"அ.தி.மு.க.வில் சசிகலா நுழையவே முடியாது' என ஆவேசம் காட்டும் சி.வி.சண்முகம், ஒரு படி மேலேபோய், "சசிகலாவின் தூண்டுதலில் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சசிகலா உள்ளிட்ட பலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
"சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பின்னணியில் வேறு ஒரு மர்மம் மறைந்துள்ளது' என விவரிக்கின்
"அ.தி.மு.க.வில் சசிகலா நுழையவே முடியாது' என ஆவேசம் காட்டும் சி.வி.சண்முகம், ஒரு படி மேலேபோய், "சசிகலாவின் தூண்டுதலில் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சசிகலா உள்ளிட்ட பலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
"சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பின்னணியில் வேறு ஒரு மர்மம் மறைந்துள்ளது' என விவரிக்கின்ற சசிகலாவின் ஆதரவாளரும் அ.ம.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான என்.வைத்தியநாதன், "முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகம் தோற்றுப்போனார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் வீழ்ந்துபோனது. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தி.மு.க. அரசு திரும்பப் பெறவிருக்கிறது. அதைத் தக்க வைப்பதற்காக, தனக்கு மிரட்டல் இருப்பதாக புகார் கொடுக்கிறார்.
அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததால்தான் சண்முகத்தின் அப்பா வேணுகோபாலை கட்சியிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்டவரின் வாரிசான சண்முகத்துக்கு மா.செ. பதவியும், அமைச்சர் பதவியையும் ஜெயலலிதா விடம் சொல்லி வாங்கிக் கொடுத்தவர் சசிகலாதான். அ.தி.மு.க.வையும் சண்முகத்தையும் அறிந்த மூத்த தலைவர்கள் பலருக்கும் இது தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சண்முகத்தை விழுப்புரம் மா.செ.வாக நியமித்தவர் சசிகலா. அவர் நியமித்த அந்தப் பதவியில்தான் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறார் சி.வி.சண்முகம். சசிகலாவை எதிர்க்கிற இவர், அவர் கொடுத்த பதவியை தூக்கி எறிய வேண்டியதுதானே?
சிறைக்குச் செல்லும்போது "அ.தி.மு.க. ஆட்சியையும் கட்சியையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்' என எடப்பாடியிடம் தந்து விட்டுச் சென்றார் சசிகலா. அவர் திரும்பி வந்ததும் அவரிடம் ஒப்படைப்பதுதானே முறை? "அ.தி.மு.க. எங்களுக்குச் சொந்தம்' என சொல்லி எடப்பாடியும் சண்முகமும் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால், விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் சின்னம்மா சசிகலா''‘என்கிறார் அதிரடியாக.