மீண்டும் கூலிப்படைக் கலாச்சாரம்! அச்சத்தில் தென் தமிழகம்!

murder

கிளினிக் வேலைகளை முடித்துவிட்டு, இரவு பத்து மணிக்குள்ளாகவே வீடு திரும்புகிறவர் டாக்டர் திருப்பதி. கடந்த 10ந்தேதி அப்படி திரும்பவில்லை. செல்போனிலும் லைன் கிடைக்கவில்லை. என்ன ஆனதோ என பதறிய உறவினர்கள், தேடிச் சென்றார்கள்.

murder

இட்டமொழியில் இருந்து பண்டாரபுரம் சாலை விலக்கில் ரத்தக்கறையும், தலை முடியும் அப்பிக் கிடந்தது கண்டு பதறிப்போனார்கள். நெஞ்சில் பதைபதைப்புடன் அருகிலிருக்கும் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, திருப்பதி பிணமாகக் கிடந்திருக்கிறார். தீயணைப்பு வீரர்களின் உதவியோடு, திருப்பதியையும், உடன் கிடந்த

கிளினிக் வேலைகளை முடித்துவிட்டு, இரவு பத்து மணிக்குள்ளாகவே வீடு திரும்புகிறவர் டாக்டர் திருப்பதி. கடந்த 10ந்தேதி அப்படி திரும்பவில்லை. செல்போனிலும் லைன் கிடைக்கவில்லை. என்ன ஆனதோ என பதறிய உறவினர்கள், தேடிச் சென்றார்கள்.

murder

இட்டமொழியில் இருந்து பண்டாரபுரம் சாலை விலக்கில் ரத்தக்கறையும், தலை முடியும் அப்பிக் கிடந்தது கண்டு பதறிப்போனார்கள். நெஞ்சில் பதைபதைப்புடன் அருகிலிருக்கும் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, திருப்பதி பிணமாகக் கிடந்திருக்கிறார். தீயணைப்பு வீரர்களின் உதவியோடு, திருப்பதியையும், உடன் கிடந்த பைக்கையும் மீட்டார்கள். வயிற்றில் கொடூரமாக வெட்டியதில் குடல் சரிந்திருந்தது. கையில் ஒரு விரல் துண்டாக்கப்பட்டிருந்தது. அவரது சட்டையும் மிஸ்ஸிங்.

திசையன்விளை அருகிலிருக்கும் மேல பண்டாரபுரத்தின் சித்தா டாக்டரான திருப்பதிக்கு நேர்ந்த இந்தக் கொடூரத்தைக் கேட்டு, நெல்லை மாவட்டமே அலறிப் போயிருக்கிறது. காரணம், அவர் கொல்லப்பட்ட ஸ்டைல்.

திருப்பதியின் பழக்க வழக்கங்களை வேவு பார்த்தே அவருக்கு தேதி குறித்திருக் கிறார்கள் என்றும், இடப் பிரச்சனை ஒன்றுதான் இதன் பின்னணி என்றும் திசையன்விளை போலீசாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. இதில் தொடர்புடைய முத்துக்கிருஷ் ணன், அவரது தந்தை கணேசன், தம்பி கவின்ராஜ்குமார் ஆகியோர் இப்போது போலீசார் கஸ்டடி யில் உள்ளனர்.

விசாரணையின் ட்விஸ் டாக இந்தப் படுகொலை கூலிப்படையினரால் நடந்தது தெரியவர, மேல்மட்ட காவல் அதிகாரிகள் இதை ஆராய தனிப்படையை அமைத்திருக்கிறார்கள். இதில் முத்தம்மாள்புரம் சிவானந்தன், கோட்டையடிப் பகுதியின் விமலநாதன் ஆகியோரைப் பிடித்துள்ளனர்.

murder

தனிப்படை அதிகாரிகளிடம் விசாரணை தொடர்பாக நாம் கேட்டபோது, ""திருப்பதியின் குடும்பத்துக்கும், முத்துக்கிருஷ்ணன் குடும்பத் துக்கும் வெறும் 8 அடி இடப்பிரச்சனைதான் இருந்திருக்கிறது. இது தகராறாக மாறியபோது, சர்வேயர் அளந்து கொடுக்கட்டும்; அதன்படி, எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று திருப்பதி சொல்லி இருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்த்தரப்பின் விபரீத எண்ணமே கொலையில் முடிந்திருக்கிறது. நல்ல அனுபவமுள்ள கூலிப்படையினர் இந்தக் கொலையைச் செய்திருப்பதாக தெரியவந்தது. இந்தக் கூலிப்படையினர், கொல்லும் நபரின் வயிற்றில் ஆழமாக அரிவாளைப் பாய்ச்சி, குடலைச் சரிப்பார்கள். பின் கை மணிக்கட்டு எலும்பை நொறுக்கி, ஆள்காட்டி விரலை வெட்டிவிடுவார்கள். கொல்லப்பட்டவரின் ஆடைகளைக் களைந்து வீசுவார்கள். தென்பகுதி கூலிப்படையினரின் இந்த மர்டர் மார்க்குகள் திருப்பதி கொலையிலும் இருக்கின்றன'' என்று அதிர வைத்தனர்.

நெல்லை எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனாவிடம் இதுபற்றி கேட்டபோது, ""முத்துக்கிருஷ்ணன், சிவானந்தன் மற்றும் விமலநாதன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

தென் தமிழகத்தில் அடங்கியிருந்த கூலிப்படைக் கலாச்சாரம் மீண்டும் வேர்விடும் அச்சம் கிளம்பியிருக்கிறது.

- பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn200520
இதையும் படியுங்கள்
Subscribe