Advertisment

கோவிலின் புனிதத்தைக் கெடுக்கும் அதிகாரிகள்! அமைச்சரைஎதிர்பார்க்கும் பக்தர்கள்?

dd

கொரோனா இரண்டாவது அலையின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. அதுபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருக்கோயி லும் மூடப்பட்டிருந்தது. ஆனால் மற்ற கோவில்களைப் போலவே கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மூலமாக நான்கு கால பூஜைகள் மற்றும் கோவிலுக்கு வெளியே அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் கணக்கர் ஜெயபிரகாஷ் உள்பட கோவில் பணியாளர்களும் அர்ச்சகர்களும் தினமும் கோவிலுக்கு வந்துபோவது வழக்கம். கணக்கர் ஜெயபிர காஷும், செயல் அலுவலர் மகேஸ்வரியும் மட்டும் அர்ச்சகர்களும், பணியாளர்களும் கோவிலிலிருந்து கிளம்பியபின்பும் நடுஇரவு வரை கோவிலில் இருந்துவிட்டுத்தான் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எதிரொலித்ததால் நாம் விசாரணையில் இறங்கினோம்.

Advertisment

ff

அபிராமி அம்மன் கோவிலுக்குச் சொந்தமாக 65-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் உள்ள பல கடைக்காரர்கள் கடைகளை விரிவு படுத்துவதற்காக முறையாக அனுமதி வாங்கா மல், கணக்கர் ஜெயபிரக

கொரோனா இரண்டாவது அலையின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. அதுபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருக்கோயி லும் மூடப்பட்டிருந்தது. ஆனால் மற்ற கோவில்களைப் போலவே கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மூலமாக நான்கு கால பூஜைகள் மற்றும் கோவிலுக்கு வெளியே அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் கணக்கர் ஜெயபிரகாஷ் உள்பட கோவில் பணியாளர்களும் அர்ச்சகர்களும் தினமும் கோவிலுக்கு வந்துபோவது வழக்கம். கணக்கர் ஜெயபிர காஷும், செயல் அலுவலர் மகேஸ்வரியும் மட்டும் அர்ச்சகர்களும், பணியாளர்களும் கோவிலிலிருந்து கிளம்பியபின்பும் நடுஇரவு வரை கோவிலில் இருந்துவிட்டுத்தான் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எதிரொலித்ததால் நாம் விசாரணையில் இறங்கினோம்.

Advertisment

ff

அபிராமி அம்மன் கோவிலுக்குச் சொந்தமாக 65-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் உள்ள பல கடைக்காரர்கள் கடைகளை விரிவு படுத்துவதற்காக முறையாக அனுமதி வாங்கா மல், கணக்கர் ஜெயபிரகாஷுக்கும் செயல் அலுவலரான மகேஸ்வரிக்கும் பல லட்சங்களை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு கடைகளை விரிவுபடுத்துகிறார்கள். இதுதவிர, கோவிலின் செயல் அலுவலர் கண்காணிப்பிலுள்ள கந்த கோட்டம் முருகன் கோவில், செல்லாண்டி யம்மன் கோவில்களுக்குச் சொந்தமான கடைகளில் வாடகை வசூல் செய்வதிலும் இவர்கள் கூட்டுக் கொள்ளையடித்து வருகிறார் கள். கோவிலிலுள்ள அம்ம னுக்கு பக்தர்கள் கொடுக்கக் கூடிய நகைகளுக்கு முறையான ரசீதும் கொடுக்காமல் மூடி மறைக்கிறார்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால், இந்த கொரோனா லாக்டவுன் காலத்திலும் பூஜைக்கெனக்கூறி, பொய்யான வவுச்சர் போட்டு வங்கியில் பணமெடுத்து, கொரோனா தடுப்புப்பொருட்கள் வாங்குவது என அனைத்திலும் கூட்டாக ஊழல் செய்கிறார்கள். இதற்கு மூல காரணம் கணக்கர் ஜெயபிரகாஷ்.

