மிழகத்தின் கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் குடிசைத் தொழில் போலப் பெருகிவரும் சட்டவிரோதக் கருக்கலைப்பால், அப்பாவி கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்து வரு கிறார்கள் என்கிற பகீர் தகவல் நம் காதுக்கு வர, விசாரணையில் இறங்கினோம்.

அப்போது நமக்குக் கிடைத்த தகவல்கள் நம் தலையைச் சுற்றவைத்தது. அவற்றில் சில...

அசகளத்தூர் பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வந்த வடிவேல், தனது மெடிக்கல் ஷாப்பையே கருக்கலைப்பு மையமாக மாற்ற, இந்தத் தகவல் அறிந்த மருத்துவத்துறை யினர், காவல்துறைக்குத் தகவல் கொடுத்து அவரை உள்ளே தள்ளினர். இந்த வடிவேல், ஏற்கனவே கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளாந்தாங்கல் பகுதியில் கருக்கலைப்பு மையம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுவந்தவர். வெளியே வந்து அவர் தன் அதே வில்லங்க வேலையைச் செய்ததால், இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார்..

ab

Advertisment

அதேபோல் சின்னசேலம் அருகிலுள்ள இந்தி- கிராமத்தைச் சேர்ந்த முருகேசன். இரும்காட்டுக்கொட் டாய் பகுதியில் தனி வீடு எடுத்து, அங்கே சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்தார். இவரும் கருவுற்ற பெண்கள் வயிற்றில் வளரும் சிசு ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து சொல்லி, கருக்கலைப்பும் செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரி கள், சின்னசேலம் போலீசார் உதவியுடன் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த முருகேசன், தற்போது அதே பகுதியில் வேறொரு வீட்டை வாட கைக்கு எடுத்து, மீண்டும் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந் துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவல் சென்னை யிலுள்ள ’பாலினத் தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கண்காணிப்புக் குழு துணை சூப்பிரெண்ட்டெண்ட் சரவணக் குமார் தலைமையில், கள்ளக்குறிச்சி புறப்பட்டு வந்தனர். அவர்களோடு கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் ராமன் மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து 29ஆம் தேதி காலை 10 மணி அளவில் இந்தி- பகுதியில் இருந்த முருகேசனின் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தை முற்றுகையிட்ட னர். அங்கே இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு வந் திருந்தனர். அவர்களி டம் விசாரணை நடத் தியதில் அவர்கள் தர்மபுரி மாவட் டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை எச்சரித்து அனுப்பி விட்டு, முருகேசனிடம் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கருக்கலைப்பு மையம் நடத்தி வருவதும், இடையில் பிடிபட்டுக் கைதாகிச் சென்றதும், மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து, கருக்கலைப்புத் தொழிலைத் தைரியமாகத் தொடர்ந்ததும் தெரியவந்தது. அவர் கருக்கலைப்பு மையத்தில் இருந்த இரண்டு சொகுசு கார்கள், ஒரு இருசக்கர வாகனம், சைக்கிள், ஸ்கேன் செய்யும் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் உட்பட அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமனிடம் ஒப்படைத்தனர். .ராஜாராமன் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்.

இதேபோல், சட்ட விரோதக் கருக்கலைப்பால் நடந்துவரும் உயிரிழப்பு பற்றிய தகவலும் நம் காதுக்கு வந்து சில்லிடச்செய்தன.

உதாரணமாக, கச்சி மயிலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன். இவர் ராமநத்தம் பகுதியில் மருந்துக் கடை வைத்து நடத்தி வந்தார். அங்கு பெண் குழந்தை வேண்டாம் எனக் கருதும் பெண்களுக்கு, கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்து கருக்கலைப்பு செய்து வந்தாராம். இதில் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனிதா பரிதாபமாக உயிரிழந்தாராம்.

Advertisment

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி, கவிதா,என்ற இரு பெண்கள் செல்வி மற்றும் பெரிய நாயகம் என்ற பெண்களுக்கு கருக் கலைப்பு செய்ததில் ரத்தப்போக்கு அதிகரித்து அவர்களும் உயிரிழந்தன ராம்.

ss

இப்படி கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சட்டவிரோத கருக்கலைப்புத் தொழில் ஏகபோகமாக நடந்துவருகிறதாம்.

இந்தத் தொழில் இத்தனை வேகத்தில் வளர்ந்தது எப்படி?

இதைத் தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள சட்ட நடவடிக்கைகள் போதுமானவையா? என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி பூர்ணிமா சுரேஷிடம் நாம் கேட்டபோது...”"தங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதை பெரும் சுமையாக பல பெற்றோர்கள் கருதுகிறார்கள். பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றன. இருந்தும் நடைமுறையில் பல சிக்கல்கள் எழுகின்றன. வளரும் சிசுவைக் கண்டறிந்து கருச்சிதைவு செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நமது இந்திய நடைமுறை தண்டனைச் சட்டத்தின்படி ஆயுள் தண்டனை என்பது அதிகபட்சம் 14 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் மரண தண்டனை வழங்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான தண்டனை வழங்கினால்தான் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்பவர்களுக்கு பயம் ஏற்படும். பிறக்கப்போகும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். எனவே அரசு இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செய்யும் ஆசாமிகளை கிராமப்புற செவிலியர்கள், மருந்துக் கடைக்காரர்கள் மூலம் கண்டறிந்து ஒடுக்கவேண்டும்''’என்றார் அழுத்தமாக.

இந்தக் குரல் நீதித்துறையின் காதிலும் கேட்கவேண்டும்.

-சக்கரை