கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற பெரும்வெற்றி, பா.ஜ.க. பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி ஆகிய அனைத்துக்கும் காரணம் சபரிமலை ஐயப்பன் தான். அதேபோல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் முருகனை வைத்து வெற்றிபெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது என்கிறார் கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடு போகிறது என பெரிய புகார் எழுந்தது. அதில் பத்மகுமார் என்கிற சி.பி.எம். தலைவர் சபரிமலை பூசாரிகளோடு சேர்ந்து தங்கத்தைத் திருடினார் என கேரள சி.பி.எம். அரசின் காவல்துறையே விசாரணை செய்தது. ஏற்கெனவே, ‘சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்’ என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த சமயத்தில், ‘சிக்கன் கலந்த உணவை எடுத்துக்கொண்டு போய் இஸ்லாமியப் பெண்கள் சபரிமலையில் சாப்பிட சி.பி.எம். அரசு அனுமதித்தது’ என ஒரு பெரிய பொய்ப் பிரச்சாரத்தை பா.ஜ.க. பரப்பியிருந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சி.பி.எம். தலைமை தாங்கிய இடது ஜனநாயக முன்னணியை இந்தப் பிரச்சாரம் பெரிய அளவில் பாதித்தது. அதனால் தமிழக அரசு முருகன் மாநாடு நடத்தியது போல் ஐயப்பன் மாநாடு ஒன்றை கேரள சி.பி.எம். அரசு நடத்தியது. 

Advertisment

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் என்பவர் ஒரு செக்ஸ் புகாரில் சிக்க, அந்த புகாரை ஐயப்பன் விவகாரத்திற்குப் பதிலடியாக கேரள அரசு பிரச்சாரம் செய்தது. கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு அந்த செக்ஸ் புகாரை ஆயுதமாக சி.பி.எம். கையிலெடுக்க, பா.ஜ.க.வும், காங்கிரசும் ஐயப்பன் கோயிலில் சி.பி.எம். கொள்ளையடித்ததை மறைக்கவே அந்த செக்ஸ் புகாரை சி.பி.எம். பயன்படுத்துகிறது என பிரச்சாரம் செய்தார்கள். அத்துடன் கேரளம் முழுவதும் பெண்களை அணி திரட்டி, ஐயப்பன் கோயிலுக்கு ஆதரவாகவும், அதில் சி.பி.எம். செய்த தங்கத் திருட்டுக்கு எதிராகவும் என ‘திருவிளக்கு பூஜையை காங்கிரசும் பா.ஜ.க.வும் ஐயப்ப பக்தர்கள் என்கிற பேரில் நடத்தினார்கள். கேரள இந்துப் பெண்கள் மத்தியில் பா.ஜ.க.வும், காங்கிரசும் ஐயப்பனை முன்னிறுத்தி செய்த அந்தப் பிரச்சாரம், கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அடிகோலியது. தமிழகத்தில் குளச்சலில் அமையவிருந்த துறைமுகத்தை மாற்றி திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் அதானியின் துறைமுகமாக பா.ஜ.க. கொண்டுவந்தது. அந்த நன்றிக்கடனுக்காக, திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க.வுக்கு பரிசளித்தனர் திருவனந்தபுரம் மக்கள். 

Advertisment

நரேந்திர மோடியே கொண்டாடும் இந்த வெற்றியின் முக்கிய அம்சமான ஐயப்ப விவகாரத்தை தமிழகத்திற்கு முருகன் பெயரில் ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வினரை அழைத்து, கேரள ஐயப்ப கோயில் விவகாரம் போல திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை நீங்கள் பெண்களைத் திரட்டி பிரச்னையாக உருவாக்குங்கள்’ என உத்தரவிட்டது. சமீபத்தில் கும்ப கோணத்தில் நடந்த பா.ஜ.க.வின் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் கலந்துகொண்டு இதற்கான ஒரு செயல்திட்டத்தை வகுத்தார். 

பா.ஜ.க.வின் கிராமப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட   அந்த கூட்டத்தில், தென் மாவட்டங்களில் பெண்கள் மத்தியில், "திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை தி.மு.க. அரசு ஏற்ற மறுக்கிறது, சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க., முருகனுக்கு எதிராக செயல்படுகிறது. திருப் பரங்குன்றம் விளக்குத் தூணில் தீபம் ஏற்றுவது முருகனைக் கும்பிடும் தமிழர்களின் அடிப் படை உரிமை. தமிழ்க் கடவுளான முருகனுக்கு ஒரு தீபம் கூட முருகனது பிறந்தநாளான கார்த்திகையில் தி.மு.க. அரசு ஏற்ற மறுக்கிறது என  பிரச்சாரம் செய்யுங்கள். ஆன்மிகவாதிகளான பெண்களிடம் செய்யப்படும் இந்தப் பிரச்சாரம் தி.மு.க.விற்கு எதிரான பிரச்சாரமாக அமை யும்'' என பா.ஜ.க. வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. 

Advertisment

"பா.ஜ.க. இந்தப் பிரச்சாரத்தை மேலும் வேகப்படுத்த கேரளாவிலிருந்து குழுக்களை எல் லையோர தமிழக கிராமங்களுக்கு அனுப்பி வைத் துள்ளது'’ என்கிறார் கள் அரசியல் பார்வையாளர்கள்.      

______________
இறுதிச் சுற்று!
"பா.ம.க.வை விட்டு விலகுகிறேன்!'' -ஜி.கே.மணி உருக்கம்!

kerala-bjp1

டிசம்பர் 15, திங்களன்று, பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்... "என் அப்பாவையும், என்னையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டார் என அன்புமணி கூறுகிறார். என்னை துரோகி எனச் சொல்வது வேதனையாக இருக்கிறது. உங்கள் மகன் அன்புமணியை நீங்கள் பார்க்காதீங்கள் என நான் சொல்ல முடியுமா? இல்லை, நான் சொன்னால் ராமதாஸ் கேட்பாரா? பிறகு எப்படி நான் அவர்களை பிரிக்க முடியும்? ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும். நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால்தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டுமென்று ராமதாஸிடம் நான்தான் சொன்னேன். பா.ம.க.வுக்கு அன்புமணி தலைவர் இல்லை. நிறுவனர் ராமதாஸுக்கே அதிகாரம் உள்ளது. அன்புமணி ஊர், ஊராக அலைந்தாலும் மக்கள் செல்வாக்கு ராமதாஸுக்குத்தான் உள்ளது. அன்புமணி என்னை துரோகி எனக் கூறினால் நானும், என் மகனும் பா.ம.க.வை விட்டு வெளியேறிவிடுகிறோம்'' என உருக்கமாகப் பேசினார். 

-கீரன்