Advertisment

சமூக ஆர்வலர் மீது கொலை முயற்சி! -வேலூர் காவல்துறை அலட்சியம்!

cc

வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. பிரபல தனியார் மருத்துவ மனையில் பணியாற்று பவர். தங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் பாலாற்றில் நடக்கும் மணல்கொள்ளை, மரங் களை வெட்டிக் கடத்தல், புறம்போக்கு, வருவாய்த் துறை இடங்களை மோசடி யாக பட்டா போட்டு விற்பனை செய்யும் அர சியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களை எதிர்த்துக் கேள்வி கேட்பதோடு, அரசு துறைகளுக்கு புகாரனுப்பி நடவடிக்கை எடுக்க வைக்கிறார்.

Advertisment

vellore

கடந்த 3ஆம் தேதி காலை 8.30 மணிக்கு டூவீலரில் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு டூட்டிக்கு புறப்பட்டுச் செல்லும்போது, அலமேலுமங்காபுரம் திரௌபதி அம்மன் கோவில் அருகே ஒரு கார் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, கையில்

வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. பிரபல தனியார் மருத்துவ மனையில் பணியாற்று பவர். தங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் பாலாற்றில் நடக்கும் மணல்கொள்ளை, மரங் களை வெட்டிக் கடத்தல், புறம்போக்கு, வருவாய்த் துறை இடங்களை மோசடி யாக பட்டா போட்டு விற்பனை செய்யும் அர சியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களை எதிர்த்துக் கேள்வி கேட்பதோடு, அரசு துறைகளுக்கு புகாரனுப்பி நடவடிக்கை எடுக்க வைக்கிறார்.

Advertisment

vellore

கடந்த 3ஆம் தேதி காலை 8.30 மணிக்கு டூவீலரில் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு டூட்டிக்கு புறப்பட்டுச் செல்லும்போது, அலமேலுமங்காபுரம் திரௌபதி அம்மன் கோவில் அருகே ஒரு கார் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, கையில் எலும்பு முறிவோடு உயிர் தப்பியுள்ளார். அதன்பின் நடந்தவை குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்பாபு, "என்மீது கார் மோதியது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாரளித்தேன். இடித்த கார் நம் பரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள். நானே சிசிடிவி ஃபுட்டேஜ் உதவியோடு, காரின் பதிவு எண்ணைக் (டி.என்.23 சி.கே.1272) கண்டுபிடித்தேன். அது சதுரங்கபாளையம் கிராமத்தை சேர்ந்த பாபு என்பவருடையது. ஜனவரி 11ஆம் தேதி என்னோடு மொபைலில் தொடர்புகொண்ட ஒருவர், உங்கள் மீது மோதிய காரின் உரிமையாளர் பாபு எனக்கூறிவிட்டு, 'எனது காரை வேலூர் வழக்கறிஞர் ஸ்டான்லி ஜான் வாங்கிச்சென்றார். அவர்தான் உங்கள் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தார். உங்கள் மீது மோதும்போது காருக்குள் அவர் இருந்தார். அவரின் ஓட்டுநர் சல்மான் காரை ஓட்டினார்' எனச்சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

என்னை கொலை செய்ய முயற்சித்ததற்கான காரணம், 2017ஆம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பிரியதர்ஷினி, சித்ரா என்கிற இரண்டு பெண்கள் பலான தொழில் செய்வதாக தெருவாசிகள் பிரச்சனை செய்தார்கள். நான்தான் அப்பெண்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதாகக் கருதி, ரவுடிகளை வைத்து என்னை மிரட்டியதால் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகாரளித்தேன். அந்த பெண்களுக்கு சப் போர்ட்டாக வந்தவர்தான் வழக்கறிஞர் ஸ்டான்-ஜான். பாலியல் தொழிலோடு ரேஷன் அரிசிக் கடத்தலிலும் ஈடுபட்டது அந்த கும்பல். ஆந்திரா பார்டரில் இவர்கள் அனுப்பிய ரேஷன் அரிசி வண்டி சிக்கிக்கொண்டது. அதற்கும் நான்தான் காரணமெனக்கூறி, 2018 ஆகஸ்ட் 16ஆம் தேதி வழக்கறிஞர் ஸ்டான்-ஜான் உள்ளிட்ட சிலர், எங்கள் வீட்டிற்கு வந்து மிரட்டியதோடு, என் தந்தையை கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர்.

Advertisment

vellore

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் என் அம்மா புகாரளித் தார். மேலும், வழக்கறிஞர் ஸ்டான்-ஜான் மீது பார் கவுன்சிலிலும் புகாரளித்தேன். இந்த வழக்கின் தொடர்ச்சியாகத்தான் 2024 ஜனவரி 4ஆம் தேதி என் மனைவி மற்றும் அம்மாவிடம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பெற வரச்சொல்லியிருந்தனர். என் குடும்பத்தினர் கோர்ட்டுக்கு வரக்கூடாது என்பதற்காக என்மீது கொலை முயற்சி நடந்துள்ளது. இவர்கள் மீது மோதிய அன்றே புகாரளித்தபோதும், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி, அடையாளம் தெரியாத குடிபோதையில் மோதியதாக வழக்கு பதிவு செய்தார்.

வடக்கு மண்டல ஐ.ஜி.யை சந்தித்து ஆதாரங்களைக் காட்டியபின்பே கொலை முயற்சி வழக்காக மாற்றி, ஸ்டான்-ஜான் மற்றும் ஓட்டுநர் சல்மான் மீது வழக்கு பதிவு செய்தனர். என்மீது மோதிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. பல ஆதாரங்களிருந்தும் காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அவர்களைக் காப்பாற்று கிறார்கள். பொதுப்பிரச்சனைக்காகப் போராடும் எனது உயிர் போயிருந்தால் என்னாவது?'' என்று கேள்வியெழுப்பினார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் கேட்டபோது, "அந்த புகாரின் மீது எப்.ஐ.ஆர். போட்டுள்ளோம். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடித்து விடுவோம்'' என்பதோடு முடித்துக்கொண்டார். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது காவல்துறையின் கடமை!

nkn270124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe