பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தமிழ்நாட்டிலுள்ள தொழிலதிபர்களை மிரட்டி தி.மு.க. பணம் பறிக்கிறது என்று பா.ஜ.க. மா.த. கூறலாமா? வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா?' என உங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள் ளீர்கள். இதில் அமர்பிரசாத் ரெட்டியையும் இழுத்திருக்கிறீர்களே?
இப்படி மா.தலைவர் சொன்னதற்கு தி.மு.க. தரப்பில் யாரும் பதிலடி கொடுக்கவேயில்லை. எந்த அமைச்சரும் பதில் சொல்லவில்லை. நான்தான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டேன். அமர் பிரசாத் என்ன யோக்கிய சிகாமணியா? மா.தலைவருக்காக எல்லா வேலையும் பார்ப்பவர் இவர்தான். தொழிலதிபர்களிடம், ரெய்டு வருமென அச்சுறுத்தி மிரட்டி பணம் வாங்குவது இவர்தான். திருச்சி ஸ்டார் ஓட்டலில் 10 மணிக்கு மேல் மதுபானம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். 'நான் யார் தெரியுமா? நான் போன் பண்ணினா மோடியே எடுப்பார். இப்ப ஊ.உ.யை வரச் சொல்லவா? ஒ.ப.யை வரச் சொல்லவா?' என அந்த ஓட்டலை மிரட்டி யுள்ளார். இது புகாராகியிருக்கிறது. அந்த ஓட்டல் ஓனர் ரெட்டியார் என் பதால் அவ ரிடம் பேசி பிரச்சனையை சரிசெய் துள்ளனர். இவரோட வேலையே அப்படித்தான்.
சென்னையில் இருக்கக்கூடிய ஜவுளிக்கடை கள், தொழிலதிபர்களிடம் கட்சிக்கு காசு வேண்டு மென மிரட்டி பணம் வாங்க வேண்டியது. யானைக்கு பிறந்தநாள் கொண்டாடணும், காசு கொடு என வடிவேலு சொல்கிற மாதிரி, அதைச் செய்யணும், இதைச் செய்யணும் எனச் சொல்லி வசூல் செய்வார். 100 ரூபாய் வசூல் செய்கிறாரென் றால், 40 ரூபாயை இவர் வைத்துக்கொண்டு, 60 ரூபாயை மாநிலத் தலைவரிடம் கொடுத்துவிடுவார். அவர் 40 ரூபாயை வைத்துக்கொண்டு, 20 ரூபாயை கட்சிக்கு கொடுத்துவிடுவார். கட்சிக்கு நிதி கொடுத்தேன் என டெல்லியில் சொல்லிக்கொள்ள வேண்டியது. இதுதான் இவர்களது வேலை.
பார்முலா 4 கார் பந்தயம் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் நடக்குமா? அனுமதி வாங்கித் தானே நடத்துகிறார்கள். இது விளையாட்டுத் துறைக்கு கீழ்தான் வருகிறது. இது தேசிய அள விலும், உலக அளவிலும் பேசக்கூடிய விஷயம் தானே. இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கணும்? கேலோ இந்தியா நடந்தபோது பெருமையாக இருக் கிறது என பிரதமர் சொல்லிட்டுப் போனார். அப்ப அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தினால் மோடி பெரிய சாகசம் பண்ணிவிட்டார் என்று பெருமைப் படுவீர்கள். விளையாட்டு சம்பந்தப்பட்டது தானே பார்முலா 4 கார் பந்தயம். துறை சார்ந்த அமைச்சர் அதனை செய்தால் ஏன் உங்களுக்கு எரிகிறது? தொழிலதிபர்களை மிரட்டி தி.மு.க. பணம் வாங்குகிறது என்ற வார்த்தையைச் சொல்வதற்கு மா.தலைவருக்கு தகுதி இருக்கிறதா? எல்லா தொழிலதிபர்களையும் மிரட்டி பண வசூல் செய்து, கட்சியை வளர்க்கிறீர்களோ இல்லையோ, உங்களை வளர்த்துக்கொள்கிறீர்கள். ஆளுங்கட்சியிலிருக்கும் தி.மு.க. உங்களைப்போல் மிரட்டி பண வசூல் செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்கள் அரசுப் பணத்தில் செய்கிறார்கள்.
