ராங்கால் சவுக்கு சங்கருடன் அமைச்சர் பேசிய ஆடியோ! ஸ்டாலின் அதிர்ச்சி! எடப்பாடி - சசி சமாதானப் பேச்சு!

ss

"ஹலோ தலைவரே, ஆளுங்கட்சித் தரப்பில் உற்சாகமும் பரபரப்புமாகத் தெரியுது.''’

"சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லைன்னும் தெரியுது. அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் முதல்வர் ஸ்டாலின், திரும்பி வந்தபிறகு நிச்சயம் அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க. அப்ப, சில அமைச்சர்களுக்கு பதவி பறிபோக லாம்ங்கிற தகவலும் வருவதால், அமைச்சர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் தெரியுது.”

"கட்சி ரீதியாகவும் உதயநிதிக்கு மேலும் சில பொறுப்புச் சுமைகள் இருப்பதாகச் சொல்றாங்களே?”

ss

“ஆமாங்க தலைவரே, 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வதுன்னு ஆலோசித்துத் திட்டமிடும் குழுவிலும் உதயநிதி இடம்பெறுகிறாராம். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மற்றும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெறுகிறார் கள். இதுவரை தி.மு.க.வுக்குள் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினைகளை சமாதானப்படுத் தும் பணியை மூத்த அமைச்சர் ஒருவர்தான் பார்த்துக்கொண்டார். அண்மையில், அந்த அமைச்சர் சவுக்கு சங்கருடன் பேசும் பேச்சின் ஆடியோவை ஸ்டாலின் கேட்டு ஷாக் ஆகியிருக்கிறார். எப்போதும் தடாபுடான்னு பேசுவதை இயல்பாகக் கொண்ட அந்த அமைச்சர், அதில் சவுக்கு சங்கருடன் பேசிய பேச்சை அவர் ரசிக்கவில்லையாம். அதில் நெருடலான ஸ்டாலின், மேற்படி அமைச்சர் பார்த்துவந்த இந்த சமாதானப் பொறுப்பையும் உதயநிதியிடம் ஒப்படைத்திருக்கிறாராம். இது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கைப் பாடம் என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர்கள்.”

"காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கட்சிக்குள்ளேயே கலகக்கொடி பிடிக்கிறார்னு சொல்றாங்களே?''”

"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்டம் தோறும் நடத்தி வருகிறார். 20ஆம் தேதி அவர் சிவகங்கையில் நடத்தியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "காங்கிரசுக்கென இருக்கும் சிறுபான்மை மற்றும் தலித் வாக்குகளால்தான் தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் ஜெயித்தது. அப்படியிருந்தும் கூட்ட

"ஹலோ தலைவரே, ஆளுங்கட்சித் தரப்பில் உற்சாகமும் பரபரப்புமாகத் தெரியுது.''’

"சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லைன்னும் தெரியுது. அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் முதல்வர் ஸ்டாலின், திரும்பி வந்தபிறகு நிச்சயம் அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க. அப்ப, சில அமைச்சர்களுக்கு பதவி பறிபோக லாம்ங்கிற தகவலும் வருவதால், அமைச்சர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் தெரியுது.”

"கட்சி ரீதியாகவும் உதயநிதிக்கு மேலும் சில பொறுப்புச் சுமைகள் இருப்பதாகச் சொல்றாங்களே?”

