டிகர் விஜய்யின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் பரபரப்பான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணம் 60,000 பேரை திருச்சிக்கு வரவழைத்தது. ஆனால், நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுப்பயணத்தில்  40,000 பேர், திருவாரூரில் 35000 பேர் என வரவர கூட்டம் குறைந்தது. திருச்சியில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் நாகப்பட்டினத்துக்கும், திருவாரூருக்கும் வரவில்லை. அதனால் நாகை, திருவாரூரில் கூட்டம் குறைந்தது என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். 

Advertisment

கூட்டம் திரட்டுவதற்காக, கூட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை இடுவதற்காகவும் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் போன்றோர் முன்கூட்டியே அனுப்பப் படுகிறார்கள். சனிக்கிழமை வார இறுதி என்பதால் பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார் விஜய். ஆனால், உண்மையில் அவரது பிரச்சாரத்துக்கு கூட்டம் திரள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் ஒவ்வொரு பிரச்சாரத்துக்கும் ஒரு வாரம் கேப் விடுகிறார். அந்த கேப்பில் த.வெ.க. தலைமைக் கழக நிர்வாகிகள் அந்தந்த ஊர்களுக்கு பயணம் செய்து அங்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறார்கள். பிரச்சாரம் நடத்தும் இடத்திற்கு வருவதற்கு வாகன வசதிகளை செய்து தருகிறார்கள். மற்றவை வருபவர்களின் செலவு என்றாலும் அதற்கும் அடிப்படை ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. மாநாடு போன்று ஒருநாள் முழுக்க இந்த பிரச்சாரம் அமையவில்லை என்பதால் கூடுதல் செலவு இல்லாமல் தொண்டர்கள் வந்து விடுகிறார்கள். ஆனால், இலட்சக்கணக்கில் தொண்டர்கள் திரளுவதில்லை என்பதால் கூட்டத்தைப் பிரம்மாண்டமாக காண்பிப்பதற்காக குறுகிய இடங்களாகப் பார்த்து தனது பிரச்சாரத்தை விஜய் அமைத்து வருகிறார். 

பிரச்சாரத்தில் விஜய் பேச வேண்டியதை ஜான் ஆரோக்கியசாமி வடிவமைக்கிறார். மண் அரிப்பால் அலையாத்திக் காடுகள் பாதிக்கப்படுவதை ‘மீன் அரிப்பு’ என எழுதிக்கொடுத்த ஜான் ஆரோக்கியத்தின் ‘டைப்பிஸ்ட்’ அந்த வேலையைவிட்டு நீக்கப்பட்டார். நாகையி- ருந்து 1920களில் திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்ட ‘இரயில் பெட்டிகள் பராமரிப்பு ஒர்க்ஷாப்பை ‘இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை’ என தப்பும் தவறுமாக விஜய் உளறியது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திய ‘ஃப்ரண்ட் லைன்’ ஆசிரியர் விஜய் சங்கர் “அந்த மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளுடன் சேர்ந்து தந்தை பெரியாரும் போராடி னார்.. சிறைக்கும் சென்றார்” என நினைவுகூர்ந்தார். நாகப்பட்டினம் கூட்டத்தில் விஜய் பேசிய அரசு மருத்துவமனை பற்றிய புகாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்தார். அதே கூட்டத்தில் விஜய் எழுப்பிய ‘விவசாயிகளின் தானிய மூட்டைகளுக்கு காசு வாங்குகிறார்கள்’ என்கிற கேள்விக்கு திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான  பூண்டி கலைச்செல்வன் பதிலளித் தார். ‘வெளிநாட்டு முதலீடா.. வெளிநாட்டில் முதலீடா?’ என விஜய் எழுப்பிய கேள்விக்கு முதல்வர்

ஸ்டாலினே பதில் சொன்னார். வெளிநாட்டு முதலீடுகள் தமிழக தொழில் துறைக்கு எந்த அளவிற்கு குவிகின்றன என்பதற்கு விஜய் பேரைக் குறிப்பிடாமல் முதல்வர் ஸ்டாலின் பதில் சொன்னார். 

Advertisment

தமிழக அரசியல் வானில் அ..மலையும் கவர்னர் ரவியும்தான் தொடர்பே இல்லாமல் அவதூறுகளாக பேசிக் கொண்டிருப்பார்கள்.  அந்த வேலையை இப்பொழுது விஜய் செய்கிறார் என வி.சி.க. எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் பதில் சொன்னார். விஜய்யின் இந்த முதிர்ச்சியற்ற பேச்சுகளைப் பற்றி "கேள்வி எழுப்பும் பேச்சு ஸ்டைல்'’என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். ஆனால், விஜய்யின் இந்தப் பேச்சுக்கள் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுப்பப்படுகிறது என்பதற் குப் பதில் இல்லை. முதல்வரை எதிர்த்து அவதூறாக விஜய் பேசுவதை கிரிமினல் அவதூறு வழக்குகளாக கோர்ட்டில் ஏன் பதிவு செய்யக்கூடாது என தி.மு.க. சட்ட வல்லுனர் கள் கேள்வி எழுப்பி னார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதுபோல் நிறைய கிரிமினல் அவதூறுகளை தொடர்ந்திருக்கிறார். அப்படி தி.மு.க. வழக்குகளைத் தொடர்ந்தால் விஜய்யின் இந்த அவதூறுப் பேச்சு நின்றுவிடும் என்ற தி.மு.க சட்ட வல்லுனர்களின் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்திவருகிறது. 

"கூட்டமெல்லாம் ஓட்டு ஆகாது.. இது எனக்கு மட்டுமல்ல.. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கூட்டத்தைச் சேர்த்துவிட்டால் ஓட்டு வாங்கி விட முடியும் என யாரும் கற்பனை செய்யவேண்டாம்' என கமல் மறைமுகமாக விஜய்யை தாக்கினார். கமலின் இந்தப் பேச்சும் தி.மு.கவின் ரியாக்ஸன்களில் ஒன்று என்கிறார்கள். விஜய்க்கு எதிராக கமலை களத்தில் இறக்கி அவர் மூலம் முதல்வரை புகழ வைத்து விஜய்யின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள தி.மு.க. முடிவு செய்துள்ளது. ரஜினி போன்ற நடிகர்களை தேர்தல் முடியும்வரை அவ்வப்போது பேசவைத்து விஜய்யை எதிர்கொள்ளவும் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பெரிய பலமாகப்  பார்க்கப்படுவது அவருக்கு முக்கியத்துவம் அளித்து ஒளி பரப்புக்களை மேற்கொள்ளும் மீடியாக்களின் செயல்தான். அதை தமிழக முதல்வர், துணை முதல்வர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்கப் பிரச்சாரத்தை ஒளிபரப்பச் செய்து முறியடிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

“விஜய் மொத்தம் ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வாக்குகள்தான் வாங்க வாய்ப்பு உண்டு எனக் கணிக்கப்பட்டாலும் அது எந்தத் தொகுதியில் யாரைப் பாதிக்கும் என ரகசிய சர்வேக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்        பட்டு வருகின்றன. இதற்கிடையே காங்கிரஸ், டி.டி.வி., ஓ.பி.எஸ்., அ..மலை ஆகியோர் விஜய்யை நோக்கி வருகிறார்கள் என்கிற செய்தி விஜய் வட்டாரத்திலிருந்தே வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. மொத்தத்தில் ஒரு ‘அரசியல் அவியலாகவே விஜய்யின் பயணம் அமைந்துள்ளது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.  

Advertisment