"மோடி கபடி லீக்' என அமர்பிரசாத் ரெட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தினார். நோட்டு போட்டு ஏகப்பட்ட வசூல் செய்திருக்கிறார். எனக்கு தெரிந்து இதுவரைக்கும் 21 கோடி ரூபாய் வசூல் செய் திருக்கிறார் எனப் புகார் சென்றுள்ளது. கட்சியைச் சேர்ந்தவர்களே புகார் கொடுத்திருக்கிறார்கள். மா.த. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி கபடி லீக் நடத்துவதாகக்கூறி, பரிசுத்தொகை கொடுக்கணும், சாப்பாட்டுக்கு செலவு செய்யணும், தங்குவதற்கான செலவு என, ஜவுளிக்கடை, உணவகங்கள், தங்கும் விடுதிகளில் வசூல் செய்திருக்கிறார்கள். நான் சொல்றது நோட்டு எடுத்துக்கிட்டு போய் 50 ரூபாய், 100 ரூபாய் இல்ல, எல்லார்கிட்டேயும் 50 லட்சம், ஒரு கோடி என 120 கோடிக்கு வசூல் செய்து, அதில் அதிகபட்சமாக 10 கோடி மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள். இதுபோல் அரசு செய்கிறதா? அரசு பணத்தில் கார் ரேஸ் நடத்துகிறார்கள். இதை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவராக இருக்கக்கூடிய அலிஷா அப்துல்லா பார்முலா ரேஸுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், அதே கட்சியின் மாநில தலைவர் பார்முலா ரேஸை கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார். அரசியலுக்கு வந்தீங்களா? நடிக்க வந்தீங்களா?
அமர்பிரசாத் ரெட்டியின் பெயர் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியிலும் இருப்பதாகப் பேசப்படுகிறதே? இந்த மோசடியில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா?
தவறு செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய கட்சியாக பா.ஜ.க. வெளிக் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. தவறு செய்தவர்கள் இங்க வந்தால் தப்பிக்கலாம் என்று நினைக்கிறப்ப, அவர்கள் மா.தலைவரை தொடர்பு கொள்ள முடியாது. எளிதாக அணுகக்கூடிய நபர் அமர் பிரசாத். சமீபத்தில், தமிழகத்தில் சாமானிய மக்களிடம் பணம் வசூலித்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆருத்ராவில் மட்டும் அப்படியே இருக்கிறது. அதில் 3 பேர் டைரக்டராக இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஹரீஸ். மற்ற இரண்டு பேர் வெளிநாடு சென்றுவிட்டனர். இவர் மட்டும் அமர் பிரசாத்தை அணுகியுள்ளார். ஒரு வார இதழில், மாநிலத் தலைவரும், அமர் பிரசாத்தும் ஆருத்ராவில் ஆட்டையைப் போட்ட மாதிரி ஒரு கார்ட்டூன் வருகிறது. மா.தலைவருக்கும், கேசவவிநாயகத்திற்கும் ஆருத்ராவில் வாங்கிய சில நூறு கோடிகளை அமர் பிரசாத் கொடுத்திருக்கிறார் என்றும், மக்கள் பணத்தை ஆட்டையப் போட்டவரை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்றும் செய்தி வந்தது. ஒரு பதில் நோட்டீஸ் இல்ல, கேள்வி எழுப்பவில்லை, விமர்சனம் செய்யவும் இல்லை.
