Advertisment

அருணாசலப்பிரதேச அபகரிப்பு முயற்சி! வாலாட்டும் சீனா!

china

க்கத்துப் பக்கத்தில் அமைந்த சுண்டைக்காய் நாடுகளே, எல்லைப் பிரச்சனையில் சிண்டைப் பிடித்துக் கொண்டு மண்டை காய்ந்துகொண்டி ருக்கும். இந்தியா, சீனா போன்ற வல்லரசுக்கு இணையான நாடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சனை வந்தால் கேட்கவேண்டுமா? அது தீராத வேதாளம்- விக்கிரமாதித்தன் கதைதான்.

Advertisment

china

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் 11 பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள சீனா, அவற்றுக்கு சீனப் பெயர்களையும் சூட்டி தங்களது பகுதிகளாகப் பிரகடனப்படுத்தியுள

க்கத்துப் பக்கத்தில் அமைந்த சுண்டைக்காய் நாடுகளே, எல்லைப் பிரச்சனையில் சிண்டைப் பிடித்துக் கொண்டு மண்டை காய்ந்துகொண்டி ருக்கும். இந்தியா, சீனா போன்ற வல்லரசுக்கு இணையான நாடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சனை வந்தால் கேட்கவேண்டுமா? அது தீராத வேதாளம்- விக்கிரமாதித்தன் கதைதான்.

Advertisment

china

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் 11 பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள சீனா, அவற்றுக்கு சீனப் பெயர்களையும் சூட்டி தங்களது பகுதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. 2017-ல் ஒருமுறை அருணாசலப்பிரதேசத்தின் 5 பகுதிகளை தங்கள் வரைபடத்தில் சேர்த்து இவையெல்லாம் தங்கள் பகுதிகள் என்று சொன்னது. பின் 2021-ல் 15 பகுதிகளை வரைபடத்தில் சேர்த்து, சத்தியமா இதெல்லாம் சீனாவின் பகுதிகள் என்று சொன்னது.

2021-ல் இத்தகைய பிரச்சனை எழுந்தபோது இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் அரிந்தம் பக்சி, “"அருணாசலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே நீடிக்கும். அப்பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டுவதால் உண்மை மாறிவிடப் போவதில்லை''’என குறிப்பிட்டார்.

அருணாசலப் பிரதேச பகுதிகளுக்கு, முதல்முறையாக சீனா பெயர் மாற்றியபோது இந்தியாவின் டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்தியப் படைக்கும் சீனப் படைக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது. 2021-ல் இந்த சில்மிஷத்தில் சீனா இறங் கியபோது, எல்.ஏ.சி. பகுதியில் எல்லைப் பிரச்சினையில் இந்தியா வும் சீனாவும் தீவிர உரசல்போக்கில் காணப்பட்டன.

ஒவ்வொரு முறை பிரச்சனை எழும்போதும், இரு தரப்புப் படை களின் தளபதிகள், உயர் அதிகாரி கள் பேசி தற்காலிக சமாதானம் நிலவி வருகிறது.

சீனாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் - ஷாங்பு நியமனமாகியுள்ள நிலையில் இந்தப் புதிய பட்டியல் வந்துள்ளது. இப்போது சீனா தனது பகுதிகளாகக் குறிப்பிடும் பகுதிகளை ஜாங்னான் பிராந்தியம் என்றும், வரலாற்று மற்றும் நிர்வாக அடிப்படையில் தனக்குச் சொந்தமான பகுதி என்றும் குறிப்பிட்டுக்கொள்கிறது. கடந்த வாரம் பூடானுக்குச் சொந்தமான பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதாக பூடான் பிரதமர் லோட்டாய் டீசரிங் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதும் இதனோடு இணைத்து நோக்கத்தக்கது.

இந்த முறை அருணாசலப்பிரதேசத்தில் தங் கள் பகுதிகளாக சீனா குறிப்பிடுவதில் ஐந்து மலைப் பகுதிகள், இரண்டு ஆறு பாயும் பகுதிகள், நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள் அடங்கும்.

நேருவையே குற்றம்சாட்டிக்கொண்டிருக்கா மல், இந்தப் புதிய ஆக்கிரமிப்புகளுக்கும், ராஜ தந்திர வியூகங்களுக்கும், இன்றைய இந்திய ஆட் சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சரியான பதிலடி தரவேண்டும். அதுதானே 56 இஞ்ச் என மார்தட்டிக் கொள்பவர்களுக்கு அழகு!

Advertisment

nkn120423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe