"சந்தேகம்... பயம்... மடமைத்தனம்...' ஆகியனவற்றின் மொத்த உருவமாய் இருக்கின்றார் பழனிச்சாமி. மா.செ. தொடங்கி ந.செ., ஒ.செ. என கட்சியின் கட்டமைப்பிலுள்ள எவரையும் நம்புவதில்லை எடப்பாடி பழனிச்சாமி. தான் கழகத்தின் பொதுச்செயலாளர், கழகத்தில் தான் வைத்ததுதான் சட்டமென சர்வாதிகார மனப் போக்கே பா.ஜ.க.விடம் மண்டியிட வைத்துள்ளது. "மாப்பிள்ளை அவர்தான்... அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என எடப்பாடியின் தான்தோன்றித்தனத்தை காரணியாக்கி அவரை ஒதுக்கி, கூட்டணிக்கு தலைவராகியுள்ளது பா.ஜ.க.' என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் லேட்டஸ்ட் டாக்.

Advertisment

மார்ச் முதல் தேதியன்று மதுரைக்கு வந்த மோடி கூடியிருந்த கூட்டத்தினைப் பார்த்து, "அடுத்து இங்கு வருவது என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான்'' என்றார். கப்சிப் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி. பா.ஜ.க.விலிருந்து யாராவது கூட்டணி ஆட்சிதான் அடுத்து என்றால் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து "அப்படியெல்லாம் இல்லை, கூட்டணி ஆட்சி கிடையாது' என வார்த்தைகளால் நெருப்புப் பந்துகள் விழும். ஆனால், மதுரையில் மோடி பேசிய வார்த்தைக்கு பதிலில்லை.

Advertisment

"மதுரை மீட்டிங்கிற்கு அடுத்த நாட்களில் எடப்பாடி பழனிச்சாமியை கட்டாயமாக வரவழைத்து சந்திப்பினை நடத்தினார் அமித்ஷா. ஆனால் அதற்கு முந்தைய அ.தி.மு.க.வின் "திமிர்' நாட் களை நினைவில் கொள்ளவில்லை. 2016ம் ஆண்டு களில் அ.தி.மு.க.வுடன் எப்படியும் பா.ஜ.க. இருக்க வேண்டும் என பியூஸ்கோயல் சென்னையிலேயே காத்திருந்து, பார்க்காமலே திரும்ப சென்றார். அதுபோல் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சரியாக 2024ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் சென்னையிலேயே எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க இரண்டு நாட்கள் காத்திருந்த தார். அதனை விடுத்து பா.ஜ.க. கட்சியின் மாநிலத் தலைவர்போல் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி. இது அ.தி.மு.க.விற்கே அவமானம். இதற்கெல்லாம் காரணம் கட்சியிலுள்ள அவருக்கு அடுத்த நிலை தலைவர்களை நம்பாததே'' என்கின்றனர் அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள்.

என்னதான் நடந்தது டெல்லியில்? "வெகுநேரம் காத்திருத்த லுக்குப் பிறகே அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. மூடிய அறைக்குள் பாஷ்யம் பில்டர்ஸ் அபினேஷ் உடன் இருக்க பழனிச்சாமியை சந்தித்திருக்கின்றார் அமித்ஷா. "உங்களுடைய மா.செ.க்கள் முதல் பல நிர்வாகிகள் தி.மு.க.வுடன் தொடர்பி-ருக்கின்றனர். இதோ ஐ.பி. ரிப்போர்ட்' என எடப்பாடி பழனிச்சாமி யிடம் அதனைக் கொடுக்க, லிஸ்ட்டில் உள்ள பெயர்களைப் பார்த்து அதிர்ந்தே விட்டாராம் அவர். பழனிச்சாமிக்கு நெருக்கமான "சேலம்' நபரும் அந்த லிஸ்ட்டில் இருந்ததுதான் பழனிச்சாமிக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியிருக்கின்றது. "எங்களைப் பொறுத்தவரை நீங்கள்தான் சி.எம். வேட்பாளர். ஆனால், அதற்கு முன் கூட்டணியில் எங்களுக்கு எவ்வளவு இடங்கள்.? என்பதனை உறுதிப்படுத்திவிடுங்கள். இல்லையெனில், எங்களுடைய முடிவிற்கு வாருங்கள். 160 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். இனி கூட்டணியில் எடுக்கும் முடிவு என்னுடையதே' என்றிருக்கின்றாராம் அமித்ஷா. இது அப்படியே பாஷ்யம் பில்டர்ஸ் அபினேஷால் மொழிபெயர்க்கப்பட்டு பழனிச்சாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அப்செட்டில்தான் சென்னைக்கு வந்தார் பழனிச்சாமி'' என்கின்றார் பழனிச்சாமியின் நெருங்கிய வட்டத்திலுள்ள சேலம் மாவட்ட நிர்வாகி ஒருவர்.