நான் பா.ஜ.க.வில் இருந்தபோது மா. தலைவரை யோக்கிய சிகாமணி என நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த வழக்கில் மா.தலைவரை ஏன் இழுக்குறீங்க? அமர் பிரசாத் ரெட்டிதான் எல்லாம் செஞ்சது என்று அந்த செய்தி போட்ட முக்கியமான நபரிடம் பேசினேன். அதற்கு அவர் சில ஆதாரங்களைக் காட்டினார். ஆதாரம் அவர்களிடம் இருப்பதால்தான் அவர்களை எதிர்த்து வழக்கு போடவில்லை. டி.எம்.கே. பைல்ஸ் 1 பிரஸ் மீட் கொடுத்தார் மா.தலைவர். அதை கவனித்தால் தெரியும். ஆருத்ரா வழக்கு குறித்த கேள்வி வரும்போது, பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி. ஒருவர் ஆருத்ரா வழக்கை விசாரிக்க நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த அதிகாரியிடம் போன்பண்ணிப் பேசியதாக சொல்வார். கட்சியின் மா.தலைவராக இருந்து கொண்டு ஏன் வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு போன் செஞ்சீங்க. நீங்க போலீஸ் உயர் அதிகாரி இல்ல, நீங்க ஒரு அரசியல்வாதி. உங்க கட்சியில் இருப்பவர்கள் தான் குற்றவாளிகள் என்று வரும்போது எப்படி போன் செய்து பேசினீர்கள்? இப்படி போன் செய்து மிரட்டிய பிறகு, விவரமான அதிகாரிகள் என்ன செய்வார்கள். டெல்லியை ஏன் பகைத்துக்கொள்ளணும், நமக்கு ஏன் வம்பு என்று நினைத்ததால் வழக்கு அப்படியே உள்ளது. இந்த மோசடியில் மா.தலைவரையும் குற்றம்சாட்டுகிறார்கள். யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று விசாரணையில் தான் தெரியவரும். தொகை பெரியது என்பதால் இங்க இருக்கிற சி.பி.சி.ஐ.டி.யோ, பொருளாதாரக் குற்றப்பிரிவோ, மற்றவர்களோ விசாரிக்க மாட்டார்கள். சி.பி.ஐ.க்கு மாற்றிவிடுவார்கள், தப்பித்துக்கொள்ளலாம் என இவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
உங்க எக்ஸ் பக்கத்தில் இராம சீனிவாசன் ஆடியோ விரைவில் வெளியாகும் எனப் போட்டீங்க. ஆனால் அது அப்படியே ஆஃப் ஆகிவிட்டதே?
நக்கீரனிடம் ஆடியோ குறித்து சொன்ன போதே, சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அவர் பேசி, ஒரு தொகையையும் கொடுத்து, அவர்கள் கேட்ட கேந்திரிய வித்யாலயா சீட்டையும் வாங்கிக் கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டார். இப்ப ஆடியோவை கொடுத்த அந்த பேமிலி பேக் அடிக்குது. ஒருவேளை நக்கீரனில் சொல்லாமல் அந்த ஆடியோவை ரிலீஸ் பண்ணியிருந்தால் அவரோட அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும்.
இந்த ஆடியோ மேட்டர் வெளியாகி இரண்டு பேர் என்னிடம் வந்தார்கள். 2 கோடி ரூபாய் பணம் தருவதாக மூன்று மணி நேரமாகப் பேசுகிறார்கள். "எம்.பி. தேர்தலில் நின்று அந்த அளவுக்கு அவர் சம்பாதித்துவிட்டாரா?' எனக் கேட்டேன். அதற்கு, "ஏன் சொந்தக் காசக் கொடுக்கப்போகிறார்? அவர் கேட்டால் தி.மு.க. அமைச்சர் ஒருவர் கொடுப்பார்' என்கிறார்கள். இதில் இன்னொன்று சொன்னார்கள். இரண்டு கோடியில் ஒரு கோடியை எனக்கு கொடுத்துவிட்டு, மீதி ஒரு கோடியில் அவர்களுக்கு பாதிப் பாதியாம். "என்னை கட்சியிலிருந்து நீக்கிய கடும் கோபத்தில் இருக்கிறேன். தயவுசெய்து போய்விடுங்கள்' என்று சொன்னதற்கு, 'நாங்கள் வேண்டுமானால் கூடுதலாகக் கேட்டுப் பார்க்கட்டுமா?' என்று சொல்லிவிட்டுப் போனார்கள். வந்த இரண்டு பேரும் மா.தலைவருக்கு லெஃப்ட், ரைட்!
(தொடரும்)
சந்திப்பு: -வே.ராஜவேல்
படம்: நவீன்