Advertisment

சர்வாதிகார அதிகாரிகள்! கொந்தளிப்பில்  விவசாயிகள்!

farmer

டலூர் மாவட்டத்தில் கீழ்ச்செருவாய் பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. ஏரியில் 28 அடி வரை நீரை தேக்கலாம். தற்போது 19 அடிவரை தண்ணீர் உள்ளது.

Advertisment

இதிலுள்ள மேல்மட்டக் கால்வாய், கீழ்மட்டக் கால்வாய் வழியாக இரு பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது, தண்ணீரை திறந்துவிடுவது தொடர்பாக, 11ஆம் தேதி, கீழ்ச்செருவாய் பொதுப்பணித்துறை வளாகத்தில் விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தினார்கள். 500 விவசாயிகள்வரை கலந்துகொண்டார்கள்.

Advertisment

அதில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், தற்போது தண்ணீர் குறைவாக இருக்கும் சூழலில், மழை நீரைக்கொண்டு நடவு செய்துள்ள பகுதிகளுக்கு மட்டுமாவது இந்த தண்ணீரை திறந்துவிட்டு பயிர்களை காப்பாற்ற வேண்டும். இருக்கிற தண்ணீரை நம்பி புதிதாக நெல் நடவுசெய்து, வளர்த்தெடுப்பது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொதுப்ப

டலூர் மாவட்டத்தில் கீழ்ச்செருவாய் பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. ஏரியில் 28 அடி வரை நீரை தேக்கலாம். தற்போது 19 அடிவரை தண்ணீர் உள்ளது.

Advertisment

இதிலுள்ள மேல்மட்டக் கால்வாய், கீழ்மட்டக் கால்வாய் வழியாக இரு பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது, தண்ணீரை திறந்துவிடுவது தொடர்பாக, 11ஆம் தேதி, கீழ்ச்செருவாய் பொதுப்பணித்துறை வளாகத்தில் விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தினார்கள். 500 விவசாயிகள்வரை கலந்துகொண்டார்கள்.

Advertisment

அதில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், தற்போது தண்ணீர் குறைவாக இருக்கும் சூழலில், மழை நீரைக்கொண்டு நடவு செய்துள்ள பகுதிகளுக்கு மட்டுமாவது இந்த தண்ணீரை திறந்துவிட்டு பயிர்களை காப்பாற்ற வேண்டும். இருக்கிற தண்ணீரை நம்பி புதிதாக நெல் நடவுசெய்து, வளர்த்தெடுப்பது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, விவசாயிகளின் கருத்தை புறந்தள்ளிவிட்டு, இருக்கும் தண்ணீரை கீழ்மட்டக் கால்வாய் பகுதிக்கு மட்டும் ஏழாயிரம் ஏக்கர் பயிர் செய்யும் வகையில் 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தீர்மானம் செய்து, அதை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கு மேல்மட்டக் கால்வாய் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மேல்மட்டக் கால்வாய் இரண்டாவது கிளைக் கால்வாய் பகுதியை சேர்ந்த கோழியூர், கோடங்குடி, ஆவினங்குடி, செங்கமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், செங்கமேடு கிராமத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், தற்போது மேல்மட்டக் கால்வாய் இரண்டாவது கிளைப் பகுதியில் சுமார் 3,000 ஏக்கர் நடவு செய்துள்ளோம். அதைக் காப்பாற்ற ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயம் செய்யமுடியாத விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர்.

ஆவினங்குடியைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் தமிழரசன் நம்மிடம், "ஒவ்வொரு ஆண்டும் வெலிங்டன் ஏரித்தண்ணீர் திறக்கும் முன்பு  விவசாயிகளின் கருத்தை கேட்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார்கள். ஆனால் விவசாயிகளின் கருத்தை புறந்தள்ளிவிட்டு சர்வாதிகாரப் போக்குடன் முடிவெடுக்கிறார்கள். கடந்த ஆண்டு அனைத்துப் பகுதிகளுக்கும் 120 நாட்கள் முழுமையாகத் தண்ணீர் விடப் போவதாக அறிவித்தனர். ஆனால் ஒரு மாதம் மட்டுமே மேல்மட்டக் கால்வாயில் ஆவினங்குடி வரை தண்ணீரை விட்டனர். சுமார் 40 கிராமங்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. இந்த ஆண்டு 19 அடி மட்டுமே தண் ணீர் நிரம்பியுள்ளது. மழை நீரை வைத்து பயிரை நடவு செய்து விடுவோம், ஏரிப் பாசன நீரைக் கொண்டு நெல்லை விளையவைத்துவிடலாமென நினைத்தோம். ஆனால் பாசனத் தண்ணீர்விடக் கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கீழ்மட்டக் கால்வாய் பகுதிக்கு மட்டும் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமென்று முடிவு செய்தனர். இதற்கு மேல்மட்டக் கால்வாய் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார். நட்ட பயிரைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

farmer1

கொட்டாரம் விவசாயி கண்ணன், "கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரியாகப் பெய்து ஏரி நிரம்பி எங்களை வாழவைத்தது. அந்த நம்பிக்கையில் மழைக்காலத்தில் நடவு செய்துவிட்டோம். கருத்துக்கேட்புக் கூட்டத்தில், கிராமங்களில் ஏற்கெனவே நடவு செய்துள்ள விவசாய நிலங்களை கணக்கெடுத்து, அப்பகுதிக்கு மட்டும் தண்ணீரை திறந்துவிடும்படி கேட்டோம். ஆனால் அதை கண்டுகொள்ளாமல், கீழ்மட்டக் கால்வாய் பகுதியில் 7,000 ஏக்கர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமென்று சர்வாதிகாரத் தனமாக முடிவெடுத்த பொதுப் பணித்துறை டிவிஷனல் பொறியாளர் பாலமுருகன், உதவிப் பொறியாளர்கள் வெங்கடேசன், செந்தில்குமார் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

செங்கமேடை சேர்ந்த 80 வயது விவசாயி தர்மலிங்கம், "நான் தீவிர தி.மு.க.காரன். நடுத்தர விவசாயி. இந்த ஆண்டு நம்பிக்கையோடு மனைவியின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் வாங்கி அடமானம் வைத்து விவசாயம் செய்துள்ளேன். அதிகாரிகள் தண்ணீர் விட மறுப்பதால் பயிர்கள் கருகும் நிலை. தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை. அருமையாக ஆட்சி செய்யும் முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும்வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்படு கிறார்கள்'' என குற்றம்சாட்டினார்.

farmer2

இந்த ஏரி உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஏரியில் தண்ணீர் குறைவாக இருக்கும்போதும் சரி, முழு அளவு நிரம்பும்போதும் சரி, கீழ்மட்டக் கால்வாய் பகுதிக்கே அதிக தண்ணீரை வழங்கிவருகிறார்கள். கடந்த 1988, 1989ஆம் ஆண்டுகளில் 18 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியது. அப்போதும் இதேபோல் முடிவெடுக்க... போராட்டத்தில் இறங்கியதால் அதிகாரிகள் முடிவை மாற்றி னார்கள். இப்போதும் சர்வாதிகாரமாக அதிகாரிகள் பிரச்சனை செய்கிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்கிறார்கள் நடுநிலை யாளர்கள்.

-எஸ்.பி.எஸ்.

nkn241225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe