"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத் தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.''”

"ஆமாம்பா, அமளியை சமாளிக்க முடியாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறார்களே?''

"ஆமாங்க தலைவரே, அம்பேத்கரை பற்றி உள் துறை அமைச்சர் அமித்ஷா வைத்த விமர்சனம், இந்தியாவையே கொந்தளிக்க வைத்திருக்கிறது. அம்பேத் கர் மீது கைவைத்தால் என்ன ஆகும் என்பதை பா.ஜ.க. தரப்பு, இப்போது உணர்ந்து அதிர்ந்துபோய் நிற்கிறது. இந்த விவகாரத்திற்கு முன்பாக ’"ஒரே நாடு ஒரே தேர் தல்'’ சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பாக எழுந்த விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலு, அந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றார். உடனே அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம், இந்த மசோதாவை இப் படி கூட்டுக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் மோடி, அமித்ஷா ஆகியோரின் திட்டம். அதற்கேற்ப பாலுவின் வாய்ஸ் இருந்ததால், பா.ஜ.க. தரப்பு மகிழ்ச்சி யடைந்தது. ஆனால் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்களும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், இந்த சட்ட மசோதா வைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆக்ரோஷ மாகக் குரல் கொடுத்தனர். மேலும், கட்சித் தலைமை அறிவுறுத்தியதற்கு மாறாக, கூட்டுக்குழுவுக்கு அனுப் பும்படி ஏன் பேசினீர்கள் என்று, டி.ஆர். பாலுவிடமே தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் அதிருப்தியைத் தெரிவித் தனர். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவ னத்துக்கும் இது எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.''”

"சரிப்பா, டெல்லி களேபரங்கள் இருக்கட்டும். இறப்பதற்கு முன் தமிழக முதல்வருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிக் கொடுத்திருக்கும் ஆடியோ கேசட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதே?''”

Advertisment

evks

"தமிழக காங்கிரஸ் கட்சியின் சீனியரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் இறப்பதற்கு முன்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கவேண்டும் என்றபடி, தன் மனைவியிடம் கொடுத்திருக்கும் ஆடி யோ கேசட், இப்போது காங்கிரஸ் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தனது மரணத்திற்குப் பிறகு தன் ஈரோடு கிழக்குத் தொகுதியில், என்ன செய்யவேண்டும் என்றும், அடுத்து அங்கே யாரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என் றும் அதில் தெளிவாக அவர் குறிப்பிட்டிருக் கிறாராம். என்னால் இப்போது முதல்வரிடம் பேச முடியவில்லை. இந்த கேசட்டை அவர் கவனத்துக்குக் கொண்டு செல் என்று அவர் சொன்னபடி, அவர் பேசிய அந்த கடைசி ஆடியோ, அவர் மனைவி சார்பில் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆடியோவை, கவனமாகவும் உருக்கத்தோடும் கேட்டாராம் ஸ்டாலின். எனவே அவர் இளங் கோவனின் கடைசி ஆசையை நிறைவேற்றுவார் என்கிறார்கள் அவர் குடும்பத்தினர்.''”

"சென்னை புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாகத் தொடங்கியிருக்குது போலயே?''

Advertisment

fsv

"ஆமா தலைவரே, புத்தக ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 27ஆம் தேதி தொடங்கவுள் ளது. அதில் பெருமளவு பொதுமக்கள் பங் கெடுப்பதற்காக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியாக கடந்த டிசம்பர் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வாசிப்பு விழிப்புணர்வு நடை பயணம், சென்னை நந்தனம் சிக்னல் ஆவின் பாலகத்திலிருந்து பபாசியின் தலைவர் சேது சொக்கலிங்கம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடை பயணம் ஒய்.எம். சி.ஏ. மைதானம் வரை நடைபெற்றது. இந்த நடைபயணத்தில் பள் ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இவர்களோடு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு, வாசிப்பு விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.''

"உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்த வாய்ப்பில்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்துவிட்டு, மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019-ல் தேர்தல் நடந்தது. அவற்றின் பதவி காலம் 2025 ஜனவரியில் முடிவடைவதால், 2024 டிசம்பரில் அவற்றுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் இந்தத் தேர்தலை தி.மு.க. அரசு குறிப்பிட்ட நேரத்தில் நடத்தாது என்று 6 மாதங்களுக்கு முன்பே நமது நக்கீரன் தெரிவித்திருந்தது. அதுபோலவே, இப் போது இந்தத் தேர்தலை ஒத்திவைக்கவும், இத னால் பதவி காலம் முடிவடையும் ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கவும் அரசு முடிவெடுத்திருக்கிறது.''”

"ஆமாம்பா..''”

"இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு 21ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக் கீட்டின் அடிப்படையில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிர் ஆகியோ ருக்கான வார்டுகள் குறித்து இன்னும் வரையறை செய்யாததால், இப்போதைக்குத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை. இதை வரையறை செய்தபிறகே தேர்தலுக்கான அறிவிப்பு செய்யப் படும் என்று தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டிருக்கிறது. ''”

"கொங்கு மண்டல அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பு தெரிகிறதே?''”

dd"அ.தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவருகிறது. தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், ஜெயராம னின் மகன் பெயர் அடிபட்டது என்பதாலும், அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருவதாலும், இந்தத் திருமணத்தை கொங்குமண்டலத்தில் இருக்கும் அ.தி.மு.க.வினரே கூர்ந்து கவனித்து வருகிறார்கள். மாப்பிள்ளையாகும் ஜெயராமன் மகனை, இதுவரை விசாரணை டீமிலிருந்து யாரும் நெருங்கவில்லை என்கிறது அவர் தரப்பு. வேலுமணியின் மகன் திருமணம் ஒரு திருவிழா வைப்போல் ஏக தடபுடலாக கரன்ஸிகளை வாரியிறைத்து நடக்கும் நேரத்திலேயே இந்தத் திருமணமும் நடக்கிறது. என்றாலும் பொள் ளாச்சி விவகாரத்தால், தன் மகனின் திரு மணத்தை மிகவும் அடக்கமாகவும் ஆரவாரமில் லாமலும் நடத்துகிறாராம் ஜெயராமன்.'' ”

"பழநி முருகனைச் சுரண்டி விற்கும் கும்பல் சிக்கியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. மாநில நிர்வாகியின் மைத்துனர் சிவகுமாரை வருமான வரித்துறை குறி வைத்திருக்கிறது. சிவகுமாரின் நண்பர் பெருமாள் வீட்டிலும் அண்மையில் ரெய்டு நடந்தது. அப்போது, பழநியைச் சேர்ந்த விபூதி வியாபாரி ஒருவர் வசமாக சிக்கியிருக்கிறார். இவர் நவபாஷாணத்தால் ஆன பழநி முருக னைச் சுரண்டி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்கிறார்கள் ஏரியாவாசிகள். அண்மையில் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி குடும்பத்தோடு கலந்துகொண்ட சிறப்பு பூஜையின்போது, அவர்களுக்கு விலைமதிப்புமிக்க மருந்துப் பொருளான நவபாஷாணமும் பிரசாதமாக வழங்கப்பட்டதாம். இந்த ரெய்டின்போது, இதுவரை 120 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் சிக்கியதாகவும் சொல்கிறார்கள்.''”

"அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகியும் கைது செய்யப்பட்டாரே?''”

"கொங்கு மண்டலத்தில் ஏதேனும் கல வரத்தின் மூலம் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை யை உண்டாக்கி, அதில் குளிர் காயவேண்டும் என்றும் அதன்மூலம்தான் கட்சியை வளர்க்க முடியும் என்றும், அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி கருதுகிறாராம். அதற்கான தருணத்தை எதிர் பார்த்திருந்த நிலையில்தான், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைவாசத்தை அனுபவித்து வந்த பாட்சா, பரோலில் வந்த நிலையில் மரணமடைந்தார். இதுதான் சாக்கு என்று, அவரது இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து, தடையை மீறி கண் டன ஊர்வலத்தை நடத்தினார் அந்த பா.ஜ.க. நிர்வாகி. எனினும் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பால் எந்த அசம்பாவிதமும் அங்கே ஏற்படவில்லை. இந்தப் பேரணியைத் தொடர்ந்து, அந்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜியை மறுபடியும் சிறைக்கு அனுப்பவேண்டும் என்றும் அவர் தீவிரமாக காய் நகர்த்திவருகிறாராம்.''”

"தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை அடிக்கடி சீக்ரெட்டாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறாரே?''”

ss

"அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா வைக் கண்டித்து தொடர்ந்து கண்டன ஆர்ப் பாட்டங்களை நடத்தும்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கட்சியின் அகில இந்தியத் தலைமை உத்தரவிட்டிருந்தது. எனினும், தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை யோ, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோடு, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு விடம், நீங்கள் இதையெல்லாம் பார்த்துக்கொள் ளுங்கள் என்று சொல்லிவிட்டு மும்பைக்கு ப்ளைட் ஏறிவிட்டார். இதனால், தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் பெருந்தகையை தீவிரமாகக் கண்காணித்துவரும் மத்திய உளவுத்துறையினர், அவர் மும்பை வழியாக லண்டன் சென்றுள் ளதை ஸ்மெல் செய்துவிட்டு, தகவலை உள் துறை அமைச்சகத்துக்குத் தெரிவித்திருக் கிறார்களாம். ஏற்கனவே சீனாவுக்கு ரகசியமாக அவர் சென்று வந்ததையும், இப் போது ரகசியமாக லண்டன் சென்றிருப்பதையும் அலசி ஆராய்கிறதாம் டெல்லி.

