ருநாள் கூட ஹஸ்பண்டா பாக்கலியே விஜி.. இதுதான் என்னோட கடைசி ஆடியோ.. மன்னிச்சிடுங்க அம்மா.. அம்மா மாதிரியெல்லாம் ஒரு பெண் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அப்பா.. அம்மாவை திட்டாத அப்பா!.", "நான் சாக்கடை யில் விழுந்துவிட்டேன். என்னால எழுந்துக்க முடியல. என்னோட சாவுக்கு நான்தான் காரணம்.. "நீ ... ... எனத் தொடர்பில் இருந் திருக்க எல்லாத்தையும் மறைச்சிட்டியே விஜி'' என்பதுபோல் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முன்னதாகப் பேசிய 43 ஆடியோக்களால், அந்த இளைஞரை திருமணம் செய்த பெண்ணின் பல மோசடித் திருமணங்களும், அவருக்குப் பின்னால் இருக்கும் சில பிரபலங்கள் குறித்த செய்திகளும் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

Advertisment

aa

கடந்த செப்டம்பர் 21ம் தேதி. கோவை தென்னம்பாளையத்தை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர், தான் திருமணம் செய்த பெண்ணால் ஏமாற்றப்பட்டது குறித்து 43 ஆடியோக் களை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள அவரது அம்மா ஈஸ்வரி, "எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். எங்களது மகன் ரத்தினசீலன் என்கின்ற சிவா கடந்த நான்கு வருடங்களாக தனியார் நிறுவனத்தில் இன்டர்னல் ஆடிட்டராக வேலை செய்து வந்தான். இந்த நிலையில், சிவா இன்ஸ்டாகிராம் மூலம் விஜி என்பவளிடம் பழகிவந்தான். எனது மகனுக்கு வரன் பார்த்து வந்தது அவளுக்கு தெரிந்திருக்கின் றது. இந்த நிலையில், சிவாவின் நண்பர் என்கின்ற முறையில்தான் எனது வீட்டிற்கு விஜியை அழைத்து வந்தான் சிவா. "அவ மன உளைச்சலில் இருக் கிறாள். இங்கேயே இரண்டு நாள் இருக்கட்டும்' என அவன் கூற, அவனுடைய நண்பர்தானே என ஏதும் சொல்லவில்லை. இரண்டு நாளென்பது, ஒரு வாரம், பத்து நாளானது. இடையில் அவளின் குழந்தைகளும் இங்கு வந்து சென்றதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

பின்னாளில்தான் என் மகனுடன் நெருங்கிப் பழகுவது தெரியவர, விசாரித்தபோது, "எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது' என்றாள். நட்பு நெருக்க மாகத் தொடர்ந்த நிலையில், அவளுடைய செல்போனை சிவா சோதனை செய்ததில், பல ஆண்களுடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதும், அவர்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்களும், உரையாடல்களும் தெரியவர, சிவாவிற்கும், விஜிக்கும் சண்டை உரு வானது. பின் விஜி மன்னிப்பு கேட்ட நிலை யில், இருவரும் சேர்ந்து மருதமலை அடி வாரத்தில் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் அவள் பணம் கேட்டு அவளது அரசியல் தொடர்புகளைக் கொண்டு மிரட் டியதும், அவளது பழைய நட்புக்களை முறிக் காததாலும், அவளது உறவுப் பெண்கள் இவ னை கேலி செய்ததாலும்தான் இவன் தற்கொலை செய்து கொண்டான்'' என்றார்.

Advertisment

இதே வேளையில், கவிஞர் தாமரை யும், "இந்த விஜி என்கிற விஜயலட்சுமியால் எனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த விஜி என்கிற விஜயலட்சுமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்'' என்று தனது முகநூல் பக்கத்தில் எழுத, பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.