ss

“ஆமாங்க தலைவரே, 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வதுன்னு ஆலோசித்துத் திட்டமிடும் குழுவிலும் உதயநிதி இடம்பெறுகிறாராம். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மற்றும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெறுகிறார் கள். இதுவரை தி.மு.க.வுக்குள் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினைகளை சமாதானப்படுத் தும் பணியை மூத்த அமைச்சர் ஒருவர்தான் பார்த்துக்கொண்டார். அண்மையில், அந்த அமைச்சர் சவுக்கு சங்கருடன் பேசும் பேச்சின் ஆடியோவை ஸ்டாலின் கேட்டு ஷாக் ஆகியிருக்கிறார். எப்போதும் தடாபுடான்னு பேசுவதை இயல்பாகக் கொண்ட அந்த அமைச்சர், அதில் சவுக்கு சங்கருடன் பேசிய பேச்சை அவர் ரசிக்கவில்லையாம். அதில் நெருடலான ஸ்டாலின், மேற்படி அமைச்சர் பார்த்துவந்த இந்த சமாதானப் பொறுப்பையும் உதயநிதியிடம் ஒப்படைத்திருக்கிறாராம். இது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கைப் பாடம் என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர்கள்.”

"காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கட்சிக்குள்ளேயே கலகக்கொடி பிடிக்கிறார்னு சொல்றாங்களே?''”

"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்டம் தோறும் நடத்தி வருகிறார். 20ஆம் தேதி அவர் சிவகங்கையில் நடத்தியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "காங்கிரசுக்கென இருக்கும் சிறுபான்மை மற்றும் தலித் வாக்குகளால்தான் தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் ஜெயித்தது. அப்படியிருந்தும் கூட்டணி தர்மத்துக்காக அவர்களிடம் நாம் கூனிக்குறுகி நிற்கிறோம். இது சரியா? நமது மாவட்டத் தலைவர் ஒருவர் கொல்லப்படுகிறார், கள்ளச்சாராய சாவு நடக் கிறது, ஒரு கட்சித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார், இதற்கெல்லாம் நாம் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. அப்புறம் எப்படி காமராஜர் ஆட்சியை அமைப் போம்னு சொல்றீங்க? நம் கட்சியை பலப் படுத்தினால், 2026 அமைச்சரவையில் காங்கிரஸ் இருக்கும் என்று தி.மு.க.வுக்கு எதிராகவே கொடிபிடித்தார். இதைக் கேள்விப்பட்ட சிவகங்கை தி.மு.க.வினர் கொதித்துப்போயிருக் கிறார்கள்.'' ”

"இதற்கு அவர்களின் ரியாக்ஷன் என்ன?''”

"கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுபற்றி கடுமை யாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கும் தி.மு.க.வினர், ‘அவர் சரியான பச்சோந்தி. தேர்தல்னு வந் துட்டா தி.மு.க.விடம் பம்முவார். தி.மு.க.வைக் கொண்டாடுவார். ஆனால், தேர்தல் முடிந்துவிட் டால் தி.மு.க.வைச் சீண்டுவார். இதை கார்த்தி வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். தி.மு.க. ஆதரவு இல்லைன்னா கார்த்தியின் டப்பாவே தேர்தல்ல டான்ஸ் ஆடியிருக்கும். என் மகனை ஜெயிக்க வைங்கன்னு கார்த்தியின் அப்பா சிதம்பரம், தலைவர் ஸ்டாலினை சந்தித்துக் கெஞ்சியதெல்லாம் தெரியாதா? தி.மு.க. இல்லைன்னா 1000 ஓட்டைக்கூட சிவகங்கையில் கார்த்தியால் வாங்கியிருக்க முடியாது’என்று நம் காதுபடவே ஆவேசப்படுகிறார்கள்.''

"காங்கிரஸ் சீனியர்களோ, "கார்த்திக்கு இப்படி பேசறதே பொழப்பாப் போச்சு. சட்டமன்ற காங்கிரசின் முன்னாள் தலைவரான கே.ஆர். ராமசாமியையே கட்சியின் செயல்வீரர் கள் கூட்டத்தில் கலந்துக்காதீங்கன்னு தடுத்ததே அந்தக் கார்த்தி தரப்புதான்'’என்று வருத்தப் படுகிறார்கள்.''”

"ஆனால், காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தி.மு.க. அரசு அதிக முக்கியத்துவத்தையும் பதவிகளையும் தருதுன்னு தி.மு.க.வுக்குள்ளேயே ஒரு ஆதங்க டாக் அடிபடுதேப்பா?''”

"காங்கிரசின் சீனியர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸுக்கு, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலவாரிய தலைவர் பதவியை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்திலேயே வழங்கி யிருக்கிறார். இது போதாதுன்னு பீட்டரை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத் தலைவர், கேபிள் டி.வி. கார்ப்பரேசன் சேர்மன், தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேசன் சேர்மன், உயர்கல்வி மன்றத்தின் தலைவர் என இந்த நான்கு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் உட்கார வைக்க, ஒரு முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரி, தலைமைச் செயலகத்தில் மூவ் பண்ணிக்கிட்டு இருக்கிறார். இதனையறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஷாக் ஆகியிருக்கிறார். காரணம், உயர்கல்வி மன்றத்தின் தலைவர் பதவி யில், சர்ச்சைக்குரியவர் என்றாலும், தனது நண் பரான ஓய்வுபெற்ற பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான சாமிநாதனை அமர்த்தணும்னு பொன்முடி ஆசைப்படுகிறார். இதேபோல் மற்ற சில அமைச்சர்களும் தங்கள் துறைக்குள் காங்கிரஸ் பீட்டர் வருவதை விரும்பவில்லையாம். இது தொடர்பான ஆதங் கம் தி.மு.க.வில் பலரிடமும் இருக்கிறதாம்.''”

"தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை டெல்லியில் நடக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகியானவர் வரும் செப்டம்பர் மாதம் முதல் 6 மாத காலம் லண்டன் செல்வ தால், தற்காலிக தலைவர் ஒருவரை நியமிக்க லாமான்னு பா.ஜ.க.வின் தேசியத் தலைமை ஆலோசனை நடத்துகிறது. முதலில் இந்தப் பதவியைக் கண்டு முகம் திருப்பிய நிர்வாகிகள் பலரும், அந்த பதவி கிடைத்தால், பவர்ஃபுல்லா வலம் வரலாம்னு நினைச்சி அதுக்கு முண்டியடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவர்களில் நயினார் நாகேந்திரன், அந்த பதவி தனக்குக் கிடைக்கணும்னு பரபரப்பாக காய் நகர்த்தறாராம். அவருக்காக ஒரு டீம் லாபி பண்ணுது. குறிப்பாக, தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி, ஒடிசா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனின் நண்பரான பத்மநாபன் ஆகிய மூவர் டீம், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷிடம், நயினாருக்காக சிபாரிசு செய்து வருகிறதாம். தற்போது, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியிலும் ஆதரவைத் திரட்டி வருகிறாராம் நயினார்.''”

"எடப்பாடியுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சசிகலா தரப்பில் இருந்து தகவல் கசிகிறதே?''”

sasi-eps

"எடப்பாடியுடன் சசிகலா தரப்பு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புகிறது. அதனால்தான் தனது சுற்றுப்பயணத்தின் போது எடப் பாடியை சசிகலா விமர்சிக்காமல் இருந்தாராம். சசி தரப்பினர், சமாதானத்துக்கான டீலிங்கையும் எடப்பாடியுடன் நடத்தினார் களாம். அப்போது, சசிகலாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மட்டும் கொடுத்துவிடுங் கள். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் அதில் அவர் தலையிடமாட்டார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் கள். ஆனால் எடப்பாடியோ, சசிகலா வேண்டுமானால் கட்சியில் சேர்ந்துகொள்ளட்டும். ஆனால் அவருக்கு நீங்கள் கேட்கும் பதவியை எல்லாம் தருவதற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அவர் இப்ப டிச் சொன்னது சசிகலாவை எரிச் சல்படுத்தியிருக்கிறதாம். அதனால், எடப்பாடி ஒத்துவரவில்லை என்றால் மாஜி மந்திரி வேலுமணி மூலம் அ.தி.மு.க.வை கைப்பற்றி, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, சசிகலா பொதுச் செயலாளர் ஆவார்னு அவர் தரப்பில் சொல்றாங்க. இதெல்லாம் நடக்குற கதையா தெரியலை.''”

