தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி, சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்துவருகிறது. இதை அறிந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் பலரும், சட்ட மேலவையில் நாற்காலியைப் பிடிக்க இப்போதே ரன்னிங் ரேஸைத் தொடங்கிவிட்டார்கள்.

stalin

பாரம்பரியமிக்க தமிழக சட்டப் பேரவையின் மேலவை நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். 1861-ல் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மேலவை 01-11-1986-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது திடீரெனக் கலைக்கப்பட்டது. அப்போதைய நிலையில் 63 உறுப் பினர்கள் இருந்தனர்.

21 சட்டமன்ற உறுப் பினர்கள் வாக்களித்து ஒரு மேலவை உறுப் பினரைத் தேர்ந் தெடுக்கவேண்டும் என்பது விதி. ஆசிரியர்களில் இருந்து 6 பேரும், பட்டதாரிகளின் சார்பாக 6 பேரும், கவர்னரால் நியமிக்கப்படுபவர்கள் 9 பேர்கள் உட்பட சட்ட மேலவையில் 63 உறுப்பினர்கள் அலங்கரித்திருந்தனர்.

Advertisment

இந்த வழிமுறைகளில் நிய மனம் செய்யப்படுகிற எம்.எல்.சி.க் கள், புதிதாக சட்டங்களை இயற்ற முடியாது. தீர்மானங்கள் போன்ற வைகளை நிறைவேற்றுகிற அதிகாரமும் இவர்களுக்குக் கிடை யாது. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள், சட்டங்கள் போன்றவைகளை ஆதரிக்கலாம் அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இந்தப் பதவி, ராஜ்யசபா எம்.பி.க்களைப் போன்று 6 வருடங்கள் நீடிக்கும்.

mc

தமிழகத்தின் மாபெரும் தலைவர்களான மூதறிஞர் ராஜாஜி மற்றும் பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் எம்.எல்.சி. ஆகி, பின் முதலமைச்சரானவர்களில் குறிப் பிடத்தக்கவர்கள். கலைஞர், எம்.ஜி. ஆர். ஆகியோரும் எம்.எல்.சி.க்களாக இருந்திருக்கிறார்கள்.

Advertisment

1964 முதல் 70 வரை மேலவையின் தலைவர் பொறுப்பி லிருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாணிக்கவேல் நாயக்கர், 1970-76 வரை மேலவைத் துணைத் தலைவராக இருந்த தி.மு.க.வின் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு, 1976 முதல் 86 வரை பத்து வருடங்கள் தலைவராக இருந்த. தமிழர் கட்சியின் ம.பொ.சிவஞானம் போன்றவர்கள், மேலவைக்கு சிறப்பு சேர்த்தவர்கள் ஆவர்.

எம்.ஜி.ஆர். இந்த மேலவையை ஏன் கலைத்தார்?

முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த போது, எம்.எல்.சி.யாக இருந்தார் கலைஞர். அவர் மேலவை எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு அமைந்த நிலையில்... முதல்வர் எம்.ஜி.ஆர், தமிழக சட்டமன்ற மேலவையைக் கலைத்தார். அத்துடன், அ.தி.மு.க. சார்பில் மேலவைக்கு நிறுத்தப்பட்ட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவின் மஞ்சள் நோட்டீஸ் விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதும், மேலவை கலைப்புக்கு முக்கிய காரணமாகும்.

வெண்ணிற ஆடை நிர்மலாவை எம்.எல்.சி.யாக்க ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், வழக்கறிஞரான எஸ்.கே.சுந்தரம் என்பவர், 24-4-86-ல் திவால் நோட்டீஸ் கொடுத்த வெண் ணிற ஆடை நிர்மலா எப்படி எம்.எல்.சி தேர்தலில் நிற்க முடியும்? என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.

mc

உடனே, எம்.ஜி.ஆர். தரப்பிலிருந்து வெண்ணிற ஆடை நிர்மலாவின் கடன் தொகையான 4 லட்சத்து 65 ஆயிரம் செலுத்தப்பட்டது. இதையடுத்து அவர் எம்.எல்.சி.க்கு நிற்கலாம் என்று, அவரின் வழக்கறிஞ ரான சுப்பிரமணியம் பிச்சை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையிலிருந்த நேரத்தில், அப்போதைய கவர்னரான எஸ்.எல்.குரானா, "திவால் நோட்டீஸ் கொடுத்த ஒரு நபரை எப்படி எம்.எல்.சி தேர்தலில் நிற்க அனுமதிக்க முடியும்?'” என்று எம்.ஜி.ஆரிடமே கேட்க... இதில் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார் எம்.ஜி.ஆர்.

தன்னால் வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவைக்கு அனுப்ப முடியவில்லையே என்கிற முதல்வர் எம்.ஜி.ஆரின் கோபம்தான், சட்ட மேலவையைக் கலைப்பதற்கான தீர் மானத்தைக் கொண்டுவரச் செய்தது. காங்கிரஸ் ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டது. மேலவை கலைப்புக்கு அப்போதே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பின்னர், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேலவையை மீண்டும் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுவதும், அ.தி.மு.க ஆட்சி அமையும் போதெல்லாம் அது கிடப்பில் போடப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.

ஏறத்தாழ 35 வருடங்கள் கழித்து தற்போது மேலவையை தொடங்குவதற்கான முயற்சிகள் தொடங்கி யுள்ளன. எம்.எல்.ஏ. பதவியைப் பெறமுடியாத தி.மு.க. பிரமுகர்கள் பலரும், இப்போது எம்.எல்.சி. பதவியைக் குறிவைத்துப் பரபரப்பாக காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்தமுறை மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

அநேகமாக, வரும் மழைக்கால சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின்பு இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிற தகவல்கள் இப்போது றெக்கை கட்டிப் பறக்கின்றன. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ஒன்றிய அரசின் ஆதரவு இதற்கு அவசியம்.

-பி.சிவன்