Advertisment

முன்னதாக, மதுரை மாநாட்டின்போது, "என்னுடைய கட்சிக்கு எவ்வளவு வேண்டும்? என்பதனை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். அ.தி.மு.க.விடம் எனக்கு பேச்சு இல்லை'' என முகத்திற்கு நேராகவே கூறியிருந்தார் டி.டி.வி. தினகரன். அது போல்தான் த.மா.கா. உள்ளிட்ட இன்னபிற கட்சிகளும். "பா.ம.க. வேண்டுமானால் நீங்கள் கொண்டுவந்ததாக இருக்கலாம். உங்களால்தான் ஓ.பி.எஸ்., சசிகலா, தே.மு.தி.க. வெளியே சென்றுள்ளது. இப்பொழுது புதிய தமிழகம் கட்சி தொடங்கி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தி.மு.க.வுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றது. இது அனைத்தும் உங்களுடைய எதேச்சதிகாரத்தாலேயே நடந்தது என்பதனை நீங்கள் இன்றுவரை உணரவில்லை'' என நேரடியாக பியூஸ் கோயல் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியதும் நினைவிருக்கலாம். அதன் எதிரொலியே டெல்லிக்கு வரவழைத்து வறுத்தெடுத்தது.

நாம் கூறிய ஆட்கள் வென்றுவிட் டால் பின்னாளில் சிபாரிசு செய்த ஆட்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்கள், நமக்கு இருக்க மாட்டார் கள் என அவராகவே கற்பனை செய்து கொள்கின்றார். அதுபோக மகன் மிதுன் கூறுவதை மட்டும் ஏற்றுக்கொள்கின் றார். உண்மையான கள நிலவரம் அவருக்கு என்ன தெரியும்? கட்சிக்கு இப்பொழுது வேண்டுமானால் அவர் பொதுச் செயலாளராக இருக்கலாம். நாளை வேறு ஒருவர் வருவார். அது தெரியவில்லை எடப்பாடி பழனிச் சாமிக்கு'' என்கின்றனர் கட்சியிலுள்ள "மணியான, குமாரான' இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமி ழகத்தில் பா.ஜ.க. தானாக தலைவரான நிலையில், அ.தி.மு.க.வின் பொதுநிதி யான ரூ300 கோடி அளவிலான பணத் திற்கான கணக்குகள் காட்டப்பட வில்லை என்கின்றது பொதுக்குழு. இந்த காரணியும் பழனிச்சாமிக்கு எதிராக எழுந்த நிலையில்... அதனை எடப்பாடி பழனிச்சாமிக்கு கோடிட்டுக் காட்டிய பா.ஜ.க. தரப்பு, "வரும் நாட்களில் தி.மு.க.விற்கு எதிரான அட்டாக், தேர்தல் செலவு' இது குறித்தே அடுத்து பேசவேண்டும். கூட்டணியின் சீட் குறித்து பேசவேண்டாம்''" என்கின்ற உத்தரவினையும் போட்டுள்ளதாக தகவல்.