாவில் இறங்க, பொது உறுப்பினர் கூட்டம் ரசாபாசத்துடன் முடிந்திருப்பதுதான் மாங்கனி மாவட்ட உ.பி.க்களிடையே பரபரப்பு பேசுபொருளாகி இருக்கிறது.

கிச்சிப்பாளையம் 'குணா சார்' என்கிற வழக்கறிஞர் குணசேகரன், தற்போது 43வது வார்டு மாநக ராட்சி கவுன்சில ராக இருக்கிறார். வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகு, சேலம் மத்திய மா.செ. வாக வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நிய மிக்கப்பட்டார். இப்போது ராஜேந்திரனுக்கு எதிரான அர சியலை முன்னெடுக்கிறார் குணசேகரன். இந்த நிலை யில்தான், சேலம் மாநகர அவைத்தலைவர் கே.ஆர். முருகனும், அம்மாபேட்டை பகுதி செயலாளர் தனசேகரனும் செல்போனில் பேசிக் கொண்ட ஓர் உரையாடல், கழகத்திற்குள் கலகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த உரையாடலில், அவைத்தலைவர் முருகன், சோழிய வேளாளர் சமூகத் தைப் பற்றி சில "ப

"சோழியர்கள் என்றால் சொம்பைகளா? அவைத்தலைவர் எப்படி சாதியைப் பற்றி இழிவாகப் பேசலாம்?" என ஆளுங்கட்சி கவுன்சிலர், சேலம் மத்திய மா.செ.வுடன் நேரடியாக கோதாவில் இறங்க, பொது உறுப்பினர் கூட்டம் ரசாபாசத்துடன் முடிந்திருப்பதுதான் மாங்கனி மாவட்ட உ.பி.க்களிடையே பரபரப்பு பேசுபொருளாகி இருக்கிறது.

கிச்சிப்பாளையம் 'குணா சார்' என்கிற வழக்கறிஞர் குணசேகரன், தற்போது 43வது வார்டு மாநக ராட்சி கவுன்சில ராக இருக்கிறார். வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகு, சேலம் மத்திய மா.செ. வாக வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நிய மிக்கப்பட்டார். இப்போது ராஜேந்திரனுக்கு எதிரான அர சியலை முன்னெடுக்கிறார் குணசேகரன். இந்த நிலை யில்தான், சேலம் மாநகர அவைத்தலைவர் கே.ஆர். முருகனும், அம்மாபேட்டை பகுதி செயலாளர் தனசேகரனும் செல்போனில் பேசிக் கொண்ட ஓர் உரையாடல், கழகத்திற்குள் கலகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த உரையாடலில், அவைத்தலைவர் முருகன், சோழிய வேளாளர் சமூகத் தைப் பற்றி சில "பீப்' சொற்களைச் சொல்லியிருக் கிறார்.

ww

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, சேலம் மத்திய மா.செ. தலை மையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந் தது. காலையி லேயே அக்கூட் டத்தில் கவுன் சிலர் குணசேக ரன் ஆஜரான தால், ஏதேனும் பிரச்சனை யாகக்கூடுமெனக் கருதிய மா.செ. ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்குச் சென்றுவிட் டார். இதையடுத்து, பகல் 12.30 மணிக்கு மேல் பொது உறுப் பினர்கள் கூட்டத்திற்கு மீண் டும் வந்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா வைக் கொண்டாடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

பின்னர், மைக்கை திடீரென்று எடுத்த குணசேகரன், "மாநகர அவைத்தலைவர் சோழி யர்களைப் பற்றி...'' என்று பேசத்தொடங்கினார். அவ்வளவுதான், நிர்வாகிகள் ரகுபதி, குபேந்திரன் உள்ளிட் டோர் அவரிடமிருந்து மைக்கை பறிக்க முயற்சித்தனர். மா.செ. ராஜேந்திரன், "அதைப்பற்றி யெல்லாம் இங்கு பேசக்கூடாது'' என்றார். பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன் அவரைப் பார்த்து உரக்கக் கத்த, அந்த இடமே தள்ளுமுள்ளானது.