"ஆம்ஸ்ட்ராங் மர்டர் விவகாரத்தில் பா.ஜ.க. தரப்பைச் சேர்ந்த மேலும் பலர் சிக்கப்போறதா சொல்லப்படுதே?''”

ss

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் பா.ஜ.க.வின் வடசென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை, உளவுத் துறை கண்டறிந்த தகவலை முதன் முதலில், அஞ்சலையின் படத்தோடு நாம்தான் அம்பலப் படுத்தினோம். இதைத் தொடர்ந்துதான் அவர் தொடர் பான செய்திகள் பரபரப்பாச்சு. அஞ்சலையைக் கைது செய்துள்ள போலீஸ், அவரிடம் நடத்திய விசாரணையில், ஏகப்பட்ட தகவல்களைக் கறந்திருக்குதாம். அஞ்சலை மீது கொலைமுயற்சி, கஞ்சா விற்பனை, ஆள் கடத்தல்னு ஏற்கனவே ஏகப்பட்ட வழக்குகள் இருக்குதாம். இவற்றில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில்தான் அவர், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் ஆகியோர் மூலமாக பா.ஜ.க.வில் சேர்ந்தாராம். கட்சியில் பதவியை வாங்கித் தருவதாகச் சொன்ன அவர்களுக்கு, அஞ்சலை பல லகரங்களை செலவிட்டதாகவும் தெரிவித்தாராம். எனவே, இவர்கள் உட்பட பா.ஜ.க.வில் இருக்கும் இன்னும் சிலரையும் விசாரணை வளையத்துக்குக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறதாம் போலீஸ்.''”

"நானும் முக்கிய விவகாரம் பற்றி எனக்குக் கிடைச்ச தகவலை பகிர்ந்துக்கிறேன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவியல் மாற்றம் நடைபெறப்போகுதாம். தற்போதுள்ள மா.செ.வை நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் தலித் ஒருவரை மா.செ.வாக நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளதாம்.''”

_________

அமோனியா கசிவா? தூத்துக்குடி பரபரப்பு!

ss

தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியிலிருக்கிற தனியார் நிறுவனமான நிலா சீ ஃபுட்ஸ் என்கிற நிறுவனம் கடல் மீன்களைப் பதப்படுத்தி பக்குவமாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. ஜூலை 19 அன்று நள்ளிரவு 11 மணியளவில் அந்த நிறுவனத்தின் முக்கிய பகுதியிலுள்ள அறையில் திடீரென்று தீ ஏற்பட்டு புகை மூட்டம் தொழி லாளர்கள் ஓய்வு அறையிலும் பரவியிருக்கிறது. அதில் சிக்கிய 31 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனளர். இவர்களில் அசாம், ஒடிசா மாநில பெண்களும் அடங்குவர்.

மீன் பதப்படுத்துகிற ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் தான், அதன் வீரியம் காரணமாக தொழிலாளர் களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது என்கிற தகவலால் உப்பு நகரம் பதட்டமானது. தகவலறிந்து தொகுதி அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தொழி லாளர் நலத்துறை அமைச் சர் சி.வி.கணேசன் ஆகி யோர் உடனடியாக மருத் துவமனை சென்று சிகிச்சையிலிருந்த பெண் தொழிலாளர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக் குத் தேவையான உணவுத் தொகுப்பு களையும் வழங்கியிருக்கிறார்கள். அதுபோக விபத்து ஏற்பட்ட ஆலையை அமைச்சர்களான கீதாஜீவன், சி.வி. கணேசன் மற்றும் அதிகாரிகளும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

"ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட வாய்ப்பில்லை. தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆலையை முழுவதுமாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும். முறையாக தொழிலாளர்களுக்கு ஆலையில் பாதுகாப்பு அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது'' என்றார் அமைச்சர் சி.வி. கணேசன்.

-பி.சிவன்

nkn240724
இதையும் படியுங்கள்
Subscribe