ff

Advertisment

12 வருடங்களுக்கு முன்பு, முன்னாள் அற நிலையத்துறை அமைச்சர் மூலம் கோவிலின் கணக்கர் பதவிக்கு வந்த ஜெயப்பிரகாஷ், கோவிலின் செயல் அதிகாரியாக வருபவர் ஒரு ஆண் என்றால், அவரது வீக்னெஸைத் தெரிந்து கொள்ள சிறிதுகாலம் எடுத்துக்கொண்டு பின்னர் மடக்கிவிடுவார். அதன்பின்னர் இஷ்டம்போல ஊழல் செய்து கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். பெண் அதிகாரி பணிக்கு வந்தால், தங்க நகைகளைப் பரிசளித்து வசியப் படுத்திவிடுவார். இவருக்குக் கூட்டாகத்தான் கடந்த மூன்றாண்டுகளாக மகேஸ்வரி செயல்பட்டுவரு கிறார். புனிதமான கோவிலின் உள்ளே மது பாட்டில்களும், அசைவ பிரியாணியும் வருகிறது. இதற்கு உடன்படாத பணியாளர்களை சஸ்பெண்ட் செய்வதுவரை லஞ்சம் கொடுத்தே சாதித்து தங்கள் பவரைக் காட்டுவார். கோவில் கடைகளின் வாடகை யில் ஒரு பங்கைத் தனியாகப் பெற்றுக்கொள்வார்.

இக்கோவிலின் கட்டுப்பாட்டிலுள்ள செல்லாண்டியம்மன் கோவில் நிலத்தை தனியா ருக்கு விற்க முயற்சித்து, அப்பகுதி மக்கள், முன் னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடமும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் புகார் செய்ததால், ஜெயப்பிர காசையும், மகேஸ்வரியையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர். உடனே இருவரும் பதறிபோய், கோவில் அறங்காவலரான வேலுச்சாமியுடன் சீனிவாசனின் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தி உத்தரவை வாபஸ்பெற வைத்தனர். இதன்பின்னர் இவர்களின் மிரட்டல் உருட்டல் அதிகரித்ததுடன், அவர்கள் இருவரும் கோவிலுக் குள்ளேயே இரவு வெகுநேரமிருப்பதும், சில சமயம், வெளியே செல்வதுபோல் சென்றுவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்து இரவு 12... 2 மணிவரை கூட கோவிலுக்குள் இருந்துவிட்டு வருவதாகவும், கேட்டால் நிர்வாகப்பணி என்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக, பணி என்ற பெயரில் பொய் சொல்லி, கோவிலின் புனிதத்தன்மையைக் கெடுத்து வருகிறார்கள். இதைப்பற்றி அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்கள் கோவில் ஊழியர்கள்.

kovil

இது சம்பந்தமாக இந்துமுன்னணியின் மதுரை செயலாளர் சங்கரிடம் கேட்ட போது, "கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகளும் கோயிலுக்குள் தவறுகளும் நடப்பதாக சொல்லப் படுகிறது. அதோடு பழமைவாய்ந்த இந்த கோவிலை இடித்துவிட்டு புதிதாக கோவில் கட்டி, 5 ஆண்டு களுக்குமுன் கும்பாபிஷேகம் நடத்தியதற்கான வரவு செலவுக்கணக்கை இதுவரை தெரிவிக்கவில்லை. அதேபோல, பழைய கோவிலில் இருந்த கதவு, ஜன்னல், சாமி சிலைகள் உள்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை'' என்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கணக்கர் ஜெயபிரகாஷ் மற்றும் செயல் அலுவலர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, "அலுவலகப் பணிகள் இருப்பதால் அதை இரவு நேரத்தில் பார்க்கிறோம். மற்றபடி ஒன்றும் இல்லை. அதுபோல் கடைக்காரர்களிடம் வசூலோ, முறை கேடோ எதுவும் நடக்கவில்லை. தேவையில்லாமல் பொய்யான குற்றச்சாட்டை எங்கள்மேல் சுமத்துகிறார்கள்'' என்று சர்வசாதாரணமாகக் கூறினார்கள்.

இதுகுறித்து இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் ஜெயபாரதி, "நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கும் புகாராக வந்ததால் விசாரித்துவருகிறேன். கணக்கர் ஜெயப்பிரகாஷ், செயல் அலுவலர் உமா மகேஸ்வரி இருவர்மீதும் அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் கோவிலின் புனிதத்தன்மை காப்பாற்றப்படும்'' என்றார். இதுபற்றி அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபுவிடம் கூறியபோது பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், "இது சம்பந்த மாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார். அமைச்சரின் அதிரடி நடவடிக்கையை எதிர் பார்க்கிறார்கள் பக்தர்கள்

nkn100721
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe