ஏலம்... நிராகரிப்பு... இலவச சரக்கு! -பரபரக்கும் உள்ளாட்சிக் களம்!

free

மிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக மாவட்டக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 27,003 பதவிகளுக்கு, 97 ஆயிரத்து 831 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்,ff

இந்தத் தேர்தலில், சில கிராமங்களில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் விடப்பட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. கள்ளக்குறிச்சி அருகே சிறுவத்தூர் ஊராட்சியில் 4, 5, 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, 50 ஆயிரத்துக்கு மேல் ஏலம் எடுப்பது குறித்து அந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள், அப்பேச்சுவார்த்தையை செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது.

பரமநத்தம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சக்திவேல் என்பவரின் மனைவி அனிதா வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். உரிய ஆவணங்கள் இல்லையென்று அவரது மனு தள்ள

மிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக மாவட்டக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 27,003 பதவிகளுக்கு, 97 ஆயிரத்து 831 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்,ff

இந்தத் தேர்தலில், சில கிராமங்களில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் விடப்பட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. கள்ளக்குறிச்சி அருகே சிறுவத்தூர் ஊராட்சியில் 4, 5, 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, 50 ஆயிரத்துக்கு மேல் ஏலம் எடுப்பது குறித்து அந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள், அப்பேச்சுவார்த்தையை செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது.

பரமநத்தம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சக்திவேல் என்பவரின் மனைவி அனிதா வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். உரிய ஆவணங்கள் இல்லையென்று அவரது மனு தள்ளுபடியானது. உரிய ஆவணங்கள் இருந்தும் வேண்டுமென்றே நிராகரித்துள்ளதாகக் கோபமுற்ற அனிதா மற்றும் அவரது கிராம மக்கள், திரண்டு வந்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் அனிதா புகாரளித்துள்ளார்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஊரக உள்ளாட்சியில் 1238 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில், அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டவர்களில், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 13வது வார்டு மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட நால்வரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டதிலும் அதிகாரிகள் வேண்டுமென்றே நிரா கரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அ.தி.மு.க. வினர் இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து விசாரித்தபோது, உரிய காரணங்களைக் கூறவில்லையென்று குற்றம்சாட்டி, இரவு 11 மணியளவில், முன்னாள் எம்எல்ஏ பிரபு தலைமையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

மனுக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று மாவட்டச் செயலாளர் குமரகுரு தெரிவித்தார். இதையடுத்து, மறுநாளில் அந்த மனுக்கள் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையறிந்த தி.மு.க.வின் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன், தனது ஆதரவாளர்களு டன் சென்று தேர்தல் அதிகாரிகளி டம் இதுகுறித்து கேள்வியெழுப் பினார். உடனே அ.தி.மு.க. தரப்பில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு தனது ஆதரவாளர்களுடன் திரண் டதும் பெரும்பரபரப்பாக, காவல்துறை ஏ.டி.எஸ்.பி. ஜவகர், தி.மு.க. எம்.எல்.ஏ. விடம் சுமூகமாகப் பேசி அனுப்பினார். இவற்றுக் கிடையே அந்த நால்வரில், திம்மலை தர்மலிங்கம் என்பவரது மனு மட்டும் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில், தலைவர் பதவிக்கு ரூ.13 லட்சம் என ஏலம் விட்டதாகப் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அடுத்து, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கனங்கூரில், வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி எனக் கொடுத் துள்ளதாக வரஞ்சரம் போலீசாருக் குத் தகவல் வந்ததையடுத்து, எஸ்.ஐ. பிரபாகரன் அக்கிராமத்துக்கு ரோந்து செல்ல, அரிசி ஏற்றிய டெம்போவை விட்டுவிட்டு, டெம்போ ஓட்டுனர் தலைமறை வாகிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

free

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்னங்குப்பம், துத்திப்பட்டு பகுதிகளில் உள்ளாட்சி பதவிகளை ஏலம்விட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததால், அவர் நேரில் சென்று விசாரணை நடத்திவிட்டு, "பதவிகளை ஏலத்தில் விடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்கள்' என்று கூறியவர், தேர்தல் பார்வையாளர்களையும் அலர்ட் செய்தார். அப்படி ஏலம் நடந்தால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை பாயுமென்றும் எச்சரித்தார். உளுந்தூர்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மணிகண்ணனின் மனைவி கயல்விழி, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் நகர்கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஏற்கனவே சேர்மன் பதவிமூலம் தொகுதிக்குள் நன்மதிப் பைப் பெற்றவரான இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, டி.ஒரத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, தனது ஆதரவாளர்களை மினி டெம்போக்களில் ஏற்றிக் கொண்டு வந்து வேட்புமனுத் தாக்கல் செய்திருக் கிறார் ஒருவர். திரும்பிச்செல்லும்போது, களமருதூர் ஏரியில் ஒரு டெம்போ வேன் கவிழ்ந்ததில், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறி விக்கப்பட்டதுமே இலவச விநியோகத்திற்காக புதுச்சேரியிலிருந்து மதுக்கடத்தல் அதிகரித்துள் ளது. டிராக்டர் மற்றும் கார்களில் வைத்துக் கடத்தப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 4,050 மது பாட்டில்களை விழுப்புரம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை நடத்திவருகிறார்.

nkn021021
இதையும் படியுங்கள்
Subscribe