இது தொடர்பாக கவுன்சிலர் குணசேகரன், "சோழியர் வேளாளர் சமூகத்தைப் பற்றி அவைத்தலைவர் இழிவாகப் பேசிய ஆடியோ, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதே வெளியாகிவிட்டது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் குட்டையைக்ss குழப்பி விட்டால் என்னவாகியிருக்கும் என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது. ஆனால், இதைப்பற்றி மா.செ., ராஜேந்திரன் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தம். நான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் மட்டுமல்ல, வேறு எந்த இனத்தைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் கேள்வி கேட்பேன். வேறு எங்கேயும் பேச வாய்ப்பு அளிக்கப் படாததால், பொது உறுப்பினர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன். மாநகரச் செயலாளர் ரகுபதி என்னிடம் மைக்கை பறிக்க முயன்றார். குபேந்திரன் ஆவேசமாக நாக்கைக்கடித்து முறைக்கிறார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக்கூட பேச விடாமல் தடுத்து விட்டனர்'' என்றார்.

அவைத்தலைவர் முருகனிடம் கேட்ட போது, "பகுதிச் செயலாளர் தனசேகரன்தான் இந்த ஆடியோவை வெளியிட்டிருக்க வேண்டும். இது, கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது பேசப்பட்ட ஆடியோ. ஏதோ ஒரு மனநிலையில் அன்றைக்கு பொதுவாக சில வார்த்தைகளை யதார்த்தமாக பேசி விட்டேன். அதை இப்போது சர்ச்சை யாக்குகிறார்கள். இந்த ஆடியோ வெளியானதிலிருந்து யார் யாரோ எனக்கு போன் செய்து திட்டுகின்றனர்'' என்று புலம்பினார்.

பகுதிச் செயலாளர் தனசேகரன் கூறுகையில், "யாரிடமிருந்து இந்த ஆடியோ வெளியானது என்று தெரியவில்லை. ஓராண்டுக்கு முன்பு, இந்த ஆடியோ அடங்கிய செல்போன் ரிப்பேர் ஆனதால் சர்வீசுக்காக கொடுத்துவிட்டேன். கொண்டலாம்பட்டி மண்ட லக்குழுத் தலைவர் அசோகன் தான் ஆறு மாதத்திற்கு முன்பு, இப்படியொரு ஆடியோ வந்ததாக என்னிடம் சொன் னார்'' என இன்னொருவரை கோத்துவிட்டார். கொண்ட லாம்பட்டி மண்டலக்குழுத் தலைவர் அசோகனோ, "தான் ஒருபோதும் தனசேகரன் குறிப்பிட்டதுபோல் அவரிடம் சொல்லவில்லை,'' என ஒரே போடாக போட்டார்.

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், "தளபதியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி தீர்மானம் நிறை வேற்றுவதற்காகக் கூட்டப் பட்ட கூட்டத்தில், சாதி குறித்த பேச்சைப் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? மாநகராட்சியில் நடந்த கூட்டத்தை விட்டுவிட்டு இங்கு சண்டை போடவே வந்திருந்தார் குணசேகரன். குணசேகரன் மட்டும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்'' என்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட சோழிய வேளாளர் சங்க நிர்வாகிகள், தங்கள் சமூகத்தை இழிவாகப் பேசி, ஜாதிப் பூசல்களை உருவாக்க முயற்சிப்பதாகவும், தி.மு.க. மாநகர அவைத்தலைவர் முருகன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவிடம், கவுன்சிலர் குணசேகரன் புகார் அளித்திருக்கிறார். விரைவில் முருகன், தனசேகரன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரலாம் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.

nkn110323
இதையும் படியுங்கள்
Subscribe