Advertisment

நலம் தரும் நட்சத்திரம் 20

star

 

 

"இலவு முருக்கு அலர்விழியும் தொண்டை தூதுளைப்போல்                     
செவ்விதழார் மாதே                                                    
பல திசையில் சஞ்சாரம் பிரியன் சௌந்தரியன் பாண் மிகுந்த                                                                            
புலவன் முழுக்குப் பிரியன் சுகந்த பரிமளப்பிரியன் பொன்னும்                     
உள்ளான்                                        
வலப்புறம் மருவுடையான் நியாயன் அற்பதித்திரையான் மகத்தினானே.''

-சாதக அலங்காரம்

Advertisment

பொருள்: மக நட்சத்திரத்தில் பிறந்தவர், பல திக்குகளில் பிரயாணம் செய்வார். வாசனை திரவியங்களில் விருப்பமுள்ளவன். செல்வமும், செல்வாக்கும் உடையவன்.

ஜோதிடப் பிதாமகராக

 

 

"இலவு முருக்கு அலர்விழியும் தொண்டை தூதுளைப்போல்                     
செவ்விதழார் மாதே                                                    
பல திசையில் சஞ்சாரம் பிரியன் சௌந்தரியன் பாண் மிகுந்த                                                                            
புலவன் முழுக்குப் பிரியன் சுகந்த பரிமளப்பிரியன் பொன்னும்                     
உள்ளான்                                        
வலப்புறம் மருவுடையான் நியாயன் அற்பதித்திரையான் மகத்தினானே.''

-சாதக அலங்காரம்

Advertisment

பொருள்: மக நட்சத்திரத்தில் பிறந்தவர், பல திக்குகளில் பிரயாணம் செய்வார். வாசனை திரவியங்களில் விருப்பமுள்ளவன். செல்வமும், செல்வாக்கும் உடையவன்.

ஜோதிடப் பிதாமகராகிய சகாதேவர் தருமர் தான் பட்டம் சூட்டிக் கொள்ளும் இராஜசுய யாகத்திற்கு நாள் குறித்துக் கொடுத்தார். ஆனாலும் தருமர் சக்கரவர்த்தியால் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. இதுவே மகாபாரதம் கூறும் உண்மை. பட்டம் சூடும் நல்ல நாளை கணிப்பதற்குமுன் தருமருக்கு சக்கரவர்த்தி யாகும் யோகமுள்ளதா? வனவாசம் செல்லும் யோகமுள்ளதா என்று ஆராய்ந்திருந்தால் இந்த பிழை நேர்ந்திருக்காது. அதுபோல், மணமக்களின் ராசி, நட்சத்திரப் பொருத்தங்களைப் பார்பதும் சரியான முகூர்த்தநாளை குறிப்பதுமே, திருமணத்தை உறுதிசெய்யாது. முதலில் மணமக்களின் ஜாதகப்படி திருமண யோகத்தைத் தரும் தசாபுக்தி அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்துக்கொண்ட பிறகே,  பொருத்தம் பார்க்கவேண்டும். இல்லாவிடில் பொருத்தம் வருத்தமாக முடியும். 

அவரவர் நட்சத்திரம் அமைத்துக்கொடுக்கும் தசாபுக்தி எனும் பாதையே, வாழ்க்கை பயணத்தை உறுதிசெய்யும்.

மக நட்சத்திரத்தின் சிறப்பு

Advertisment

வெள்ளிக்கிழமையும், மக நட்சத்திரமும், கூடும்நேரத்தில் பிறந்தவர்கள் சாதனை படைப்பார்கள். 

மக நட்சத்திரத்தின் வலிமை

* மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிறரை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பிறருக்கு அடங்க மாட்டார்.

* பிரயாணத்தில் அதிக நாட்டமுண்டு.

மக நட்சத்திரத்தின் பலவீனம்

* முன்கோபத்தால், நல்ல  வாய்ப்புகளை இழப்பான்.

கூட்டு கிரக பலன்

(மக நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது.)

* மக நட்சத்திரத்தில் சூரியனிருக்க வறுமை உண்டாகும்..

* செவ்வாய் அமர்ந்திருக்க அரசு ஆதரவினால் வருமானம் கிடைக்கும்.

* புதன் அமர்ந்திருக்க தொழிலில் புகழ் அதிகமுடையவர். 

* சுக்கிரன் அமர்ந்திருக்க தீய நட்பால் இல்வாழ்க்கைக் கெடும்.

* சனி அமர்ந்திருக்க எதிரிகளால் பழி வாங்கப்படுவார்.

* குரு அமர்ந்திருக்க செல்வந்தன்.

* ராகு அமர்ந்திருக்க இரு திருமண யோகமுண்டாகும்

* கேது அமர்ந்திருக்க சூதாட்டத்தில் பணம் இழப்பார்.

மக நட்சத்திர  பாத பலன்

* மக நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. எதிரிகளை வேர் அறுப்பவன். 

* மக நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், ரிஷப நவாம்சம். சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது. அவப்பெயரும், அவமானமும் உண்டாகும்.

* மக நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம். புதனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் உறுதியான கொல்கை உடையவர்.

* மக நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக  நவாம்சம். சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், பிறருடைய பேச்சைக்கேட்டு, சொந்தங்களைப் பகைப்பவன்.

* மக நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள் திருமணம், மந்திர பிரயோகம் போன்றவை செய்யலாம்.

மக நட்சத்திரநாளில் செய்யக் கூடாதவை

* ஞாயிற்றுக்கிழமையும் மக நட்சத்திரமும்கூடினால், சுப காரியங்கள் செய்யக்கூடாது.

பரிகாரம்

* வெள்ளிக்கிழமை, திருப்புள்ளானி, ஸ்ரீ ஆதி ஜெகன்னாதப் பெருமாளை தரிசனம் செய்தால், மக நட்சத்திரக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.

(மக நட்சத்திரம் நிறைவு பெற்றது).

செல்: 63819 58636

bala060925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe