அன்னதான நிதியில் அரோகரா! -பழனிமுருகன் பெயரில் மோசடி!

dd

"ஒரு லட்ச ரூபாய் அன்னதான மோசடியில் மலைக்கோயில் கண் காணிப்பாளர் முரளிக்கும், விஞ்ச் ஸ்டேஷன் கண்காணிப் பாளர் சண்முகவடிவுக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கு. இவர்கள் இருவரும் விஜிலென்ஸ் கண்காணிப்பிலும் இருந்துவருகிறார்கள்.

இருந்தாலும் இவர்களுக்கு பக்கபலமாக அமைச்சர்கள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது''’என பழனி திருக் கோயில் தேவஸ்தான பி.ஆர்.ஓ. கருப்பண்ணன் வெளிப்படை யாகவே பேசிய வீடியோ வாட்ஸப், பேஸ்புக்கில் வைர லாக பரவிவருவதைக் கண்டு விசாரணையில் இறங்கினோம்.

palani

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி வரக்கூடிய பக்தர்கள் உண்டியல் காணிக்கை போடுவது ஒரு பக்கமென்றால், வசதிபடைத்த பக்தர்கள் அன்னதானத்திற்கும

"ஒரு லட்ச ரூபாய் அன்னதான மோசடியில் மலைக்கோயில் கண் காணிப்பாளர் முரளிக்கும், விஞ்ச் ஸ்டேஷன் கண்காணிப் பாளர் சண்முகவடிவுக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கு. இவர்கள் இருவரும் விஜிலென்ஸ் கண்காணிப்பிலும் இருந்துவருகிறார்கள்.

இருந்தாலும் இவர்களுக்கு பக்கபலமாக அமைச்சர்கள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது''’என பழனி திருக் கோயில் தேவஸ்தான பி.ஆர்.ஓ. கருப்பண்ணன் வெளிப்படை யாகவே பேசிய வீடியோ வாட்ஸப், பேஸ்புக்கில் வைர லாக பரவிவருவதைக் கண்டு விசாரணையில் இறங்கினோம்.

palani

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி வரக்கூடிய பக்தர்கள் உண்டியல் காணிக்கை போடுவது ஒரு பக்கமென்றால், வசதிபடைத்த பக்தர்கள் அன்னதானத்திற்கும் கோயிலுக்கும் பல லட்சங்களை நன்கொடையாக கொடுப்பது இன்னொரு பக்கம் நடந்துவருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் விவரம்தெரியாத முருக பக்தர்களை, போலி பண்டாரங்கள் முருகனை தரிசிக்கவைப்பதாகக் கூறி பக்தர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதனடிப்படையில்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரமேஷ்கிருஷ் ணன் என்ற முருக பக்தர், தனக்கு நெருக்கமான போலிப் பண்டாரம் அசோக்பாபுவிடம் அன்னதானத்துக்காக ஒரு லட்சம் ரூபாயை கடந்த மாதம் கொடுத்திருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே dஒரு லட்சம் கொடுத்ததற்கான ரசீதை அசோக்பாபு அனுப்பிவைத்தார். அந்த ஹைதராபாத் முருக பக்தருக்கு ரசீதுமேல் சந்தேகம் வரவே, பழனி தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார்.

"அப்படி ஒரு ரசீது நாங்க கொடுக்கவில்லை. யாரிடம் பணம் கொடுத்தீர்கள்'’என்று கேட்ட போதுதான் அசோக்பாபுவிடம் கொடுத்த தாக கூறியிருக்கிறார். அதனடிப்படையில் கோயில் நிர்வாகம் போலீசில் புகார் செய்ததன் பேரில் அசோக்பாபுவை மடக்கிப் பிடித்து விசாரித்திருக்கிறது காவல்துறை. அன்னதானம் என்ற பெயரில் போலி ரசீது அடித்துக் கொடுத்துவிட்டு பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்ததன் பேரில் அசோக்பாபுவை கைதுசெய்து சிறையில் தள்ளியுள்ளனர் காக்கிகள்.

இந்த மோசடியில் கோயில் கண் காணிப்பாளர்கள் இருவருக்கும் தொடர்பிருக்கிறது என்பதை பி.ஆர்.ஓ. வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

பழனிக்கு வரும் பக்தர்களை ஏமாற்றும் கைடுகள், பண்டாரங்களை புதிதாக வந்த ஐ.ஏ.எஸ்.ஸான செயல் அதிகாரி கண்டுகொள்வ தில்லை. மோசடியில் இரண்டு கண்காணிப்பாளர் களுக்கு தொடர்பு இருக்கிறது என்று பி.ஆர்.ஓ. கூறியபின்பும் அந்த ஊழியர்கள் மேல் நடவடிக்கையோ விசாரணையோ மேற்கொள்ளாமல் பி.ஆர்.ஓ. கருப்பணனுக்கு விடுப்புக் கொடுத்து அனுப்பிவிட்டனர்.

""இது எந்தவிதத்தில் நியாயம்? இதுவரை பழனி கோயிலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியைப் போட்டதில்லை. palaniஇந்த செயல் அதிகாரி வந்தபிறகாவது மாற்றம் வருமென பார்த்தால், அவர் பெயரளவுக்குச் செயல்படுவதோடு சரி''’என்றார் ஞானதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை தலைவரான செந்தில்குமார்.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகனோ, ""பி.ஆர்.ஓ. சொன்ன குற்றச்சாட்டு உண்மையா? என கோயில் நிர்வாகம் விசாரிக்கவேண்டும். அப்படி செய்தால்தான் இனி வரும் காலங்களில் பக்தர்களை ஏமாற்றும் போலிப் பண்டாரங்களுக்கும் அதற்கு துணைபோகும் ஊழியர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்'' ’என்றார்.

வீடியோவில் பேசியதைப் பற்றி கருப்பண னிடம் கேட்டபோது, “""நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டு விட்டனர். நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்களும் விசாரித்துப் பாருங்கள்''’என்று கூறினார் கருப்பணன்

இதுசம்பந்தமாக பழனி திருக்கோயில் செயல் அதிகாரியான ஐ.ஏ.எஸ். சந்திரபானு ரெட்டியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது... ""நீங்க எதுவானாலும் பி.ஆர்.ஓ.விடம் பேசிக்கொள்ளுங்கள்''’என்று கூறி தொடர்பைத் துண்டித்தார்.

புது பி.ஆர்.ஓ. முருகேசனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ""’அந்த அன்னதான மோசடி யைத் தொடர்ந்து விஞ்ச், ரோப், மலைக்கோயில் உள்பட சில இடங்களில் நன்கொடையை தேவஸ்தானத்தில் செலுத்தி பக்தர் கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண் டும் என போர்டு வைத்திருக்கிறோம். மற்ற விவரங்களை எல்லாம் நீங்கள் செயல் அதிகாரியிடம்தான் கேட்க வேண்டும்''’என்று நழுவினார்

பழனிமுருகன் ஆண்டிக் கோலத்தில் இருப்பதால்... அவருக்கெதற்கு நன்கொடை என நினைத்துவிட்டார்களோ?…

-சக்தி

nkn110320
இதையும் படியுங்கள்
Subscribe