aa

"பத்தாவது படித்த நிலையில்தான் விஜிக்கும், சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆனது. அவர்மூலம் விஜிக்கு இரு பெண் குழந்தைகள். அதே ஊரில் கோபால் என்கின்ற நபருடன் காதல் வயப் பட்ட விஜிக்கு கணவனால் பிரச்சனை ஏற்பட, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வழக்கறிஞர் ஒருவர் சிபாரிசுக் கடிதத்தின் மூலம் தாய் தமிழ்ப்பள்ளி நடத்தும் தியாகுவை தேடிவந்தார். குழந்தைகளுடன் சென்னைக்கு வந்த அவரை தங்க வைக்க பணம், உடை கொடுத்து பாதுகாத்தது கவிஞர் தாமரையே. தங்கும் இடத்தில் பிரச்சனை ஏற்படவே ஆவணப்பட வட்டார இயக்குநர் ஒருவரின் வீட்டில் தங்க, அவருக்கும் விஜிக்கும் உறவானது. அதில் இயக்குநரின் அம்மா வீட்டை விட்டு வெளியேற்றப்பட, மறுபடியும் பஞ்சாயத்து தியாகுவிடம் சென்ற நிலையில், ஊரிலிருக் கும் காதலன் கோபாலை வரவழைத்து திருமணம் நடத்தி தனிக்குடித்தனம் வைத்தார் தியாகு. இது எப்படியோ முதல் கணவனுக்கு தெரிந்து விஜியைத் தேடி வந்த நிலையில், விஜி மற்றும் குழந்தைகளைக் கண்ணிலேயே காட்டாமல் அலைக் கழித்துவிட்டு, பின்னாளில் டைவர்ஸ் அப்ளை செய்திருப்பதாகவும், நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அதன்பின் கோபால், விஜியின் முகவரி யில் இல்லை. மீண்டும் தியாகு தன்னு டைய தொடர்புகள் மூலம் விஜிக்கு மீடியாவில் வேலை வாங்கிக் கொடுத் திருக்கின்றார். அதன்பின் விஜியைப் பற்றி செய்திகள் இல்லை. இப்பொழுது தான் ஆடியோக்கள் மூலம் வெளிச்சத் திற்கு வந்திருக்கின்றாள்'' என்கிறார் விஜியோடு தாய் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர்.

Advertisment

dd

மீடியாவிலுள்ள விஜியின் நண்பர் ஒருவரோ, "துவக்கத்தில் ஷாலினி டிவி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய விஜி, தன் னுடைய நெருங்கிய தொடர்பு கள் மூலம் ஐபிசி தமிழில் பணி யாற்றினார். அந்தக் கால கட்டத்தில் மீடியாவிலுள்ள ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டு அபார் ஷன் வரை சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் ஸ்டேட் டஸிலும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் மதுரையைச் சேர்ந்த ஒரு கட்சிப் பிரமுகருட னான தொடர்பு திருமணம் வரை சென்ற நிலையில், தலைமையின் நெருக்கடியால் விஜியை விட்டு விலகி யுள்ளார் அந்த பிரமுகர். அதன்பின் திடீரென கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடி யூசர் பணி. பத்தாவது வரை மட்டுமே படித்த ஒருவருக்கு எப்படி இவ்வளவு பெரிய பணி கிடைக்கும்? இதேவேளையில், இவரின் ஆடம்பர வாழ்க்கை தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்'' என்றார் அவர்.

ss

இதுகுறித்து, "சாதியரீதியாக என்னை தாக்கி வருகிறார்கள். ரத்தினசீலன் தற்கொலையில் எனக்கும் வருத்தம். அவர் மறைவிற்கு நான் மட்டும் காரணம் இல்லை. நான் அவரைப் பிரிந்து பல நாட்கள் கழித்துதான் இறந்துள்ளார். தாமரை, காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை பிரச்சனையாக உருவாக்குகிறார். நானும் ரத்தினசீலனும் சட்டப்படியான உறவில் இல்லை. லிவிங் ரிலேசன்ஷிப்பில் தான் இருந்தோம். கல்யாணம் ஆகிய 15 நாளில் பிரிந்து விட்டேன். எனக் கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குடும் பச் சூழல், கடன் பிரச்னை, மன அழுத்தம் காரண மாகத் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். முதல் கணவர் பிரிந்த பின்னர் இவரை திருமணம் செய்துகொண்டேன். நான்கு, ஐந்து திருமணம் இல்லை. ஊடகத் துறையில் இருப்பதால் பல ஆண் களுடன் தொடர்பு என்று கூறுகிறார்கள். தாமரையும் இதுபோன்று குற்றச்சாட்டு கூறுகிறார். அவரும் இதேபோல் சினிமா துறையில் இருக்கிறார். பல ஆண்களை சந்திக்க நேரிடும். அதற்காக பல நபர்களுடன் தொடர்பு எனக் கூற முடியுமா? என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதிலுமே உண்மை இல்லை. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன்'' என கூறியதோடு மட்டுமில்லாமல், சினிமா பாடலாசிரியர் தாமரை மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார் விஜி.

ரத்னசீலன் எனும் சிவா தற்கொலையி னால் தாமரைக்கும், விஜிக்கும் உண்டான மோதல் தனிப்பட்ட பகுதியாக இருப்பினும், ஆடியோவில் குறிப்பிட்ட பல்வேறு செய்தி கள் தற்பொழுது சமூக வலைத்தள வட் டாரத்தில் பேசுபொருளாகி வருகின்றன!