"விடுதலை சிறுத்தைகள் கட்சியால் நடவடிக்கைக்கு ஆளான அர்ஜுன் ரெட்டி இப் போது திண்டாட்டத்தில் இருக்கிறாரே?''”

ff

"விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கையால், வீராப்பாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய அர்ஜுன் ரெட்டி, அடுத்து எதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் செய்ய ஆசைப்பட்டாராம். இதற்காக அவர் நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினாராம். தனக்கு மாநில அளவில் ஒரு பதவி வேண்டும் என்று அப் போது அவர் டிமாண்ட் வைத்தாராம். அவரது அரசியல் நிலைப்பாட்டில் நம்பிக்கையில்லாத விஜய் கட்சி நிர்வாகிகள், அவரைத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்ட வில்லை. எனவே, அவர் நடத்திய பேச்சு வார்த்தை வெற்றி பெறவில்லை என் கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் சேர் வதற்கான முயற்சியை யும் அர்ஜுன் ரெட்டி எடுத்திருக்கிறார். அங் கும் மாநில அளவில் ஒரு பெரிய பதவி வேண்டும் என்று அவர் டீலிங் நடத்தினாராம். அதுவும் எடப்பாடி யிடம் பலிக்கவில்லையாம். எனவே, இப்போது அடுத்து என்ன செய்வது? என்று அர்ஜுன் ரெட்டி திண்டாடிவருகிறார் என்கிறது அவரது நட்பு வட்டாரம்.''”

"பத்திரப்பதிவுத் துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"தமிழக பத்திரப்பதிவுத் துறையில் போதிய பதிவாளர்கள் இல்லாமல் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் முதல்கட்டமாக, இப்போது இருக்கும் சார்பதிவாளர்கள் அனை வரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் கள். நடக்கும் பதிவுகள் மற்றும் வருமானங் களின் அடிப்படையில் பத்திரப்பதிவு அலு வலகங்களை ஏ, பி, சி என்று 3 பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். இதில் "ஏ' என்பது அதிக பத்திரப் பதிவுகளையும் வருவாயையும் அள் ளிக்கொடுக்கும் அட்சய அலுவலகங்களாகும். "சி' என்பது மிகவும் குறைந்த பத்திரப் பதிவுகள் நடக்கும் அலுவலகங்கள். இவற்றின் அடிப்படையில் பதிவாளர்களில் யார், யார் எந்த மாதிரியான அலுவலகத்துக்குச் செல்ல விரும்புகிறார்களோ, அதற்கேற்ப மாற்றம் நடைபெறுகிறதாம்.''”

"தமிழகத்திலுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலருக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப்படவிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அடுத்த டி.ஜி.பி.யாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் நிலவிவருகிறது. இதற்காக ஒரு தேர்வுக்குழுவும் தமிழக அரசு சார்பாக நிய மிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காவல்துறையில் டி.ஐ.ஜி. பதவி உயர்வுக்கான பட்டிலும் தயார்செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆவார் . பதவி உயர்வு வரும்போது இடமாற்றமும் இயல்பாக நடக்கும். அந்த வகையில், பதவி உயர்வில் வந்திதாபாண்டே இடமாற்றம் செய்யப்பட்டதும், மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமிக்கப்படவிருக்கிறார். இதனைப் பயன்படுத்தி, தனது சமூகத்தைச் சேர்ந்தவரும் மிகநெருங்கிய குடும்ப நண்பருமான போலீஸ் அதிகாரி பாண்டியராஜை புதுக்கோட்டை எஸ்.பி.யாகக் கொண்டுவர பகீரத முயற்சி எடுத்துள்ளார் மணல் மாஃபியாக்களில் ஒருவ ரான கரிகாலன். புதுக்கோட்டை எஸ்.பி.யாக வந்திதா பாண்டே இருக்கும் நிலையில்... தற்போது மணல் கடத்தல், கந்துவட்டி கொடூரங்கள் உள்ளிட்ட க்ரைம் நடவடிக்கைகள் கட்டுக்குள் இருக்கின்றன. அவர் மாற்றப்பட்டுவிட்டால், இதேநிலை தொடருமா? என் கிற கேள்வி காவல்துறையிலேயே எழுந்திருக்கிறது.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அமலாக்கத்துறை நடத்திய அதிரடி ரெய்டுகளால் மூடப்பட்டிருக்கும் தமிழக மணல் குவாரிகளை, மீண்டும் திறக்கும் முயற்சியில் இருக்கிறது அரசு. இதுவரை இந்த குவாரி பிசினஸில் கோலோச்சிவந்த, மணல் மும்மூர்த்திகளில் ஒருவரான ராமச்சந்திரனின் எஸ்.ஆர். குரூப்ஸ் மீதான அதிருப்தியால், இந்த முறை குவாரிகளுக்கான உரிமத்தை மயிலாடுதுறை ராஜப்பா தரப்பிடம் கொடுப்பதற்கான மூவ்கள் நடக்கிறது. ஜனவரியில் பொங்கல் விழா முடிந்ததும் இவற்றைத் திறக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குவாரிகள் இப்போது சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டி ருக்கும் நிலையில்... பழைய எஸ்.ஆர். குரூப்பே மாவட்ட வாரியாக கடைசிநேர ராயல்டியை விறுவிறுப்பாக வசூலித்துவருகிறதாம்.''