மிழகத்தில் அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை பெயர் அடிபட்ட குட்கா ஊழல் விவகாரம் ஓய்ந்திருக்கும் நிலையில், பபுள்கம் குட்கா என புது ஐட்டம் அறிமுகமாகி, இளம் பெண்களைச் சீரழித்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக புகையிலைத் தயாரிப்பான கணேஷ், பான்பராக், சம்பு, பான்மசாலா, துள்சி, சைனி ஹைனி, ஹான்ஸ் இவையெல்லாம் தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருந்தாலும் தமிழகத்தில் இதன் மறைமுக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில் இளம்பெண்களை கிறுகிறுக்க வைக்கும்விதமாக பபுள்கம் குட்கா தயாரித்து, பெண்களுக்கு சப்ளை செய்துவந்த கும்பலை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அந்தக் கும்பல் வெளியிட்ட தகவல் நம்மையும் கிறுகிறுக்க வைத்தது.

dfdf

Advertisment

இந்த பபுள்காம் குட்காவுக்கு கல்லூரி மாணவிகளில் இருந்து வி.ஐ.பி. குடும்பப் பெண்கள் வரை அடிமையாகி வருவதாக வரும் செய்திகள் நம்மைத் திடுக்கிட வைத்தன.

குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள பழமைவாய்ந்த அந்த இன்ஜினியரிங் கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த வசதி ddaபடைத்த மாணவ-மாணவிகள் அதிகம் பேர் படிக்கிறார்கள். அந்த மாணவிகளில் பெரும்பாலானோர் வகுப்பறை மற்றும் ஹாஸ்டல்களில் போதையில் மிதப்பது கல்லூரி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்... அதைத் தடுக்க கல்லூரி நிர்வாகம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்தை ரகசியமாக நாடியது.

இதையடுத்து தக்கலை சரக டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை ரகசிய கண்காணிப்பில் குட்காவிலிருந்து தயாரிக்கும் பபுள்கம் குட்கா எனப்படும் போதைப் பொருளுக்கு மாணவிகள் அடிமையாகியிருப்பது தெரியவந்தது.

Advertisment

அதை சப்ளை செய்யும் கும்பலை கடந்த இரண்டுமாத தேடுதலுக்குப் பிறகு சமீபத்தில் மார்த்தாண்டத்தில் வைத்து டி.எஸ்.பி. கார்த்திகேயன் டீம் மடக்கியது. அந்தக் கும்பலுக்குத் தலைவனான செல்வராஜுக்கு காங்கிரஸில் செல்வாக்கு இருந்ததால், முதலில் தயங்கிய போலீஸ் கடைசியில் அ.தி.மு.க. மேலிடத்தின் பிரஷரால் செல்வராஜ், சத்தியநேசன், ஆனந்த் சத்யா, முகம்மது அலி ஆகியோரைக் கைது செய்தது.

செல்வராஜுக்கு மார்த்தாண்டத்தில் சொந்தமாக ஒரு குடோன் உண்டு. பெங்களூரிலிருந்து குட்காவை கடத்திவந்து அங்கு வைத்து அதை பெண்கள் பயன்படுத்தும்விதமாக பபுள்கம் குட்காவாக தயார்செய்து கேரளா, குமரி மாவட்டம் உட்பட பல பகுதிகளில் விற்பனை செய்துவந்தார். இதை பெண்களிடம் ஓசைப்படாமல் விற்பதில் முகம்மது அலி கில்லாடி.

போலீசுக்கும் செக்போஸ்ட்டுக்கும் மாமுல் கொடுத்துதான் குட்காவை கொண்டுவருகிறோம். மற்ற புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தும்போதும், அதன்பிறகும் நாற்றம் எடுப்பதால் அதைப் பெண்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால்தான் பெண்கள் பயன்படுத்தும்விதமாக சைனி ஹைனியின் அரைசைஸ் அளவில் மடித்து பபுள்கம் போன்ற வாசனையுடன் இனிப்புச் சுவையுடன் தயாரிக்கிறோம். இதைப் பயன்படுத்தும்போது பபுள்கம் வாசனைதான் வரும். ஆனால் போதை என்பது மிதமான அளவில் இரண்டுமணி நேரம் நீடிக்கும். பெண்களுக்கு அது ராஜபோதை போன்று இருக்கும். இதை பயன்படுத்தும்போதோ அதன்பிறகோ யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. அவர்களின் நடவடிக்கைதான் சந்தேகத்தை ஏற்படுத்தும்.

கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிற பெண்கள், பணிச்சுமையைப் போக்க இதற்கு அடிமையாகிறார்கள். கேரளாவில் மருத்துவமனைகளில் பகல் இரவு டூட்டி பார்க்கும் நர்ஸ்கள், பெண் மருத்துவர்கள், சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலைசெய்யும் பெண்களுக்கும் சப்ளை செய்திருக்கிறோம்.

நாகர்கோயிலில் பெண்கள் இரவு-பகல் வேலை செய்கிற மீன்வலை கம்பெனிகள் அதிகம் இருக்கிறது. அந்த பெண்களில் பலர் இதற்கு அடிமைதான். தமிழகம், கேரளாவில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டிருப்பதால் கடைகளில் பபுள்கம் குட்கா விற்பனை செய்வதில்லை. இதற்கென்று வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் நேரிடையாகவே கஞ்சா மாதிரி கஸ்டமர்களைத் தேடிச்சென்று விற்கிறார்கள்.

dd

உதாரணமாக கல்லூரியில் ஒரு மாணவியை தொடர்பில் வைத்துக்கொண்டு அவள் மூலம் மற்ற மாணவிகளுக்கு சப்ளை ஆகிறது. ஒரு பாக்கெட் 40 ருபாய்க்கு விற்கப்படுகிறது. சிறிய சைசில் இருப்பதால் உதடு மற்றும் நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்டால் தெரியவே தெரியாது. இதை அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. மற்ற பகுதிகளுக்கு இதை விரிவுபடுத்தவில்லை''’என்கிறார் பிடிபட்ட முகம்மது அலி.

டி.எஸ்.பி. கார்த்திகேயன் கூறும்போது, ""இந்த கும்பல் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ஒரு பெரிய நெட்வொர்க்கை வைத்திருக்கிறது. அவர்களையும் விரைவில் கைது செய்துவிடுவோம். குட்கா பொருட்கள் எல்லாம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில்... இந்தக் கும்பல் போலி கம்பெனி பெயரில் புதிதாக ஒன்றை தயாரித்து விற்பனை செய்துவந்திருக்கிறார்கள்''’என்றார்.

""அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மனம் வைக்காதவரை…குட்கா, பபுள்கம் விற்பனைக்குத் தடைபோட்டால் லாலிபாப்பாக மாறி இன்னொரு இடத்தில் விற்பனைக்கு வரும். மற்றபடி தடையெல்லாம் பெயருக்குத்தான்'' என்கிறார்கள் சமூக அக்கறையுள்ளவர்கள்.

-மணிகண்டன்